நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லூரி மாணவர்கள் குடி போதையில் தெருவில் கிடக்கும் வேதனை காட்சி! போட்டோ நன்றி:-இளையராஜா டென்டிஸ்ட் |
இதோ
இது!!! இன்று திடீரென நடக்கவில்லை,இன்று நிறைய நடக்கிறது, மாணவர்களுக்கு
போதையும் [டாஸ்மாக்] காமமும் [மொபைல் போன்-மெமெரி கார்டு]கைக்கெட்டும்
தூரத்தில் உள்ளது. குடியும் ஒரு மோசமான நோய் தான்.குடிகாரனிடம் தைரியமும் கட்டற்ற காமமும் அதீதம் இருக்கும்,அது கொண்டு சமூகத்தில் வெட்கப்படாமல் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
பணம் வருகிறது என்பதற்காக மாணவர்கள் எனத் தெரிந்தும் டாஸ்மாக்கில்
மதுபானம் விற்கின்றனர்,மாணவர்கள் அங்கேயே குடிக்கின்றனர், இப்படி தெருவில்
விழுந்து புரள்கின்றனர்.தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை விடாது.[ஒரு சில
விதிவிலக்குகள் இருக்கலாம்] மாணவர்களுக்கு
சிகரெட்,பான்பராக்,மானிக்சந்த்,ஹான்ஸ்,சாந்தி பாக்கு, ஃபவிகுவிக்,டைப்பிங்
ஒயிட்னர் விற்கும் கடைக்காரர்கள் கூட மனசாட்சி இல்லாதவரே,இந்த பிழைப்பு
பிழைப்பதற்கு பரத்தையரை கூட்டிக்கொடுத்து பிழைக்கலாம்.அவர்கள் வருங்கால
தூண்களின் அஸ்திவாரத்தையே சிதைப்பவர்கள்.
நேற்று ஒரு 10ஆம் வகுப்பு மாணவன்,ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்கவில்லை என ஒரு 7ஆம் வகுப்பு மாணவனை செப்டிக் டான்கில் தள்ளி மூழ்கடித்து கொன்றுள்ளான்,அதை படிக்க இங்கே சுட்டி, தன் அப்பா,நெருங்கிய உறவுகள் சிகரட் குடித்தாலோ, மது குடித்தாலோ அவன் அதை தவறென கருதுவது இல்லை,வீட்டில் ஒழுக்கம் இருந்தால் வெளியிலும் ஒழுக்கமாக இருப்பான்,இன்றைய பெற்றோர் ஒருவர் மாற்றி ஒருவர் நேரம் செலவிட்டு கண்காணிக்க வேண்டியது அவசியம்.
போதை போதாமல் போகையில் நிறைய குடிக்க தோன்றும்,நிறைய குடிக்க நிறைய செலவு ஆகையில் மாணவர்கள் அப்பா வாங்கித் தந்த பைக்கில் இருவராகவோ,மூவராகவோ சென்று தாலிச்சங்கிலி அறுக்கின்றனர்.குடி போதையில் அம்மாவின் தாலிச்சங்கிலியையே தெருவில் வைத்து அறுத்தான் ஒரு மாணவன் எனப் படிக்கும் காலம் தொலைவில் இல்லை.ஒரு நாள் போலீஸ் நம் வீட்டுக்கு தேடி வரும் முன்னர் சுதாரித்துக் கொள்வோம்.பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுவோம்.அவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம்.
குறிப்பு:-
படம் நன்றி[எம்.சசிகுமார்] |

- நான் டாஸ்மாக்கை அடியோடி எதிர்க்கவில்லை,அது சிறார்களுக்கும் மது விற்பனை செய்வதையும்,கால நேரமே இன்றி விறபனை செய்வதையும்,இப்படி டார்கெட் வைத்து ஊழியரை சாட்டையடி அடித்து விற்பனையை அதிகரிப்பதையும் எதிர்க்கிறேன்.
- கள்ளச்சாராய சாவுகளை களைய கொண்டு வந்தது தான் டாஸ்மாக், அரசுக்கு டாஸ்மாக் நடத்த தான் வேண்டுமென்றால் இதை வாங்கிக் குடிக்க கடுமையான வயது வரம்பு ,திறந்து மூடும் கால நேரம் வரையறுக்க வேண்டும்.கடுமையாக அதை கண்காணிக்க வேண்டும்.