ஹார்ட் கேண்டி[18+] [அமெரிக்கா][Hard Candy][2005]

பெடோபைல் ஆசாமிகள் ஏன் ஒடுக்கப்பட வேண்டியவர்கள்?பெடோபைல் அசாமிகள் ஏன் சமூகத்தில் மிகவும் அருவருக்கத்தக்கவர்கள்? இதோ விடை


காணொளிக்கு நன்றி:-TED
==========0000==========


லாஸ் ஏஞ்சல்ஸ்  புகழ், 37 வயது, இந்திய ஃபேஷன் டிசைனர் ஆனந்த் ஜான், கற்பழிப்பு வழக்கில், 59 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஃபேஷன் உலகையே தன் பக்கம் திரும்பச் செய்தவன். பெடோபைல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு என்னைக் கைகாட்டு, என உலகப்புகழை இந்தியாவுக்கு பெற்று தந்தவன்.

இவன் மீது, வளரும் மாடல் அழகிகளுக்குப் பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கற்பழித்ததாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் . இவன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007 வரை 14 முதல் 21 வயது வரையிலான இளம் பெண்கள், மாடல் அழகிகளை கற்பழித்ததாகவும், பாலியல் தொந்தரவுகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு,  டி என் ஏ,  வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

தொடர்ச்சியான புகார்களை தொடர்ந்து பயங்கர கெடுபிடிக்கிடையில் அமெரிக்க போலீஸார் ஆனந்த் ஜானைக் கைது செய்தனர். அவன் மீது மைனர் பெண்களை கட்டாயப்படுத்தி கற்பழித்தது உள்ளிட்ட 14 வழக்கு பதிவுசெய்தனர், இந்த வழக்கில் ஜானுக்கு எதிராக 9 பெண்கள் அளித்த வாக்குமூலம் அண்ணாத்தைக்கு  எதிராய் அமைந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி,  ஆனந்த் ஜான்  மேல் முறையீடு&பெயில் அற்ற சிறைக் காவலில் 14 ஆண்டுகளைக் கழிக்க வேண்டும். அதன் பின்னர் 45 ஆண்டு கால ஆயுள் தண்டனையை அவன் தொடர்ச்சியாய் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இவனது 101 வயதில் தான் இவனால் வெளியே வர முடியும்!!! என்னா தீர்ப்பு?!!! அண்ணாத்த இப்போ சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன் போல கம்பிக்குப்பின்னே. யார் கண்டா? கம்பிக்குப்பின்னே இவன் தனது லீலைகளை சுயசரிதையாக எழுதினாலும் ஆச்சர்யமில்லை!.
நம்மூரில் இவனை காப்பாற்றவும் ஒரு கூட்டம் தட்டி தூக்கி பிடித்து கோஷம் போட்டது , ஆனா அவுங்க குரல் அமெரிக்காவுக்கு எட்டலை. நல்ல வேளை!.

வன் போல எத்தனை ஆனந்த் ஜான்கள் நம்மூரில் இருப்பாங்க? என்ன ஒரே வித்தியாசம்? சாமியார் போர்வையில் இருப்பாங்க. இங்கே  மாடல்களுக்கு பதிலாய் சாமியாரிணிகள். 


தினத்தந்தியின் இன்றைய பேப்பரை எடுத்து மேலோட்டமாக பாருங்கள்,அதில் 2 முதல் மூன்று பெடோபைல் ஆசாமிகள் லீலை புரிந்த சம்பவங்களாவது இருக்கும்,மகளை கர்ப்பமாக்கி கொன்ற தகப்பன்!!!,மூன்று வயது குழந்தையை கற்பழித்து கொன்ற தாத்தா!!! என்று. இந்தியாவில் மாஸ் கில்லிங்கே பெரிய குற்றமில்லை,எனும் போது பெடோபைல்-கற்பழிப்பு எல்லாம் துச்சம். 
==========000==========
ஹார்ட் கேண்டி  என்பது பதின்ம வயது பெண்கள் பெடோஃபைல் ஆசாமிகளுக்கு ஆன்லைன் சேட் ரூமில்  வைத்துள்ள கோட் வேர்டாம்!.

ப்படி மேலே சொன்ன ஆனந்த் ஜான் போல் ஒரு ஆசாமியிடம்  மாட்டிய 
14வயது பெண், சமயோஜிதமாய் செயல்பட்டு அந்த பெடோஃபைல் 
குற்றவாளியை தப்ப விடாமல் சுளுக்கெடுப்பது தான் ஹார்ட் கேண்டியின் கதை, இது அநேகம் ஆண்களுக்கு பிடிக்காது,
[எனக்கும் படத்தை பார்ப்பதற்குள்  போதும், போதுமென்றாகிவிட்டது]. இது பெண்கள் முக்கியமாய் டீன் ஏஜ் பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.   இன்றைய நவ நாகரீக உலகில் பலகுடும்பப் பெண்கள் குறுகிய காலத்தில் புகழேணியில் ஏறநினைத்து விபரீதமாய் ஓநாய்கள் விரித்த வலையில் வலியப் போய் விழுகின்றனர். அதுபோல பெண்கள் தம்மை தற்காத்துக் கொள்ள  இப்படம் உதவும்.

படத்தின் கதை:-
14 வயது மாணவி ஹேய்லி[ஜூனோ புகழ்-எல்லன் பேஜ்] 32 வயது ஃபேஷன் போட்டோகிராப்பர்-ஜெஃப்ஃபுடன்[பேட்ரிக் வில்சன்] 2 வாரங்களாய் ஆன்லைனில் மிக ரொமாண்டிக்காக சேட்டிங் செய்கிறாள். இறுதியாய் இருவரும் காபி ஷாப்பில் சந்திக்கின்றனர். அங்கும் வைத்து பல விதமான கடலைகளை ஜெஃப் ,ஹேய்லியிடம் வறுக்கிறான். அவள் 18 வயது முடிக்கும் வரை திருமணத்துக்கு காத்திருப்பேன், என ஆசை வார்த்தை பேசுகிறான். அவள் வயதுக்கு அதிகமான செக்ஸ் பேச்சுகள் பேசி அவளை பிராக்கெட் போடுகிறான். அவளுக்கு அவள் விரும்பிய  பச்சை வண்ண டிஷர்டும் வாங்கி பரிசளிக்கிறான், ஹேய்லி அதை அங்கேயே கழிவறையில் மாற்றிக்கொள்ள அதை கதவோரம் நின்று சைட்டும் அடிக்கிறான்.ஜொள்ளும் வடிக்கிறான்.

ஹேய்லி என்ன டாபிக் எடுத்து பேசினாலும் ,தனக்கும் அது பரிட்சயம் போல பிஸ்து காட்டுகிறான். இறுதியாய் தன் வீட்டுக்கும்  ஒரு நடை அழைக்கிறான், இவள் யோசித்து சரி என சொல்ல, தன் சொகுசு காரில் அவளை கூட்டிப்போய் கடல் போன்ற அபார்ட்மெண்டையும் காண்பிக்கிறான்.

ங்கே இவளுக்கு குடிக்க வோட்கா+ஆரஞ்சு ஜூஸுடன், ஸ்க்ரூ ட்ரைவர் கலந்து தருகின்றான், ஹேய்லியோ நான் முன் பின் அறிமுகமில்லாதவர் தரும் பானங்களை குடிக்க மாட்டேன் என்றவள்,தனக்கு தானே ஸ்க்ரூட்ரைவர் கலக்கிறாள். இருவரும் மது அருந்திக்கொண்டே உரையாட,ஹேய்லி அவனிடம் முன்னாள் காதலி ஜெனில் பற்றி கேட்கிறாள்.

ப்போது ஜெஃப்ஃபுக்கு தலை வலிக்க ஆரம்பிக்க,இவள் அவனை விடாமல் என்னையும் உன் சுவற்றில் உள்ள இளம் மாடல்கள் போல் போட்டொ எடு, என கேட்கிறாள், அவனுக்கு நடனமாடியும், ஒயிலாய் போஸ்கள் கொடுத்தும் காட்டுகிறாள்.ஆனால் கேமராவை கையில் எடுத்த ஜெஃப்ஃபுக்குள் எதோ மிருகம் விழிக்கிறது, ஆனால் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை, வியர்த்தவன் மயங்கி விழுகிறான்.

அசுர வைத்தியம்-1
இப்போது ஜெஃப்,வீல் வைத்த சேரில் உட்கார்ந்த படி கண் விழிக்கிறான். ஹேய்லி அவன் ஒரு பெடோபைல் ,என்றும் ரேபிஸ்ட்,கொலையாளி என்று தனக்கு தெரியும் என்கிறாள், இருவாரமாகவே இவனை போட்டு வாங்கி பொறி வைத்து பிடித்ததாயும் சொல்கிறாள்.இவன் கிளாஸில் மயக்க மருந்து  கலந்ததையும் சொல்ல, இவன் பதறி எழ எத்தனிக்க,இவன் கால்களும் கைகளும் கட்டப்பட்டிருக்கிறது.ஹெய்லி அவன் கண் முன்பே வீட்டை கலைத்து போட்டு ரெய்டு செய்கிறாள், 

வன் மேசையில், வார்ட்ரோபில், பெர்சனல் கம்ப்யூட்டரின் எல்லா ட்ரைவ்களிலும் தேடியும் எங்கும் எந்த போர்னோக்ராபிக் போட்டோ, வீடியோ ஆதாரமும் தென்படவில்லை,ஆச்சரியம் பிடிபடவில்லை, ஒரு  எலிஜிபிள் பேச்சுலரின் கம்ப்யூட்டர் இவ்வளவு சுத்தமா?நோ சான்ஸ்!!!! சம்திங் ராங்!!! என இவள் அவனை உண்மையை ஒத்துக்கொள்ள சொல்கிறாள், ஆனால் ஜெஃப் அவள் மேலேயே பழியை போட்டு ,உனக்கு வளர்ப்பு சரியில்லை, மனநிலை பிசகியிருக்கிறாய் ,அதனால் தான்  இப்படி இருக்கிறாய், உனக்கு நான் வைத்திய செலவை ஏற்றுக்கொண்டு கவுன்சிலிங் செய்கிறேன், உன்னைப்பற்றி நான் யாருக்கும் சொல்லமாட்டேன்,என்னை விட்டுவிடு என்கிறான்.

ஹேய்லிக்கு ஜெஃப்ஃபின் கப்போர்டில் துப்பாக்கியும், முன்னாள் காதலி ஜெனில்லின் போட்டோக்களும், அவர்கள் டேட் செய்த நாளும் கிடைக்கிறது, சற்றும் தளராமல் மேற்கொண்டு தேடியவள், இவனது டீடேபிளின் மீதுள்ள கூழாங்கற்களை கீழே தள்ள, அங்கே ஒரு சேஃப்டி லாக்கரை பார்க்கிறாள், அதை திறக்க இவனிடம் கோட் கேட்க, இவன் ஆத்திரமாகி , தர மறுத்து நீயே முயன்று பார் என்கிறான். அவள் நீண்ட முயற்சிக்கு பின் அவர்கள் முதலில் டேட் செய்து பின் உடல் உறவு கொண்ட  நாளை,எதேச்சயாய் எண்டர் செய்ய லாக்கர் திறக்கிறது. 

தில் டோன்னா மேயர் என்னும் காணாமல் போன பள்ளி மாணவியின் போட்டோ இருக்கிறது, இவள் அதை வைத்து ஜெஃப்ஃபை மிரட்டுகிறாள், இவன் திமிரி அவள் வயிற்றில் உதைத்துவிட்டு சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ஓட, அவள் வலியை உதறி எழுந்தவள் , இவன் தலையில் பாலீத்தின் பையை வைத்து இறுக்க சுற்றுகிறாள், இவனுக்கு மூச்சு திணர வைத்து மீண்டும் மயங்க செய்கிறாள்.
அசுர வைத்தியம்-2
இப்போது ஜெஃப் டைனிங் டேபிளில் படுக்கவைக்கப்பட்டு, கால்களும், கைகளும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் கண்விழிக்கிறான். இவள் ஐஸ்கட்டிகள் கொண்ட பாக்கெட்டை ஜெஃப்ஃபின் ஆண்குறிமீது வைக்க, இவன் அலறுகிறான். இவள் ரொம்ப நேரம் வலிக்காது, கேஸ்ட்ரேஷன் ஆபரேஷன் இப்போ முடிஞ்சிடும், என்ன ?!!!எனக்கு இது முதல் தடவை, எனவே கை நடுக்கம் இருக்கும், இவன் உடம்பை அசைத்தால், ஆண்குறி தவறுதலாக துண்டாகக்கூடும் என எச்சரித்தவள், இவன் பெடோபைல் என்பதையும் டோன்னா மேயரை வன்புணர்ச்சிசெய்து கொன்றதையும் ஒத்துகொள்ளுமாறு சொல்கிறாள், ஜெஃப் மறுக்கிறான், ஹெய்லி அவன் முன்னாள் காதலி ஜெனிலுக்கு ஜெஃப் தன் பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்டது போலவும், தற்கொலை செய்து இறக்கப்போவது போலும் மின் அஞ்சல் டைப் செய்கிறாள், அதை அனுப்பவா?அனுப்பவா? என மிரட்டுகிறாள்,இவன் கெஞ்ச அதை பாதியில் விட்டவள்.

வள் கிளவுஸ் அணிந்துகொண்டு,ஜெஃப்ஃபின்  உள்ளாடையை கழற்றுகிறாள், அறுக்கையில் வலிக்காமலிருக்க மயக்க மருந்து  ஊசியை இவன் தொடையில் போடுகிறாள் .  அவனின் விதைப்பையை கிருமி நாசனி கொண்டு சுத்தம் செய்கிறாள், ரோமத்தை ஷேவிங் ஃபோம் இட்டு குழைத்தவள், பின்னர் ஆபரேஷன் கத்தி கொண்டு ரோமத்தை அருவருப்பே இல்லாமல் சவரம் செய்கிறாள். பின்னர் மீண்டும் கிருமி நாசனி தடவுகிறாள், தன் டாக்டர் அப்பாவின்  சர்ஜரி புத்தகத்தை திறந்து குறிப்பு எடுத்தவள், இவனுக்கும் செயல்முறை விளக்க குறுக்கு வெட்டு தோற்றத்தை காட்ட, அவன் அலற, இவள் அவன் கெஞ்ச கெஞ்ச, கேளாமல், விதை நீக்க ஆபரேஷனை துவங்குகிறாள்.

வன் எவ்வளவு பணம்வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறான்,அவள் செவி சாய்க்காமல் விதைக்கொட்டைகளை கண்ணாடி டம்ளர் நீரில் போடுகிறாள், இவன் அலற,அலற, அதை வெளியே எடுத்து பந்து போல தட்டி தட்டி விளையாடுகிறாள். பின்னர் இவன் கண் முன்னே அதை காட்டியவள், கிட்சன் சின்கை நோக்கி சென்று மாமிச எலும்பு நொறுக்கும் கிரஷரை ஆன் செய்கிறாள்.

விதை கொட்டையை அதில் போட நினைத்தவள், இதை காக்கைக்காவது போட்டால் புண்ணியம் உண்டு என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள். வீட்டின் ஓட்டுக் கூரை மீது  ஏறுகிறாள், இவன் விதைக்கொட்டை போன பயத்தில் அலறுகிறான். மீண்டும் உள்ளே வந்தவள் நான் குளித்துவிட்டு வரேன் ,என ஆபரேஷன் உடையை அவிழ்த்துவிட்டு போகிறாள், ஜெஃப் பகீரத பிரயத்தனப்பட்டு, கை கட்டுகளை அவிழ்த்தவன் , கால் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டு, தன் பறிபோகாத விதைகொட்டையை பார்த்து ஆனந்தக்கூத்தாடுகிறான். 

விதை அதே இடத்தில் சர்வ பத்திரமாயிருக்க,பரீட்சை அட்டைக்கு போடும் தகர கிளிப் ஒன்று வழுவழு விதை பையை இறுக்கிப் பிடித்திருக்கிறது, கொலை வெறியுடன் குளியலறைக்குள் அவளை தாக்க ஓடுகிறான்,அவள் இவனுக்காகவே காத்திருந்தவள். இவனை டேசர் என்னும் ஸ்டன் கன்னால் மின்சாரம் பாய்ச்சி நிலைகுத்தி மயங்க வைக்கிறாள்.அய்யோ வட போச்சே!!!

அசுர வைத்தியம்-3

ப்போது சக்கர நாற்காலியில் நின்ற நிலையில் கண்விழித்த ஜெஃப், வாயில் பிளாஸ்திரியுடன்,  ஒரு நைலான் கயிறில் தன் கழுத்து தூக்கு மாட்டப்பட்டிருப்பதையும், கைகள் பின்புறமாய் கட்டப்பட்டிருப்பதையும் பார்க்கிறான். ஹெய்லி, ஜெஃப்ஃபின் முன்னாள் காதலி ஜெனிலுக்கு மின்னஞ்சல் தட்டிக்கொண்டிக்க, இவனை நோக்கி இரண்டு சாய்ஸ் தருகிறாள்,

1.சேரை உதைத்து அவனே தூக்கு கயிறு இறுக்கி சாவது.
2.இவன் செய்த குற்றங்களை வாக்குமூலமாய் தந்து,சரணடைந்து தண்டனை பெறுவது.

ப்போது வீட்டின் கதவு தட்டப்பட, ஹேய்லி மருண்டு போய் திறக்கிறாள், இவனது அண்டை வீட்டு ஜப்பானிய பெண்,அங்கே நிற்க, அவளிடம் தன்னை ஜெஃப்ஃபின் அக்கா மகள் வார இறுதிக்கு வந்துள்ளேன் என்கிறாள்.ஜெஃப் உள்ளே பெரிதாய் வாந்தியெடுப்பது போல அலறி சத்தம் போட,ஜப்பானிய பெண்ணிடம்  ஜெஃப்ஃபுக்கு, ஃபுட் பாய்சன் என்கிறாள், 

ப்பானிய பெண் தன் மகள்களிடம் ஜெஃப் மிகவும்பிரியமாய்[!] இருப்பான் என்றும், வீட்டில் குக்கீஸ் செய்தேன், என்றும், சொல்கிறாள். அவள் கொண்டு வந்து தந்த இனிப்பை வாங்கிகொண்டவள், வாசக்கதவை மூடப்போக, ஜப்பானியப் பெண் காசு? என கேட்கிறாள், அசடு வழிந்தபடி ஜெஃப்ஃபின் பர்ஸில் இருந்தே பணம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வருவதற்குள், ஜெஃப் தன் கழுத்துக் கயிறை அறுத்துக்கொண்டு சேரிலிருந்து கீழே குதித்து கத்தியை எடுத்துக்கொண்டு தன் பின்னங்கை கட்டையும் விடுவிக்கிறான். கத்தியை எடுத்துகொண்டு இவளுக்கு காத்திருக்கிறான் , இவன் தப்பியதை பார்த்த ஹெய்லி தன்னை தற்காத்துக்கொள்ள  துப்பாக்கியுடன் மொட்டை மாடிக்கு ஓடுகிறாள்.

இப்போது ஆரம்பித்தது பூனை சுண்டெலி ஆட்டம்.
1.இறுதிக்கட்ட போராட்டத்தில் ஜெஃப் கெலித்தானா?தன்னை இவ்வளவு சித்திரவதை செய்த பொடிப்பெண்ணை கொன்றானா?
2.ஹெய்லி உண்மையிலேயே அந்த மரணவாக்குமூலத்தின் மின் அஞ்சலை ஜெனிலுக்கு அனுப்பினாளா?
3.ஹெய்லிக்கு உண்மையிலேயே 14 வயது தானா?
4.ஹெய்லி எதற்காக இந்த பெடோஃபைல்-ஜெஃப்ஃபை  பழிதீர்க்க வந்தாள்?
5.பக்கத்து வீட்டு .ஜப்பானியப்பெண்  ஜெஃப்ஃபுக்கு உதவினாளா?


போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!

படத்தின் சிறப்புகள்:-
படத்தின் பட்ஜெட் ஒன்பதரை லட்சம் டாலர்களாம்,படத்தில் இரண்டே பிரதான பாத்திரங்களே, பதினெட்டரை நாளில் மொத்த காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதாம், படத்தின் செலவை குறைக்க ஒன்பது நிமிட இசை மட்டுமே பயன்படுத்தப்பட்டது, மீதம் எல்லாம்  சாதாரண சப்தங்களே, படம் முழுக்க நீண்ட  க்ளோஸ் அப் ஷாட்டுகள் கொண்டுள்ளது, படத்தின் வசனங்கள் லைவாய் படம் பிடிக்கப்பட்டு, மிக சொற்ப வசனங்களே டப்பிங்கில் சரிசெய்து திருத்தப்பட்டன.படத்திற்காக பிரத்யேக செட் எதுவும் போடவில்லையாம். ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச்செய்யும். வேகம்,வேகம்,வேகம் தான்.ஆக மொத்தத்தில் ஒரு ப்ரில்லியண்டான த்ரில்லர் படம் இது. இயக்குனர் டேவிட் ஸ்லேடுக்கு இது முதல் படமாம்,நம்பவே முடியவில்லை,எல்லென் பேஜின் நடிப்பை நாம் ஜுனோ மூலம் அறிவோம்,பேட்ரிக் வில்சன் கலக்கியிருக்கிறார்.இது போல வேடத்தில் நடிக்க தனித்திறமை வேண்டும்.வெல்டன் டீம்.!!!

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:- 
 ========================
 ========================
கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by David Slade
Produced by Rosanne Korenberg
Written by Brian Nelson
Starring Ellen Page
Patrick Wilson
Odessa Rae
Sandra Oh
Music by Molly Nyman
Harry Escott
Release date(s) 2005 (Canada)
April 14, 2006 (United States)
Language English
Budget $950,000[1]
Gross revenue $7,022,209[2]

 ========================

61 comments:

ஹாலிவுட் பாலா சொன்னது…

பாதி பார்த்தேன் தல!! போரடிச்சதுன்னு விட்டுட்டேன். இப்ப மீதியையும் பார்த்து முடிக்கறேன்.


அதென்ன.. ரெண்டு பதிவா.. ஸ்டன்கன், கற்பு, தற்காப்பு-ன்னு எழுதறீங்க.

எதுனா.. எலக்‌ஷன்ல நிக்கற ஐடியா?

ஹாலிவுட் பாலா சொன்னது…

நீங்க எக்ஸ்ப்ளெய்ன் பண்ணியிருக்கறதை பார்த்தா.. இது பெண்ணியவாதிகளுக்கான ஸ்பெஷலோன்னு தோணுது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

இங்க பாருய்யா?
தல நீங்க இப்புடி கேப்பீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் தல!நாளைக்கு என்ன யாரும் மேல்சாவனிஸ்டுனு சொல்ல முடியாதுல்ல?
பெண்னியத்துக்கு எந்த துரும்பையும் இவன் கிள்ளி போடலைன்னு சொல்ல முடியாதுல்ல?சிலை வப்பாங்கல்ல?[இதெல்லாம் ஓவரால்ல]அதான் தல.
ஆல் நப்பாசை:))))

ஹாலிவுட் பாலா சொன்னது…

அது சரி.. மாட்ரேஷனை எடுத்து விட்டுட்டீங்களே... இனிமே, ‘ப்லாகர் எரர்’ வராதா??

ஹாலிவுட் பாலா சொன்னது…

///என்ன யாரும் மேல்சாவனிஸ்டுனு சொல்ல முடியாதுல்ல?//

அட போங்கப்பா....

பிரச்சனைக்குள்ளான பேட்டியில கூட.. அவரு “பெண்களுக்கு ஒன்னுன்னா.. பொங்கி எழுந்துடுவேன்”-ன்னு தான் சொல்லியிருந்தாரு.

எப்படி கும்முனாங்கன்னு பார்த்தீங்கள்ள??? :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல,அடடா!!!!!!!
மெயின் சுச்சி.ஒன்னும் சொல்ல முடில?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//நீங்க எக்ஸ்ப்ளெய்ன் பண்ணியிருக்கறதை பார்த்தா.. இது பெண்ணியவாதிகளுக்கான ஸ்பெஷலோன்னு தோணுது.//
தல என்னையெல்லாம் பெண்கள் படிக்கிறாங்களா?
போங்க தல்,கவிதயும் , கதையும் எழுதுனா தான் படிப்பாங்க,நீங்களே பாருங்க அதுக்கான அறிகுறி இக்கான்ன்னு?

ஹாலிவுட் பாலா சொன்னது…

பெண்ணியவாதிகள்-ன்னுதானே சொன்னேன்! பெண்கள்-ன்னு சொல்லலையே??

ரெண்டுக்கும்... நிறைய வித்தியாசம் கீது!! நீங்க தமிழ்மணம் போறதில்லைன்னு நினைக்கிறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

வேற ஒன்னுமில்ல தல,
இந்த படம் பார்த்துட்டு தேடினா,ஜான் பத்தி தகவல் கிடைச்சது,அன்னாத்த நிறைய செஞ்சிருக்கார்.பெரிய செலிப்ரிட்டிக்கள் இவராண்ட தான் தைப்பாங்களாம்,பாரீஸ் ஹில்டனுக்கு உசுராம் இவர்னா!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//நீங்க தமிழ்மணம் போறதில்லைன்னு நினைக்கிறேன்.//
யெஸ் தல போறதே இல்ல,
அதுவே திரட்டிக்குது,எனக்கு தெரியாது,நானும் இணைக்கிறதில்ல,

ஹாலிவுட் பாலா சொன்னது…

//பாரீஸ் ஹில்டனுக்கு உசுராம் இவர்னா!//

சரியான ஆள்தான்!! ஒருவேளை அந்த வீடியோவில் இருந்தது... நம்மாளோ??

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல அதில் பலரும் உண்டு,இவரும் இருந்திருக்கலாம்.பெரிய இடம்,என்னா சிரிப்பு?என்னா புன்னகை?பாரீஸ் பாரீஸ்!!!

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஓகே... நமது மக்கட்படை வரும்போது மீண்டும் வருகிறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஆகட்டும் தல

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//விதைக்கொட்டைகளை கண்ணாடி டம்ளரில் போடுகிறாள், இவன் அலற,அதை எடுத்து பந்து போல தட்டி தட்டி விளையாடுகிறாள். பின்னர் இவன் கண் முன்னே அதை காட்டியவள், கிட்சன் சின்கை நோக்கி சென்று மாமிச எலும்பு நொறுக்கும் கிரஷரை ஆன் செய்கிறாள்//

அடடா . . எவ்வளவு தத்ரூபமான வரிகள். . நினைத்துப் பார்த்தேன்.. கிரஷ்ஷரில் விதைகளைப் போட்டு திரவ வடிவில் கொழகொழவென்று அது ஆனால், எப்படி இருக்கும் ? ;-)

ஜெய் சொன்னது…

மீ த தேர்டு... பேசிகிட்டு இருங்க... படிச்சுட்டு வர்றேன்...

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//என்ன யாரும் மேல்சாவனிஸ்டுனு சொல்ல முடியாதுல்ல?
பெண்னியத்துக்கு எந்த துரும்பையும் இவன் கிள்ளி போடலைன்னு சொல்ல முடியாதுல்ல?//

அட அட அட. . . பெண்ணியத்துக்கு நீங்க கிள்ளிப்போட்ட துரும்பு, மேலே நான் மேற்கோள் காட்டிய வரிகள்ல கீது ;-)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//தல என்னையெல்லாம் பெண்கள் படிக்கிறாங்களா?//

இந்தப் போஸ்ட் அவங்களுக்கே டெடிகேட்டட் இல்லையா ;-) (ச்சும்மா டமாஸு)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//பாரீஸ் ஹில்டனுக்கு உசுராம் இவர்னா!//

//சரியான ஆள்தான்!! ஒருவேளை அந்த வீடியோவில் இருந்தது... நம்மாளோ??//

அதே டவுட்டுதான் எனக்கும் ;-)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

இருங்க இன்னும் கரிகிட்டா அரை மணி நேரத்துல வறேன் . . கொஞ்சம் வேலை கீது

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்,
அடடா,நண்பா,
நான் எழுதியதை நீங்க எடுத்து மேற்கோள் காட்டும் போதுதான் அது எவ்வளவு கவரிசியா இக்குன்னே புரியுது?தேங்க்ஸ் நண்பா.:)))இனி நோ லேடீஸ்,கன்ஃபார்ம்டு.:))))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்,
//அட அட அட. . . பெண்ணியத்துக்கு நீங்க கிள்ளிப்போட்ட துரும்பு, மேலே நான் மேற்கோள் காட்டிய வரிகள்ல கீது ;-)//

ஆமா நண்பா,செம உள்குத்து இது!

ஜெய் சொன்னது…

அடடா.. காப்பிக்கொட்டை அரைக்க சொல்லித்தர்ற சமையல் குறிப்பு மாதிரி விளக்கமா சொல்லியிருக்கீங்க கார்த்திக்கேயன்..

// கிரஷ்ஷரில் விதைகளைப் போட்டு திரவ வடிவில் கொழகொழவென்று அது ஆனால், எப்படி இருக்கும் ? ;-) //
// இருங்க இன்னும் கரிகிட்டா அரை மணி நேரத்துல வறேன் . . கொஞ்சம் வேலை கீது //
கருந்தேள், இது ரெண்டுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா...? ;P

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

ஆத்தாடி... செம டெரரா கீதே தல...... நான்பார்க்க மாட்டேன்பா... அடி மடியிலே கைவசுட்டாளே...பாவிபுள்ளை

ஜெய் சொன்னது…

இந்த பொண்ணையா இப்படி நடிக்க வச்சுருக்காங்க? இன்சப்ஷன் ட்ரெய்லர்ல பார்த்துட்டு, பாப்பா அழகா இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தேன்...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஏனுங்க மக்களே!
அந்த சீனை நானேவா படத்த்தில் வச்சேன்?
நான் ஒரு அப்பாவி,அதில் வந்ததை உங்களுக்கு உரைத்தேன்,அவ்லோ தான்!!:)))
அதை வேற கூழாக்கனுமா?
அதை நான் சொல்லலை!
கருந்தேள் சொன்னது அது,அவரை புடிங்க,அவர் காண்ட்ரிப்யூஷன் அது!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜெய்,
நானும் பார்தேன் இன்சப்ஷன் ட்ரெய்லர்,இது பசுந்தோல் போர்த்திய புலி[இன்னும் என்னன்னமோ எல்லாம்],அதான் I wear boys underwear னு போர்ட் வச்சிருக்கே,பாருங்க!!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பிரதாப்,
ஆமா நண்பா,
ஆண்களுக்கு செம வெறுப்பு வரும் இந்த படம் பார்த்தா,எவ்ளவோ வெறுப்பையும் தியாகம் பண்ணி இதை நான் எழுதினேன்!!!!

ஜாக்கி சேகர் சொன்னது…

தம்பி உனக்கு பின்னுட்டம் போடறதுக்குள்ள தாவு தீர்திடுத்து...

நம்ம நெட் கனெக்ஷன் அப்படி...

எல்லாம் ஓப்பன் ஆவும் இப்படி பீட் பேக் அடிக்கற பாக்ஸ்மட்டும் இல்லைன்னா நீ என்ன செய்வே???

நேத்து நைட்டு எவ்வளவே டிரை பண்ணிட்டு இப்ப போடுறேன்...

ஜாக்கி சேகர் சொன்னது…

இந்த படத்தை நான் பார்ககலை...பார்ககறேன்....
இது போலான படத்தை அறிமுகபடுத்தி சமுகத்தில் விழிப்புனர்வை ஏற்படுத்தி... தொடர்ந்து தமிழ்கூறும் நல்லுகத்துக்கு சேவை செய்து வரும் கார்த்திக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜாக்கிசேகர்,
அண்ணே,மிக்க நன்றி அண்ணே,
முன்னவே உங்க கனெக்‌ஷன் பற்றி தெரியும் அண்ணே,இதெல்லாம் சொல்லனுமா?நிங்க வந்தாலே போதும் அண்ணே!!மகிழ்ச்சிதான்.

மயில்ராவணன் சொன்னது…

அப்பிடியே ஜாக்கி அண்ணே வார்த்தைகளை வழிமொழிகிறேன்.

ஆனால் தம்பி கார்த்து, நீர் அடங்கமாட்டீர்.. அவிங்ககிட்ட சொல்லிற வேண்டிதான். 18+ ஆ போடுறீர்.

அப்புறம் துபாய்ல இருக்கிற எல்லார்க்கும் இதை பிரிண்ட் எடுத்து குடுப்போம். உங்க ஆபிஸ் சேட்டன் கடை முன்னாடி நின்னு குரல் வுடுவோம்.சாக்கிரத!

வினோத்கெளதம் சொன்னது…

இப்படியும் கொடுமை படுத்துவாங்களா..

இராமசாமி கண்ணண் சொன்னது…

என்ன கொடுமை கார்த்தி இது. இப்படில்லாம் யோசிக்கிறாய்ங்களா :-).

கனவுகளின் காதலன் சொன்னது…

நண்பரே,

மிரட்டு மிரட்டி விட்டீர்கள். சீச்சி இந்தப் பழம் புளிக்கும் :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மயில் ராவணன்,
ஐயா ராவணரே,யாருக்கிட்ட சொல்லுவீர்னு தெளிவா சொல்லித்தொலையும்!ஒவ்வொரு முறையும் அவைய்ங்ககிட்ட சொல்லுவேன்,சொல்லுவேன்னு சொல்றீர்!அதான் கமெண்டையே திறந்து வச்சிருக்கோம்ல?18+எழுதக்கூடாதுன்னு கூகிள் சொல்லலையே?

துபாய்ல இருக்கும் எல்லாருக்கும் ப்ரிண்டா?கட்டுப்படியாகுமா?

என் ஆஃபீஸ் 35ஆவது மாடீல இருக்கு,சேட்டன் கடைல முன்னால நிந்து கத்தினால் என்ன பிரயோசனம்?:))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வினோத் கவுதம்
ஆமாம் குரு என்ன செய்ய?
நாம இனி உடைமைகளை பத்திரமா பாத்துக்கனும்!!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இராமசாமி கண்ணன்,
ஆமாம் நண்பரே,ஆண்கள் பார்க்கமுடியாத படம்,இது தான்,என்னால் எல்லாம் மகளிர் மட்டும் படமே பார்க்க முடியவில்லை ஒருகாலத்தில்,குடும்பம்னு ஆன்பின் இதெல்லாம் தப்பா தோணலை.ஆனால் பெடோபைல்களை திருத்த இது போல எல்லாம் எடுக்க வேண்டிருக்கு.
இந்த படம் 2005 வந்தது.
மேலே உள்ள ஆனந்த் ஜான் 2007ல் மாட்டிக்கொண்டான்,அவன் இந்த படத்தை பார்த்தாவது திருந்தியிருக்க கூடாது?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கனவுகளின் காதலன்,
ஆமாம் நண்பரே,
பூப்போல உள்ளம் கொண்டவர்களுக்கு இந்த பழம் புளிக்கும்,:))))

ILLUMINATI சொன்னது…

//அட அட அட. . . பெண்ணியத்துக்கு நீங்க கிள்ளிப்போட்ட துரும்பு, மேலே நான் மேற்கோள் காட்டிய வரிகள்ல கீது ;-)//

ஹாஹஹா....தாறுமாறு! :)

ILLUMINATI சொன்னது…

// நம்மூரில் இவனை காப்பாற்றவும் ஒரு கூட்டம் தட்டி தூக்கி பிடித்து கோஷம் போட்டது , ஆனா அவுங்க குரல் அமெரிக்காவுக்கு எட்டலை. நல்ல வேளை!.//

ஆமாங்க,இந்தியாவில கொசுத்தொல்ல ரொம்ப அதிகம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இல்யுமினாட்டி,
நன்றி நண்பா.முக்கியமான ஈழம்,போபால் போல பிரச்சனைகளுக்கு செவி சாய்க்காத மக்கள்,இதுபோல அசிங்கத்துக்கு வக்காலத்து வாங்குவது கடுப்பு.

ஜோதிஜி சொன்னது…

பின்னுட்டம் போடறதுக்குள்ள தாவு தீர்திடுத்து...

நம்ம நெட் கனெக்ஷன் அப்படி...

தடையில்லா மின்சாரத்தில் வாழ்ற சென்னை மக்களுக்கே இத்தனை பிரச்சனையின்னா இங்கே உள்ள நிலமை இன்னும் மோசம்.

ஏன் கார்த்திக் தமிழ் படங்களுக்கு இது போல படங்களுக்கு பின்னால் உள்ள செய்திகள் மற்றும் உழைப்புகள் பற்றி இது போன்ற பாணியில் எழுதினால் என்ன?

எழுதுறவுங்க வெறும் கும்மியோடு தான் நிப்பாட்டிறாங்க.........

ILLUMINATI சொன்னது…

என்ன பாஸ் நீங்க,கொசு சாக்கடைல தான இருக்கும்? :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜோதிஜி,
என்ன தமிழ்பட்த்துக்காஆஆஆஆஆஆஅ?
அதுக்கு என் தானை தலைவன் ஹாலி பாலி ஒருத்தராய் உள்ளார்!சும்மா எப்படி கலாசுறார் பார்த்தீங்கல்ல?குட்டிப்பிசாசு?

என்னங்க தலைவரே!!!
சுப்ரமணியபுரம்,அப்புறம் சில பல காப்பியடிக்காத படங்களுக்கு இப்படி எழுத எண்ணம் உண்டு.:))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இல்யுமினாட்டி,
வாங்க நண்பா,கொசுவேதான்,
அதும் மஞ்சக்காமாலை பரப்பும் கொசு.யப்பாஆஆஆ!!!ஆர்குட் கம்யூனிட்டியெல்லாம் இருக்கு.ஆர்குட்ல எதுக்கேல்லாம் க்ம்யூனிட்டி,கடவுளே.
அந்த நாதாரி சாரி நிதாரி டாகடர் கோலிக்கு கூட அவன் அப்பாவின்னு ஒரு கம்யூனிட்டி,யார் கண்டா கசாப் சாப் கூட நல்லவர்னு ஒரு கம்யூனிட்டி இருக்கலாம்.,

வெடிகுண்டு வெங்கட் சொன்னது…

மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:

வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

வெல்கம் வெங்கட் டு ஒலகசினிமா!!!

ILLUMINATI சொன்னது…

ஆமா ஓய்.இருக்கும்.தேடினா கிடைக்கும் ... :)

பெயரில்லா சொன்னது…

Pay somebody back in his own coin.....................................................................

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

ஹாலிவூடின் வன் கொடுமைகள் இல்லாத நல்ல "Indie" படம் போல் தெரிகிறது. பார்த்துவிடுகிறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//王瑞 சொன்னது…

Pay somebody back in his own coin.....................................................................//


ஐயா கிம் கி டுக், இவ்ளோ நாள் கழித்து இப்போதான் ஆங்கிலத்தில் கமெண்ட் போட முடிந்ததா?இது கொரியனா?
சீனமா?அப்போ நீங்க யுவான் சுவாங்
dear kim ki duk,
thanks for your comment.:))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மீனாட்சி சுந்தரம்,
ஆமாம் நண்பரே,பாருங்க பிடிக்கும்.

selva சொன்னது…

''ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச்செய்யும். வேகம்,வேகம்,வேகம் தான்''

Mokkapodathukku inthalavu thevaiye illa,nenga innum niraya padam pakkanum appathan ithellam summanu theriyum..time than loss

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@செல்வா,
நன்றி

பெயரில்லா சொன்னது…

கீதப்ப்ரியன்,
படம் பார்த்தேன்,ஆனா ஆம்பிளைங்கலால பார்க்க முடியாத படம்மினா இதுதான்,அந்த சின்ன பொண்ணை இவன் எப்போடா கொல்லுவான்னு இருந்தது,வயித்தெரிச்சல் இன்னும் என்ன என்னவோ?ஆனா அதை தான் நீங்க முன்னாடியே சொல்லிட்டீங்கல்ல,அவன் சைக்கோவா அல்லது அவள் சைக்கோவான்னு செம சஸ்பென்ஸ்.கடைசி காட்சி அற்புதம்.ஆனா லாஜிக் இடிக்கிதுங்க,போலீஸ் எல்லாம் என்ன?புகிட்டா இருந்தாங்க?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அனானி,
நன்றி

பெயரில்லா சொன்னது…

பெண்களுக்கு முக்கியமான பதிவும் படமும் ,அந்த ஆனந்த் ஜான் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை,அவனையும் இந்த படத்தின் நாயகனான பெடோபைலையும் இணைத்தமைக்கு குடோஸ்.சுனிதாக்ரிஷ்னனும் வீடியோவும் என்ன அழச்செய்தது,பெடோபைல் கொடுமைகாரர்களை நிற்க வைத்து சுட்டுட்தள்ள வேண்டும் அல்லது,இதில் வருவது போல காயடிக்கவேண்டும்,ஒரு ஆணாயிருந்தும் இப்படி ஒரு படத்தை பரிந்துரைத்தமைக்கு நன்றி.
ஜாக்கிசேகர் சொன்னதையும் இங்கே வழிமொழிகிறேன்.
உமா,சென்னை

cp senthilkumar சொன்னது…

நீண்ட பதிவு.அருமை.டைப் அடிக்கவே 2 மணி நேரம் ஆகி இருக்குமே

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@உமா,சென்னை வருகைக்கு நன்றிங்க,
குடும்பம் என ஆன்பிறகு இதெல்லாம் எங்கு பார்த்தாலும் வலிக்கிறது,அதுதான் பதிவிட்டேன் சகோதரி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@cp senthilkumar ,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,2மணி நேரம் என்று நேரக்கணக்கு வைத்துகொள்வதில்லை,எழுத விடயமிருந்தால் டைப் அடித்துக்கொண்டே இருப்பேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)