தமிழ் திரையுலகின் அருமையான நடிகர் முரளிக்கு அஞ்சலி

தேச்சையாக ,மிகுந்த பணிச்சுமைக்கு இடையில் தினமலர் இணையதளம் திறந்தால் நடிகர் முரளி மரணம் என்றிருக்க, அவர் [மலையாள நடிகர்] தான் ஏற்கனவே  இறந்துவிட்டாரே? என ஒருவித பதட்டம் ஆட்கொள்ள நடுங்கியபடி காணொளியை திறந்தால், ஆம்,அவரே தான், இதயம் முரளியே தான். அடக்கடவுளே!!! .வெறும் 46 வயது தான். 100 ஆவது படம் நடிக்க கையெழுத்திட்டிருந்தாராம். கடவுளுக்கு கருணையே இல்லையா? என்று தான் தோன்றியது.என் அப்பாவுக்கு இறக்கையில் 50 வயது, அம்மாவுக்கும் அப்படியே.அதுவே சிறிய வயது என நினைத்த எனக்கு, இவர் இன்னும் சீக்கிரமாக போய்விட்டாரே! என்றே தோன்றியது.

ந்த பாத்திரம் எடுத்து செய்தாலும் அழுத்தமாக மனதில் நிற்பார். கடைசியாக இவரை அள்ளித்தந்த வானம் படத்தில் வெகுவாய் ரசித்தது. அதன் பின் வடிவேலுவுடன் சுந்தரா ட்ராவல்ஸில் பார்த்து வெகுவாய் ரசித்தேன். எதோ நெருங்கிய சொந்தத்தில் யாரோ தவறிப்போனது போல சோகம் தோளை அழுத்துகையிலேயே இதை எழுதுகிறேன்.

யாரோ சில வருடங்கள் முன்பு காம்பவுண்ட் சுவரெங்கும்,கடவுள் முரளி வாழ்க! என்று எழுதிவைத்தனர். ஏன் செய்தார்கள் எனத் தெரியாது, ஒருவேளை இளம் வயதிலேயே இறைவனடி சேர்வார் என்று எழுதியிருப்பார்களோ? இன்னும் இசைஞானியின் குரலை இவர் பாட ரசிப்பதில் எனக்கு நீங்கா ஆனந்தம். இனி யூ ட்யூபில் இவரை, நிறையபேர் நிச்சயம் அதிகம் தேடிப்பார்ப்பார்கள். அவரின் லட்சியங்கள் மகன் அதர்வா மூலம் நிறைவேறட்டும். அன்னாரின் குடும்பத்துக்கு என்  அஞ்சலிகள்.
======0000======

நடிகர் முரளியின் சமீபத்திய காஃபி வித் அனு நிகழ்ச்சியின் யூட்யூப் வீடியோ;-
நன்றி:-4fun611 comments:

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

முரளியின் ‘கீதாஞ்சலி’ பாடல்கள் இன்னமும் மனதில் நிற்கின்றன.. வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்த மனிதன்.. இறக்கும்வரை மிகச்சந்தோஷமாக வாழ்ந்தவர்.. Let his Soul RIP . . .

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஆமாம் நண்பா,
கீதாஞ்சலி,பூவிலங்கு எனக்கு மிகவும் பிடிக்கும்.நிறைய படம் செய்திருக்கலாம்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

RIP

King Viswa சொன்னது…

இன்னைக்கு நாள் முழுவதும் ஒன்றிரண்டு அலுவலகப் பணி நிமித்தமாக பயணத்திலேயே கழிந்ததால் அவ்வளவாக ஆன்லைனில் இல்லை. திடீரென்று ஒரு குறுஞ்செய்தி. தகவல் இதுதான். காலேஜ் ஸ்டூடன்ட் முரளி இஸ் நோ மோர்.

என்னதான் உலகம் அவரை கிண்டல் செய்தாலும்கூட, அவரை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவே. ஓரிரு முறை நேரிலும் சந்தித்திருக்கிறேன். கண்ணியமாக நடந்துகொண்டார்.

என்னமோ தெரியவில்லை, எதுவுமே எழுத வரவில்லை.

மரா சொன்னது…

பாவம். அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

எதார்த்தமான நடிகரைத் தமிழ் சினிமா இழந்திருக்கிறது.

பல படங்கள் இவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

//யாரோ சில வருடங்கள் முன்பு காம்பவுண்ட் சுவரெங்கும்,கடவுள் முரளி வாழ்க! என்று எழுதிவைத்தனர்//

இவரின் மரணச் செய்தி கேட்டு எனக்கும் அந்த மனிதர்தான் உடனே நினைவுக்கு வந்தார் :(

சுவடுகள் சொன்னது…

நடிகர் முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம் http://goo.gl/2upH

செ.சரவணக்குமார் சொன்னது…

செய்தி அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. முரளியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Sri Rangan சொன்னது…

கீதாப் பிரியன்,உங்கள் இடுகையைப் பார்த்தபோது மிகவும், எனது உணர்வுகளோடுதாம் நீங்களும் எழுதியது புரிகிறது!

நான் ,எனது நண்பனைக் கொஞ்சங் கொஞ்சமாகச் சாகும்போது அருகிலிருந்து பார்த்தவன்.

அவனுக்கு வயது- கடந்த மூன்றாண்டுகளுக்குமுன்- 48.

அல்ககோல்தான் காரணமானது.

நானும் முடாக் குடியன்தாம்.
என்றபோதும் ,முரளியின் மரணம் கவலையளிப்பதாகவே இருக்கு.
எனக்குப் பிடித்த நடிகன்;மிகச் சாதரணமாகத் தமிழை அழகாக உச்சரிக்கும் ஒரு கலைஞன்;
எமது மாணவப் பருவத்தைக் கண் முன் நிறுத்தியவன்.பந்தா இல்லாத பணிவான மனிதன் என்பதை எல்லோருமே உரைக்கின்றனர்.

அவரது பெற்றோர் வசதியானவர்கள்.

வசதியான குடும்பப் பையன் உலகத்திலுள்ள அனைத்தையும் இரசித்துச் சுவைத்தே இருப்பான்.வாழ்வில் அநுபவிக்க வேண்டியதையெல்லாம் அநுபவித்தே முரளி சென்றிருப்பார்.

எனவே,கவலை தேவையில்லை!

ஒரு அருமையான மனிதனை இழந்தோமெனக் கவலையடைவது சாத்தியமே!;என்ன செய்ய?

நாங்களும் நாளை நிச்சியமாகப் போபவர்கள்தான்....

:-(

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிபாலி
நன்றி

@கிங் விஸ்வா
நன்றி நண்பரே,ஈடு செய்ய முடியாத நடிகர்.ரகுவரன் மறைகையில் கொடுத்த பாதிப்பை கொடுத்துவிட்டார்.

@மரா
நன்றிமக்கா

@செந்தில்வேலன்
உண்மை நண்பரே,நன்றி

@ஷங்கர்
நண்பரே நீங்களும் அது பார்த்துள்ளீர்களா?
நன்றி

@சுவடுகள்
படிச்சென் நண்பா,
உங்க மாமாவின் நினைவாக முரளியை பார்த்தவருக்கு
எவ்வளவு அதிர்ச்சியாயிருக்கும் என புரிந்தது


@செ,சரவணகுமார்
நண்பா
நலமா?
தண்டோரா பதிவை பார்த்தேன்.உடனில்லையே என வருந்தினேன்.
நன்றாக ரிலாக்ஸ் செய்துவிட்டு அடுத்த அடி எடுத்து வைக்கவும்


@ஸ்ரீரங்கன்
நண்பரே
உங்கள் நண்பன் வடிவாய் முரளியை கண்டவருக்கு
மிகப்பெரிய இழப்பே,வருந்துகிறேன்.கருத்துக்கு நன்றி
ஆம் முரளி அப்பா கன்னட இயக்குனர் என்று படித்துள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)