தி ஹேட்ஃபுல் எய்ட் The Hateful Eight 2015

தி ஹேட்ஃபுல் எய்ட் The Hateful Eight திரைப்படம் இரண்டாயிரத்து பதினைந்தாம் (2015) ஆண்டு வெளியானது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் குவெண்டின் டாரண்டினோ இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் மேற்கத்திய மர்ம த்ரில்லர் என்ற ஜானராகும்.

அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பனிப்புயலில் சிக்கிக்கொள்ளும் எட்டு அந்நியர்கள் ஒரு தங்குமிடத்தில் அடைக்கலம் புகுவதையும், அவர்களுக்குள் ஏற்படும் மோதல்களையும் மர்மங்களையும் இந்த படம்  விவரிக்கிறது.

இத்திரைப்படத்தின் அடிநாதம்  மனிதர்களுக்குள் இருக்கும் வஞ்சகம், இனவெறி, பழிவாங்கும் உணர்ச்சி மற்றும் தீவிரமான அநம்பிக்கை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.

அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகும், மக்களிடையே மறைந்திருக்காத வட மற்றும் தென் மாகாணப் பிரிவினையையும், அதன் தொடர்ச்சியாக நிலவும் இனக் குரோதங்களையும் இப்படம் மிக ஆழமாகப் பேசுகிறது.

ஒரே அறையில் அடைக்கப்படும் எட்டு நபர்களில் யாருமே நல்லவர்கள் இல்லை என்பதுதான் கதையின் முக்கிய அம்சம்.

ஒவ்வொருவரும் தங்களின் கடந்த காலக் குற்றங்களையும், துரோகங்களையும் மறைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறார்கள்.

சட்டமும் நீதியும் வெறும் போலி வேஷங்களாகப் பயன்படுத்தப்படுவதையும், சுயநலத்திற்காக மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்வதையும் இப்படம் காட்டுகிறது.

இறுதியில், பழிவாங்கலும் வன்முறையும் எஞ்சியிருக்கும் அனைவரையும் எவ்வாறு அழித்துச் சிதைக்கிறது என்பதை விவரிப்பதே இப்படத்தின் மையக்கருத்தாகும்.

படத்தில் நடித்த சாமுவேல் எல். ஜாக்சன், கர்ட் ரசல், ஜெனிபர் ஜேசன் லீ மற்றும் வால்டன் கோகின்ஸ் உள்ளிட்டோரின் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது.

குறிப்பாக ஜெனிபர் ஜேசன் லீயின் நடிப்பு அவருக்கு ஆஸ்கார் பரிந்துரையைப் பெற்றுத் தந்தது.

குவெண்டின் டாரண்டினோவின் இயக்கம் இதில் மிகவும் தனித்துவமாகப் பேசப்பட்டது. ஒரு மூடிய அறைக்குள் நடக்கும் கதையை விறுவிறுப்பாகவும், தனது வழக்கமான கூர்மையான வசனங்கள் மற்றும் அதிரடி வன்முறை காட்சிகளுடனும் அவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ராபர்ட் ரிச்சர்ட்சன் கையாண்டுள்ளார். அவர் இந்த படத்தை 65 மிமீ பிலிமில் அல்ட்ரா பனவிஷன் 70 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் அகலமான திரையமைப்பில் பிரம்மாண்டமாகப் படம்பிடித்துள்ளார்.

பனிப்புயல் காட்சிகளையும், அறையின் உள்ளே இருக்கும் சூழலையும் அவரது ஒளிப்பதிவு நேர்த்தியாகக் காட்டியுள்ளது.

இப்படம் சிறந்த அசல் இசைக்கான ஆஸ்கார் விருதை வென்றது. பிரபல இசை அமைப்பாளர் என்னியோ மோரிகோன் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

இது தவிர சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளிலும் ஆஸ்கார் விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

கோல்டன் குளோப் விருதும் இப்படத்தின் இசைக்குக் கிடைத்தது.

இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு, இயக்குனர் முதலில் இதனை ஒரு நாவலாக எழுதவே திட்டமிட்டார். தனது முந்தைய படமான ஜாங்கோ அன்செயின்டுக்கு ஒரு தொடர்ச்சியாக, ஜாங்கோ இன் ஒயிட் ஹெல் என்ற தலைப்பில் கதையை உருவாக்கத் தொடங்கினார்.

ஆனால், ஜாங்கோ என்ற கதாபாத்திரம் இந்த புதிய கதைக்களத்திற்குப் பொருந்தாது என்று உணர்ந்ததால், பின்னர் இதனை ஒரு தனித் திரைப்படமாக மாற்ற முடிவு செய்தார்.

அதன்பின், 2014ஆம் ஆண்டு ஜனவரியில் இப்படத்தின் திரைக்கதை இணையத்தில் கசிந்தது. இதனால் மிகவும் ஏமாற்றமடைந்த இயக்குனர், படப்பிடிப்பு நடத்தும் யோசனையைக் கைவிட்டு, கதையை மீண்டும் நாவலாகவே வெளியிட எண்ணினார்.

தான் திரைக்கதையைக் கொடுத்து நம்பிய சில நெருங்கிய நண்பர்களே இதற்குப் பொறுப்பு என்று அவர் கருதினார்.

இருப்பினும், அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் தியேட்டரில் இந்த கசிந்த திரைக்கதையை வைத்து ஒரு நேரடி மேடை வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

அதில் முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு வசனங்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இயக்குனர் தனது முடிவை மாற்றிக்கொண்டு, புதிய மாற்றங்களுடன் மேலும் இரண்டு புதிய திரைக்கதை வடிவங்களை எழுதி, இப்படத்தின் உருவாக்கத்தை மீண்டும் தொடங்கினார்.

முதலில் இந்த மேடை வாசிப்பில் டெனிஸ் மெனோசெட் என்பவர் பிரெஞ்சுக்காரராக நடிக்கவிருந்த கதாபாத்திரம், பின்னர் படமாக்கப்பட்டபோது டெமியான் பிசிர் நடித்த மெக்சிகன் கதாபாத்திரமாக மாற்றப்பட்டது.

பெரிய நட்சத்திர நடிகர்களைத் தேர்வு செய்யாமல், படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் சமமான முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு கூட்டு நடிகர்கள் குழுவை இயக்குனர் தேர்ந்தெடுத்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு பழங்கால கிதார் தற்செயலாக உடைக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படத்தில் ஜெனிபர் ஜேசன் லீயின் கதாபாத்திரம் வாசிப்பதற்காக, மார்ட்டின் கிதார் அருங்காட்சியகத்திலிருந்து ஆயிரத்து 1870 ஆம் ஆண்டைச் சேர்ந்த விலைமதிப்பற்ற அசல் கிதார் ஒன்று கடனாகப் பெறப்பட்டிருந்தது.

அந்த காட்சியில் கர்ட் ரசலின் கதாபாத்திரம் அந்த கிதாரை வாங்கி உடைக்க வேண்டும் என்று திரைக்கதையில் இருந்தது.

உண்மையில், உடைக்கும் காட்சிக்கு முன்னதாக அந்த அசல் கிதாருக்குப் பதிலாக ஒரு போலி கிதாரை மாற்ற படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், இந்த விபரம் நடிகர் கர்ட் ரசலுக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவர் அசல் கிதார் என்று தெரியாமலேயே அதனைப் பலமாக அடித்து உடைத்தார்.

அந்த நேரத்தில் அருகில் இருந்த நடிகை ஜெனிபர் ஜேசன் லீயின் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியான எதிர்வினை உண்மையானதாகும்.

இந்த விபத்தால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிதார் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சேதமடைந்தது.

இதன் விளைவாக, அந்த அருங்காட்சியகம் இனிமேல் எந்தவொரு திரைப்பட தயாரிப்பிற்கும் தங்களின் பொருட்களைக் கடனாகத் தருவதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்தது.

இப்படத்திற்கு ஆஸ்கார் விருதினைப் பெற்றுத் தந்த இசை அமைப்பாளர் என்னியோ மோரிகோன், இப்படத்தின் முழுத் திரைப்படத்தையும் பார்க்காமலேயே ஐம்பது நிமிட அசல் இசையை அமைத்துக் கொடுத்தார் என்பது மற்றொரு சுவாரஸ்யமான செய்தியாகும்.

இயக்குனர் குவெண்டின் டாரண்டினோவின் படங்களில் முழுமையாக அசல் இசை பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படமும் இதுவேயாகும்.

மின்னியின் தங்குமிடத்தில் நடக்கும் அந்தக் கதவை ஆணி அடித்துப் பூட்டும் காட்சியும், வெளியில் குதிரைகளை லாடத்தில் பூட்டும் நீண்ட காட்சியும் சாதாரணத் திரையில் பார்ப்பதற்கே ஒருவிதப் பதற்றத்தைத் தரும்.

இயக்குனர் குவெண்டின் டாரண்டினோவுக்குத் திரையில் எதார்த்தம் இருக்க வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் உண்டு.

பனிப்புயல் காட்சிகளுக்காகக் கொலராடோவில் படப்பிடிப்பு நடத்தியது போக, தங்குமிடத்தின் உட்புறக் காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் செட் அமைத்துப் படமாக்கினர்.

ஆனால், அந்த ஸ்டுடியோவை ஒரு பிரம்மாண்டமான குளிர்சாதனக் கிடங்கு போல மாற்றி, வெப்பநிலையை எப்போதும் மைனஸ் டிகிரி அளவிலேயே வைத்திருந்தனர்.

நடிகர்கள் கதவை ஆணி அடிக்கும்போது அவர்களின் வாயிலிருந்து வந்த புகை மூட்டம் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அல்ல,அவர்கள் நிஜமாகவே உறைபனி குளிரில் நடுங்கிக் கொண்டுதான் நடித்தார்கள்.

கடும் குளிரில் கைகள் மரத்துப்போன நிலையில் சுத்தியலை வைத்து ஆணி அடிப்பது நடிகர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

பார்வையாளர்களுக்கு அந்தக் கதவு காட்சி ஒரு நகைச்சுவையான, எரிச்சலூட்டும் காட்சியாகத் தெரிந்தாலும், அதுதான் படத்தின் மிகப்பெரிய மர்மத்தை உடைக்கும் புள்ளியாக இருந்தது.

தங்குமிடத்தின் அசல் உரிமையாளரான மின்னி, எதிலுமே கச்சிதமாக இருக்கக்கூடிய ஒரு பெண். அவளது தங்குமிடக் கதவின் பூட்டு உடைந்திருக்க வாய்ப்பே இல்லை.

படத்தின் பின்பாதியில் வரும் பிளாஷ்பேக்கில், டெய்சியின் சகோதரன் கும்பல் உள்ளே புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தும்போதுதான் அந்தப் பூட்டு தற்செயலாக உடைந்து போகிறது.

மேஜர் வாரன் உள்ளே நுழைந்ததும் இந்தக் கதவை ஏன் இரண்டு பேர் சேர்ந்து ஆணி அடிக்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கும் இடமே, அவர் ஒரு துப்பறியும் அதிகாரியாக மாறத் தொடங்கும் புள்ளியாகும்.

கதவு உடைந்திருப்பதே அங்கே ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என்பதை வாரனுக்கு உணர்த்திய முதல் ரகசியத் துப்பாகும்.

மேலும், நடிகர் கர்ட் ரசல் ஏற்கனவே ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டில் நடித்த 'தி திங்' என்ற புகழ்பெற்ற திரைப்படத்திலும் இதே போன்ற பனிப்புயல் மற்றும் கதவை மூடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

அந்தப் படத்தின் சாயலையும், அதன் தாக்கத்தையும் தனது படத்திலும் கொண்டு வர விரும்பிய டாரண்டினோ, கர்ட் ரசலை வைத்தே அந்தக் கதவை ஓங்கி அடித்து மூடச் செய்தார்.

அந்தப் படத்தின் பின்னணி இசையமைப்பாளர் என்னியோ மோரிகோனின் பழைய பயன்படுத்தப்படாத இசைத் துண்டுகளையும் டாரண்டினோ இதற்காகவே வாங்கிப் பயன்படுத்தினார்.

வெளியில் குதிரைகளை லாடத்தில் பூட்டும் நீண்ட காட்சியை மிக மெதுவாக, விவரங்களை வெட்டாமல் காட்டியதற்கும் ஒரு காரணம் இருந்தது.

65 மிமீ பிலிம் கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அந்த அகலமான காட்சியில், பனிப்புயலின் கோர முகத்தையும், குதிரைகளின் மூச்சுக்காற்று காற்றில் உறைவதையும் காட்டி, தங்குமிடத்திற்கு வெளியே இருக்கும் உலகம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்க இயக்குனர் விரும்பினார்.

வெளியே போனால் பனிப்புயல் உங்களைக் கொன்றுவிடும்,உள்ளே இருந்தால் மனித மிருகங்கள் உங்களைக் கொன்றுவிடும் என்ற இக்கட்டான சுழலை அந்த இரண்டு நீண்ட காட்சிகளும் மிக அழகாகப் பிரித்துக் காட்டின.

இத்திரைப்படத்தின் காட்சிகளை மிக பிரம்மாண்டமான முறையில் திரையிடுவதற்காக, இயக்குனர் குவெண்டின் டாரண்டினோ ஒரு உலகளாவிய முயற்சியை மேற்கொண்டார்.

உலகெங்கிலும் உள்ள சுமார் நூறு திரையரங்குகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் அனாமார்பிக் லென்ஸ்கள் பொருத்தப்பட்ட பழமையான 70 மிமீ பிலிம் ப்ரொஜெக்டர்களைத் தனது சொந்த ஏற்பாட்டில் மறுசீரமைப்பு செய்து நிறுவினார்.

தான் விரும்பிய அகலத்திரை காட்சிகளை ரசிகர்கள் தியேட்டரில் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த பிரத்யேக ஏற்பாட்டைச் செய்தார்.

இதன் காரணமாக, தியேட்டர்களில் வெளியிடப்பட்ட ரோட்ஷோ பதிப்பிற்கும், பொதுவான திரையரங்கு பதிப்பிற்கும் இடையே பத்தொன்பது நிமிடங்கள் வரை கால அளவு வித்தியாசம் இருந்தது.

பெரிய திரைகளுக்காக எடுக்கப்பட்ட சில காட்சிகள் சிறிய திரைகளில் சரியாக வராது என்று இயக்குனர் கருதியதால், ரோட்ஷோ பதிப்பிற்காக மூன்று நிமிட ஓவர்ட்சூர் இசை, பன்னிரண்டு நிமிட இடைவேளை மற்றும் சில மாற்று காட்சிகளைச் சேர்த்து இரண்டு விதமாகப் படத்தை படத்தொகுப்பு செய்தார்.

இப்படத்தின் இறுதிப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, ஆஸ்கார் விருதுக்கான போட்டிப் பட்டியலில் இருந்த இத்திரைப்படத்தின் நகல் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை விசாரித்த எஃப்.பி.ஐ  அமைப்பு, இந்த கசிவு ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் தொடர்புடையது என்பதைக் கண்டறிந்தது.

இருப்பினும், இத்தகைய சவால்களையும் தாண்டி இத்திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது.

===========================
படத்தின் கதை:-

அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்திருந்தாலும், மனிதர்களின் மனங்களில் எரியும் இனவெறியும் வஞ்சகமும் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தவே இக்கதை பிறந்தது.

1877 ஆம் ஆண்டின் ஒரு குளிர்காலத்தில், பனிப்புயல் சூழ்ந்த வயோமிங் பகுதியின் பின்னணியில் இக்கதை தொடங்குகிறது.

யூனியன் ராணுவத்தின் முன்னாள் குதிரைப்படை வீரரும் தற்போதைய பவுண்டி ஹண்டருமான மேஜர் மார்க்விஸ் வாரன் (சாமுவேல் எல். ஜாக்சன்) தான் வேட்டையாடிய மூன்று பிணங்களுடன் ரெட் ராக் நகரை நோக்கிச் செல்லும்போது அவரது குதிரை பனியில் மடிந்து போகிறது.

அந்த வழியே ஓ.பி. ஜாக்சன் (ஜேம்ஸ் பார்க்ஸ்) ஓட்டி வரும் ஒரு குதிரை வண்டியை வாரன் வழிமறித்து நிறுத்தச் சொல்கிறார்.

அந்த வண்டியில் மற்றொரு பவுண்டி ஹண்டரான ஜான் ரூத் (கர்ட் ரசல்) என்பவரும், தூக்கிலிடப்படுவதற்காக ரெட் ராக் நகருக்கு அழைத்துச் செல்லப்படும் டெய்சி டோமர்க்யூ (ஜெனிபர் ஜேசன் லீ) என்ற பெண் கைதியும் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் பயணம் செய்கிறார்கள்.

வாரனும் ஜான் ரூத்தும் ஏற்கனவே ஆபிரகாம் லிங்கன் வாரனுக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதத்தின் மூலம் ஒருவருக்கொருவர் பழகியவர்கள் என்பதால், வாரனை வண்டியில் ஏற்றிக்கொள்ள ரூத் சம்மதிக்கிறார்.

வழியில், ரெட் ராக் நகரின் புதிய ஷெரிப் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் கிறிஸ் மேனிக்ஸ் (வால்டன் கோகின்ஸ்) என்பவரும் வண்டியில் இணைந்துகொள்கிறார்.

இவருடைய தந்தை உள்நாட்டுப் போரின் போது கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் என்பதால், கறுப்பின வாரனுக்கும் அவருக்கும் இடையே ஆரம்பத்திலேயே ஒரு மெல்லிய பகைமை உருவாகிறது.

இந்த பயணத்தின் போது, போர்க் கைதிகள் முகாமில் இருந்து தப்பித்து, அதற்குத் தீ வைத்ததற்காக வாரனின் தலைக்குக் கூட்டமைப்பினர் பெரிய பரிசுத்தொகை அறிவித்திருந்ததை ஜான் ரூத் அறிந்து கொள்கிறார்.

பனிப்புயல் மிகக் கொடூரமாகத் தீவிரமடைவதால், அவர்கள் அனைவரும் வழியில் இருக்கும் மின்னிஸ் ஹாபர்டாஷெரி என்ற தங்குமிடத்தில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இயற்கைச் சீற்றம், தப்பிக்கவே முடியாத ஒரு தங்குமிடத்திற்குள் வெவ்வேறு பின்னணி கொண்ட இவர்களை ஒன்றாக அடைத்து வைக்கிறது.

அவர்கள் தங்குமிடத்திற்குள் நுழையும்போது, அங்கே உரிமையாளரான மின்னி மற்றும் அவரது கணவர் ஸ்வீட் டேவ் ஆகியோர் இல்லை.

அவர்களுக்குப் பதிலாக பாப் (டெமியான் பிசிர்) என்ற மெக்சிகன் நபர், அவர்கள் இருவரும் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கச் சென்றிருப்பதாகவும், தன்னிடம் இந்த இடத்தை கவனித்துக்கொள்ள ஒப்படைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

அந்த விடுதியில் ஏற்கனவே ரெட் ராக் நகரின் தூக்குதண்டனை நிறைவேற்றுபவரான ஆஸ்வால்டோ மோப்ரே (டிம் ராத்), ஜோ கேஜ் (மைக்கேல் மேட்சன்) என்ற மாடு மேய்க்கும் தொழிலாளி மற்றும் தனது காணாமல் போன மகனுக்கு நினைவுச் சின்னம் எழுப்பத் திட்டமிட்டிருக்கும் முன்னாள் கூட்டமைப்பு ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மிதர்ஸ் (புரூஸ் டெர்ன்) ஆகியோர் தங்கியிருக்கிறார்கள்.

வெளியில் செல்ல முடியாத அந்தச் சூழலில், ஒரு மூடிய அறைக்குள் இவர்களைப் பூட்டி வைத்தால் இவர்களின் போலி முகமூடிகள் எப்படிக் கழல்கின்றன, யார் துரோகி என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்விகளுக்கான விடையாகவே அடுத்தடுத்த காட்சிகள் நகர்கின்றன.

அனைவர் மீதும் கடுமையான சந்தேகமடையும் ஜான் ரூத், வாரனைத் தவிர மற்றவர்கள் அனைவரிடமிருந்தும் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்கிறார்.

கிறிஸ் மேனிக்ஸ் ஜெனரல் ஸ்மிதர்ஸை ஒரு போர் வீரராக மதிக்கும் அதே வேளையில், பேடன் ரூஜ் போரில் கறுப்பினப் போர்க் கைதிகளைக் கொல்ல உத்தரவிட்டதற்காக வாரன் அவர் மீது ஆழ்ந்த வன்மம் கொண்டுள்ளார்.

இரவு உணவின் போது, வாரன் வைத்திருக்கும் லிங்கனின் கடிதம் ஒரு போலி ஆவணம் என்பதை கிறிஸ் மேனிக்ஸ் கண்டுபிடிக்கிறார்.

வெள்ளைக்காரர்களிடம் இருந்து தப்பித்து தற்காத்துக் கொள்ளவும், அவர்களிடம் மரியாதை பெறவுமே இந்த போலிக் கடிதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாக வாரன் ஜான் ரூத்திடம் ஒப்புக்கொள்கிறார்.

இதனால் ஜான் ரூத் ஏமாற்றமடைகிறார்.
அதன் பிறகு, வாரன் ஜெனரல் ஸ்மிதர்ஸின் அருகில் தனது துப்பாக்கி ஒன்றை வைத்துவிட்டு, அவருடைய காணாமல் போன மகனைத் தான் அறிந்திருப்பதாகக் கூறுகிறார்.

தனது தலைக்கு விதிக்கப்பட்ட பரிசுத்தொகையைப் பெற வந்த ஸ்மிதர்ஸின் மகனைத் தான் நிர்வாணமாக்கி, பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்ததாக வாரன் மிகக் கொடூரமாக விவரித்துக் கோபமூட்டுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்து அருகில் இருக்கும் துப்பாக்கியை ஸ்மிதர்ஸ் எடுக்க முயலும்போது, வாரன் தற்காப்புக்காக என்ற பெயரில் அவரைச் சுட்டுக் கொல்கிறார்.

இந்த மோதல் நடந்து கொண்டிருப்பதைக் காட்டி அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பிய வேளையில், அங்கே வைக்கப்பட்டிருந்த காபியில் யாரோ விஷம் கலக்கிறார்கள்.

இதனை டெய்சி மட்டுமே அமைதியாகப் பார்க்கிறார்.
அந்த விஷம் கலந்த காபியைக் குடித்த ஜான் ரூத் மற்றும் வண்டி ஓட்டி ஓ.பி. ஆகிய இருவருமே இரத்தம் கக்கித் துடிக்கிறார்கள்.

ஓ.பி. உடனடியாக அங்கேயே இறந்துபோக, தான் சாகக் காரணமான டெய்சியை ஜான் ரூத் கோபத்துடன் தாக்க முயல்கிறார்.

ஆனால் டெய்சி அவருடைய துப்பாக்கியாலேயே அவரைச் சுட்டுக் கொல்கிறார். காபியைக் குடிக்கவிருந்து மயிரிழப்பில் தப்பிய கிறிஸ் மேனிக்ஸைத் தவிர மற்ற அனைவரையும் வாரன் துப்பாக்கி முனையில் பிடித்து வைக்கிறார்.

கைகளில் விலங்குடன் இருக்கும் ஜான் ரூத்தின் பிணத்தில் இருந்து டெய்சியை வாரன் விடுவிக்க மறுக்கிறார்.

ஜோ கேஜ் தான் காபியில் விஷம் கலந்திருக்க வேண்டும் என்று மேனிக்ஸ் சந்தேகிக்கிறார். அதே நேரத்தில், விடுதியை கவனிப்பதாகக் கூறிய பாப் பொய் சொல்கிறார் என்பதையும், அவர் மின்னி சுட்டுக்கொல்லப்பட்டதை மறைக்கிறார் என்பதையும் சில ஆதாரங்களை வைத்து வாரன் கண்டுபிடித்து அவரைக் கொல்கிறார்.

டெய்சியையும் சுட்டுக் கொல்லப் போவதாக வாரன் மிரட்டும்போது, ஜோ கேஜ் பயந்து போய் தானே காபியில் விஷம் கலந்ததாக ஒப்புக்கொள்கிறார்.

அந்த கணத்தில், தரைப்பலகைக்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு மர்ம நபர் வாரனின் விதைப்பையில் சுடுகிறார். அதே நேரத்தில் ஏற்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் மோப்ரே மற்றும் மேனிக்ஸ் ஆகிய இருவருமே ஒருவரையொருவர் சுட்டு காயப்படுத்திக்கொள்கிறார்கள்.

கைதி டெய்சியை மீட்பதற்காக அவளது சகோதரனின் கும்பல் ஏற்கனவே அங்கிருந்த உரிமையாளர்களைக் கொன்றுவிட்டு, தங்குமிடத்தை மறைமுகமாகக் கைப்பற்றியிருக்கிறது என்ற ரகசியச் சதி அப்போதுதான் அம்பலமாகிறது.

ஒரு பின்னோக்கிச் செல்லும் காட்சியில், வாரன் குழுவினர் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பாப், மோப்ரே, ஜோ கேஜ் மற்றும் டெய்சியின் சகோதரனான ஜோடி டோமர்க்யூ (சானிங் டாடும்) ஆகியோர் அந்த தங்குமிடத்திற்கு வந்தது காட்டப்படுகிறது.

அவர்கள் அங்கிருந்த மின்னி (டானா கோரியர்), ஸ்வீட் டேவ் (ஜீன் ஜோன்ஸ்) மற்றும் அவர்களின் ஊழியர்களைக் கொடூரமாகக் கொன்று விடுகிறார்கள்.

ஆனால், அங்கே ஏற்கனவே தங்கியிருந்த ஜெனரல் ஸ்மிதர்ஸை மட்டும் தங்களின் திட்டத்திற்கு இடையூறு இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயிரோடு விடுகிறார்கள்.

பிணங்களை மறைத்து, கடையைச் சுத்தம் செய்து, தங்களின் ஆயுதங்களை மறைத்து வைத்த பிறகு, ஜான் ரூத் மற்றும் கைதி டெய்சியுடன் கூடிய வண்டி தங்குமிடத்திற்கு வரும்போது ஜோடி மட்டும் தரைக்கு அடியில் உள்ள பாதாள அறையில் மறைந்துகொள்கிறார் என்பது தெரியவருகிறது.

மீண்டும் நிகழ்காலக் காட்சியில், படுகாயமடைந்த வாரனும் மேனிக்ஸும் சேர்ந்து டெய்சி, ஜோ கேஜ் மற்றும் மோப்ரே ஆகியோரைத் துப்பாக்கி முனையில் வைத்துள்ளனர்.

டெய்சியைக் கொல்லப் போவதாக மிரட்டியவுடன், பாதாள அறையில் மறைந்திருந்த அவளது சகோதரன் ஜோடி தன் சகோதரிக்காக வெளியே வந்து சரணடைகிறார். ஆனால் வாரன் அவனைக் கொடூரமாக உடனடியாகச் சுட்டுக் கொல்கிறார்.

தனது சகோதரன் இறந்ததைக் கண்டு அலறும் டெய்சி மற்றும் அவளது கும்பல், தங்களின் எஞ்சிய பதினைந்து ஆட்கள் ரெட் ராக் நகரில் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறி கிறிஸ் மேனிக்ஸிடம் ஒரு ஒப்பந்தத்தை முன்வைக்கிறார்கள்.

அதன்படி மேனிக்ஸ் வாரனைக் கொன்றுவிட்டால், அவனது உயிரைக் காப்பாற்றுவதோடு, இறந்துபோன பாப் மற்றும் சாகக் கிடக்கும் மோப்ரே ஆகியோரின் தலைக்குரிய பரிசுத்தொகையையும் அவரே பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறார்கள்.

அவர்களின் உண்மையான பெயர்கள் முறையே மார்கோ மற்றும் இங்கிலீஷ் பீட் ஹிகாக்ஸ் என்பதாகும். மேனிக்ஸை அவர்கள் சம்மதிக்க வைக்க முயலும்போது வாரன் மோப்ரேவைச் சுட்டுக் கொல்கிறார்.

அதே நேரத்தில் மேசையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுக்க முயன்ற ஜோ கேஜையும் (உண்மையான பெயர் க்ரௌச் டக்ளஸ்) வாரனும் மேனிக்ஸும் சேர்ந்து சுட்டுக் கொல்கிறார்கள்.

டெய்சி கூறிய ஒப்பந்தப் பேச்சை மேனிக்ஸ் கேட்கிறார், ஆனால் அவளது வார்த்தைகளில் இருக்கும் வஞ்சகத்தையும் அவள் பொய் சொல்கிறாள் என்பதையும் அவர் உணர்ந்துகொள்கிறார்.

அதிக இரத்தப்போக்கு காரணமாக மேனிக்ஸ் திடீரென மயங்கி விழும்போது, டெய்சி தப்பிப்பதற்காக ஜான் ரூத்தின் பிணக் கையை வெட்டிவிட்டு துப்பாக்கியை நோக்கி நகர்கிறாள்.

ஆனால் உடனடியாக மயக்கம் தெளிந்து எழும் மேனிக்ஸ் அவளைச் சுட்டுக் காயப்படுத்துகிறார்.

இறுதியில், வன்முறையும் பழிவாங்கலும் எவ்வாறு மனிதர்களைச் சிதைக்கிறது என்பதை இக்கதை மிகக் கொடூரமாகக் காட்டுகிறது.

தங்களுக்குள் தீராத இனப்பகையைக் கொண்டிருந்த கறுப்பின வாரனும், வெள்ளையின கிறிஸ் மேனிக்ஸும் தங்களின் மரணக் காயங்களையும் மீறி, துரோகம் செய்த டெய்சியைத் தண்டிக்க ஒன்று சேர்கிறார்கள்.

சட்டம் மற்றும் நீதியின் பெயரால் குற்றவாளிகளைத் தூக்கு மேடைக்குக் கொண்டு செல்லும் ஜான் ரூத்தின் கொள்கைக்கு மதிப்பளிக்கும் விதமாக, மரணப் படுக்கையில் இருக்கும் மேனிக்ஸும் வாரனும் சேர்ந்து டெய்சியை அந்த தங்குமிடத்தின் கூரை உத்தரத்தில் தூக்கிலிட்டுக் கொல்கிறார்கள்.

மனிதன் தன் சுயநலத்திற்காகவும் பழிவாங்கும் உணர்ச்சிக்காகவும் எந்த எல்லைக்கும் போவான், வன்முறை என்பது இறுதியில் யாரையுமே உயிரோடு வைக்காமல் அனைவரையும் அழித்துவிடும் என்ற கசப்பான உண்மையோடு இக்கதை நிறைவடைகிறது.

தாங்கள் இருவரும் இறக்கும் தறுவாயில், வாரன் வைத்திருக்கும் போலி லிங்கன் கடிதத்தை மேனிக்ஸ் சத்தமாக வாசித்து, அதன் விவரங்களை வியந்து பாராட்டியபடி இருவரும் மரணத்தை சிரித்தபடி வரவேற்கையில் படம் நிறைகிறது.

இத்திரைப்படம் உலகிற்குச் சொல்லும் மிக முக்கியமான செய்தி , ஒரு சமூகத்தில் சட்டம், நீதி மற்றும் அரசாங்கம் ஆகியவை வலுவிழந்து போகும்போது, அங்கே தனிமனித வன்முறையும் அராஜகமுமே முன்னின்று வழிநடத்தும் என்பதாகும்.

மனிதர்கள் தங்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காகவும், தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் எந்தவொரு கொடூரமான எல்லைக்கும் செல்லத் துணிவார்கள் என்பதை இப்படம் உலகிற்கு உணர்த்துகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனக்கு சாதகமான ஒரு போலி வேஷத்தைப் போட்டுக் கொண்டுதான் உலவுகிறான் என்பதையும், இக்கட்டான சூழல் ஏற்படும்போது அந்தப் போலி முகமூடிகள் கழன்று அவர்களின் உண்மையான மிருக குணம் வெளிப்படும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

தங்களின் தவறுகளை நியாயப்படுத்த மனிதர்கள் எத்தகைய தந்திரமான காரணங்களையும், போலி நியாயங்களையும் உருவாக்குவார்கள் என்பதை இக்கதை உலகிற்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

வன்முறைக்கு ஒருபோதும் எல்லையோ அல்லது முடிவோ கிடையாது என்ற மாபெரும் உண்மையை இது உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

பழிவாங்க நினைக்கும் ஒரு வன்முறை, சுழற்சி முறையில் அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே சென்று, இறுதியில் அதற்குப் பின்னால் இருக்கும் அனைத்து மனிதர்களையும் முற்றிலும் அழித்துச் சிதைத்துவிடும் என்ற எச்சரிக்கையை இத்திரைப்படம் உலகிற்குத் தனது செய்தியாக விட்டுச் செல்கிறது.

#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) ஆஸ்கர் (96) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)