யங் ஆடம் - young adam -[2003 ] இங்கிலாந்து [கண்டிப்பாக 18+]


றைந்த ஸ்காட்டிஷ் புதின எழுத்தாளர் அலெக்ஸாண்டர் ட்ராஸ்ஸியின் 1954ஆம் ஆண்டு வெளி வந்த யங் ஆடம்  என்னும், புதினத்தை தழுவி, டேவிட் மெக்கன்ஸியின் எழுத்து இயக்கத்தில் 2003 ஆண்டு வெளிவந்த ப்ரிட்டிஷ் - நான் லீனியர் ட்ராமா இது.

மிக அழகாய் படமாக்கப்பட்ட ப்ரிட்டிஷ் சினிமாக்கள் வரிசையில் இப்படத்துக்கு இடம்  நிச்சயமுண்டு, இது ஒரு அட்டகாசமான நான்லீனியரும் கூட. இதுவரை பார்த்திராத  அழகிய இடங்களும்,
1950 களின் கணவாயில் கப்பல் போக்குவரத்தும், துறைமுகத்தை சுற்றி பின்னப்பட்ட காட்சிகளும் நிச்சயம் வியப்பூட்டும்.

எமிலி மார்டைமர் எனக்கு மிகவும் பிடித்த அழகும் திறமையும் வாய்ந்த நடிகை, இவர் சமீபத்தில் ஷட்டர் ஐலாண்ட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாய் வந்திருப்பார். இவரின் கண்கள் செம துருதுரு, பலசமயம் அவையும் பேசும், இதில் காதலியாக 80 சதம் முழு நிர்வாணமாயும்,ஆற்றில் மிதக்கும் பிணமாயும் வந்து நம் இரக்கத்தை சம்பாதிக்க்கிறார்.

டில்டா ஸ்விண்டன்,இவர் எப்பேர்பட்ட நடிகை?மைக்கேல் க்ளேட்டன் படம் பார்த்திருந்தால் இவர் எப்பேர்பட்ட கார்ப்பொரேட் வில்லி நடிகை என தெரியும், இதில் ஆணவத்தனமான மனைவியாய் வந்து தனித்து தெரிகிறார்.இவருக்கும் ஏகப்பட்ட  முழுநிர்வாண காட்சி உண்டு. பர்ன் ஆஃப் ரீடிங்கில் ஜார்ஜ் க்ளூனியின் கள்ளக்காதலியாயும் இவரை எனக்கு பிடிக்கும்.

எவான் மெக் க்ரெகோர்,கள்ளக்காதல் மற்றும் களவிக்காட்சிகள் நிறைந்த படம் என்றாலே இவருக்கு வெல்லக்கட்டி,இதிலும் இவர் படு சுட்டி,பிரதான பாத்திரம்,முழு நிர்வாண காட்சியும் உண்டு, இவர் பிக் ஃபிஷ்ஷில் மட்டுமே மகன் பாத்திரத்தில் சாதுவாய் நடித்ததாய் நினைவு,இவர் படம் தேடிப்பார்த்தாலே நிறைய 18+தேறும்.பட்த்தில் நிறைவாய் நடித்தும் இருக்கிறார்.ஒரு நல்ல ப்ரிட்டிஷ் நடிகர்.இதில் இவருக்கு சிறந்த நடிகருக்கான BAFTA விருது கிடைத்தது.


படத்தின் கதை:-
1950களின்,ஸ்காட்லாந்து:- க்லாக்ஸ்கோவிலிருந்து எடின்பர்குக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் பார்ஜ்-ரக சிறிய கப்பலில் வேலை செய்யும்-ஜோ[எவன் மெக் க்ரகோர்], ஒரு முன்னாள் புதின எழுத்தாளன், புதின எழுத்தாளருக்கே ஏற்படும் கற்பனை வறட்சி (writer's block) விரக்தியில் முடிந்து தன் டைப்ரைட்டரை க்லைட் ஆற்றில் எறிய வைத்து, லெஸ்ஸின்[பீட்டர் முல்லன்] சரக்கு கப்பலில் கரி அள்ளிக்கொட்டும் உதவியாளன் வேலைக்கு தள்ளுகிறது.

ப்பலின் அடித்தளத்திலேயே உரிமையாளர் தம்பதிகளான யல்லா[டில்டா ஸ்விண்டன்], லெஸ் மற்றும் அவர்களின் மகன் டிம்முடன் தங்கிக்கொள்கிறான், படு காரியக்காரியான யல்லா வயதான கணவனின் புணர்ச்சியில் வெறுப்புற்றவள், ஜோவை கள்ளக்காதலானாக வரித்துக்கொள்கிறாள்,

ப்படி கரி அள்ளிக் கொட்டுகையில்,ஒரு அழகிய இளம்பெண்ணின் [எமிலி மார்டைமர்]பிணம் வெறும் மெல்லிய பெட்டிக்கோட் அணிந்த நிலையில் துறைமுகக் கரையை நோக்கி வர,ஜோவும் லெஸ்ஸும் தொரட்டி போட்டு அதை தூக்கி கரையில் கிடத்தி,கோணியால் மூடி,போலீஸிடம் சொல்லுகின்றனர்,குற்றமுள்ள ஜோவின் நெஞ்சு குறுகுறுக்க துவங்குகிறது,அந்த பிணம் இவனது முன்னாள் காதலி கேத்தி,அவள் முந்தைய தினம் துறைமுகக் கரையில் தவறி விழுந்தபோது , பதட்டத்தில் காப்பாற்றாத கயமையும்,இவனை மவுனம் சாதிக்க வைக்கிறது.

வாழ்வில் எந்த பொறுப்பையும் ஏற்கத் துணிவில்லாத கோழையான தன்னிடம் நான் உன் 2 மாதகருவை வயிற்றில் சுமக்கிறேன். நாம் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் வா, என ஆசையாய் உரைத்த கேத்தியை [எமிலி மார்டைமர்] ,கைகழுவ வழி தெரியாமல்  ஜோ ஓட்டமெடுக்க,அவள் பின்னாலே துரத்தி வர, தண்ணீரிலும் விழுந்து விட்டாள்,அவளுக்கு நீச்சலும் தெரியாது , இரவு நேரமாதலால் இவனால் விழுந்த இடத்தை பார்க்கவும் முடியவில்லை, தொடைகள் நடுங்க, அவள் உடலுறவுக்கு முன்னர் கழற்றிப்போட்ட ஆடைகள்,காலணிகளை ஒரு ட்ரக்கில் தூக்கி எறிந்து,அவள் கைப்பையையும் நீரில் எறிந்துவிட்டு கப்பலுக்கு வந்தவனுக்கு ஆப்பு இப்படி தேடியா வரவேண்டும்?

ன்ன இருந்தாலும் ஜோவுக்கு மனசு கேட்காமல் பெட்டிக்கோட் துணியை வைத்து கேத்தியின் புட்டத்தை இழுத்து மூடியாயிற்று. கப்பலின் அடித்தளத்திற்கு வந்தவனை புதிய காதலி யல்லா பொறாமையின் உச்சிக்கே சென்று நீ பிணத்தைக் கூட விடமாட்டாயா? என ஏச ,அதை வாங்கியும் கட்டிக்கொண்டாயிற்று. என்ன கொடுமை சார்?,

பின் வந்த நாட்களில் யல்லா கணவன் லெஸ்ஸை கழற்றிவிட தருணம் பார்க்கிறாள், ஆசை மகனை எடின்பர்கில் விடுதியில் தங்கவைத்து படிக்க வைக்க்கிறாள். அவ்வப்போழுது கணவன் லெஸ்ஸுக்கு தெரியாமல் கப்பலின் மேல் தளத்திலோ, கணவாயின் நடைபாதையிலோ இருவரும் புணர்ந்து இச்சையை தீர்க்கின்றனர். ஒருகட்டத்தில் எல்லை மீறிப்போய் அடித்தளத்தின் படுக்கையறை கட்டிலிலேயே புணர்கின்றனர். இதை மது விடுதியிலிருந்து போதையில் திரும்பிய லெஸ் பார்த்துவிட்டு மேல் தளத்திலேயே  குமுறியபடி நடக்கிறார்.

ருவரும் கணவன் லெஸ்ஸுக்கு தெரிந்துவிட்டது, அதனால் பதட்டப்படவேண்டாம்,  என இவன் ஒரு சிகரட்டை பற்றவைத்து சாவகாசமாய் இழுத்துவிட்டு ஆடைகளை அணிந்துகொள்கிறான், அவள் எதுவுமே நடக்காதது போல அம்மணமாகப்போய் ஜோவுக்கும் அவளுக்கும் தேநீர் தயாரிக்கிறாள், மான ரோஷமுள்ள லெஸ் நம் பரிதாபத்தை அள்ளுகிறார், கட்டின துணியோடு புலம்பியபடி வெளியேறுகிறார்,மகனுக்கு மட்டும் தன் அன்பை சொல்ல சொல்கிறார்.

னைவி யல்லாவுக்கு குற்ற உணர்ச்சிக்கு பதிலாக லெஸ்ஸின் கையாலாகாததனத்தால் வெறுப்பே வருகிறது, கப்பல் இவளுக்கு சொந்தமென்றாலும், முறைப்படி விவாகரத்துக்கு வழக்கறிங்கரை அமர்த்தி விவாகரத்து பெற எண்ணுகிறாள், வயதில் மிக இளைய பெண்ணை மணம் முடிக்க பெரும்பானான ஆடவர் விரும்புவது போல, இவளும் இளைஞனை  மணக்க ஆவலாயிருக்கிறாள். எடின் பர்கில் வீடு கட்ட பணம் சேமிக்கிறாள்,இவனுக்கு சரியாக வரி பிடித்தம் போக வார சம்பளம் கொடுத்தும் விடுகிறாள். எல்லோரிடமும் புதிய பாய் ஃப்ரெண்ட் என்றே அறிமுகம் செய்கிறாள். கெட்டிக்காரி.இப்போது ஜோவுக்கு வசதியாக கேத்தியை நீரில் தள்ளி கொலை செய்ததாக அவளின் காதலன் - மணமாகி,2 குழந்தைகளுக்கு தகப்பனான பில் என்பவன் கைது செய்யப்படுகிறான்.

ந்த பொறுப்பையும் ஏற்க துணிவில்லாத ஜோ இங்கே மட்டும் இருப்பானா? கோட்டிக்காரப்பயல், கழண்டு கொள்ள தருணம் பார்க்கிறான், சரியாக ய்ல்லாவின் தங்கை க்வென்னின்[தெரேஸ் ப்ராட்லி] கணவன் விபத்தில் இறந்து போக ஆறுதல் சொல்ல யல்லாவுடன் அவள் வீட்டுக்கு போன ஜோ அங்கேயே அவளை கண்களால் முன்பதிவு செய்துவிடுகிறான்.

வன் உள் மனதை பார்வையாலே படித்த க்வென்,சில நாள் தங்க இவர்களுடன் கப்பலுக்கு வருகிறாள்,வந்தவள் எனக்கு சினிமா பார்க்க வேண்டும் போல் உள்ளது என சொல்லி அக்கா யல்லாவை அழைக்க,அவள் நான் கப்பலை கவனித்துக்கொள்கிறேன், நீ போய்விட்டு வா, என எனுப்பிவைக்க, இருவரும் ஒரு சிறிய சந்துக்குள்ளே சுவரோரமாய் புணர்கின்றனர். கப்பலுக்கு கிறுகிறுத்துப்போய் வந்தவனை முகத்தை வைத்தே கண்டுபிடுக்கும் யல்லா, அன்று இவனுக்கு படுக்கையில் இடம் தராமால் போக, ஏககடுப்பான ஜோ கப்பலுக்கு வந்து தன் உடமைகளை எடுத்துக்கொண்டு பாரில் சென்று குடிக்கிறான்.
 1.யல்லாவை நிர்கதியாய் விட்டுப்போகும் ஜோ எங்கே போகிறான்?
2.யல்லா கணவன் லெஸ்ஸுடன் இணைந்தாளா?
3.அப்பாவி பிளம்பர் பில் விடுதலை செய்யப்பட்டானா?
4.ஜோ தன் சேட்டையை கைவிட்டானா?


போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:=
======

======
முழுக்கதையும் தொடர்ந்து படிக்க:- 
ங்கே பாரில் முன்பே தெரிந்த ஒரு கேனைப்பயல் தன் வீட்டில் அறை ஒன்று வாடகைக்கு உள்ளதாய் சொல்லி இவனை அங்கே தங்க அழைத்துப்போக, அவன் மனைவி இன்னொரு கெட்டிக்காரி, முன்கூட்டியே ஒரு வார வாடகையை வசூலித்துவிடுகிறாள், கைக்குழந்தைக்காரியான அவளையும் கைக்குள்ளே போடும் வித்தை நம்மவருக்கு கைவந்துள்ளதே!!,அவளையும் அவள் கணவன் வரும்முன்னரே நைச்சியமாய் முடித்துவிடுகிறான். இப்போது முன்னாள் காதலியின் நினைவுகள் ஜோவுக்குள் பலமாய் வருகின்றன.

வளை கடற்கரையில் வைத்து முதலில் சந்தித்தது,அவள் தன் சினிமா நடிகை கனவு நனவாகாமல் போய்  ஒரு உப்புமா கம்பெனியில் செகரட்டரியாக வேலை பார்த்து, இருவருக்கும் வீட்டு வாடகையும் உணவுத்தேவையையும் பூர்த்தி செய்தது, ஒருகட்டத்தில் இவன் தன்னை மூட்டை பூச்சி போல உறிஞ்சுகிறான், என நன்கு புரிந்து கொண்டு வெறுக்கத் தொடங்கியவள், இவனிடம் பதிலுக்கு நிறைய சித்திரவதைகளையும் வன்புணர்ச்சியையும் பெற்று வந்திருக்கிறாள். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இவன் சீனாவுக்கு போகபோவதாய் கிளம்பியவன், குறைந்த பொறுப்புள்ள வேலையாக  லெஸ்ஸின் கப்பலில் எடுபிடியாகிறான். 


கேத்திக்கு தனிமை வாட்டவே அறைத்தோழி ஒருத்தியை சேர்த்துக் கொள்கிறாள், ஏற்கனவே மணமாகி 2 குழந்தைகள் உள்ள பிளம்பர்  பில் என்பவனை பார்க்கத் தொடங்கியிருக்கிறாள், அதனால் அறைத்தோழி வேறு இடம் செல்கிறாள், 

ப்படி காலச்சக்ரத்தில் காணாமல் போனவர்கள் மீண்டும் சந்தித்து உறவு கொண்டதில் ஏற்பட்டது விபரீதம், அவள் இவனைத் தேடி வந்து உறவை புதுப்பிக்க,விதி வேறு விதமாய் விளையாடி விட்டது,அவள் இவனுக்கு பரிசளித்த எவர்சில்வர் முகம்பார்க்கும் துண்டில் இவன் முகத்தை பார்க்கவே வெறுப்பாய் வருகிறது,இதோ போலீசாரும் வழக்கை முடிக்க கேத்தியை உடலுறவு கொண்டபின் நயவஞ்சகமாய் நீரி தள்ளி விட்டு கொன்றது பிளம்பர் பில் என வழக்கை ஜோடித்து விட்டது,வழக்கும் சூடாய் நடக்கிறது.

ப்பாவி தண்டிக்கப்படுவது ஸ்காட்லாந்தில் சகஜம் போலும், பில்லுக்கு சார்பாய் வாதாட, சாட்சி சொல்ல யாருமே இல்லை, சாட்சி விசாரணையில் லெஸ்ஸும் வந்து நாங்கள் தான் கேத்தியின் உடலை எடுத்து வெளியே போட்டோம்,அவள் உடம்பில் அப்போது பெட்டிக்கோட் மட்டுமே இருந்தது என்கிறார், ஜோ வழக்கு நடக்கையிலேயே பூனை போல வந்து வழக்கு விசாரனையை வேடிக்கை பார்க்கிறான், அப்பாவி பில் - தான் கேத்தியுடன் ஒரு போதும் உடலுறவு வைத்துக்கொண்டதில்லை என்கிறான்,பில்லின் மனைவியின் கதறல் யாருக்கும் இரக்கமளிக்கவில்லை.

ந்த ஜோ எனும் காமந்தகன் மனதிலும் இப்போது ஈரம் கசிகிறது,டெலிபோன் பூத் சென்றவன்,காகிதம் எடுத்து நீதிபதிக்கு மொட்டைக் கடிதம் எழுதி,சம்பவம் அன்று கேத்தியுடன் உடலுறவு கொண்டது நான் தான்,அப்போது விபத்தாக கேத்தி நீரில் விழுந்துவிட்டாள்,பில்லை தண்டிப்பது ஒரு நிரபராதியை தண்டிப்பது போலாகும் என உணர்ச்சிகரமாய் கதை எழுதி, அதை கோர்ட் குமாஸ்தாவின் மேசையில் சேர்த்துவிட,அது நீதிபதிக்கு செல்கிறது,ஆனால் ஒரு மொட்டைக்கடிதத்தை எந்த அளவுக்கு நம்ப வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டுமே நம்பிய நீதிபதி பில்லுக்கு தூக்கு தண்டனை அளிக்கிறார்.ஜோவின் குற்றமுள்ள நெஞ்சு மீண்டும் குறுகுறுக்கிறது,அறைக்கு சென்றவன் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கேத்தி கொடுத்த முகம்பார்க்கும் கண்ணாடியை நீரில் எறிந்துவிட்டு விறுவிறுவென்று நடக்கிறான்.

னி குடிகெடுக்க எத்தனையோ இடங்கள் அவனுக்கு. இது போல ஜென்மங்களைப் பற்றி எழுத கதைக்கா பஞ்சம்? இந்த ஜோவைப்போல எத்தனையோ கயவர்களை நம்பி குடும்பங்கள் நாசமாய் போகின்றன, இது போல படம் பார்ப்பது,ஒரு பாடம் படிப்பது போலத்தான்.
=======
டத்தின் ஒளிப்பதிவு கைல்ஸ் நட்ஜென்ஸ் ,கொஞ்சும் அழகு, க்ளாக்ஸ்கோவின் இயற்கை அழகை அள்ளிவந்துள்ளது கேமரா, குறிப்பிட்டு சொல்லவேண்டியது,முதல் காட்சியில் கலைஞர்கள் பெயர் போடுகையில் நீரின் தரைக்கடியிலிருந்து மெல்ல நீரில் ஊதி மேலே எழும்பும் கேத்தியின் பிரேதம் அழகாய் கரை ஒதுங்கும் காட்சியும், கணவாயில் குறுக்கிடும் இருள் நிறைந்த சுரங்கத்துக்குள் பயணிக்கும் கப்பல், கப்பலுக்குள்ளே எடுக்கப்பட்ட படுக்கையறை காட்சிகள், ஒளியமைப்பு, காட்சியமைப்புக்கள் என ஒவ்வொன்றும்
சிரத்தையாய் வடித்த கவிதை, பிண்ணனி இசை - டேவிட் பைர்ன். அற்புதம் படபடப்பு கூட்டும், காட்சிகளை இலகுவாய் நக்ர்த்திச்செல்கிறது.

ரு காட்சியில் யல்லா லெஸ்ஸை விரட்டிவிட்டு ஜோவை கணவனாய் வரித்துக்கொண்டு,ஹாஸ்டலிலிருந்து திரும்பிய மகனிடம் இது இனி உன் அப்பா ஜோ என அறிமுகப்படுத்த, அவன் ஜோவை பாஸ்டர்ட் என்கிறான்,ஜோ அதை எளிதாக எடுத்துக் கொள்கிறான். எந்த கட்டத்திலும் குடும்ப பொறுப்புகளை ஏற்க தயங்கும் ஜோ,கணவனை கழற்றிவிடும் பஜாரி மனைவி  யல்லா,அப்பாவிக்கணவன் லெஸ், புருஷன் செத்த இடத்தில் புல் முளைக்கும் முன்னர் மாற்றான் தேடும் க்வென், என ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் கன கச்சிதம். மக்களிடம் வெற்றி பெற்ற ஒரு புதினத்தை படமாய் எடுக்கும் போது நிறைய பேர் வெற்றி பெறுவதில்லை, திரைக்கதையில் நிறைய மாறுதல்கள் செய்வர், இதில் புதினத்தை அப்படியே மிக வீர்யமாய் தழுவி இருப்பதால் ஒரு புதினத்தையும் படித்த திருப்தி கிட்டுகிறது. என்ன தான் அனேகம் பேர் இதை கிட்சன் சின்க் ட்ராமா என சொன்னாலும் ஏகம் பேரால் ரசிக்கப்பட்ட படைப்பு இது.இதையும் குடும்பத்தாரோடு பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்,அதுவும் அன்ரேட்டட் வெர்ஷன் பார்க்கையில் எச்சரிக்கை தேவை.
========000========
 படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:=
Directed by David Mackenzie
Produced by Jeremy Thomas
Written by David Mackenzie
Based on the novel by Alexander Trocchi
Starring Ewan McGregor
Tilda Swinton
Peter Mullan
Emily Mortimer
Music by David Byrne
Cinematography Giles Nuttgens
Editing by Colin Monie
Studio Recorded Picture Company
UK Film Council
Studio Canal
Distributed by Warner Bros. (UK)
Sony Pictures Classics (US)
Release date(s) 26 September 2003
Running time 98 minutes
Country United Kingdom
Language English
========000========

21 comments:

பின்னோக்கி சொன்னது…

ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் படித்த உணர்வு உங்களின் ஒவ்வொரு பட விவரிப்பும். பார்த்ததில்லை. பார்க்க வேண்டும்.

நல்ல த்ரில்லர் படம் இருந்தால் சொல்லுங்களேன். பார்த்து நாளாச்சு.

ஜெய் சொன்னது…

அட.. இது நான்-லீனியர் வாரம் போல... நல்ல அறிமுகம் கார்த்திக்கேயன்...

// முன்னோட்ட காணொளி //
எப்படி இந்த வார்த்தையெல்லாம் கண்டுபிடிக்கறீங்க?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பின்னோக்கி,
நண்பரே,நலமா?ஆஸ்திரேலிய ஆங்கில படத்தில் 2 த்ரில்லர் உள்ளது கண்டிப்பாய் பிடிக்கும் restraint,square.இரணடும் டாரண்டில் இருக்கிறது.பாருங்கள் கண்டிப்பாய் பிடிக்கும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜெய்,
வாங்க,நான் லீனியராய் அமையுதுங்க,இந்த படமெல்லாம் நினைவிலிருந்து மறையும் முன் எழுதனும்னு எழுதிட்டேன்.

முன்னோட்ட காணொளியா?
இருப்பதிலே மிக எளிதான மொழியாக்கம் இது:)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

வோட்டிங் டன். படம் கலக்கலாய் இருக்கும் போலத் தெரிகிறதே . . இன்று இரவு இதன் டௌன்லோடிங் தான் . .

//ஏகப்பட்ட முழுநிர்வாண காட்சி உண்டு//

கண்கள் பனித்தன. . இதயம் இனித்தது. . :-)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கருந்தேள்,
நண்பா வீட்டில் அடி விழப்போகிறது எச்சரிக்கை.;)
தவிரவும் சீடர்ஸ் குறைவாய் தான் உள்ளது,நான் உங்க பதிவில் ஒரு கேள்வி கேட்டுள்ளேன்,பார்த்தீர்களா?

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல விமர்சனம் நண்பரே. சுட்டி கொடுத்ததற்கு நன்றி. தரவிறக்கத் துவங்கிவிட்டேன்.

கனவுகளின் காதலன் சொன்னது…

நண்பரே,

மீண்டும் உங்களிடமிருந்து ஒரு நல்ல பகிர்வு. நன்றி நண்பரே.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கனவுகளின் காதலன்
வாங்க நண்பரே வருகைக்கு மிக்க நன்றி

~~Romeo~~ சொன்னது…

தல வேலை பிஸி அப்பாலிக்கா வந்து படிக்கிறேன். voted

கண்ணா.. சொன்னது…

தல அசத்தல் விமர்சனம். ஆனால் என்னால் இதை இப்போதைக்கு பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனாலும் தரவிறக்கி வைச்சு நேரம் கிடைக்கும் போது பாத்துக்கறேன்.

நம்ம குரூப்புல நீங்க மட்டுமாது எழுதிகிட்டு இருக்கீங்களே....:)

ஜோதிஜி சொன்னது…

வோட்டிங் டன். படம் கலக்கலாய் இருக்கும் போலத் தெரிகிறதே . . இன்று இரவு இதன் டௌன்லோடிங் தான் . .

//ஏகப்பட்ட முழுநிர்வாண காட்சி உண்டு//

கண்கள் பனித்தன. . இதயம் இனித்தது. . :-)

same shame bubby shame...........

ஜோதிஜி சொன்னது…

ரொம்ப ரொம்பக்குறைவு என்னுடைய ஆங்கிலப்படங்கள் அறிவு. நான் அடிக்கடி யோசிப்பது போர்க்களம் என்றாலும் படுக்கைகளம் என்றாலும் எத்தனை நிதானம்(?)

நம்மாளு பயந்தாங்கோலிபக்கோடா....

பாலாவை காணோம்?

அழிச்சு முடிச்சு அழிச்சாட்டியம் முடிந்தவுடன் தான் வருவாரா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ரோமியோ
நண்பா நிதானமா படியுங்க,பாருங்க.நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கண்ணா,
நண்பா வெல்கம்பேக்
நிதானமா பாருங்க,நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜோதிஜி,
தலைவரே வருகைக்கு நன்றி
பாலா சீக்கிரம் வேலையெல்லாம் முடித்துவிட்டு அமர்க்களமாய் வருவார்.பதிவை எல்லாம் அழிக்கமாட்டார்,எவ்ளோ பேர் சொல்லியிருக்கோம்.

Sabarinathan Arthanari சொன்னது…

நல்ல பட அறிமுகம்

மயில்ராவணன் சொன்னது…

//காதலியாக 80 சதம் முழு நிர்வாணமாயும்,ஆற்றில் மிதக்கும் பிணமாயும் வந்து நம் இரக்கத்தை சம்பாதிக்க்கிறார்.//

80% நிர்வாணமா வந்தா உங்களுக்கு இரக்கம் வருமா? எந்த ஊருண்ணே நீங்க.........ச்சும்மா....
ஃபார்மாலிட்டி டன்

ஜாக்கி சேகர் சொன்னது…

கார்த்தி இந்த படத்தை நான் பார்த்து இருக்கேன்...டிவிடி இப்ப தேடிக்கிட்டு இருக்கேன்...இந்த படத்தோட போட்டோ கிராபியும் ஷாட்சும்.. முக்கியமா அந்த சின்ன கப்பல் கல்வாயில் போகும் காட்சிகள்.. மென்மையான திரைக்கதை இந்த படத்தை படம் பார்க்கும் உணர்வு இல்லாமல் இருக்கும்...

இந்த படத்துல நெஞ்சில நிக்கற சீன்..

புருஷன்காரன் பக்கத்து ரூம்ல... இங்க யெல்ல டீ ரெடி பண்ணி ஜோவுக்கு குடுத்துட்டு செல்லமா கண்ணத்தை கிள்ளுவது போல் ஜோ ஒட லுல்லுவை ஒரு ஆட்டு ஆட்டிட்டு போகும் பாரு...யப்பா... அது செம காமெடியான சீனும் கூட..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஜாக்கிஅண்ணே,
செம சீனை இன்னும் நினைவு வைச்சிருக்கீங்க,ஆமா இவங்க காமம் கண்ணை மறைக்க ஏறக்குறைய மானம் கெட்ட ஜென்மமாவே மாறியிருப்பாங்கண்ணே,

செம காட்சி அதையும் மேல எழுதிடறேன்,ரொம்ப நன்றி அண்ணே,அதை ஏன் எழுதாம விட்டேன்னே தெரியல?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@மயில்ராவணன்
குசும்பு ஓவரையா உமக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)