ப்யூட்டிஃபுல் கேட் (ஆஸ்திரேலியா)beautiful kate-2009(கண்டிப்பாய்18+)


நியூட்டன் தார்ன் பர்கின் 1982ஆம் ஆண்டு வெளிவந்த இதே பேர் கொண்ட புதினத்தை தழுவி , ராச்சல் வார்டின் திரைக்கதை இயக்கத்தில், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஆஸ்திரேலிய- ஆங்கிலப் படம்.


ஸ்திரேலிய படங்கள் குறைந்த பட்ஜெட்டிலும், எல்லையில்லா அபார கலை நேர்த்தியுடனும் சத்தமில்லாமல் எடுக்கப்படுகின்றன, அதற்கு அவர்கள் அதிகமாய் விளம்பரம் கூட செய்வது இல்லை, கலை ரசிகர்கள் தேடிப் பார்க்கும் படி பொதித்து வைக்கின்றனர். ஐந்தே பிரதான  கதாபாத்திரங்களை கொண்டு இவ்வளவு நேர்த்தியான படம் கொடுப்பது அங்கே நிதர்சனம். சில சமயம் நாம் என்ன பெருசா இருக்கும் என எதிர்பார்த்திருப்பவை வியப்பூட்டி அதிசயித்து விடும்,அந்த வகைப் படம் இது. ஒளிப்பதிவு, திரைக்கதை, இசை, நடிப்பு குறைசொல்லவே முடியவில்லை. கண்டிப்பாக 1-30 மணி நேரத்திற்கு தகும்.

படத்தின் கதை:-


40ல் இருக்கும் புதின எழுத்தாளன் நெட்,  21ல் இருக்கும் அழகிய நடிகை  டோனி சாகக்கிடக்கும்  எழுத்தாளனின் அப்பா ப்ரூஸ், எழுத்தாளனின் தங்கை சால்லி தந்தையை கடைசியாக ஒருமுறை  பார்த்துவிட்டு செல்லும் படி கடிதத்தில் சொல்ல, தன் காதலியுடன் 20 வருடங்கள் கழிந்த நிலையில், காரில் நீண்ட தூரம் பயணித்து சொந்த ஊர் வருகிறான்.


ஸ்திரேலியாவில் என்ன தான் 40 ஏக்கர் நிலமிருந்தாலும்,சொந்தமாய் ஏர் உழும்,மண்வாரும் எந்திரமிருந்தாலும் ஏழை தான் போலும்,பிரம்மாண்டமான நிலப்பரப்பும், வாட்டியெடுக்கும் வெய்யிலும்,குளிரும், புழுதியும்,குளிர்ச்சாதன வசதி&எந்த நவீன மின்சாதனங்கள் இல்லாத வீடும், தந்தை ப்ரூசின் மூத்திர நாற்றமும்,இளம் காதலி டோனிக்கு முகம் சுளிக்க வைக்கிறது,பகலில் கொழுத்த ஈக்களும்,இரவில் கிரிக்கெட் பூச்சிகளின் ரீங்காரம் வேறு,நெட்டின் எழுத்தின் மீதான அபார காதலாலும் திருமணம் செய்யப்போகும் நெட்டின் குடும்பத்தாரை பார்க்க எழுந்த ஆவலாலும் இவற்றை தாங்கிக்கொள்கிறாள்.


நெட்,வந்த இடத்தில் அழியாக் கோலங்களாய் தன் மனதில் படிந்த தன் அற்ப ஆயுளில் இறந்த இரட்டைபிறவி சகோதரி கேட்டின் நினைவுகள் வந்துபோக, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறான், இளம் காதலி டோனியின் எண்ணத்தை ஈடுசெய்ய அவளை கற்பனை வளத்துடனும் புணர்கிறான்.காதலி நீ ஏன் எப்போதும் புணருகையில் என் முகத்தை பார்க்கமாட்டேன் என்கின்றாய்?,எனக்கோபமாய் கேட்க இவனால் அதற்கு விடையளிக்க முடியவில்லை. அங்கே தான் தன் கடந்தகால நினைவுகள் நெருஞ்சிமுள்ளாய் மனதுள் தைக்கின்றன.

உயிரோடு இருக்கும் இளைய சகோதரி சால்லி அவசர தொண்டு நிறுவன வேலை விஷயமாக 1மாதத்துக்கு வெளியூர் கிளம்பி செல்ல, தந்தை ப்ரூஸை பார்த்துக்கொள்ளும் வேலை இவனுக்கு வாய்க்கிறது, காதலி  டோனியும் ஆர்வமாய் ப்ரூஸுடன் தோழி போல் பழகி பணிவிடையும் செய்கிறாள். திரை வசனமும் பேசிக்காட்டுகிறாள்,  சகோதரி கேட்டுடனான சிறு வயது நினைவு வலைகளிலிருந்து   புனைவு  எழுதுகிறார்.


ஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பும், சிறுவயதிலேயே தாயிழந்த பிள்ளைகளுக்கு தந்தை ப்ரூஸ் அன்பை வழங்காமல் கண்டிப்பையே வழங்கியதால்,  இரட்டையருக்கே உரிய பரஸ்பர அதீத அன்பு கூடாக்காமமாக கேட் மனதில் உருவெடுக்கிறது, எழுதவே கூசவைக்கும் செயல்களை இருவரும் செய்ய துவங்குகின்றனர். பதின்ம வயது கேட் குளியலறையில் தன் மார்புகளை மசாஜ் செய்ய எதேச்சையாய் உள்ளே நுழைந்த நெட் திகைக்கிறான்,அப்போது பெர்வெர்ட் என கூச்சலிட்ட கேட் அவனை பின்னொரு சமயம் இவன் படுக்கையில் போர்வைக்குள் கரமைதுனம் செய்கையில் குளித்த கையோடு பூத்துவாலையுடன் அருகே வந்து படுத்துக் கொள்கிறாள், எதிர்பாராத மிருதுவான பின்புற அருகாமையால் கேட்டின் பூத்துவாலை சுற்றிய பின்புறத்திலேயே இவன் இந்திரியத்தை வெளியேற்றிவிட, அவள் அதை தொட்டவள் பதறியபடி ஓடுகிறாள்,


துவரை நெட் கதையை எழுதியிருக்க,ஆவல் மிகுதியால் அதை படித்த காதலி டோனி அவனை ஆவேசத்தில் பலமுறை அறைகிறாள், நெட்டும் அவளை திருப்பி அறைகிறான். உன் தமக்கையுடன் உறவு வைத்திருந்தாயா? என காறி உமிழ்ந்தவள், யாருக்கும் சொல்லாமல் டேக்ஸி வரவழைத்து ஊரைவிட்டே போகிறாள். குடிவெறியில் அப்பாவை கொன்றுவிடுவேன் என மிரட்டி அவளை நீ அனுப்பிவிட்டாயா ?என்றவன். டோனியின் காரின் பின்னாலேயே துரத்தி போகிறான் , சிறிய விபத்தில் சிக்கி காயத்துடன் வீடு வருகிறான்.


ப்போது சிறுவயதின் நினைவலைகள் தொடர்ச்சியாய், சிறு வயது நெட் குடும்பத்துக்கு சொந்தமான நீர்தேக்கத்தில் குடிபோதையுடன் நீந்துகிறான், காலையில் கேட் அவனிடம் வந்து என் மார்புகளை நீ தொட்டுப் பார்க்கலாம் என கேட்டதில் வெறுப்படைந்தவன்,வீட்டுக்கே போக விரும்பவில்லை, கேட் இவனைத்தேடி நீர்தேக்கத்துக்கே வந்தவள், பிறந்தமேனியாகி  நீந்தி இவனருகே வந்து என்னைப்பார் என அழகைப்பார் என வெறுப்பேற்ற, முகத்தை திருப்பிக்கொண்டவனை, என்னை யாரோ என எண்ணிக்கொள் என்கிறாள்,கரையில் ஒதுங்கியவர்கள் தன்னிலை மறந்து முயங்கி முதல் பாவத்தை செய்தும் விடுகின்றனர், கேட் தெளிவாய் வீட்டுக்கு செல்கிறாள்,நெட் தரையில் தலையை முட்டிக்கொண்டு அழுகிறான்.


பின்வந்த நாட்களில் இவன் அவளிடமிருந்து சுத்தமாய் விலகியிருக்க,அவள் விரக தாபம் அடங்காமல் அவனை வழிக்கு கொண்டுவர முயன்று தோற்றவள், மூத்த அண்ணன் க்ளிஃப்ஃபிடம் சென்று நெட் என் மார்புகளை தொட முயன்றான், என போட்டுகொடுக்கிறாள், அவன் நெட்டை தனியே அழைத்து அப்படி செய்தாயா? என கேட்க எத்தனிக்க, இவன் ஆமாம்,என்ன என்னை அடிப்பாயா? அடி என உணர்ச்சிவசப்பட்டு அடிக்க ஆரம்பிக்க, அவனும் அடிக்க ப்ரூஸ் வருகிறார், அவருக்கு அது ஒரு உதவாத சண்டை என சொல்லப்படுகிறது, கிருஸ்துமஸ் கொண்டாட்ட இரவும் வருகிறது,கேட்டை கொண்டாட்டத்துக்கு அழைத்துப்போகும் படி ப்ரூஸ், நெட்டுக்கு கண்டிப்பாய் சொல்ல, இவனால் மீறமுடியவில்லை, அங்கே வைத்து கேட் , நெட்டுக்கு கண்ணைக்காட்டி வீட்டுக்கு போகலாம் என சொல்ல, இவன் அங்கேயிருந்து தான் நீண்ட நாள் ரசித்துக்கொண்டிருந்த அழகிய பெண் இவனை வெளியில் அழைக்க, அவளுடன் போய் முதல்முறையாக வேற்றுப் பெண்ணுடன் உடலுறவு கொள்கிறான்.


பின்னர் வீடு செல்லும் வழியில் அண்ணன் க்ளிஃப்ஃபின் கார் விபத்துக்குள்ளாகி கேட் ரத்தவெள்ளத்தில் பிணமாகி கிடப்பதையும், அடுத்தடுத்து நிகழந்த சோகமாக வீட்டுக்குள் அண்ணன் க்ளிஃப் உத்திரத்தில் தூக்கில் தொங்கியதையும் நினைத்துப்பார்க்கிறான். தன் அண்ணன் க்ளிஃப்  சாக தான் முக்கிய முதல் காரணம், இரண்டாவது ப்ரூஸ் அன்று நண்பர்களுடனிருந்த க்ளிஃப்ஃபை கண்டித்து கேட்டுக்கும் நெட்டுக்கும் என்ன ஆனது?இன்னும் வீடு வரவில்லை  என பார்த்துவிட்டு வா, என சொன்னதால் தான் இருக்கும்,அதுவே விபத்துக்கு காரணம். என நினைத்து வந்தவன், தந்தையை பார்க்க பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிப்போனவற்றையும் அசைபோட்டு பார்க்கிறான்.


1. நெட் தந்தையிடம் கொண்டிருந்த வெறுப்பை கைவிட்டானா?
2. காதலி டோனியுடன் சேர்ந்தானா?
3.கேட் எப்படி கார் விபத்துக்குள்ளாகி இறந்து போனாள்?
4.ண்ணன் க்ளிஃப் ஏன் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோனான்?
5.ங்கை சால்லி ஏன் இன்னும் திருமணமே செய்துகொள்ளவில்லை. 


போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
களவும் கற்று மற என்பது போலத் தான்  இது போன்ற படங்கள் பார்ப்பதுவும், இப்படியும் அவலங்கள் நடக்கிறது, இப்படியும் சில மனிதர்கள், எனத் தெரிந்து கொள்ளத் தான். அதனால் இந்த படத்தை அருமை, அற்புதம் என வழமையாய் எழுத எனக்கு கைவரவில்லை.

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-
====================================

====================================
 முழுக்கதையும் படிக்க:-

ப்போது தங்கை சால்லி பயணம் முடிந்து  வந்துவிட, காதலி டோனியின் பிரிவுக்கு வருத்தம் தெரிவிக்கிறாள்,நாளை இவன் கிளம்புவதால் அப்பாவுக்கு தான் இரவு உண்வு ஊட்டுவதாய் சொல்லிவிட்டு நகர,சால்லி அப்பாவிடம் உனக்கும் கேட்டுக்கும் இருந்த உறவை சொல்லப்போகிறாயா? என்றவள்,


நெட் திகைத்து எந்த உறவை? எனக்கேட்க , உனக்கும் கேட்டுக்கும் இருந்த அந்த ரகசியம் எனக்கும் தெரியும், அப்போது எனக்கு 11வயது, நீர்தேக்கத்தில் யப்பிஸ்-இரால்  பிடிக்க வந்த நான் ,அன்று நீ கேட்டை தரையில் வைத்து நெத்துகிறாய் என நினைத்தேன், என நிறுத்துகிறாள். இவன் அழுகிறான்.கைய தொடவந்தவளை தட்டி விடுகிறான்.இவளே நான் உன்னை என்றோ மன்னித்தாகிவிட்டது என்கிறாள்.


வளே மேலும் கேட்டின் இறப்புககு கேட்டே தான் காரணம் என்கிறாள்,அன்று கிருஸ்துமஸ் இரவு நடனம் முடிந்து தந்தையின் கட்டாயத்தால் குடிபோதையில் கார் ஓட்டிக்கொண்டு கேட்டை கூப்பிட வந்த க்ளிஃப்,போகும் வழியிலேயே கேட்டின் விரகதாபத்துக்கு ஆளாகியிருக்கிறான்,பின் சீட்டில் புணர்ந்து  முடிந்த பின்னர் மேலும் வீட்டுக்கு போகும் வழியில் கார் ஓட்டிக்கொண்டே சில்மிஷங்கள் செய்த நிலையில் விபத்து நேரிட,காரையும் கேட்டையும் விட்டுவிட்டு க்ளிஃப் குற்ற உணர்வில் வீட்டுக்குள்  ஓடி உத்திரத்தில் தூக்கு மாட்டி இறந்து போயிருக்கிறான் என முடிக்கிறாள்.


றந்துபோன அண்னன் க்ளிஃப்ஃபை காட்டிலும் உன்னை நான் மதிக்கிறேன்,அவன் 11வயது அறியாப்பெண்ணான என்னுடன் வைத்திருந்த உறவை விட நீங்கள் மனமுவந்து செய்தது தண்டனைக்குரியதல்ல என்கிறாள், அந்த குற்ற உணர்வினின்று விடுபட முடியாமல் தான் இன்று வரையிலும்  தனித்திருப்பதாய் சொல்கிறாள். தந்தை ப்ரூசுக்கு இறந்தவள் நல்லவளாகவே இருக்கட்டும் என கெஞ்சுகிறாள்.


ள்ளே சென்ற நெட் தந்தையிடம் கேட்டை நடன விருந்து முடிந்து தான் பொறுப்பாய் கூட்டி வராதது தான் தவறு,இனி பார்ப்போமா எனத் தெரியாது, ஆகவே தன்னை மன்னித்து விடை கொடுத்து அனுப்புமாறு கேட்கிறான்.தந்தை ப்ரூஸுக்கு மகன் மேலும் இறந்த மகள் கேட் மீதும் பாசம் மேலிடுகிறது,என் மகள் ஒரு அழகிய தேவதை என்கிறார்.


றுநாள் பீங்கான் ஜாடியில் சேமித்து வைத்திருந்த கேட் மற்றும் க்ளிஃப்ஃபின் எரி சாம்பலை பாதிரியாரின் முன்னிலையில் மலை அடிவாரம் சென்று தூவி அஞ்சலி செலுத்திவிட்டு வருகின்றனர்,நெட் கேட்டின் நினைவாய் இருந்த பாட புத்தகம்,கவிதைகள்,கடிதம் எதையும் விட்டு வைக்காமல் கொளுத்திவிட்டு காரில் தன் பிழைப்பை பார்க்க புறப்படுகிறான்.தன் குடும்பத்தில் மொத்தம் மூன்று தருதலைகள் என்ற புரிதல் தந்த திருப்தியோடு.


டத்தில் அபாண்டமான உடலுறவுக்காட்சி உள்ளதால் குடும்பத்தாரோடு மொத்த படத்தையும் பார்க்க வேண்டாம் என எச்சரித்து விடுகிறேன்.மிகச் சிறிய வட்டத்துக்குள் விளம்பரம் இல்லாமல் தயாரிக்கப்படும் ஆஸ்திரேலிய படங்களிலும், ஹாலிவுட் படங்களுக்கு நிகரான கதையமைப்பும் தொழில் நுட்பமும் பிரமிக்க வைக்கின்றன,படத்தின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தி, இசையமைப்பு  மனதை அள்ளுகிறது, நான் லீனியருக்கு ஈடான புதுமையாய் இதில் நிகழ்காலத்தில் யாரேனும் முடிக்கும் வார்த்தைகளுக்கு ஈடாய் வாழந்து முடிந்த காலத்து ”நினைத்து பார்க்கும்” ஃப்ளாஷ் பேக்  காட்சிகள் வருவது மிகவும் பாந்தமும் புதுமையும் ஆகும்,பாராட்டுக்கள் இயக்குனர்-ராச்சல் வார்ட்.
============
கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:=
Directed by Rachel Ward
Produced by Bryan Brown
Leah Churchill-Brown
Written by Screenplay:
Rachel Ward
Novel:
Newton Thornburg
Starring Rachel Griffiths
Bryan Brown
Sophie Lowe
Ben Mendelsohn
Music by Tex Perkins
Murray Paterson
Cinematography Andrew Commis
Editing by Veronika Jenet
Distributed by Roadshow Entertainment
Release date(s) 6 August 2009 (Australia)
Running time 101 mins
Country Australia
Language English

============0000============= 
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)