குட் ஃபெல்லாஸ் 1990 (Goodfellas) ரொம்ப (வாழ்ந்து ) கெட்டவர்கள்


goodfellas குட்ஃபெல்லாஸ்:- நியூயார்க்கின் க்ரைம் ரிப்போர்டரான நிகோலஸ் பிலக்கியின் உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு எழுதப்பட்ட "நைஸ்கை" என்னும் செமிஃபிக்‌ஷன் நாவலை தழுவி , மார்ட்டின் ஸ்கார்சஸியின் மிக அற்புதமான இயக்கத்தில் ,1990 ஆம் ஆண்டு  வெளிவந்த க்ரைம் ட்ராமா த்ரில்லர் வகைப்படம் இது.

கேங்ஸ்டர் வாழ்க்கையே மிக ஆடம்பரமும்,உச்சகட்ட கொண்டாட்டமும் கொண்டது தான் ,   அதை 2‍‍ மணி 20 நிமிடத்தில் ஒவ்வொரு காட்சியையும் டீடெய்லாக விளக்கி பிரித்து பேன் பார்த்திருக்கிறார் இயக்குனர் . ஹாலிவூட்டில்  இதுவரை வெளிவந்த எல்லா கேங்ஸ்டர் படங்களிலிருந்தும் முற்றிலும் மாறுபடும் தனித்துவம்   இந்த படத்துக்கு  உண்டு,

டம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தன்னை ஒரு மாப்ஸ்டராகவே பாவிக்க செயத  ப்ரொஃபெஷனலிசம் , இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸஸி யாருக்கும் எதையும் விளக்க முற்பட்டு எதிலும் எந்தவிதமான காம்ப்ரமைஸும்  செய்து கொள்ளவில்லை. அதிரடியான திருப்பங்கள் , சரவெடி போன்ற நீண்ட வசனம்,கூடவே  நிறைய  ப்ளாக் ஹ்யூமர் காக்டெயில்,

டத்தின் ரியாலிடிக்காக அமெரிக்காவின் நிஜ கேங்ஸ்டர்களிடம்  நிறைய ஆலோசனைகள் கேட்ட  பின்னரே  படக்குழுவினர் அனைவரும்  ஒன்றி நடித்தனராம் . படம் முழுக்க அவ்வளவு கதாபாத்திரங்கள் , அத்தனையும் அப்போது அமெரிக்காவில்  நிஜமாக வாழ்ந்த கேங்ஸ்டர்களை  வைத்து பின்னப்பட்டவையே , படையப்பா அருணாச்சலம் போன்ற படங்களையே மிஞ்சும் அளவுக்கு வதவதவென கூட்டம்.

ந்த படம் மூன்று தலைமுறையாக கேங்ஸ்டர் தொழிலில் இருக்கும் மூன்று கேங்ஸ்டர்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றிய கதை,படம் 1958ஆம் ஆண்டு களத்தில் துவங்கி 1987 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தை தொட்டு நம் மனதில் நீங்காத அனுபவமாக பதிக்கிறது. நீங்கள் ஒரு கேங்ஸ்டர் பட‌ பிரியர் இன்றால் இந்த படம் பார்க்காமல் உங்கள் கேங்ஸ்டர் திரைப்பட   தேடுதல் பயணம் முழு நிறைவடையாது.

கதை:‍-

தாவு தீர்ந்து போன ,உயிர்பயம் கொண்ட கேங்ஸ்டரான ஹென்றி ஹில் (ரே லியாட்டா) எஃப்பிஐ யின் விட்னெஸ் ப்ரொடெக்ஷன் ப்ரொக்ராமில் அப்ரூவராகி தன் முன்னாள் கேங்க்ஸ்டர் சகாக்கள் இருவரான  ஜிம்மி  (ராபர்ட் டெனீரோ) ம‌ற்றும் பாலீ யை (பால் சொர்வினோ) எஃப்பிஐ வசம் மாட்ட‌ வைத்து 20 வருடத்துக்கும் மேல் கடுங்காவல் தண்டனை வாங்கித்தந்துவிட்டு , இன்று வரை தான் ஒரு சராசரி மனிதனாக வாழும் உண்மைக்கதை.படம் பார்க்காதவர்கள்  ஸ்பாய்லர் வேண்டாம் என்பவர்கள் ட்ரெய்லரை பார்த்துவிட்டு  தல ஹாலிவுட் பாலாவின்  செம கலக்கலான விமர்சனத்தையும்  படித்துவிட்டு செல்லவும்.
==========================================================


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===========================================================

இதற்கு மேல் முழு கதை சுருக்கம்,இப்போவே ஸ்பாய்லர் அலர்டு குடுத்துக்கறேன்.

ரிஷ் மற்றும் இத்தாலிய கேங்ஸ்டர்களுக்கு பெயர்போன கிழக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளினில், பள்ளியில் படிக்கும் ஐரிஷ்-அமெரிக்க சிறுவன் ஹென்றி, தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் இத்தாலிய கேங்ஸ்டரான் பாலீ யிடம் பகுதி நேரமாக வேலைக்கு சேர்கிறான்,இதுவே துரிதமாக வாழ்வில் முன்னேறும் வழி என்பதை புரிந்துகொண்டு இளம் வயதிலேயே கடத்தலை கற்க துடிக்கிறான்.

தில் இவனை மிகவும் கவர்ந்த ஐரிஷ் இனத்தவனான ஜிம்மியிடம் (ராபர்ட் டெனீரோ) கடத்தல் தொழிலை துரிதமாக கற்கிறான். இதனால் எங்கு போனாலும் ராஜமரியாதை தேடி வருகிறது.முதல் முறையாக கார்கோவில் திருடிய சிகரெட்டுகளை விற்கும்போது போலீசிடம் பிடிபட்டு வாய் திறக்காமல் இருக்க,அன்றே கேங்ஸ்டரின் அகராதியில் வயதுக்கு வருகிறான். பாராட்டப்பட்டு அந்தஸ்து பெருகிறான்,அருகாமையிலுள்ள கேங்ஸ்டர்களின் நன் மதிப்பையும் பெற்று விடுகிறான்.

வனுக்கு தேவைக்கு அதிகமாக டாலர்களும் ஆடம்பர காடிலாக் காரும் பெண்களும் மதுவிருந்தும் திகட்ட திகட்ட கிடைக்கிறது, தனது 21 வயதிலேயே புத்திசாலி யூத பெண்ணான கேரென் ஐ , தான் ஒரு ஹால்ஃப் ஜூவிஷ் (அரை யூதன் ) என் பொய் சொல்லி டேட்டிங் செய்து நல்ல‌ அபிமானத்தை பெற்று , திருமணமும் செய்கிறான். ஆடம்பர மாளிகையும், காரும் தினசரி கேளிக்கை  விருந்தும் , உலக நாடுகள் சுற்றுலாக்கள் என நாள் வேகமாக ஓடுகிற‌து.இரு பெண் குழந்தைகளும் அடுத்தடுத்து  பிறக்கின்றன.

ஜிம்மிக்கும் (ராபர்ட் டெனீரோ) வயதாகிறது,டாமி (ஜோ பெஸ்ஸி ) என்னும் இத்தாலிய கேங்ஸ்டர் சைக்கோபாத் சகாவைப் பற்றி இப்போது சொல்லியே ஆகவேண்டும், மிக காமெடியாக  எல்லோரும் வயிறு குலுங்க சிரிக்குமாறு பேசிவிட்டு சடனாக சீரியஸாகி துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடும் ஆசாமி, மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் என்னும் கூற்றுக்கேற்ப அவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இவன் மாறுகிறான்.(இந்த அற்புதமான சைக்கோ பாத்திரத்திற்கு 1991 ஆம்  வருடத்திற்கான சிறந்த சப்போர்டிங் ரோலுக்கான ஆஸ்கார் கிடைத்ததாம்.)

ப்போது அமெரிக்க மாபியா வரலாறே இவர்கள் மூவரால் திரும்ப எழுதப்பட்டது என்றால் மிகையில்லை. அந்த அளவுக்கு கள்ளக்கடத்தல்,கட்டை பஞ்சாயத்து என அதகளம் செய்கின்றனர்.
அதில் "made man” (made = இத்தாலிய ஐதீகப்படி ஒரு கேங்ஸ்டராக அவதாரம் எடுக்க ஒருவன் வாங்கிக் கொள்ளும் பாப்டிசம்) "பில்லி பாட்” என்பவன் ஒரு விருந்தில் சைக்கோபாத் சகாவான டாமியை பார்த்து "ஷைனிங் பாய்" (சிறுவயதில் ஷூ பாலீஷ் போட்டவன்) என கிண்டலாக அழைக்க, மிகக்கடுப்பான டாமி  பில்லி பாட் ஒரு மேட்மேன் என்றும் யோசிக்காமல் அவனை விருந்து முடிந்து எல்லோரும் போனதும் கடுமையாக தாக்க,ஜிம்மியும் கூட சேர்ந்து தாக்க, ஹென்றியும் சேர்ந்து தாக்குகிறான்,

டாமி ஆத்திரம் அடங்காமல் துப்பாகியாலும் சுடுகிறான்.மூர்ச்சையான பில்லி பாட்  ஐ டாமியின் கார் டிக்கியில் போட்டுக்கொண்டு புதைக்க எடுத்துப்போகும் வழியில் தான் படம் துவங்குகிறது. போகும் வழியில் பில்லி பாட்  டிக்கிக்குள் முனகி சத்தம் செய்ய, காரை நிறுத்தி டிக்கியை திறந்து மீண்டும் அவனை கத்தியால் குத்தியும்,துப்பாக்கியால் சுட்டும் முழுக்க கொன்று புதைக்கின்றனர்.

ப்போது டாமி ஒரு இத்தாலிய மேட்மேனை கொன்றான் என தெரிந்ததோ? அப்போதே பாலீ டாமியிடமிருந்து ஹென்றியை விலகியிருக்க சொல்கிறான்,மேட்மேனை கொன்றவனை இத்தாலிய மாப்ஸ்டர்கள் குடும்பத்தின் கடைசிஆள் வரை கொன்று பழி தீர்க்காமல் விடமாட்டார்கள் என அறிவுரை சொல்கிறான்.

ஹென்றி இப்போது வெள்ளிக்கிழமையை மனைவியுடனும் சனிக்கிழமையை காதலிகளுடனும்  விருந்தில் உல்லாசமாக கழிக்க பழகுகிறான்,புதிய காதலியாக ஜானீஸ் என்னும் அழகிய இளம்பெண் கிடைக்கிறாள்,தொழிலிலும் பேருதவியாக இருக்கிறாள். ஹென்றி பணமும் தண்ணீராக செலவு செய்கின்றான். இதனால் இன்னும் அதிகமாக பணம் தேவைப்படுகிறது, கொஞ்சம் கொஞ்சமாக போதை மாத்திரைக்கு அடிமையாகிறான். இதற்கிடையே இவர்கள் மூவரும் பில்லி பாட்டை புதைத்த இடத்தில் குடியிருப்பு வரப்போவதை அறிந்து அந்த இடம் சென்று மீண்டும் அந்த சவக்குழியை தோண்டி சடலத்தை வெளியில் எடுத்து கொளுத்துகின்றனர்.

ஹென்றி தன் காதலி ஜானீஸ் ஐ தன் வீட்டின் அருகிலேயே ஒரு அடுக்கு மாடியில் உயர்தர வீடெடுத்து குடிவைக்கிறான். மனைவி கேரனுக்கு இது பெரிய தலைவலியாக மாறி இருவரையும் சுட்டுக்கொன்றுவிடுவேன் என் மிரட்டுகிறாள்.இவனுக்கும் கேரன் மேல் வெறுப்பு கிளம்புகிறது.மனைவியின் எல்லா எதிர்ப்பையும் மீறி இவர்கள் காதல் இனிதே தொடர்கிறது.

வருடம் 1974 :-  இவனின் குடும்ப பிரச்சனை ஜிம்மியிடமும், பாலீயிடமும் செல்ல ,அவர்கள் அவனை மனைவியை வெறுக்காதே,காத‌லியுடன் அதிகம் சுற்றாதே! என அறிவுறுத்தி, டாம்பா எனும் ஊரில் ஒரு சூதாடியிடமிருந்து பணம் கறக்கும் கட்டைப்பஞ்சாயத்துக்கு அவனை அழைத்து செல்கின்றனர், மிருககாட்சி சாலையில் வைத்து  அந்த சூதாடியை  அடித்து நையப்புடைத்து சுடப்போக, அவன் அப்போதும் தன்னிடம் பணம் இல்லை என்றே சொல்ல. அவனை டாமி தலைகீழாக கட்டிப்போட்டு சிங்கத்துக்கு இறையாக வேலியை தாண்டி வீசப்போக அவன் பணம் தந்துவிடுகிறேன் என தன் சகோதரிக்கு போன் செய்து பணம் கொண்டு வர சொல்கிறான்,அவன் சகோதரியோ எஃப்பிஐ இல் டைபிஸ்டாக இருக்க போலிஸ் வசம் வலுவான கேஸாக மாற ஜிம்மிக்கும் ஹென்றிக்கும் 10 வருட சிறை வாசம் கிடைக்கிறது,

சிறையில் ராஜா போல நினைத்ததை சமைத்து சாப்பிட்டு,மது மாது கொண்டாட்டம் என மிகவும் ரசித்து அனுபவிக்கின்றனர். இப்போது புழக்கத்தில் உள்ள கோகெய்ன் என்னும் விலையுயர்ந்த போதை மருந்தை தன் மனைவி கேரன் மூலம் சிறைக்குள் தருவித்து அதை உள்ளே சில்லரையாக விற்க அமோகமான வருமானம் கிடைக்கிறது.சைக்கோபாத் டாமி இப்போது கேங்ஸ்டராக வெளியே கொடி கட்டை பறக்க, இவர்கள் அதீதமான லஞ்சம் மற்றும் அன்பளிப்புகளால் நான்கே வருடங்களில் பெயிலில் விடுதலை ஆகின்றனர்.

சிறையிலிருந்து வெளிவந்த ஜிம்மி,ஹென்றி,டாமி,பாலி மற்றும் இன்ன பிற கும்பல் சேர்ந்து அமெரிக்காவின் புகழ்பெற்ற லூஃப்தான்ஸா ஹெய்ஸ்ட் என்னும் கார்கோ பணக்கொள்ளையை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனர்.இதன் மூலம் எட்டேமுக்கால் லட்சம் அமெரிக்க டாலர்கள் கிடைக்கிறது,

தனால்  நாளுக்கு நாள் இவர்களின் கொட்டம் இன்னும் அதிகமாகிறது, பெரும்பங்கு கொள்ளை பணத்தை ஜிம்மியும் (ராபர்ட் டெனீரோ) டாமியுமே எடுத்து கொள்கின்றனர், ஹென்றிக்கும்  அதில் கணிசமான  பங்கு  கிடைக்கிறது,  ஹென்றிக்கு இப்போது கோகெய்ன் மூலம் கிடைக்கும்  பணமே  பெரிதாக  இருக்க கொள்ளையில் கவனம் செல்லவில்லை.கொள்ளையில் பங்கு பெற்ற யாரும் புதிதாக எந்த ஆடம்பரப்பொருளோ சொத்தோ வாங்கக் கூடாது! என ஜிம்மி கட்டளையிடுகிறான்.அதை மதிக்காமல் ஆடம்பரப் பொருட்கள் வாங்கிக் குவித்தவர்களையும், பணம் கேட்டு மிகவும் நச்சரித்தவர்களையும் சகட்டுமேனிக்கு ஜிம்மியும் டாமியும்  போட்டுத்தள்ளுகின்றனர் , அடுத்தடுத்து சடலங்கள் போலிசாரால் குப்பை தொட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டு மிகத்தீவிரமாக விசாரிக்க தொடங்குகின்றனர்,    வலுவான ஆதாரத்திற்காக  வலைவீசிவிட்டு காத்திருக்கின்றனர்.

24x7 என ஹென்றியின் போதை மருந்து கடத்தல் பிழைப்பு ஓடுகிறது,பணம் கொட்டோ கொட்டென கொட்டுகிறது.போதைக்கும் மிகவும் அடிமையாகிறான். தன் குழந்தையை பார்த்துக் கொள்ளும் தாதியை விமானத்தில் வாடகைக்குழந்தையுடன் அனுப்பி குழந்தையின் ட்யாப்பரில் கோகெய்னை கடத்தி வந்து பணம் சம்பாதிக்கிறான்.காதலியுடன் சேர்ந்து போதை மருந்தை வீட்டிலேயெ சுத்தீகரித்து தயாரிக்கின்றான்.

து மிகவும் ஆபத்தான தொழில் என்பதால் ஹென்றியை பாலீ எச்சரிக்க, இவன் அதை கேட்காமல் தன் போக்கிலேயே போகிறான்.இதற்கிடையில்  ஒரு உணவகத்தில் வைத்து ஜிம்மி ஹென்றியிடம் சைக்கோபாத் டாமிக்கு இத்தாலிய மாப்ஸ்டர்கள் மேட் மேன் பாப்டிசம் கொடுக்கபோவதாக  மகிழ்சியுடன் சொல்கிறான். இதன்மூலம் இன்னும் நமக்கு மாமூலும் மரியாதையும் கட்டை பஞ்சாயத்துகளும் பாதுகாப்பும் கிடைக்கும் என வாய்பந்தல் போடுகிறான்.

னால் மேட் மேன் (பாப்டிசம்) வாங்க ஆவலாக குருமார்கள் இருவரால் அழைத்து செல்லப்பட்ட  சைக்கோபாத் டாமி குருமாரில் ஒருவராலே முகத்தில் சுடப்பட்டு இறக்கிறான், முகத்தில் சுடப்பட்டதால் ஓபன் காஃப்ஃபின் என்னும் முகமுழிக்கு கூட சவப்பெட்டியை டாமியின் அம்மாவால் திறந்துவைக்க முடியாமல் போகிறது.

ப்போது ஜிம்மிக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது, நண்பனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் போன் பூத்தை எட்டி உடைத்து கீழே தள்ளுகிறான். உயிரின் அருமை புரிகிறது. எங்கே தானும் ? போலிசிடம் இப்படி மாட்டுவோமோ? அல்லது எதிராளி கேங்ஸ்டரால் சுடப்பட்டு இறப்போமோ ? என புழுங்குகிறான்.  இப்போது ஒரே குறிக்கோள் அடக்கி வாசிப்பது, என முடிவு செய்து அமைதி காக்கிறான். போதைக்கு அடிமையான ஹென்றியை வெறுக்கிறான்.

ஹென்றியும் அவன் காதலி ஜானீஸும்  இப்போது வசமாக போதை ஒழிப்பு போலிசாரால் கைதுசெய்யப்படுகிறனர்,பல லட்சம் டாலர்கள் மதிப்புள்ள போதை பொருட்களை போலீஸ் கைப்பற்றுகிறது.இவன் மனைவி போலிசின் ரெய்டில் இருந்து தப்பிக்க அரை கிலோ எடையுள்ள 60000 டாலர் மதிப்புள்ள கோகெய்னை டாய்லெட்டில் கொட்டி ஃப்ளஷ் செய்கிறாள்,

1980 ஆம் வருடம்:-  ஹென்றியும் அவன் காதலி ஜானீஸும்   பெயிலில் விடுதலையாகின்றனர்,வந்ததும் தான் டீவி பெட்டிக்குள் ஒளித்து வைத்த கோகெய்னை தேட அதை கேரன் டாய்லெட்டில் கொட்டி பாழாக்கியதை கேட்டு துடிக்கிறான்.இப்போது தன் மாஃபியா குருவான பாலியை சென்று சந்திக்க, அவன் இவனை பார்த்து வெறுக்கிறான், இவனிடம் பழகிய தோஷத்திற்காக 3200  டாலர்களை தந்து அவனது விசுவாசத்தை விலைக்கு வாங்குகிறான்.

ழுது கொண்டே வீடு திரும்பிய ஹென்றிக்கு உயிர்பயம் தொற்றிக்கொள்ள , மனைவி கேரனோ ஜிம்மியை சென்று சந்திக்கிறாள், அவன் சில ஆயிரம் டாலர்களை செலவுக்கு கொடுத்துவிட்டு அவளை ரகசிய இடத்திற்கு அழைத்து போய் கொல்ல பார்க்கிறான்.இவளுக்கு எங்கும் பாதுகாப்பில்லை என விளங்கி விடுகிறது.

று நாள் ஹென்றி ஜிம்மியின் அழைப்பின் பேரில் ஜன நடமாட்டமுள்ள உணவகம் ஒன்றில் ஜிம்மியை சந்திக்கிறான், கண்களில் பழைய நட்பு எள்ளளவும் காணகிடைக்கவில்லை.ஜிம்மி ஒரு கட்டபஞ்சாயத்துக்கு ஹென்றியை தன் ஆட்களுடன் செல்லுமாறு கட்டளையிட, இவனுக்கு அது தனக்கான் சவக்குழி என விளங்கிவிடுகிறது. இவன் தான் மூவரின் அங்க அசைவுகளிலிருந்தும் பாடம் கற்றவனாயிற்றே, எஃப்பிஐக்கு செல்கிறான்,

விட்னெஸ் ப்ரொடெக்ஷன் ப்ரொக்ராமில் இணைந்து புதிய பெயரும் அடையாளமும் பெற்று பாலீ மற்றும் ஜிம்மி மீதான எல்லா கொலை கொள்ளை கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் மொத்தத்திற்கும் ஏக சாட்சியாக ஆகிறான்.

ஜிம்மி பாலி இருவருக்கும் வாழ் நாளுக்கும் பெயிலிலேயே வரமுடியாதபடிக்கு 20வருடத்திற்கும் மேற்பட்ட சிறை தண்டனை கிடைக்க அதை , அடுத்தடுத்து அனுபவிக்கின்றனர். அதில் பாலி 1988 ஆம் ஆண்டு தன் 73ம் வயதில் நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே இறக்க,  ஜிம்மி மட்டும் இப்போதும் சிறையில் தண்டனையை அனுபவிக்கிறானாம்.

ஹென்றி இப்போது விவாகரத்தாகி , அடையாளம் தொலைந்து சராசரிக்கும் கீழான வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறானாம்.அப்பப்பா படம் முடிந்தவுடன் நமக்கு எழும் உணர்ச்சி அலைகள் இருக்கிறதே?ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா ! என்பது தான் எவ்வளவு உண்மை ? ! என நிச்சயம் உணர்வீர்கள்.
==============================================
படக்குழு விபரம்:-
Directed by
Martin Scorsese
Produced by
Irwin Winkler
Written by
Screenplay:
Nicholas Pileggi
Martin Scorsese
Book:
Nicholas Pileggi
Narrated by
Ray Liotta
Lorraine Bracco
Starring
Ray Liotta
Robert De Niro
Joe Pesci
Lorraine Bracco
Paul Sorvino
Cinematography
Michael Ballhaus
Editing by
Thelma Schoonmaker
Distributed by
Warner Bros.
Release date(s)
September 21, 1990
Running time
146 minutes
Country
United States
Language
English
Budget
$25,000,000[1]
Gross revenue
$46,836,394
=========================

இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.
-------------------

31 comments:

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஆஹா.. நீங்க. முழுக் கதை சுருக்கம்னு போட்டதை... முன் கதை சுருக்கம்னு படிச்சிட்டேன். வாவ்.. திரைக் கதை புத்தகம் எழுதற மாதிரி.. காட்சிக்கு காட்சி.. எழுதிட்டீங்க! :) :)

முழுக் கதையையும் படிச்ச பின்னாடிதான்.. இப்ப படமே திரும்ப நினைவுக்கு வருது!
-----

”பத்தி பத்தியாக எழுதினாலும், படிப்பதற்கே மூச்சு வாங்கும். ”-ன்னு நான் எழுதின மாதிரியே.. உங்களுக்கும் மூச்சு வாங்கியிருக்கும்னு நினைக்கிறேன். :) :)

தலைவரு... நிழலுலகத்தை விட்டு... ஷட்டர் ஐலேண்ட்டுக்கு போயிருக்கார். என்ன பண்ணியிருக்காரோ..?! :)

கோபிநாத் சொன்னது…

கலக்கல் தல ;)

\\மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் என்னும் கூற்றுக்கேற்ப

ஒஒ..!!!!!!!!!!!!!!!!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க பாலா,
என்ன தான் சொல்லுங்க நீங்க இந்த படத்துக்கு எழுதுனது ரொம்ப கலக்கலான விமர்சனம்ங்க, இனி உங்க சர்ச் பாக்சில படத்தின் பேரை அடித்து பார்த்து விட்டு தான் எந்த படமும் எழுதுவேன். உங்க விமர்சனத்தின் சுட்டியை இங்கு கொடுத்திருக்கிறேன்.
நிறைய பேர் படித்து மார்டின் ஸ்கார்ஸஸி பித்து பிடித்து அலையட்டும்.

ஷுட்டெர் ஐலாண்ட் நானும் மிகவும் எதிர்பார்க்கும் படம்,டை காப்ரியோ,பென் கின்க்ஸ்லீ, மற்றும் 50 களின் கதைக்களம், சொல்லவே வேண்டாம் மார்டினின் அதகளம்.

உங்க ஏரியாவில எ சீரியஸ் மேன் ரிலீஸாகிவிட்டதா?
படம் பார்த்திருந்தால் ஒரு பதிவு போடுங்களேன்? மிகவும் எதிர்பார்க்கும் கோயனின் படம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை தம்பி அமீரகத்தின் விடிவெள்ளி கோபிநாத் ,
உன் வருகைக்கும் குறும்பான கருத்துக்கும் நன்றிகள் பல.

சென்ஷி சொன்னது…

தமிழ்மணத்துல ஒரு ஓட்டு.. தமிழிஷ்ல ஒரு ஓட்டு :))

☀நான் ஆதவன்☀ சொன்னது…

முழுக்கதையும் படிக்கல... ஏன்னா படத்த பார்க்கனுமே. :) அருமையான விமர்சனம் தல

கலையரசன் சொன்னது…

Gud Post :-)

கலையரசன் சொன்னது…

Voted

பின்னோக்கி சொன்னது…

நல்ல ஜாலியான படம். கேங்ஸ்டர் படம்னாலும் ஜோக் நிறைய இருக்கும். உங்க விமர்சனத்த படிக்கும் போது திருப்பி பார்த்தமாதிரி இருக்கு

சென்ஷி சொன்னது…

முழுசா இப்பத்தாண்டா படிச்சேன். அல்ரெடி பாலா பதிவுல படிச்சும் இப்ப முழுக்கதையும் படிச்சதும் இன்னைக்கு பார்க்கணும்னு ஆசை அதிகமாகுது. அல்ரெடி டிவிடி கையில இருக்கறதால இன்னிக்கு இரவு பார்த்திடுவேன்னு நினைக்கறேன்.. ரொம்ப நன்றி மாப்ள... எழுதினத படிச்சுட்டு ஒரு பெருமூச்சுதான் வந்தது :)

அநியாயத்துக்கு நல்லா எழுதறே நீ!

pappu சொன்னது…

அப்படியே மறந்து போக இருந்த படத்தை இன்னொரு தடவை ஓட்டிட்டீங்க. கு ஃபெல்லாஸ் என்பதற்கு அர்த்தம் சொல்லியிருக்கலாம். நல்ல ஹ்யூமர் சென்ஸ் இருந்தது படத்தில் பல இடங்களில்!

ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…

உங்களுக்கு ஒரு பெரிய வேலை காத்து இருக்கிறது. பிடித்த படப் பட்டியல் வேண்டும். ஓய்வு நேரத்தில் தொல்லை படுத்துகிறேன்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஆஹா. இல்லீங்க கார்த்திகேயன். படம் இந்த ஏரியாவுல வரலை (லிமிடட் ரிலீஸ்). ஆச்சரியமா... பிக்ஸார் பத்தி எழுதும் போது Roger Deakins பெயர் வந்தப்ப, மறுபடியும் Coen Brothers பத்தி திரும்ப படிச்சிகிட்டு இருந்தேன்.

நீங்க சரியா அதே படத்தை.. கேக்கறீங்க. டிவிடி வந்தாதான் உண்டு! :(

kanagu சொன்னது…

enna thala... motha kathaiyum pottuteenga:) naan indha padatha paakala...paathutu kathaya padikiren..

first part mattum padichen :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பன் சென்ஷி, உன் தொடர் வருகைக்கும் ஓட்டுக்களுக்கும் மிக்க நன்றி , உன் வேலை பளு பற்றி எனக்கு நன்றாக தெரியும் , அவ்வளவு வேலைப்பளுவுக்கு இடையிலும் எங்கள் பதிவுக்கு வந்து கருத்து மற்றும் ஓட்டுக்கள் போட்டு இப்படி ஊக்கம் தரும் பாங்கு அருமைடா மாப்பி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் சூர்யா,
உங்கள் தொடர் வருகைக்கும் ,கருத்துக்கும்,ஓட்டுக்கும் மிக்க நன்றி,படம் கண்டிப்பாக பாருங்க,அது தான் இந்த முறை இரு பகுதியாக எழுதினேன். இது போலவே இனி எழுதலாம் என நினைக்கிறேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாடா , அருமை கலை மாப்பி, நலமா?
ஊருக்கு போய்ட்டுவந்து முதல் முறையாக கருத்து போடற, நல்லது டா, உன் குட் போஸ்டுல இடி விழ!
மகனே இனி உனக்கும் நான் குட் போஸ்டு தான் போடப்போறேன் டா மாப்பி,பாத்துக்க.
வருகைக்கும் , ஓட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் பின்னோக்கி,
இந்த படம் ஏற்கனவே பாத்துட்டிங்களா?அப்போ ஹாலிவுட் பாலாவின் விமர்சனத்தையும் படித்துவிடுங்கள், இன்னும் பிடிக்கும்.வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

சென்ஷி மாப்பி உன் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிடா நண்பா, எனக்கு நீ தரும் ஊக்கங்களே நான் தேடல் கொண்டு எழுத காரணம். மீண்டும் நன்றி.
13ஆம் தேதி கலையின் வீட்டில் விருந்தாமே?அப்படியா?
நான் ஆதவன் சூர்யா அங்க வாராராமே?கோபி இப்போவே சரக்கு புடிச்சிட்டாராமே?பிறந்த நாள் பார்ட்டி தர, அப்படியா?உறுதிபடுத்தவும்!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் பப்பு,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் ஃபால்லோவர் ஆனதற்கும் நன்றிகள் பல.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…

உங்களுக்கு ஒரு பெரிய வேலை காத்து இருக்கிறது. பிடித்த படப் பட்டியல் வேண்டும். ஓய்வு நேரத்தில் தொல்லை படுத்துகிறேன்//

அருமை ஜோதிஜி, வாங்க,
உங்களுக்கு உதவ காத்துக்கொண்டிருக்கிறேன்,அது போய் எனக்கு தொல்லையா?கரும்பு தின்ன கூலியா?
கண்டிப்பாக வெகு விரைவில் படப்பட்டியல் தருகிறேன். நீங்கள் அமீரகத்திலோ சென்னையிலோ மட்டும் இருந்தால் என்னிடம் இருக்கும் சுமார் 400 படங்களை கொடுத்திருப்பேன்.எதற்கும் வெளி நாடு செல்லும் போது ஒரு 1tg byte ஹார்ட் டிஸ்க் வாங்கி வைக்கவும்.என்றும் உபயோகமாக இருக்கும்.

உங்கள் எண் வைத்திருக்கிறேன் ஊருக்கு வந்ததும் அழைப்பேன்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//ஹாலிவுட் பாலா சொன்னது…

ஆஹா. இல்லீங்க கார்த்திகேயன். படம் இந்த ஏரியாவுல வரலை (லிமிடட் ரிலீஸ்). ஆச்சரியமா... பிக்ஸார் பத்தி எழுதும் போது Roger Deakins பெயர் வந்தப்ப, மறுபடியும் Coen Brothers பத்தி திரும்ப படிச்சிகிட்டு இருந்தேன்.

நீங்க சரியா அதே படத்தை.. கேக்கறீங்க. டிவிடி வந்தாதான் உண்டு! :(//

வாங்க தல ,
படம் அங்கயே ரிலீஸ் ஆகலயா?
எத்தனை வாட்டி தான் யூட்யூபிலயே ட்ரெய்லரை திரும்ப திரும்ப பாக்குறது? டிவிடி வந்தவுடன் அவசியம் பதிவிடவும்.சரியான சப்ஜெக்ட் என படித்தேன்.உங்க பேனாவுக்கு நல்ல தீனியாக இருக்கும்.மீள் வருகைக்கும் ஃபாலோவர் ஆனதற்க்கும் நன்றிகள் பல.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//kanagu சொன்னது…

enna thala... motha kathaiyum pottuteenga:) naan indha padatha paakala...paathutu kathaya padikiren..

first part mattum padichen :)//

அருமை நண்பர் கனகு,
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,தல அதுதான் இரண்டு பகுதியாக வெளியிட்டிருந்தேனே? மச்சான்ஸ் என்னும் பதிவரின் செவன் பதிவில் இந்த யுத்தியை பயன்படுத்தியிருந்தனர், நன்றாக இருந்தது,அதுதான் நானும் ஃபாலோ செய்தேன்.

வினோத்கெளதம் சொன்னது…

குரு ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீ எங்கயோ போக போற பாரு தூள் விமர்சனம்

Romeoboy சொன்னது…

விமர்சனத்த படிக்கும் போதே செம ஹாட்டா இருக்கே. DVD கிடைக்கும் பார்கிறேன்.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

அருமையான விமர்சனம் கார்த்திகேயன்!! படம் பார்க்க முடியாதவர்கள் உங்கள் விமர்சனத்தைப் படித்தால் போதும்..

சிறந்த நகைச்சுவைக் காட்சிகளில் குட்ஃபெல்லாஸ் காட்சிகளும் உள்ளன.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//வினோத்கெளதம் சொன்னது…

குரு ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீ எங்கயோ போக போற பாரு தூள் விமர்சனம்//
குரு உங்க அன்பான வார்த்தைகளுக்கு நன்றிங்க.
எனக்கு எப்போவெல்லாம் தகுதிக்கு மீறிய பாராட்டுக்கள் கிடைக்கிறதோ?அப்போவெல்லாம் பேச்சே வராதுங்க,இறைவனுக்கு நன்றி சொல்லுவேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//Romeoboy சொன்னது…

விமர்சனத்த படிக்கும் போதே செம ஹாட்டா இருக்கே. DVD கிடைக்கும் பார்கிறேன்.//

வாங்க அருமை நண்பர் ராஜராஜன், நாம தான் சந்திக்க போகிறோமே ! நேரிலேயே வாங்கிக் கொள்ளுங்கள், உங்க ஹார்ட் டிஸ்க் எதாவது இருந்தால் உஷார் பண்ணி வையுங்கள்.வருகைக்கு மிக்க நன்றிங்க,இன்னும் உங்க தொடர்பதிவை எழுதவில்லை, கண்டிப்பாக வரும் வாரம் எழுதி விடுகிறேன்.தவறாக நினைக்காதீர்கள்.கோபிக்கும் இதையே சிசி போட்டுக்கறேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…
அருமையான விமர்சனம் கார்த்திகேயன்!! படம் பார்க்க முடியாதவர்கள் உங்கள் விமர்சனத்தைப் படித்தால் போதும்..

சிறந்த நகைச்சுவைக் காட்சிகளில் குட்ஃபெல்லாஸ் காட்சிகளும் உள்ளன.//

வாங்க அருமை நண்பர் செந்தில்வேலன்,
உங்க வருகைக்கும் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் நன்றிங்க. படம் பார்க்க முடியாதவர்கள் இந்த படத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கமே இதை முழுதாக எழுதக்காரணம்.
அது நிறைய பேருக்கு உதவியாக இருக்கிறது என அறிந்தேன், மிகவும் மகிழ்ந்தேன். போன் செய்ய எண்ணியிருந்தேன்.

Kiruthikan Kumarasamy சொன்னது…

முழுக்கதையையும் சொல்லிவிட்டீர்கள். இதற்காகக் கொடுக்காமல் ‘த டிபார்டட்' படத்துக்கு ஸ்கார்சசிக்கு ஆஸ்கர் கொடுத்தது விநோதம். ஹென்றியின் மனைவியாக நடிக்கும் லொறேய்ன் ப்ரேசியா என்னுடன் படித்த இன்னொரு லொறேய்னை அடிக்கடி ஞாபகப்படுத்துவார்.

அந்த சைக்கோபாத் டாமி பாத்திரம் சூப்பர்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

Kiruthikan Kumarasamy சொன்னது…

முழுக்கதையையும் சொல்லிவிட்டீர்கள். இதற்காகக் கொடுக்காமல் ‘த டிபார்டட்' படத்துக்கு ஸ்கார்சசிக்கு ஆஸ்கர் கொடுத்தது விநோதம். ஹென்றியின் மனைவியாக நடிக்கும் லொறேய்ன் ப்ரேசியா என்னுடன் படித்த இன்னொரு லொறேய்னை அடிக்கடி ஞாபகப்படுத்துவார்.

அந்த சைக்கோபாத் டாமி பாத்திரம் சூப்பர்.//

வாங்க அருமை நண்பர் கிருத்திகன் குமாரஸ்வாமி,
ரொம்ப நல்ல பெயர்ங்க இது.
எனக்கும் மிகவும் பிடித்த கதாபாத்திரம் அந்த டாமியுடையது.
உங்க தோழியும் கேரன் போல அவ்வளவு அழகா?
;)ஆமாம் நானும் ரொம்பவே வருத்தப்பட்டென். இந்த படத்துக்கு ஆஸ்கார் கிடைக்காததற்கு.
முதல் வருகைக்கும் கருதுக்கும் நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)