சிட்டிலைட்ஸ்[ CityLights ] [2014 ] [இந்தியா ]


சிட்டிலைட்ஸ் என்னும் படம் சார்லி சாப்லினின் க்ளாஸிக் படத்தின் பெயரை கொண்டிருந்ததால் கொஞ்சம் அத்ருப்தியும் கோபமும் இருந்தது,ஆனால் படம் பார்த்து முடித்தவுடன் அது நீங்கிவிட்டது. அந்த பெயருக்கு உயர்ந்த மரியாதையே செய்திருந்தார் இயக்குனர் ஹன்சல் மேத்தா.இவரின் முந்தைய படமான ஷாஹித்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார்.

மெட்ரோ மனீலா என்னும் பிலிப்பைன்ஸ் நாட்டு தாகலாக் மொழிப் படத்தில் இருந்து மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, நம் நாட்டு பெருநகர சூழலுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக மாற்றியிருந்தார் இயக்குனர் ஹன்சல் மேத்தா.

ராஜஸ்தானின் ஒரு குக்கிராமத்தில் துணிக்கடை நடத்தி நொடித்துப் போன குடும்பத்தலைவன் தீபக் சிங் பாத்திரத்தில் [ராஜ்குமார் ராவ்], அவரின் மனைவி ராக்கி [பத்ரலேகா], அவரின் செக்யூரிட்டி பார்ட்னர் விஷ்ணுவாக  [மானவ் கவ்ல்], இவர்கள் இருவரும் வேலை செய்யும் ப்ரைவேட் விஜில் செக்யூரிட்டி நிறுவன முதலாளி காத்ரேவாக [ப்ரமோத் பதக் ] என காஸ்டிங்கில் பிரமிக்க வைத்து விட்டார் இயக்குனர் .

ஒரு படத்தை தத்ரூபமாக அமைப்பதற்கு காஸ்டிங் எத்தனை முக்கியம் என்று பார்வையாளருக்கு புரிய வைத்திருக்கிறார். மெட்ரோ மனீலா படத்தில் நாயகன் குடும்பம் பெரியது, அதில் ஏற்கனவே ஒரு மகளும் கைக்குழந்தையும், வயிற்றில் சில வாரங்களே ஆன சிசுவும் என நம்பிக்கை ஓளியே அற்றிருக்கும், எப்போதுமே ஒரு படைப்பை ஓவர்டோஸாக வைத்து துலாபாரம் படமாக்கக் கூடாது.

இதில் ஒரே மகள் தான், தவிர,அதில் நான் லீனியர் வடிவில் ஆங்காங்கே நாயகனின் வேலை இழந்த நண்பன், ஈஸி மனி செய்ய விமானத்துக்குள் பயணி போல நுழைந்தவன்,நடுவானில் துப்பாக்கி காட்டி மிரட்டி எல்லா பயணிகளிடமும் பணம் பறித்து , தானே தன் ஆலையில் பட்டுத்துணியில் செய்த பாரசூட் கொண்டு தரையிறங்கி அடிபட்டு செத்தும் போகிறான். அந்த காட்சிகளை நேட்டிவிட்டிக்கு ஒத்து வராது என்று வெட்டி எரிந்து விட்டார் இயக்குனர். அது பாராட்ட வேண்டிய அம்சம். சிட்டி லைட்ஸ் படத்தின் சிறப்பம்சம் அதன் கதாபாத்திரத் தேர்வுதான். மூலப்படத்தின் காஸ்டிங்கை தூக்கி சாப்பிட்டு விட்டனர்.

ராஜ்குமார் ராவ் நடிப்பு பற்றி உலகசினிமா ரசிகர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை .இவரின் முதல் படமான லவ் செக்ஸ் அவ்ர் தோக்கா படத்தில் தன் பரீட்சார்த்தமான நடிப்பை துவங்கியவர் இன்று வரை வித்தியாசமான கதாபாத்திரங்களால் பிரமிப்பூட்டி வருகிறார்.

லவ் செக்ஸ் அவ்ர் தோக்கா_படத்தில் ஈஸி மனி செய்து தன் கடனை அடைத்தே ஆக வேண்டிய சல்லிப்பயல் பாத்திரம், தன் தோழியின் கௌரவக்கொலையால் நொந்துபோன ஏழைப்பெண்ணை, உஷார் செய்து சூப்பர் மார்கெட்டின் சிசிடிவி கேமராவில் ,ஒரு நைட் ஷிப்டில் வைத்து உடலுறவு கொண்டு அந்த ஃபுட்டேஜை விற்கும் கயவன் வேடம்.

அதே போன்ற பேராசையும் ஈஸிமனி செய்யும் ஆர்வமும் கொண்ட பாத்திரம் ராகினி எம் எம் எஸ் படத்திலும் , ஷைத்தான் படத்தில் தவறிழைத்த இளைஞர் பட்டாளத்தை மிரட்டி பணம் பறிக்கும் கான்ஸ்டபிள் பாத்திரம்.கை போச்சே படத்தில் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞன், ஆனால் சந்தர்ப்பவசத்தால் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சென்று, நண்பனின் தங்கையுடனே ஒரு பண்டிகையின் இரவில் பாதுக்காப்பின்றி உடலுறவு கொண்டு விட்டு, அவளுக்கு நாள் தள்ளிப் போனவுடன் பயந்து தவிக்கும் பாத்திரம், அந்த இனப்படுகொலையின் உச்சக் காட்சியில் அதை நீர்த்துப் போவது போல இவரது போனுக்கு வரும் எஸ் எம் எஸ் நினைவிருக்கிறதா?!!!

மேலும்  பாம்பே மிரர் என்னும் இன அழிப்பு துவேஷம் களையும் குறும்படம் ஒன்றில் முஸ்லீம் இளைஞரான இவர் சவரம் செய்யச் சென்று அமருவார், வெளியே ஒரு சினிமா ஷூட்டிங்கில் இனக்கலவரக் காட்சிக்காக முஸ்லீம்கள் இந்துவை ஆண்குறியை சோதித்துப் பார்த்து விட்டு கழுத்தறுப்பது போல படமாக்குவர்,அதை உள்ளிருந்தபடி அதிர்ச்சியுடன்  பார்த்த வெகுநாள் பழகிய இந்து சவரத் தொழிலாளி, நடுங்கும் கரங்களில் பிடித்திருக்கும் ரேசரால் ராஜ்குமார் ராவின் கழுத்தை அறுத்தும் விடுவார், ஆனால் வெளியே படப்பிடிப்பு முடிந்து ஷாட் ஓக்கே,சொல்லி, இறந்தவரும் எழுந்து விடுவார், அப்போது தான் அந்த சவரத் தொழிலாளிக்கு உரைக்கும். அய்யோ கன நேரத்தில் ஒரு உயிரை அழித்துவிட்டோமே என்று, அப்படி பல அருமையான படைப்புகளுக்கு அது எத்தனை சிறியதாக இருந்தாலும் , உயிரூட்டியவர் ராஜ்குமார் ராவ்.
பாம்பே மிரர் குறும்படம் பாருங்கள் பகிருங்கள்


எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல ஷாஹித் என்னும் நிஜ ஆளுமையின் கதையின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அந்த காலம் சென்ற ஷாஹித் என்னும் வழக்கறிஞருக்கு கௌரவம் செய்தார் ராஜ்குமார், அப்பாவி முஸ்லீம்கள் மீது போடப்படும் பொய்வழக்குகளில் இருந்து, ஒரு ஏழை வழக்கறிஞர், நேர்மையாக போராடி விடுதலை பெற்றுத்தரும் பாத்திரம். அதற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
ஷாஹித் படத்தில் வரும் முக்கியமான வாதாடும் காட்சி,ஆங்கில சப்டைட்டில் இல்லை.மன்னிக்கவும்

இந்த சிட்டிலைட்ஸ் படத்தில் பிழைப்புக்காக குக்கிராமத்திலிருந்து மும்பை போன்ற பெருநகரத்துக்கு இடம்பெயரும் ஓர் அப்பாவி ஏழையின் குடும்பம் பெருநகர சூழலின் கோரப்பிடியில் சிக்கி எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.  

இந்தியாவில் இன்றைய கிராமங்களில் மக்கள் வாழ வழியின்றி எப்படி பெருநகரங்களுக்கு படையெடுக்கின்றனர் என்பதை ரத்தமும் சதையுமாக நாம் கண்ணுறுகிறோம்.உடன் பயணிக்கிறோம்.

மும்பையில்  இவர்கள் வந்து இறங்கியவுடன் வீடு பிடிக்க உதவுகிறேன் என்னும் பெயரில் இவரைக் கொண்டு போய் ஒரு வீட்டைக்காட்டும் ஒரு வீடு புரோக்கர் இவரிடமிருந்த சேமிப்பான பத்தாயிரத்தை சடுதியில் ஏமாற்றிவிட்டுச் செல்கிறான்,அவ்வீடு வீடோ யாரோ ஏற்கனவே வாடகைக்கு எடுத்தது எனப் பிறகு தான் தெரிகிறது. தெருவில் செய்வதறியாது தவிக்கும் இவர்கள் தஞ்சம் அடைவது அங்கே கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடத்தில், அதுவும் அங்கே உள்ள வாட்ச்மேனால் தின வாடகை 100 வாங்கிக்கொண்டு தான் தங்க அனுமதிக்கப் படுகின்றனர். 

மும்பையின் டான்ஸ் பார்கள் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது,அதில் சாந்தினி பார் மிகவும் குறிப்பிடத்தக்கது,நானே சுமார் 15 வருடங்கள் முன்பு ஒரு டான்ஸ் பாருக்கு என் உறவினரால் அழைத்துச் செல்லப்பட்டு,அங்கே மது ஊற்றித்தரும்,சிகரட் பற்றவைக்க உதவும், சைட் டிஷ் பறிமாறும் நடன மங்கையரைக் நேரில் கண்டிருக்கிறேன்,

அங்கே பார் டேன்சராக பணிபுரிவது ஒரு சாபம்,ஏழு மணிக்கு துவங்கும் பார்கள் 2மணி வரையிலும் இயங்கும்,பாலிவுட்டின் புகழ்பெற்ற ஐடம் நம்பர்கள் ஒலிக்க அதன் வரிகளுக்கு வலிக்காமல் நடனமாடி,அங்கே குடிக்க வரும் ஜாம்பவான்களை தொட்டும் தொடாமலும்,பட்டும் படாமலும் குஷிப்படுத்தி அவர்களிடமிருந்து ரூபாய் நோட்டுக்களை அன்பளிப்பாக,சிலசமயம் பண மழையாகக் கூட  பெறும் பிழைப்பு,

அவர்களுக்கு சம்பளம் மாதத்துக்கு 1000 ரூபாய் தான்,ஆனால் அன்பளிப்பு அப்போதே ஒரு நாளுக்கு 1000 ரூபாய் வரும்,அதில் அவனுக்கு கமிஷன், இவனுக்கு கமிஷன் ,மேக்கப்புக்கு இவ்வளவு,உடை வாடகைக்கு அவ்வளவு என 200ரூபாய் மிஞ்சினால் அதிகம் என்று கேட்டிருக்கிறேன், இப்படத்திலும் நாயகனின் மனைவி ராக்கி,பார் டான்சராக வேலைக்கு சேர்ந்தவள்,உள்ளம் குமைகிறாள்.

பிடிக்காமல் ஆடுகிறாள். அழுது அழுது மேக்கப் களைகின்றது,இவளுக்கு ஈடுபாடின்மையாலும்,அவளை வாடிக்கையாளர் தொட அனுமதிக்காததாலும் இவளுக்கு பணமே சேருவதில்லை,குழந்தை தினமும் பசியால் வாடுகிறது, மானத்தை விட்டு செய்யும் பிழைப்பு.அந்த பார் டான்சருக்காக நேர்முகத் தேர்விற்கு செல்லும் இடம் மிக அருமையான ஒன்று, அதில் பார் நடத்துபவனாக வரும் ஜெயேஷ் பாய்[வினோத் ராவத்] என்னும் பாத்திரமும் மிகத் தத்ரூபமான பாத்திரம்.

இப்படினான சூழலில் நாயகன் தீபக் , தனியார் ஆயுதப்படையின் பணி விளம்பரம் கண்டு நேர்முகத் தேர்வுக்கு சென்று,அங்கே விஷ்ணு என்பவனின் பார்வையில் பட, இவரின் வெள்ளந்தித் தனமும் ஏற்கனவே ராணுவத்தில் ட்ரைவராக இருந்ததும், ராஜஸ்தான் ஓட்டுனர் உரிமம வைத்துள்ளதும், அங்கே வேலை வாங்கித் தருகிறது, இருந்தும் அதற்குக் கூட ஆயிரம் கெடுபிடிகள்,இவரது பார்ட்னர் விஷ்ணுவுக்கு ஒரு கெட்ட உள்நோக்கம் அங்கே உள்குத்தாக இருந்து அவருக்கு வேலை வாங்கித் தருகிறது,மாதம் 15 ஆயிரம் சம்பளம்,ஆனால் உயிர் நேரமும் பிரியக்கூடிய ஆபத்து.

 இவரின் நிறுவன முதலாளிக்கு சீரியஸான பிரச்சனை செய்யக்கூடிய ஆட்களை பிடிப்பதில்லை,வேலைக்கு சேர்ப்பதுமில்லை,ஆட்டிட்யூட் இல்லாத டைம்பாஸ் ஜோக்குகள் சொல்லித்திரியும் ஆட்களே சேஃப் என்று எண்ணும் ஒரு பிறவி,அவரை திருப்தியுற வைக்க அங்கே தீபக் பொய்யாக அப்போது தான் விஷ்ணு சாரால் தான் அறிந்த ஒரு காரியதரிசி பற்றிய உப்புப்பெறாத ஜோக்கை சொல்கிறார், அந்த முதலாளியும் அல்லக்கையும் அந்த ஜோக்கிற்கு அப்படி விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்,ஆனால் அவர்கள் ஜோக்கை ரசித்து சிரிக்கும் அளவுக்கு லேசான இதயம் படைத்தவர்களில்லை,என்பது நமக்கு க்ளைமேக்ஸ் காட்சியில் புரிய வருகையில் ரத்தம் உறைகிறது.

மிக அருமையான பாத்திரப்படைபும்,காட்சியாக்கங்களும்,உலக சினிமா ரசிகர்கள் விரும்பிப் பார்க்க ஏற்ற படம் இது,இப்படம் பார்ப்பவர்கள் மெட்ரோ மனிலா படத்தையும் அவசியம் பாருங்கள்.படத்தில் ராஜ்குமார் ராவ் பேசும் ராஜஸ்தானி வாடை அடிக்கும் இந்தி மிகவும் அழகு,அத்தனை ராகமாக ஏற்ற இறக்கத்துடனும் அப்பாவித்தனத்துடமும் இருக்கும், சக ஊழியன் விஷ்ணுசாரை ஹுக்கும் [ஐயா] என கிராமவாசி பாஷையில் அழைக்கும் இடங்கள் மிகவும் அருமை.

இடது புறம் மானவ் கவ்ல் கைபோச்சே திரைப் படம்
விஷ்ணு சாராக வந்த மானவ் கவ்ல் ஒரு தேர்ந்த நாடக நடிகருமாவார்,இவர் காஷ்மீர் மாநிலத்தவர்.கைபோச்சே படத்தில் சங்பரிவார் கட்சியின் அல்லக்கையாக வருவாரே?நினைவிருக்கிறதா?இனப்படுகொலையை முன்னிருந்து நடத்துவார். மூன்று நண்பர்களின் ஒருவனுக்கு தாய்மாமன்,என்ன ஒரு சக்தி வாய்ந்த ஒரு பாத்திரம் அது?இதிலும் விஷ்ணு சாராக வந்து மிரட்டியிருக்கிறார்,கண்ணில் தெரிவது இரக்கமா?குரூரமா?என கண்டறிய முடியாத ஒன்றைக் கொண்டிருப்பார்.படம் பார்க்கையில் நீங்கள் உணர்வீர்கள்.

 என்றும் நினைவில் தங்கும் ஒரு உலகசினிமா சிட்டிலைட்ஸ், படத்தின் ஜீத் கங்குலி,ராஜு சிங்கின் இசையும்,தேவ் அகர்வாலின் ஒளிப்பதிவும் படத்தின் மாபெரும் பலம்.

சிட்டிலைட்ஸ் படத்தின் ட்ரெய்லர்:-

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)