டல்லாஸ் பையர்ஸ் கிளப் Dallas Buyers Club 2013

டல்லாஸ் பையர்ஸ் கிளப்  Dallas Buyers Club  2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.

இது வாழ்க்கை வரலாற்று நாடக வகை திரைப்படம்.
இத்திரைப்படத்தை ஜீன் மார்க் வாலே இயக்கியுள்ளார்.

1980களின் மத்தியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு முப்பது நாட்களே உயிர் வாழ முடியும் என்று கணிக்கப்பட்ட ரான் வுட்ரூஃப் என்ற மனிதனின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் நோய் பற்றிய புரிதல் குறைவாக இருந்ததால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எப் டி ஏ அங்கீகரிக்காத மாற்று மருந்துகளை மெக்சிகோ போன்ற பிற நாடுகளிலிருந்து ரான் கடத்தி வருகிறார்.

பின்னர் சக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அந்த மருந்துகளை வழங்குவதற்காக டல்லாஸ் பையர்ஸ் கிளப் என்ற அமைப்பை உருவாக்கி அரசாங்க எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அதை வெற்றிகரமாக நடத்துகிறார்.

இத்திரைப்படத்தின் அடிநாதம்  மரணத்தின் விளிம்பிலும் மனிதன் கைவிடாத வாழ்விற்கான தீவிர போராட்டமும், சக மனிதர்கள் மீதான அவனது எதார்த்தமான அன்பு மாற்றமுமே ஆகும்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் மீது ஆரம்பத்தில் கடுமையான வெறுப்பைக் கொண்டிருக்கும் ஒரு சராசரி, சுயநலமிக்க மனிதன், தனக்கும் அதே நோய் தாக்கும்போது சமூகத்தால் எப்படி ஒடுக்கப்படுகிறான் என்பதை இப்படம் மிக ஆழமாகப் பேசுகிறது.

அரசாங்க அமைப்புகளின் கடுமையான கட்டுப்பாடுகளையும், மருத்துவ உலகின் வியாபார நோக்கங்களையும் எதிர்த்து, தனக்காகவும் தன் போன்ற பிற நோயாளிகளின் உயிர்வாழ்விற்காகவும் அவன் சட்டவிரோத மருத்துவப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான்.

அந்தப் பயணத்தில், தான் அதுவரை வெறுத்த மனிதர்களோடு இணைந்து பணியாற்றும் சூழல் அவனுக்கு ஏற்படுகிறது.
மரண பயமும் வலியும் அவனிடமிருந்த ஒட்டுமொத்தப் பாகுபாடுகளையும், ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான துவேஷத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து, அவனுள் ஒரு மாபெரும் மனிதநேய மாற்றத்தை உருவாக்குகிறது.

பணத்திற்காகத் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி, இறுதியில் சக மனிதர்களின் உயிரைக் காக்கும் ஒரு உன்னதப் போராட்டமாக மாறுவதும், மரணம் நிச்சயம் என்று தெரிந்த பின்பும் ஒவ்வொரு நொடியையும் சுயமரியாதையுடனும் தைரியத்துடனும் வாழ்ந்து காட்டுவதுமே இந்தத் திரைப்படத்தின் மையக்கருத்தாகும்.

இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ மெக்கானஹே மற்றும் அவருக்கு உதவும் திருநங்கையாக நடித்த ஜாரெட் லெட்டோ ஆகியோரின் நடிப்பு உலகளவில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது.

இந்த கதாபாத்திரங்களுக்காக மேத்யூ மெக்கானஹே நாற்பத்தேழு பவுண்டுகளும் ஜாரெட் லெட்டோ முப்பது பவுண்டுகளும் உடல் எடையைக் குறைத்து தங்களின் அசாத்திய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.

இவர்களுடன் மருத்துவராக நடித்த ஜெனிபர் கார்னரின் நடிப்பும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது.

ஜீன் மார்க் வாலேவின் இயக்கம் இந்த படத்திற்கு மிக எதார்த்தமான வடிவத்தைக் கொடுத்தது.

அவர் நடிகர்களை சுதந்திரமாக நடிக்க விட்டு செயற்கை விளக்குகளைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை ஒளியிலேயே படத்தை இயக்கியுள்ளார்.

ஈவ்ஸ் பெலாஞ்சர் கேமராவை கைகளில் ஏந்தி ஆவணப்படம் போன்ற ஒரு எதார்த்த உணர்வைத் தரும் வகையில் மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஐந்து மில்லியன் டாலர்  குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஐம்பத்தைந்து மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்ததுடன் பல்வேறு முக்கிய விருதுகளையும் குவித்தது.

86வது அகாடமி விருதுகளில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை மேத்யூ மெக்கானஹே மற்றும் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை ஜாரெட் லெட்டோ வென்றனர்.

ஒரே திரைப்படத்தில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகர் ஆகிய இரு விருதுகளையும் ஆஸ்காரில் வென்ற ஐந்தாவது திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றது.

மேலும் சிறந்த ஒப்பனை மற்றும் ஹேர்ஸ்டைலிங் ஆகிய பிரிவிலும் இந்த படம் ஆஸ்கார் விருதை வென்றது.

இது தவிர கோல்டன் குளோப் மற்றும் ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளையும் இந்த படத்தின் நடிகர்கள் வென்று சாதனை படைத்தனர்.

ஒளிப்பதிவாளர் ஈவ்ஸ் பெலாஞ்சர் மற்றும் இயக்குனர் ஜீன் மார்க் வாலே ஆகிய இருவரும் இணைந்து, ஹாலிவுட்டின் பாரம்பரிய படப்பிடிப்பு முறைகளை உடைத்து எறிந்தனர்.

இந்த படத்திற்கு என்று தனியாக எந்த ஒரு செயற்கை விளக்குகளையும் அவர்கள் பயன்படுத்தவே இல்லை. முழுக்க முழுக்க சூரிய ஒளி, அறையில் இருக்கும் சாதாரண விளக்குகள் போன்ற இயற்கை ஒளியை மட்டுமே நம்பி ஒட்டுமொத்த திரைப்படத்தையும் படமாக்கினர்.

இதற்காக அவர்கள் அதிநவீன 'அலெக்சா டிஜிட்டல்' கேமராவைத் தேர்ந்தெடுத்தனர். இந்த கேமரா மிகக் குறைந்த வெளிச்சத்திலும், இருண்ட சூழலிலும் கூட மனிதக் கண்களுக்குத் தெரியும் இயற்கையான நிழல்களையும் வண்ணங்களையும் துல்லியமாகப் பதிவு செய்யும் திறன் கொண்டது.

மேலும், படப்பிடிப்பு தளத்தில் பெரிய கேமரா ஸ்டாண்டுகள் எதையும் பயன்படுத்தாமல், 100 சதவீதம் கேமராவை கைகளிலேயே ஏந்தி  நகர்ந்தபடி ஒளிப்பதிவு செய்தனர்.

வெறும் 35 மில்லிமீட்டர் மற்றும் 50 மில்லிமீட்டர் ஆகிய இரண்டு லென்ஸ்களை மட்டுமே ஒட்டுமொத்த படத்திற்கும் பயன்படுத்தினர்.

இது நடிகர்களின் முகபாவனைகளுக்கு மிக அருகில் சென்று, எந்தவித காட்சி மாற்றமும் இன்றி எதார்த்தத்தை அப்படியே திரையில் கொண்டுவர உதவியது.

ஒளி அமைப்புகள் மற்றும் கேமரா கோணங்களை மாற்றுவதற்கான நேர விரயம் இல்லாததால், படப்பிடிப்பு மிக வேகமாக நடந்தது.

ஒவ்வொரு காட்சியும் தடையின்றி 15 நிமிடங்கள் வரை தொடர்ந்து படமாக்கப்பட்டது.

விளக்குகள், ஒளி பிரதிபலிப்பான்கள்  போன்ற எந்த ஒரு உபகரணங்களும் இல்லாததால் படப்பிடிப்பு தளம் மிகவும் நிசப்தமாக, ஒரு நிஜமான மருத்துவமனை அல்லது வீடு போன்ற உணர்வை நடிகர்களுக்குக் கொடுத்தது.

இந்த எளிமையான, புதுமையான ஒளிப்பதிவு நுட்பமே வெறும் 25 நாட்களுக்குள் ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ஆவணப்பட எதார்த்தத்துடன் எடுத்து முடிக்க முக்கியக் காரணமாக அமைந்தது.

இத்திரைப்படத்திற்காக எந்தவொரு பிரத்யேக அசல் பின்னணி இசையும்  தனியாக உருவாக்கப்படவில்லை. திரைப்படத்தின் எதார்த்தத் தன்மையைக் குலைக்கக் கூடாது என்பதற்காக, இயக்குனர் காட்சிகளுக்குப் பின்னால் ஒலிக்கும் வழக்கமான மெல்லிசைகளைத் தவிர்த்தார்.

மாறாக, கதையின் காலக்கட்டத்தையும் சூழ்நிலையையும் பிரதிபலிக்கும் வகையில் ஏற்கனவே புகழ்பெற்ற பல்வேறு கலைஞர்களின் பாடல்களை மட்டுமே படத்திற்குள் கொண்டுவந்தனர்.

இப்படத்தின் இசை ஆல்பத்தில் தர்டி செகண்ட்ஸ் டு மார்ஸ், டீகன் அண்ட் சாரா, அவோல்நேஷன் போன்ற முன்னணி இசைக்குழுக்களின் பாடல்கள் இடம்பெற்றன.

இதில் மிக முக்கியமான சுவாரசியம் என்னவென்றால், படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த ஜாரெட் லெட்டோ தான் அந்த 'முப்பது செகண்ட்ஸ் டு மார்ஸ்' என்ற புகழ்பெற்ற ராக் இசைக்குழுவின் முதன்மைப் பாடகர் ஆவார். அவர் தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தனது குழுவின் பாடல் மூலமாகவும் இப்படத்தின் இசைக்கு வலு சேர்த்தார்.

மேலும், இந்த திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய டிஜிட்டல் இசை ஆல்பம் ஐடியூன்ஸ் தளத்தில் வெளியானபோது ஒரு உன்னதமான நோக்கம் அதோடு இணைக்கப்பட்டது.

இந்த ஆல்பம் விற்பனையாகும் ஒவ்வொரு முறையும், அதில் கிடைக்கும் தொகையிலிருந்து நாற்பது சென்ட்டுகள் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் 'புராஜெக்ட் ரெட்'  என்ற உலகளாவிய தொண்டு நிறுவன நிதிக்குச் சென்றடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

திரைப்படத்தின் கதை எய்ட்ஸ் நோயாளிகளின் போராட்டத்தைப் பற்றியது என்பதால், அதன் இசை உருவாக்கமும் நிஜ வாழ்க்கையில் அதே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவும் வகையில் அமைந்தது இப்படத்தின் ஆகச்சிறந்த சுவாரசியம்.

நிஜ ரான் வுட்ரூஃப் மரணமடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 1992 இல் திரைக்கதை ஆசிரியர் கிரெய்க் போர்டன் அவரை நேரில் சந்தித்து பல மணிநேர ஆடியோ நேர்காணல்களைப் பதிவு செய்தார்.

வுட்ரூஃப்பின் தனிப்பட்ட நாட்குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு உருவான இந்த திரைக்கதை, 1996 ஆம் ஆண்டிலேயே டென்னிஸ் ஹாப்பர் இயக்கத்தில் வுடி ஹாரல்சன் நடிப்பில் உருவாகத் திட்டமிடப்பட்டது.

ஆனால், போதிய நிதி வசதி கிடைக்காததால் அந்த முயற்சி அப்படியே முடங்கியது.
அதன்பின்னர் 2001 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் ராபி ப்ரென்னர் இந்த கதையின் உரிமையை வாங்கி யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்தார். அப்போது பிராட் பிட் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

ஆண்டுகள் கடந்தும் படம் துவங்காததால், 2008 இல் ரியான் கோஸ்லிங் கதாநாயகனாகவும் கிரேக் கில்லெஸ்பி இயக்குனராகவும் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

இவாறாகப் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களும் இயக்குனர்களும் இந்த திட்டத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

பல எழுத்தாளர்கள் எழுதிய மாற்றுத் திரைக்கதை வடிவங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன.
இறுதியாக 2009 இல் தயாரிப்பாளர் ப்ரென்னர் அனைத்து புதிய வடிவங்களையும் நிராகரித்துவிட்டு, கிரெய்க் போர்டன் எழுதிய அசல் முதல் பிரதியையே கையில் எடுத்தார்.

நிஜ ரான் வுட்ரூஃப் போலவே டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த, அந்த கலாச்சாரத்தை நன்கு அறிந்த ஒருவரே இதற்குப் பொருத்தமாக இருப்பார் என்று கருதி மேத்யூ மெக்கானஹேவை அணுகினர்.

கதையின் தீவிர தன்மையைப் புரிந்துகொண்டு அவர் சம்மதித்ததும், 2011 இல் ஜீன் மார்க் வாலே இயக்குனராக இறுதி செய்யப்பட்டார்.

பல முன்னணி ஹாலிவுட் நிறுவனங்கள் கைவிட்ட ஒரு படைப்பை, சுயாதீன திரைப்படமாக எடுக்கத் துணிந்ததே இதன் முதல் வெற்றியாக அமைந்தது.

கதாநாயகனாக நடித்த மேத்யூ மெக்கானஹே, எய்ட்ஸ் நோயாளியின் தோற்றத்தைக் கொண்டுவருவதற்காகத் தனது உடல் எடையில் இருந்து சுமார் நாற்பத்தேழு பவுண்டுகளைக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார்.

அவரைப் போன்றே திருநங்கை கதாபாத்திரத்திற்காக ஜாரெட் லெட்டோவும் முப்பது பவுண்டுகளுக்கும் அதிகமாக உடல் எடையைக் குறைத்ததுடன், தனது புருவங்களை முழுமையாகச் சவரம் செய்து, உடல் முடிகளையும் நீக்கினார்.

படப்பிடிப்பின் போது நிகழ்ந்த மிக வியப்பூட்டும் விஷயம் , ஜாரெட் லெட்டோ படப்பிடிப்பு நடந்த இருபத்தைந்து நாட்களும் தனது 'ராயன்' என்ற கதாபாத்திரத்திலிருந்து ஒரு நொடி கூட வெளியே வரவில்லை.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த இயக்குனரோ அல்லது மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களோ யாரும் அந்த இருபத்தைந்து நாட்களும் ஜாரெட் லெட்டோ என்ற நிஜ மனிதனைப் பார்க்கவே இல்லை.

ராயன் என்ற கதாபாத்திரமாகவேதான் அவரை எதிர்கொண்டனர். படம் முடிந்து பல மாதங்கள் கழித்தே இயக்குனர் வாலே, நிஜ ஜாரெட் லெட்டோவை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தத் திரைப்படத்தின் ஒப்பனைக் கலைஞர் ராபின் மேத்யூஸ், வெறும் இருநூற்று ஐம்பது டாலர் என்ற மிகக் குறைந்த பட்ஜெட்டை மட்டுமே கொண்டு ஒட்டுமொத்தப் படத்திற்கான ஒப்பனை வேலைகளைச் செய்து முடித்தார்.

நடிகர்களின் உடலில் எய்ட்ஸ் நோயின் தீவிர பாதிப்புகளைக் காட்டுவதற்காக மிகக் குறைந்த செலவில் அவர் செய்த அந்த அசாத்திய ஒப்பனைதான், பின்னாட்களில் அவருக்கு ஆஸ்கார் விருதையும் பெற்றுத் தந்தது.

மிகக் குறைந்த முதலீடு, குறுகிய கால அவகாசம் ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், நடிகர்களின் இத்தகைய கடுமையான அர்ப்பணிப்பே இப்படத்தின் இரண்டாம் கட்ட உருவாக்கத்தை உன்னதமாக்கியது.

டல்லாஸ் பையர்ஸ் கிளப் திரைப்படத்தின் இறுதி கட்ட உருவாக்கமும் அதன் வெளியீடும் ஹாலிவுட் வரலாற்றில் ஒரு மாபெரும் அதிசய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முதலாகத் திரையிடப்பட்டபோதே, உலகத் திரைப்பட விமர்சகர்கள் அனைவரும் எழுந்து நின்று தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இந்தத் திரைப்படத்தின் எடிட்டிங் பணிகளை இயக்குனர் ஜீன் மார்க் வாலே, 'ஜான் மேக் மெக்முர்பி' என்ற புனைப்பெயரில் அவரே நேரடியாக மேற்கொண்டார் .

அகாடமி விருதுகளுக்கான இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற வியூகத்துடன், நவம்பர் மாத தொடக்கத்தில் மிகக் குறைந்த திரையரங்குகளில் மட்டுமே படம் முதலில் வெளியிடப்பட்டது.

நடிகர்களின் பிரம்மாண்டமான நடிப்புத் திறன் காட்டுத்தீ போல பரவியதால், திரைத்துறை சங்கங்களின் வாக்குப்பதிவு தேதிகளுக்கு முன்னரே திரையரங்குகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டு உலகளவில் ஐம்பத்தைந்து மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது.

இதன் உச்சகட்டமாக 86வது ஆஸ்கார் விருது விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை மேத்யூ மெக்கானஹேவும், சிறந்த துணை நடிகருக்கான விருதை ஜாரெட் லெட்டோவும் ஒரே மேடையில் வென்று வரலாறு படைத்தனர்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே திரைப்படத்திற்காக இந்த இரண்டு முக்கிய விருதுகளையும் வென்றெடுத்த ஐந்தாவது திரைப்படம் என்ற அரிய சாதனையை இது நிகழ்த்தியது.

படத்தின் கதை:-

1985 ஆம் ஆண்டு டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் பகுதியில் வசித்து வரும் ரான் வுட்ரூஃப் (மேத்யூ மெக்கானஹே)  மிகக் கடுமையான, கட்டுப்பாடற்ற பாலியல் வாழ்க்கை வாழும் மின்சாரப் பணியாளராகவும், ரோடியோ மாட்டுச்சவாரி பிரியராகவும் இருப்பதைப் பார்க்கிறோம்.

ஒரு விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவருக்கு, அங்கு நடத்தப்படும் சோதனையில் எச்ஐவி/எய்ட்ஸ் (HIV/AIDS) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர் இன்னும் முப்பது நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கின்றனர்.

தொடக்கத்தில் இந்த நோய் கணிப்பை ஏற்க மறுக்கும் ரான், பின்னர் கடந்த காலத்தில் போதைப்பொருள் ஊசி பயன்படுத்தும் ஒரு விலைமாதோடு தனக்கு இருந்த பாதுகாப்பற்ற பாலியல் உறவை நினைவுகூர்ந்து உண்மையை உணர்கிறார்.

அந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் நோய் பற்றிய சரியான மருத்துவப் புரிதல் இல்லாததால், ரானின் நண்பர்களும் குடும்பத்தினரும் அவர் ஓரினச்சேர்க்கையின் மூலமாகத்தான் இந்த நோயைப் பெற்றார் என்று தவறாகக் கருதி அவரைத் தங்களின் சமூகத்திலிருந்து முழுமையாக ஒதுக்கி விடுகின்றனர்.

வேலை செய்யும் இடத்திலிருந்து நீக்கப்படும் ரான், தனது வீட்டிலிருந்தும் இரக்கமின்றி வெளியேற்றப்படுகிறார்.

மருத்துவமனையில் அவரைச் சந்திக்கும் மருத்துவர் ஈவ் சாக்ஸ் (ஜெனிபர் கார்னர்), எப் டி ஏ (FDA) அமைப்பால் மனிதப் பரிசோதனைக்காக அப்போதுதான் தற்காலிகமாக அங்கீகரிக்கப்பட்ட ஏஇசட்டி (AZT) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து பற்றி அவரிடம் கூறுகிறார்.

இந்த மருத்துவப் பரிசோதனையில் கலந்துகொள்ளும் நோயாளிகளில் பாதி பேருக்கு உண்மையான மருந்தும், மீதி பாதி பேருக்கு வெறும் ப்ளேஸிபோ போலி மருந்தும்  தந்துதான் சோதனை நடத்தப்படும் என்று அவர் விளக்குகிறார்.

எப்படியாவது உயிர்வாழ நினைக்கும் ரான், மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு மட்டும் ரகசியமாக ஏஇசட்டி மருந்தை வாங்கத் தொடங்குகிறார்.

ஆனால், ஏற்கனவே அவருக்கு இருக்கும் கொக்கைன் மற்றும் மது அருந்தும் பழக்கவழக்கங்களோடு இந்த மருந்தும் சேரும்போது, அவரது உடல்நிலை மிகக் மோசமாகச் சீரழியத் தொடங்குகிறது.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ரான், அங்கு போதைக்கு அடிமையான  எச்ஐவி பாதித்த ராயன் (ஜாரெட் லெட்டோ) என்ற திருநங்கையைச் சந்திக்கிறார்.

தொடக்கத்தில் அவர் மீது ரான் கடுமையான வெறுப்பை உமிழ்கிறார்.
உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படாத மாற்று மருந்துகள் கிடைக்கும் மெக்சிகோவிலுள்ள ஒரு தற்காலிக மருத்துவமனைக்கு ரான் காரை ஓட்டிச் செல்கிறார்.

அங்கு எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் அமெரிக்க மருத்துவ உரிமத்தை இழந்த மருத்துவர் வாஸ் (கிரிஃபின் டன்) என்பவரைச் சந்திக்கிறார்.

ரானை பரிசோதிக்கும் மருத்துவர் வாஸ், ஏஇசட்டி மருந்து ஒரு நச்சுப் பொருள் என்று எச்சரித்து அதை நிறுத்தச் சொல்கிறார்.

அதற்குப் பதிலாக அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட,  நச்சுத்தன்மையற்ற டிடிசி (ddC) மற்றும் பெப்டைட் டி (Peptide T) ஆகிய புரதக் கூட்டு மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களை ரானுக்குப் பரிந்துரைக்கிறார்.

மூன்று மாத கால சிகிச்சைக்குப் பிறகு ரானின் உடல்நிலை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைகிறது.

இந்த மாற்று மருந்துகளை அமெரிக்காவிற்குள் கடத்திக் கொண்டு வந்து, அங்கு தவிக்கும் மற்ற எய்ட்ஸ் நோயாளிகளுக்கு விற்பனை செய்தால் பெருமளவில் பணம் சம்பாதிக்கலாம் என்பதை ரான் கண்டறிகிறார்.

அமெரிக்க எல்லையைக் கடப்பதற்காக அவர் தனக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கூறி ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் போல வேடமணிந்து, இவையாவும் தனது சொந்தப் பயன்பாட்டிற்கான மருந்துகள் என்று பொய் சொல்லி சட்டவிரோதமாக மருந்துகளை டெக்சாஸிற்குள் கொண்டு வருகிறார்.

அதே நேரத்தில், அமெரிக்க மருத்துவமனையில் ஏஇசட்டி மருந்தால் நோயாளிகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை மருத்துவர் ஈவ் கவனிக்கத் தொடங்குகிறார்.

ஆனால், அவரது மேலதிகாரியான மருத்துவர் சீவார்ட் (டெனிஸ் ஓஹேர்), இந்த மருத்துவப் பரிசோதனைகளை எக்காரணம் கொண்டும் பாதியில் நிறுத்த முடியாது என்று கறாராக மறுத்துவிடுகிறார்.

அமெரிக்கா திரும்பிய ரான், கொண்டு வந்த மருந்துகளை டல்லாஸ் நகரின் தெருக்களிலும், ஓரினச்சேர்க்கையாளர்களின் இரவு விடுதிகளிலும் விற்கத் தொடங்குகிறார்.

எய்ட்ஸ் சமூகத்தினர் மத்தியில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ராயனுடன், தனது ஆரம்பகால வெறுப்பை மறந்து ரான்  ஒரு வியாபார கூட்டணியை ஏற்படுத்திக் கொள்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து டல்லாஸ் பையர்ஸ் கிளப் என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பைத் தொடங்குகின்றனர்.

மருந்துகளை நேரடியாக விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு, கிளப்பில் சேரும் உறுப்பினர்களுக்கு மாதக் கட்டணமாக 400 டாலர் வசூலித்துக் கொண்டு மருந்துகளை இலவசமாக வழங்கும் ஒரு சட்டப் பாதுகாப்பு உத்தியைக் கையாளுகின்றனர்.

இந்த கிளப் எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் மிக வேகமாகப் பிரபலமடைகிறது; அதே நேரத்தில் ரானுக்கு ராயன் மீது இருந்த பாகுபாடுகள் மறைந்து அவர் மீது உண்மையான நட்பு மலர்கிறது.

ஜப்பானில் இருந்து ரான் புதிதாகக் கடத்தி வந்த இன்டர்ஃபெரான்  என்ற மருந்தை அவரே அதிக அளவில் உட்கொண்டதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அப்போது ரானின் மாற்று மருந்து கிளப் பற்றி அறிந்துகொள்ளும் மருத்துவர் சீவார்ட், இது தனது மருத்துவப் பரிசோதனைகளைக் கெடுப்பதாகக் கூறி ஆத்திரமடைகிறார்.

உடனடியாக அங்கு வரும் எப் டி ஏ அதிகாரி ரிச்சர்ட் பார்க்லி (மைக்கேல் ஓநீல்) அந்த இன்டர்ஃபெரான் மருந்துகளைப் பறிமுதல் செய்து ரானைக் கைது செய்வதாக மிரட்டுகிறார்.

மாற்று மருந்து கிளப்களால் நோயாளிகளுக்கு நன்மை நடப்பதை மருத்துவர் ஈவ் ஒப்புக்கொண்டாலும், எப் டி ஏ அமைப்பின் கடுமையான மற்றும் பழமைவாதக் கட்டுப்பாடுகளுக்கு முன்னால் தன்னால் எதையும் மாற்ற முடியவில்லையே என்று ரானிடம் வருந்துகிறார்.

இதனால் ஈவிற்கும் ரானுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவாகிறது. எப் டி ஏ அதிகாரிகள் ரானின் கிளப்பை அதிரடியாகச் சோதனை செய்ய வாரண்ட் வாங்கி வந்தாலும், அவர்களால் ரானுக்கு அபராதம் மட்டுமே விதிக்க முடிகிறது, கிளப்பை மூட முடிவதில்லை.

இதனால் கோபமடையும் எப் டி ஏ அமைப்பு 1987 ஆம் ஆண்டில் தனது விதிகளை மாற்றி, அங்கீகரிக்கப்படாத எந்தவொரு மருந்தையும் வைத்திருப்பது சட்டவிரோதம் என்று அறிவிக்கிறது.

இதனால் டல்லாஸ் பையர்ஸ் கிளப் கடும் பண நெருக்கடிக்கு ஆளாகிறது. ரானுக்கு உதவ நினைக்கும் ராயன், வேறு வழியின்றித் தனது தந்தையிடம் சென்று பண உதவி கேட்கிறார்.

மேலும் தனது ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்தையும் விற்று ரானுக்காகப் பணத்தைச் சேர்க்கிறார்.

ரான் மீண்டும் பெப்டைட் டி மருந்தைக் கொண்டு வருவதற்காக மெக்சிகோவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஆனால், அவர் மெக்சிகோவிலிருந்து திரும்பி வரும்போது, ராயன் மருத்துவமனையில் போதிய மாற்று மருந்துகள் கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்த செய்தியைக் கேட்டு ரான் நிலைகுலைந்து போகிறார்.

இதற்கிடையில், மருத்துவமனையிலுள்ள நோயாளிகளை டல்லாஸ் பையர்ஸ் கிளப்பிற்கு அனுப்பிய உண்மை தெரிந்ததால், மருத்துவர் ஈவை நிர்வாகம் ராஜினாமா செய்யக் கோருகிறது.

ஆனால் அவர் அதற்கு மறுத்துத் தன்னைத் தைரியமிருந்தால் பணிநீக்கம் செய்யுமாறு சவால் விடுகிறார்.

ராயனின் மரணத்திற்குப் பிறகு ரானின் குணத்தில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படுகிறது. பணம் சம்பாதிப்பது அவரது நோக்கமாக இல்லாமல் போய், எல்ஜிபிடி  சமூகத்தினர் மீதான அவரது மனிதநேயமும், அவர்களுக்கு எப்படியாவது மருந்துகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கமும் முதன்மையாக மாறுகிறது.

எப் டி ஏ கட்டுப்பாடுகளால் பெப்டைட் டி மருந்து கிடைப்பது மிகவும் அரிதாகிறது. இதனால் பொறுமையிழந்த ரான் 1987 இன் பிற்பகுதியில் எப் டி ஏ அமைப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்கிறார்.

நச்சுத்தன்மையற்றது என்று நிரூபிக்கப்பட்ட ஒரு மருந்தை, தன் சொந்தப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தத் தனக்கு சட்டப்பூர்வ உரிமை வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.

வழக்கை விசாரிக்கும் நீதிபதி ரானின் நிலைமையைக் கண்டு அனுதாபப்பட்டு எப் டி ஏ அமைப்பைக் கடுமையாகக் கண்டித்தாலும், சட்டப்படி தனக்கு அந்த அதிகார அமைப்பை மீற அதிகாரமில்லை என்று கூறி வழக்கை முடிக்கிறார்.

இருப்பினும், ரானின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, எப் டி ஏ அமைப்பு ரான் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக மட்டும் பெப்டைட் டி மருந்தை இறக்குமதி செய்யப் பிற்காலத்தில் அனுமதியளிக்கிறது.

மருத்துவர்கள் முப்பது நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என்று கணித்த ரான் வுட்ரூஃப், தனது அசாத்தியப் போராட்ட குணத்தால் 1992 ஆம் ஆண்டு வரை, அதாவது ஏழு ஆண்டுகள் எய்ட்ஸ் நோயுடன் எதிர்த்துப் போராடி உயிர் வாழ்ந்து மரணமடைகையில் படம் நிறைகிறது.

இத்திரைப்படம் மனித குலத்திற்கு வழங்கும் மிக முக்கியமான செய்தி , அதிகார அமைப்புகளின் அலட்சியத்தையும், விதியின் கொடூரமான தீர்ப்பையும் எதிர்த்து நிற்கும் ஒரு தனிமனிதனின் அசாத்தியமான துணிச்சலே வாழ்வின் ஆகச்சிறந்த உந்துசக்தியாகும்.

மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற உண்மை தெரிந்த பின்பும், அதற்கு அடிபணியாமல் ஒவ்வொரு நொடியையும் சுயமரியாதையுடனும், போராட்ட குணத்துடனும் வாழ வேண்டும் என்பதை இப்படம் உணர்த்துகிறது.

இதனுடன், சமூகத்தில் நிலவும் ஆழமான பாகுபாடுகளையும், மனிதர்களுக்கிடையேயான வெறுப்பையும் துடைத்தெறியும் உன்னத சக்தியாக 'சக மனிதனின் வலி' அமைகிறது என்ற மாபெரும் வாழ்வியல் உண்மையை இப்படம் பேசுகிறது.

தனக்கு ஒரு துன்பம் வரும்போதுதான், தான் அதுவரை ஒடுக்கிய மற்றும் வெறுத்த மனிதர்களின் பக்கமிருக்கும் நியாயமும், அவர்களின் வலியும் ரானுக்குப் புரிகிறது.

சுயநலமும் பணத்தாசையும் கொண்டு தொடங்கப்படும் ஒரு முயற்சி, சக மனிதர்களின் மீதான உண்மையான அன்பினாலும் மனிதநேயத்தினாலும் மாற்றமடையும்போது, அது ஒரு தனிமனிதனை வரலாற்றில் அழியாத நாயகனாக மாற்றுகிறது.

சட்டங்களும் விதிகளும் மனிதர்களின் உயிரைக் காப்பதற்கே தவிர, அதிகார வர்க்கத்தின் வியாபார லாபத்திற்காக அல்ல என்ற ஆழமான அரசியல் செய்தியையும், இறுதி மூச்சு இருக்கும் வரை வாழ்விற்காகப் போராடும் மானுடத்தின் உன்னதக் கதையையும் இப்படம் உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

#ஆஸ்கர்இரண்டாம்நூறு 

#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) ஆஸ்கர் (116) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)