என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல்


அடேங்கப்பா!!! அத்தன ஒர்த்தாங்க நீங்க ராகுல்?!!!
===============================================
உங்க முகத்த கண்ணாடிலயோ,ஏன்? உங்களையே  எப்பவும் ஏற  இறங்கப்  பாத்துக்கிடவோ மாட்டீங்களா?!!! இப்புடி குழந்தை பலூனை உடைச்சுட்டா அழற மாதிரியா அழறது?!!!இப்படி அபிஷ்டு மாதிரியாங்க பேசறது? ஒருவேளை நீங்க பிஎம் ஆகிட்டா , எங்களுக்கு வாழ்க்கை மேலேயே விரக்தி வந்துடும்,அது தான் எங்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே பொய்க்கும் இடம், பாத்துக்கங்க.

உங்க பாட்டி எமர்ஜென்சியில் விதைத்ததை சீக்கியரிடம் அறுத்தார் என்றால் மிகையில்லை,19 மாத கால கொடிய எமர்ஜென்சியில் நீங்கள் , உங்கள் புனித பசு பிம்பம் கொண்ட குடும்பம் எல்லாம் எத்தனை சொகுசாக இருந்திருப்பீர்கள் என யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

அதே எமர்ஜென்சி சமயத்தில் உங்கள் கைப்பாவை போலீஸார் & மிலிட்டரியால் நாடெங்கிலும் சந்தேகத்துக்கு இடமாக கைது செய்யப்பட்டு ,கோர்ட் விசாரணையே இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான நபர்கள், லாக்கப் டெத் செய்யப்பட்ட எதிர்கட்சியினர், நியாயம் கேட்ட படித்த,பாமர மக்களில் காலையில் வேலைக்கு போய் வீடு திரும்பாதோர்,  கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள், பெண்கள்,அது உங்களுக்கு மறந்துவிட்டதா?!!!

காங்கிரஸ் ஆண்ட போபாலில் விஷவாயு கசிவினால் ஒரே இரவில் தூக்கத்திலேயே மாண்டோர்கும்,சிதைக்கப்பட்ட டிஎன்ஏ உடற்கூறுகளுடன் இன்றும் மாண்டு கொண்டிருப்போர்க்கும் நீங்கள்,உங்கள் காங்கிரஸ்,என்ன நீதி செய்தீர்கள்?

இப்படி  நீங்கள் செய்த அக்கிரமம் ஒன்றா இரண்டா?!!!தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம், அப்படித் தான் எமர்ஜென்சியில் குரூர ஆட்டம் ஆடிய உங்கள் சித்தப்பா ,தன் மகன்  பிறந்த 100வது நாளில் பயிற்சி விமான விபத்தில் இறந்ததும்!!! . போகும் போது கூட உடன் ஒருவரை அழைத்து போனார் புண்ணியவான். அது மறந்துவிட்டதா?!!!

இந்திரா அம்மையாரை இரண்டு சீக்கியர்கள் கொன்றனர்,அதற்கு பரிகாரமாக 8000  [டெல்லியில் மட்டும் 3000 பேர்][அரசு சொன்ன கணக்கு] சீக்கியரை ஆண் பெண்,குழந்தைகள்,பிறந்த சிசு என பேதமின்றி கொன்றார்களே உங்கள் திருத்தொண்டர்கள், அது மறந்துவிட்டதா?!!!

அந்த சீக்கியப் படுகொலைகளுக்கு சப்பை கட்டு கட்ட ஒரு பெரிய ஆல மரம் விழும் போது நிலம் அதிரவே செய்யும் என சொல்லிய பின்னர் அதற்கு பல திசைகளிலும் எதிர்ப்பு திரண்டு வரவே மன்னிப்பு கேட்டாரே உங்கள் தந்தை ராஜிவ். அது மறந்துவிட்டதா?!!!


நேரு குடும்பத்தின் இளைய மருமகளும் மூத்த விதவையுமான மேனகா  உங்களுக்கு சித்தி முறை,அவர் செய்தியாளராக செய்த வெட்கம்  கெட்ட காரியம் அறிவீர்கள் தானே?மேனகா காந்தி காங்கிரஸின் துதிபாடி பத்திரிக்கையான ''சூர்யா'' இதழில் வெளியிட்ட அதிர வைக்கும் செய்திக்காக பெரிதும் அசிங்கப்பட்டவர்,பாபு ஜகஜீவன் ராம் ஒரு தலித் - மூத்த அரசியல்வாதி,தான் இருந்த இந்திரா காந்தி அரசிலிருந்து விலகி ஜனதா கட்சி 1977-ல் பதவிக்கு வர பெரிதும் உதவியவர் என்ற காரணத்துக்காகவே மேனகா காந்தியால் பொதுவில் அவமானப்படுத்தப்பட்டவர் .பாபு ஜகஜீவன் ராம் அப்போது இந்திய பிரதமர் பதவிக்கு தேர்வாகாக கூடியவர்களில் ஒருவராகக்கூட கருதப்பட்டார்.

1978 ஆம் வருடம் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜகஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராமுக்கும், டெல்லி பல்கலைக்கழக மாணவி சுஷ்மா சௌதிரிக்கும் இடையேயான வாய்ப்புணர்ச்சி, மற்றும் அப்பட்டமான உடலுறவு போலராய்ட் புகைப்படக் காட்சிகளை, சுமார் 9 புகைப்படங்களாக காங்கிரஸ் கட்சி பத்திரிக்கையான சூர்யா இதழில் கொஞ்சமும் வெட்கமோ, அப்பெண்ணின் மீது கருணையோ இன்றி வெளியிட்டார் மேனகா.

அது நாட்டு மக்களிடையே மிகுந்த அருவருப்பை பெற்றது,ஆனால் அந்த சூர்யா பத்திரிக்கை ஒரு பிரதி கூட மிச்சமில்லாமல் விற்று தீர்ந்தது, 50 ரூபாய்க்கு கூட அதை வாங்கி கள்ளச்சந்தையில் விற்றனர். இப்புகைப்படங்கள் சுரேஷ் ராமும் சுஷ்மா சௌத்திரியும் நெருக்கமான உடலுறவில் ஈடுபட்டு இருந்ததை வெளிப்படுத்தின,சுரேஷ் ராம் தன் காரில் வைத்திருந்த அந்த 9 போலராய்ட் புகைப்படங்களை காங்கிரசார் திருடி வந்து, அதை சூர்யா பத்திரிக்கையிலும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையிலும் பிரசுரித்தனர். 

அதன் பின்னர் அந்தப் பெண் சுஷ்மா சௌத்தியின்  வாழ்க்கையே சூன்யமானது, இப்புகைப்படங்கள் பாபு ஜகஜீவன் ராமின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டது, இந்த கீழ்தரமான செயல்மூலம் தன் அரசியல் எதிரியை அழிக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் காங்கிரஸ் என்பது நிருபணமாயிற்று, அந்தப்புகைப்படங்கள் நெகடிவ் ஃபார்மட்டில் இங்கே இருக்கின்றன. வயது வந்தோருக்கு மட்டும்.

இதற்கு எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் எடிட்டிங் செய்ய உடந்தையாக இருந்தார் என்பதும் வெட்கக்கேடு, மிருகங்களை நேசிக்கும் மேனகா  இப்படி மிருகங்களை விட கீழ்தரமாக இறங்குவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். உங்களுக்கு பத்திரிக்கை தர்மத்தையே கழுத்தை நெறித்து கொன்ற அந்த கீழ்தரமான செயல் மறந்து விட்டதா?!!! 
எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய உங்கள் தந்தை ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையை யாராலுமே  மறக்க முடியாது, 3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,அவர்கள் எதிரிகளான சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,

உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் அற்ப சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வல்லுறவு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் ராகுல்?,அந்த ரத்த வாடை காயும் முன்பு முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு துணை நின்று சுமார் மூன்று லட்சம் பேர் மடிய காரணமாக இருந்தீர்களே?!!!அது மறந்துவிட்டதா?!!! இன்னும் எழுதவே அயற்சியாக இருக்கிறது,ஊழல் செய்வதில் கின்னஸ் சாதனை  புரிந்த கட்சி என்பது தான் உங்கள் சாதனையாக இருக்கிறது.

உங்களை விட மக்களாகிய எங்களுக்கு நிறைய வரலாறு  தெரியும் ,அவை நீங்கா வடுக்களாக எங்கள் மனதில் இன்னும் உள்ளன. அதை நாங்கள் மறக்கப்போவதில்லை. உங்கள் குடும்பத்தைப் பற்றி தேடினாலே இணையம் நல்லதாக எதுவும்  தருவதில்லை,  அதற்கு முதலில் ஏதாவது வழி பாருங்கள்.அப்புறம் மரண பயம் கொள்ளலாம்.

அண்ணாத்தையின் மரணபயத்தை இங்கே படிக்கலாம்.

 சீக்கிய இன அழிப்பு பற்றி பேசும்  சாரு எழுதிய சிறுகதையான 

பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி

இந்திய எமர்ஜென்சி காலகட்டம் அதன் அக்கிரமங்களை ரத்தினசுருக்கமாக தெரிந்து கொள்ள பார்க்க வேண்டிய படம்:- 


 இந்திரா அம்மையார் சாவுக்கு உச்சு கொட்டுபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய ஆவணப்படம்:-
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)