படம் நன்றி: தி இந்து நாளிதழ் |
அருமை நண்பர்களே !!!
நலம் தானே?சமூகப் பதிவுகள் எழுதுவதை சில மன அயற்சிகளால் நிறுத்தி விட்டாலும், அவ்வப்பொழுது ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல்களாக எழுதி வந்துள்ளேன், அவற்றை திரும்ப தேடுவது பெரும்பாடாக இருக்கிறது,ஆகவே இங்கும் பதிவு செய்தால் 360டிகிரி ஒருங்கிணைப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
அன்று இலவச சைக்கிள், மிக்ஸி,டேபிள் ஃபேன்,வெட் க்ரைன்டர், லேப்டாப்பில் ஜெயலலிதாவின் உருவத்தைபதிக்க துவங்கினர், இன்று மக்கள் காசு கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகளிலும், வாங்கிப் பருகும் தண்ணீர் பாட்டில்களிலும் இரட்டை இலையின் அப்ஸ்ட்ராக்ட் சின்னத்தை பொறிக்கும் அளவுக்கு கொண்டு விட்டுள்ளனர் கழக கண்மணிகள்.திமுகவும் இதற்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை,அதை நாம் இலவச டிவி துவங்கி மருத்துவ காப்பீட்டு அட்டை வரை பொறிக்கப்பட்ட உபயதாரர் கருணாநிதி என்னும் பெயரில் பார்த்திருப்போம்.
1940களில் துவங்கிய டிவிஎஸ் மற்றும் தனியார் நிறுவன பேருந்துகள் 1970களில் சென்னையில் பல்லவன் போக்குவரத்து கழகமானது,அது முறையே மதுரையில் பாண்டியன்,கோவையில் சேரன் என வழங்கப்பட்டது, பின்னர் 1990களில் சென்னையில் அம்பேத்கர் போக்குவரத்து கழகம் என்றும் பிரிக்கப்பட்டதாக நினைவு. பிறகு எல்லா போக்குவரத்துக் கழகங்களும் மாநகர போக்குவரத்து கழகம் என ஒருங்கிணைக்கப்பட்டும் , அதற்கென எதுவும் இலச்சினை [லோகோ] இருந்ததில்லை,
இனி பெயரில் எதுவும் மாற்றம் இருக்காது என எண்ணும் வேளையில், புதிதாக லோகோ உருவாக்கப்பட்டு இருக்கிறது, பாரம்பரியம் மிக்க எத்தனையோ சின்னங்கள் தமிழ்நாட்டுக்கென உண்டு,அப்படி இருக்கையில் 40வருட பாரம்பரியம் மிக்க அதிமுக இலச்சினை குறியீடான வடிவில்[abstract form] பொறிக்கப்பட்டுள்ளது, இது 4 இலைகளை கொண்டிருந்தாலும் அது இரட்டை இலை சின்னத்தையே குறிக்கிறது,ஆட்சியாளர்கள் மறைமுகமாக பாமர மக்கள் மனதில் பதியுமாறு நிறுவிதை நன்கு உணர முடிகிறது ,நாளை திமுக ஆட்சிக்கு வந்து சுமார் 3000 பஸ்களுக்கும் லோகோ அழித்து மீண்டும் பெயின்ட் அடிக்க ஆகும் பொருட்செலவும் கூலியும் நம் தலையில் தானே விலைவாசியாக இறங்கும்?
ஓவ்வொரு ஆட்சிக்காலத்திலும் ,இப்படி விரும்பிய இலச்சினையை மாற்றிக்கொள்வது, தமிழகத்துக்கு என சர்வதேச அரங்கில் தனித்த அடையாளத்தை பெற்றுத்தருமா? இந்த ஆட்சிக்காலம் முடிந்து வேறு கட்சி வந்தால் உதயசூரியனோ,முரசு சின்னமோ மீண்டும் அழித்து வரையப்படுமா? இது குடி ஆட்சியா?முடி ஆட்சியா என,சந்தேகமாக இருக்கிறது.
இதில் என்ன கொடுமை என்றால் ஆளும்கட்சி தமது சின்னத்தை மறைமுகமாக வைப்பதும் , எதிர்க்கட்சி கேஸ் போட்டு அதை அழிக்க வைப்பதும் ஏற்கனவே தங்க நாற்கர சாலை எம்ஜியார் சமாதி என நிறைய உதாரணங்கள் உண்டு , அதீத செலவு பிடிக்கும் கட்சி விளம்பரங்கள் அதை மாற்ற ஆகும் கூடுதல் நிதிச்சுமை என பொதுமக்கள் தலையில் தான் விலைவாசியாக விழும் , வாஜ்பாய் வாகன ஓட்டிகளை பார்த்து கையசைக்கும் சிற்பம் 400 செய்ய அப்போது 50 கோடி ஆனது,
கோர்ட் தீர்ப்பின் படி அதை அழித்து மறைக்க 2 கோடி ஆனது எனப் படித்திருக்கிறேன் ,காங்கிரஸ் செய்யும் வெட்டி விளம்பர செலவில் ஒரு மாநிலத்துக்கு பட்ஜெட்டே போடலாம் , இதற்கெல்லாம் செல்வழிப்பது யாருடைய பணம்?, எல்லா செம்மொழி பூங்காவிலும் கலைஞரின் படமும் பெயரும் பொறிக்கப்பட்டன, இப்போது அந்த பெயர்கள் அவிழ்ந்து தொங்குகிறது, சில காணாமல் போய்விட்டன,அந்த கோலம் பார்க்கவே சகிக்க முடியாதபடி இருக்கிறது.
விசிட்டிங் கார்டு லோகோ டிசைனுக்கு கூட வாஸ்து பார்க்கும் மூடர்களும், ஏமாற்றுக்காரர்களும் நாட்டில் நிரம்ப உண்டு என நினைக்கையில் பற்றி எரிகிறது , கருமம்

புலம்பல்கள் தொடரும்!!!