இளம் சமூக எழுத்தாளர் சமஸ் எழுதி தமிழ்
இந்துவில் வெளியாகிகொண்டிருக்கும் முக்கியமான 26 கட்டுரைகள்[இதுவரை]
அவரது தளத்தில் நீர் நிலம் வனம் என்னும் லேபிலில் படிக்கக் கிடைக்கின்றன,
பழவேற்காடு துவங்கி ராமேஸ்வரம் வரையேயான 1000 கிலோமீட்டர் நீள கடற்கரை சமூக விரோதிகளால்,அரசியல் வாதிகளால், தரகர்களால், பேராசை கொண்ட தொழில் அதிபர்களால் சீரழிக்கப்படுவதை இவர் கட்டுரைகள் நேர்படப் பேசுகின்றன,
இன்றைய கடற்கரை கிராமங்கள் அதிக அளவில் எதிர்கொள்ளும் புற்றுநோய் மரணங்களை , குடிநீர் தட்டுப்பாட்டை, தாது மணல் திருட்டால் கடல் ஓரிடத்தில் உள்வாங்கி, வேறோர் இடத்தில் வெளிவாங்கி கிராமங்களின் நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் அவலத்தைப் இவர் கட்டுரையில் படியுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் சினிமா மீனவர் குப்பம் என்றாலே ரவுடிகள் வசிக்கும் இடம்,எதிரியைக் கொன்று கடலில் வீசும் பிழைப்பைச் செய்பவர்கள் மீனவர்கள்,என்ற கருத்தை மாற்றும் கட்டுரைகள்,பாரம்பரியமான கடலோடிகளின் மீது நன்மதிப்பை ஏற்படுத்தும் கட்டுரைகள் இவை.
காயல்பட்டணம்,தூத்துக்குடி,ராமநாதபுரம்,ராமேஸ்வரம், கன்யாகுமரியில் இருக்கும் நண்பர்கள் இப்பதிவுகளைப் படித்து அவருக்கு பின்னூட்டுங்கள்.அவர் அமைதியாக முன்னெடுத்துச் செல்லும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிரான போராட்டத்தில் தோள்கொடுங்கள்.
தமிழ் இந்து இந்த தொடரை எந்த உள்நோக்கத்தில் வேண்டுமானாலும் வெளியிடட்டும்,கவலையில்லை,ஆனால் நமக்கு இத்தனை அருமையான கட்டுரைகளை இதன் மூலம் நமக்கு தந்துள்ளது தமிழ் இந்து, அபாரமான நெஞ்சுரமும்,நடுக்கமில்லாத எழுத்தும் கொண்ட சமஸ்க்கு வாழ்த்துக்கள்.
நீர் நிலம் வனம்
http://writersamas.blogspot.ae/search/label/நீர்%20நிலம்%20வனம்