ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் நேற்று பார்த்தேன், இங்கே துபாய் தியேட்டர்களில் இரைச்சலான தமிழ் திரைப்படங்களும் இதனுடன் முண்டி அடித்தமையால் ரிலீசாக வில்லை, அதனால் படத்தை வேறு எப்படிப் பார்க்க முடியுமோ அப்படித் தான் பார்த்தேன்,இயக்குனர் மிஷ்கின் படத்துக்கு பிண்ணணி இசையே இன்றி நோ கண்ட்ரி ஃபார் ஒல்ட் மென் போலக் கூட முயன்று இருக்கலாம்,அவரின் செய்நேர்த்தி தமிழ் சினிமா பார்க்காத ஒன்று.
ஆனால் அதற்கு தமிழ் ரசிகர்கள் பக்குவப்பட இன்னும் நிறைய காலம் போக வேண்டுமே,இன்றைய நண்டு சிண்டு இசை கெடுப்பாளன்கள் பிண்ணணி இசை என்று ரெடி மேட் லூப்பை வெட்டி ஒட்டி அலற விடுகின்றான்கள்[இதை எழுத நான் வருத்தப்படவில்லை]அந்த சிரங்கு பிடித்த கைகளுக்கு ஏழு ஜென்மம் எடுத்தாலும் கைவராத பிண்ணனி இசை இது என அடித்துச் சொல்லுவேன், இசைஞானியே கதி என சரணடைந்த மிஷ்கினுக்கு சிறந்த இசையை அளித்து நீதி செய்திருக்கிறார்,படம் பார்ப்பதற்கு முன்னும் பின்னும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தளத்தில் இருக்கும் பிண்ணணி இசைக்கான இலவச தரவுகளை முழுக்க கேட்டுக்கொண்டே தான் இருந்தேன்,படம் பார்க்க வேண்டிய ஆவலை அது தூண்டி விட்ட காரணியாகும்.அப்படிப்பட்ட எவெர்க்ரீன் க்ளாசிக் த்ரில்லர் திரைக்கதையும் பிண்ணணி இசையும் இது,இதை இன்னும் 30
வருடம் கழித்துப் பார்த்தாலும் புதுமையான ஒரு ஆக்கமாக மிளிரும் என்பேன்.
இது மேஜிக் அன்றி வேறு இல்லை உதிரிப்பூக்கள்,முள்ளும் மலரும்,முதல் மரியாதை ,தளபதி, சிறைச்சாலை, ஹேராம், பிதாமகன், பாரதி, விருமாண்டி,பழசிராஜா படத்துக்கு எல்லாம் கொடுத்த பிண்ணனி இசையை விட விஞ்சி நிற்கிறது, படக் காட்சிகள் மனக்கண்ணில் விரிந்தன என்றால் அது மிகையில்லை , கண்ட ரெடிமேடு லூப்பையும் கேட்டு நொந்து போய் இருந்தவர்களுக்கு நெடுநாள் கழித்து கிடைத்த அரிய பிண்ணணி இசை படத்துக்கு எந்த விதத்திலுமே இடையூராக இல்லை. எங்கே இசை கூடாது என்பது இவரை விட யாருக்கு கைவரும்? !!! இசைஞானியிடம் இதை விட ஒன்றுக்கு பத்தாக அறுவடை செய்த இயக்குனர்கள் எல்லாம் நன்றி மறந்த , முதுகில் குத்திய நிலையில் , மிஷ்கின் அவருக்கு செய்த முதல் மரியாதை அபாரமானது,அவரை மனதாரப் பாராட்டுகிறேன்.
இசைஞானி பாராட்டுகளுக்கும் விருதுகளுக்கும் அப்பாற்பட்டவர்,அவரை ஒருவர் புகழ்ந்தாலும் அவரின் மேன்மை உயரப்போவதில்லை,இகழ்ந்தாலும் அவரின் மேன்மை தாழப்போவதில்லை.மிஷ்கின் அடுத்த 20 வருடங்களுக்கு இசைஞானி தான் தன் படங்களுக்கு இசை என்று சொல்லியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, எதோ ஒரு டீவி பேட்டியின் முடிவில் முத்தாய்ப்பாக மிஷ்கின் தாலாட்டு கேட்க நானும் எத்தனைநாள் காத்திருந்தேன் என்று தழுதழுத்து பாடி முடித்தார், அதில் இசைஞானியின் மீதான அவரின் பாசாங்கில்லாத மரியாதையை உணரமுடிந்தது,
படம் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ப்ரேவோ,மார்டின் ஸ்கார்ஸஸியின் டாக்ஸி ட்ரைவர் படம் போல தமிழில் வந்த ஒரு தனித்தன்மை வாய்ந்த முயற்சி இது ,சில இடங்களில் கோயன் சகோதர்களின் நேர்த்தியும், ரஷ்ய இயக்குனர் அலெக்ஸி பாலபனவ்வின் தரமும் ஒருங்கே வெளிப்பட்டது,குஞ்சு குளுவான்கள் எல்லாம் சினிமா என்றால் என்ன என்று தெரியாமல் வாயால் வடை சுட்டும்,புரளியை விதைத்து குறுக்குவழி விளம்பரம் செய்தும்,குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பியுமே படம் எடுக்கின்றனர் ,நம் திரை விமர்சக அறிவு ஜீவிகள் லாஜிக் பார்க்கலாம், ஆனால் தானம் வந்த மாட்டை பல்லை பிடித்தார் போல இது போன்ற சில நல்ல முயற்சிகளுக்கு முரட்டு லாஜிக் பார்க்கக் கூடாது என்பது தான் என் நிலைப்பாடு, இது மிகவும் ப்ரொஃபெஷனலான படம்,இதில் மேதமையை காட்டக்கூடாது.அதற்கென்றே சில அபத்தமான படங்கள் வருகின்றன,அதை வேப்பிலை அடிக்கலாம் தப்பில்லை.இதில் தருக்க பிழைகள் எங்கே இருக்கின்றன என மெய்யாலுமே தெரியவில்லை. நான் அப்படி ஒன்றிப்பார்த்தேன்.இதே போலத்தான் தங்கள் மேதமை எல்லாவற்றையும் மூடர்கூடம் படத்தின் மீதும் காட்டினர்,அதை காப்பி என்றனர்.அதைப் பற்றியும் எழுதுவேன்.
ஓநாயாக வந்த மிஷ்கின் தன் பாத்திரத்துக்கு உண்டான பொறுப்பை மிகவும் உணர்ந்து நடித்துள்ளார்,அவரின் உடல் மொழி எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தது,எல்லோருமே பாராட்டிய அந்த கல்லறையில் சொல்லும் ஐந்து நிமிடக்கதை மிக நல்ல முயற்சி, தமிழ் சினிமாவில் ஃப்ளாஷ் பேக் செக்மெண்டில் டூயட் பாடலைக்கூட செருகியிருப்பார்கள்,அதெல்லாம் எத்தகைய அக்கிரமம் என்று இதைப் பார்க்கும் படைப்பாளிகளும்,நடிகர்களும் உணர்வார்கள்,ரசிகர்களும் இனிமேல் ஃப்ளாஷ் பேக் காட்சிகளுக்கு சிகரெட் பிடிக்க போவர் என்பது உறுதி,இந்த மாற்றம் வரவேண்டும்,அதற்கு ஒநாயும் ஆட்டுக்குட்டியும் வித்திட்டிருக்கிறது,
ஆட்டுகுட்டியாக வந்த ஸ்ரீ கலக்கியிருந்தார்,போலீஸ் அதிகாரியாக வந்த ஷாஜி அறிமுகப் படத்துக்கு சிறப்பாக செய்திருந்தார்,போலீஸ் உயரதிகாரிகளில் நிறைய மலையாளிகள் இருப்பதால் இவர் பேசும் மலையாள வாடை அடிக்கும் தமிழ் மிக இயல்பாக இருந்தது,இதை ஒப்பிட வேண்டுமென்றால் செய்திகளில் வரும் மலையாள போலீஸ் அதிகாரிகளின் பேட்டியை ஒரு முறை பாருங்கள்,முதல் காட்சியில் ஸ்ரீயின் அறுவை சிகிச்சைக்கு சாவு வீட்டிலிருந்து உதவி செய்யும் மருத்துவக் கல்லூரி டீன் பாத்திரம் மிகவும் அருமையான ஒன்று,மிஷ்கினின் படைப்புகளில் மட்டுமே இதுபோன்ற நிதர்சனமான கதாபாத்திரங்களைக் காண முடியும்.அவர் லட்சுமி ராம கிருஷ்ணனின் கணவர் எனப் படித்தேன்,
நல்ல போலீசும் கெட்ட போலீசும் கலந்த கலவையான பாத்திரப் படைப்புகள் இதிலும் உண்டு,படத்தில் வரும் விளிம்பு நிலை கதாபாத்திரங்கள் யாருமே பணத்துக்கு மயங்குவதில்லை,அது மிஷ்கின் அவர்கட்கு செய்த ஒரு மரியாதை,திருநங்கை ஒருவருக்கும் அப்படி மரியாதை செய்தது அழகு,ஒரு மனநிலை பிழறியவர் ஸ்ரீ ஓநாயை வண்டியில் ஏற்றி தாங்கிப் பிடிக்க உதவியதற்கு 100 ருபாய் எடுத்துத் தர அதை வாங்கி பிட்டத்துக்கு பின்னால் எறிகிறான்,கண்ணீர் வர சிரிக்கிறான்
இதே போல அஞ்சாதேவில் நரேன் ஒரு கத்திக்குத்து வாங்கியவனை ஒரு பூக்கார கிழவியின் துணை கொண்டு பைக்கில் கொண்டு செல்ல,அவன் போகும் வழியிலேயே உயிர்விடுவான்,கிழவி அதை நின்னுடுச்சுப்பா!!! நின்னுபோய்டுச்சுப்பா!!! என அழுதபடி சொல்வார்,நரேன் இறந்தவனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துவிட்டு,அந்த இன்ஸ்பெகடரிடன் வசவு வாங்கிவிட்டு,கிழவியை ஏற்றிய இடத்துக்கே கொண்டு விடுவார்,பின்னர் நரேன் கிழவிக்கு வீடு திரும்ப உதவும் என 100 ரூபாய் எடுத்துக் கொடுப்பார், கிழவி வாங்க மறுத்து விட்டு என் கையில் ஒட்டிய அவன் ரத்தம் கூட காயலை,சாகக்கிடந்த உயிரை காப்பாற்ற உனக்கு உதவ வைச்சே!! அதுக்கு எதுக்கு காசு?,என புலம்பியபடி அவன் ரத்தம் சிந்தி இறந்த மண்ணில் கூடையில் இருந்த மிச்சப்பூவையும் கொட்டிவிட்டுச் செல்வார்,பின்னர் மனம் துவண்டிருக்கும் நரேனிடம் திரும்பி , தம்பி அந்த கிறுக்குப்பயல் திட்டுனதையெல்லாம் நீ காதில் போட்டுக்கொள்ளாதே!!! அவன் போலீஸ் இல்லை,நீதான் போலீஸ் என்பார் கிழவி ,அட்டகாசமான மனிதநேயம் சொல்லும் காட்சி அது,அது போல இதிலும் காட்சிக்கு காட்சி மனிதநேயம் பொதித்து வைத்துள்ளார்.இப்போது எங்கும் மனிதம் செத்து போய்விட்ட நிலையில் அதை மீண்டும் தன் படங்களில் காட்சிகளாக விதைக்திருக்கிறார் மிஷ்கின்.அந்த அருமையான காட்சியை இங்கே பார்க்கலாம்.
இது போல ஆச்சர்யங்கள் மிஷ்கின் படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.அதே போல பார்வை அற்ற கதாபாத்திரங்கள் பேசும் ’’பையில் திங்க ஏதாவது இருக்கும்னு பார்த்தோம்,பணக்கட்டு இருந்தது,எங்களுக்கு அது எதுக்குன்னு திரும்ப கொண்டு வந்துட்டோம் ‘’ என்னும் எளிய வசனம் நம் முகத்தில் அறையும், முன்னாள் பதிவர் நர்சிம் ஒரு காட்சியில் நைட் ட்யூட்டி டாக்டராக தோன்றியிருந்தார் இவரும் அறிமுகத்துக்கு நல்ல முயற்சி,இவரின் மிஷ்கினுடன் பணியாற்றிய அனுபவக்கட்டுரை இன்று உயிர்மையில் படித்தேன்.அதன் சுட்டி
படத்தில் வரும் கெட்டபோலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரமான பிச்சையும் தொழில்முறை நடிகரல்லாதவர் எனப் படித்தேன்,அவரின் இயல்பான நடிப்பை அப்படியே வைத்திருக்கிறார் மிஷ்கின் எனப்படித்தேன், ஆச்சர்யமாக இருந்தது,பிச்சை பாத்திரம் ஏற்ற நடிகரின் பேட்டியை படிக்க இங்கே சுட்டி

நான் கொரியப்படங்கள் பார்ப்பதை அறவே நிறுத்தி விட்டேன்,எனக்கு அவை ஒருவித ஒவ்வாமையைத்
தருகின்றன,அவர்களின் ராகமான வசனநடையும் , கண் இடுங்கிய சப்பை மூக்கு தோற்றமும்
நம் நேட்டிவிட்டிக்கு எதிரானவை, இதனால் எனக்கு படத்தில் நிம்மதியாக ஒன்ற
முடிந்தது.அறிவுஜீவித்தனம் தலை தூக்கவேயில்லை.நான் மாறாக கொரியப்படங்களை விட பண்பட்ட ரஷ்யத் திரைப்படங்களும் , ருமேனிய சினிமாவும், விரும்பிப்பார்ப்பவன். மிஷ்கினை தமிழின் அலெக்ஸி பாலபனவ் என்றும் க்ரிஸ்டியன் முண்ட்ஸியூ [Cristian Mungiu] என்றும் தயங்காமல் சொல்லுவேன்,படம் பார்க்காதவர்கள் படத்தை தூக்கும் முன் ஒருமுறை தியேட்டரில் பாருங்கள்,
எனக்கு அந்த அனுபவம் இங்கே கிடைக்கவில்லை,அது ஒரு குறை தான். நல்ல முயற்சிகள் அடுத்தடுத்து பிறப்பதற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், பொருளாதார ரீதியான வெற்றியும் ,அங்கீகாரமும் அவசியமாகிறது,அதற்காக வேண்டியேனும் இதை தியேட்டரில் பாருங்கள். இதில் மற்றொரு சிறப்பம்சமாக ஹான்ஸ் கைனி புகழ் முகேஷ் கடைசிவரை தோன்றவே இல்லை, சிகரட் குடித்தல் மது குடித்தல் நாட்டுக்கு வீட்டுக்கு உடம்புக்கு கேடு என்னும் கார்டு எங்குமே வரவில்லை, பெண்ணின் மீதான வன்முறை கூட எங்கும் காட்சியாக இல்லை,வசனமாகத் தான் என் நெஞ்சில் மிதித்தான் ,நான் மயங்கிவிட்டேன் என்னும் ரீதியில் வருகிறது,அது போன்ற நவீன முயற்சியாக எடுத்திருக்கிறார் மிஷ்கின்.இதைப்பார்த்தாவது டாஸ்மாக் காட்சியை தங்கள் எல்லா படங்களிலும் பல்கிப் பெருக்கும் இயக்குனர்கள் திருந்தினால் தமிழகம் தப்பும்.
சென்னை பறக்கும் ரயில் காட்சிகள் மிக அருமையாக இருந்தது,அடுத்த முறை சென்னை போகையில் வேளச்சேரி கடற்கரை ரயில் மார்க்கத்தில் நிச்சயம் பயணம் போக வேண்டும் என நினைக்க வைத்தது, சென்னையின் இரவின் அழகை காட்சிப்படுத்தியதில் பாலாஜி ரங்கா உச்சம் தொட்டுள்ளார்,நண்பர் கிங் விஸ்வா மிஷ்கின் கதை சொல்லும் காட்சியில் நெடுநாள் கழித்து அழுதபடி தியேட்டரில் இருந்து வெளியேறினேன், என்று சொன்னார்.அது எத்தனை உண்மை? என்று புரிந்தது,திரைமொழியின் வீச்சு அப்படி.அடுத்து இதே போல சமரசம் செய்து கொள்ளாமல் முற்றிலும் புதிய ஒரு படைப்பை மிஷ்கின் தருவார் என்று நம்புகிறேன்.படத்தைப் பற்றி மிகவும் தாமதமாக எழுதுகிறேன் எனத் தெரியும்.எழுதாமல் விடுவதற்கு தாமதமாக எழுதுவது நன்று அல்லவா?!!!
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு போஸ்டர் ஒட்டக்கூட காசில்லாமல், ஊர் ஊராக மிஷ்கினே சென்று போஸ்டர் ஒட்டுவதை அறிந்த இளையராஜா, தன்னுடன் பணிபுரிந்த பக்க வாத்தியக் கலைஞர்களுக்கு மட்டும் சொற்பத் தொகையை மிஷ்கினிடம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்,தனக்கான சம்பளமாக ஒரு பைசாகூட வாங்காமல் இளையராஜா ‘நோ’ சொல்ல... கண்கலங்கி விட்டாராம், மிஷ்கின். எனப் படித்ததும் ராஜா பணம் தனக்கு எப்போதுமே முக்கியமானதில்லை என மீண்டும் நிரூபித்திருக்கிறார் என நினைக்கவைத்தது.மிஷ்கினின் அடுத்த படைப்பு அபாரமாக வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ஒரு சில போலி சினிமா/இசை மேதைகள் தங்களை பெரிய பிடுங்கி போல நினைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கிலும் ட்வீட்டரிலும் இசைபற்றி வாந்தி எடுக்கின்றனர்,அது மல்லாக்கப்படுத்துக்கொண்டு தங்கள் மேலேயே காரி உமிழ்ந்து கொள்வதற்கு சமமானது என்று தெரிந்துமே அப்படி செய்கின்றனர்.4 உலகசினிமா பார்த்தால் சினிமா இலக்கணம் தெரிந்திடுமா?4 யூட்யூப் இசைக்கோர்ப்பை கேட்டால் இசையில் பண்டிதனாகிவிடமுடியுமா?தடி எடுத்தவன் தண்டல்காரன் ஆவது போலே இங்கே இசையை கண்மூடித்தனமாக விமர்சித்தால் ஒரே நாளில் அறிவுஜீவி-துடைப்பக்கட்டை.
இங்கே ஒருவர் இசைஞானியின் பிண்ணணி இசை ஏன் உயர்ந்தது என்று ஆராய்ந்து எழுதியுள்ளார்,ஆங்கிலம் புரிந்தால் போய் படிக்கவும்.
சமீபத்தில் ஒரு கேலிக்கூத்தாக சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு ஹைதராபாத் நிஜாமின் மியூசியம் போன்றதொரு ஃப்லிம் சிட்டியில் ஆசிரியர் என சொல்லிக்கொள்ளும் ஒருவர் இசைஞானியை சவுண்ட் டிசைன் கோர்ஸ் படிக்க ஆலோசனை சொல்லியிருந்தது, அதற்கு எத்தனை சீரிய மனநோய் இருந்தால் ஒரு இசைமேதையை அவ்வாறு சொல்லியிருக்கும் அந்த பைத்தியம் ?!!! என எண்ணி கண்ணீர் வர சிரித்தேன்,தமிழனுக்கு எதிரி தமிழன் தான் என்னும் கூற்றும் நினைவுக்கு வந்தது.
எப்போதுமே,எந்த துறையில் இருக்கும் வாத்தியாருக்குமே தியரிட்டிக்கலான அறிவு தான் மிகுந்து இருக்கும், ப்ராக்டிகலாக அவர்கள் கோட்டை விட்டு விடுவார்கள்,அவர்களுக்கு திறம்பட ஒரு திட்டத்தை எடுத்து வழிநடத்தும் சூட்டிகைத்தனம் கைவராது, [இது ரித்விக் கட்டக் போன்ற மாமேதைகளுக்கு பொருந்தா], அதனால் தான் வேறு வழியின்றி கடைசி புகலிடமாக ஆசிரியராக அமருகின்றனர்,தவிர அதே துறையில் கோலோச்சும் விற்பன்னரைப் பற்றிய கேவலமான அபிப்ராயம் அவர்களிடம் தவிர்க்க முடியாது.
உலகப் புகழும்,பணமும் தனக்கு வாய்க்க வில்லையே என்னும் வயிற்றெரிச்சல் தான் அதற்கு முக்கிய காரணம்,ஆனால் அவர்கள் ஒன்றை வசதியாக மறந்துவிடுவர்,ஊர் குருவிக்கும் கூட பறக்க தெரியும் ,ஆனால் அது ஒருக்காலுமே பருந்தாகாது,புலியின் டவுன்சைஸ்டு ப்ரொபோர்ஷன் தான் பூனை,ஆனால் புலியின் சீற்றமும் பாய்ச்சலும் அதற்கு வந்துவிடுமா? அதனால் வாத்தியார் என்பவர் ,ஏணி தோணி வாத்தியார்,நார்த்தங்காய் ஊறுகாய் என்னும் பிரபலமான கூற்றுக்கேற்ப வாத்தி போல இருந்தால் மாணாக்கரிடம் மரியாதையேனும் மிஞ்சும், மூலச்சூட்டுகாரன் போல வாழ்நாள் சாதனையாளரிடம் தங்கள் வயிற்று ,பொச்சு எரிச்சலை காட்டினால் வெந்நீர் தண்ணீரை சொறிநாய் மேலே ஊற்றுவது போல ரசிகர்கள் கழுவிக் கழுவித்தான் ஊற்றுவர், அதையும் தாங்கிக்கொள்ள வேண்டும்.
இசைஞானிக்கு பிண்ணணி இசை அமைக்கத் தெரியாது , சிவாஜிக்கு நடிக்க தெரியாது , காங்கிரசுக்கு ஊழல் பண்ணத் தெரியாது , ஜெயகாந்தனுக்கு எழுதத் தெரியாது , சத்யஜித் ரேவுக்கு இயக்கம் தெரியாது ,பிரபாகரனுக்கு வீரம் என்றால் என்ன என்றே தெரியாது, அப்துல் கலாமுக்கு ராக்கெட் சயின்ஸ் தெரியாது, இப்படி அறிவு ஜீவிகளின் தீர்ப்பில் நிறைய தெரியாதுகள் , வீட்டிலிருந்து வாயை மட்டும் கொண்டு வந்தால் போதும் , என்ன கலர் வாந்தி வேணும்னாலும் எடுக்கலாம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் முன்னணி இசைக்கோர்வையை தரவிறக்க சுட்டி இங்கே:-
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-