டிஸ்க்ரேஸ் -அவப்பெயர் [2008] [ஆஸ்திரேலியா] [கண்டிப்பாய் 18+]

டிஸ்க்ரேஸ் - இது  முழுக்க தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட, ஆங்கிலம், ஆஃப்ரிக்கானா, சுலு, ஸ்ஹோசா ஆகிய மொழிகளில் வெளியான ஆஸ்திரேலிய  நாட்டு திரைப்படம்,

ஜான் மால்கோவிச் ஒரு தலைசிறந்த அமெரிக்க - நடிகர், இயக்குனர், & தயாரிப்பாளருமாவார். இவரின் டேஞ்சரஸ் லியேசன்ஸ் படம் பார்த்துவிட்டு இவரின் படங்கள் ஒவ்வொன்றாய் தேடிப் பார்த்தேன், தலைவர் கவுரவம், கருமம், கன்னராவி, பாவ புண்ணியம், எதுவும் பாக்காதவர். கலைப்படங்களில் , நகைச்சுவை வேடங்களில், தன்னை டேமேஜ் செய்துகொள்ளும் வேடங்களில் பங்களிப்பு என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல, ஒரு சல்லிப்பயல் வேஷம் கட்டினாலும் சல்லிப்பயலாவே மாறியிருப்பார். இவர் இருமுறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டும்,இன்னும் வாங்கவில்லை. இவரின் பீயிங் ஜான் மால்கோவிச் “பற்றி நண்பர் கருந்தேள் அருமையாய் எழுதியிருப்பார்.

வர் வாழ்ந்து கெட்ட பேராசியராய் நடித்த, அதிகம் பேர் பாராமல் போன டிஸ்க்ரேஸ் (அவப்பெயர்) பற்றி பார்ப்போம், 1999ஆம் ஆண்டு புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் J. M. Coetzee ன் டிஸ்க்ரேஸ் என்னும் புதினம் வெளியாகி, மிகச்சிறந்த புதினத்துக்கான புக்கர் பரிசையும் வென்றது. இது வெளியான 4 ஆண்டுகளில் அவருக்கு நோபல் பரிசும் கிடத்தது ,இது கடைசி கால்-நூற்றாண்டுகளில் வெளியான சிறப்பான புதினம் என்னும் பெயரும் பெற்றுள்ளது, இதை தழுவி அதே பெயரில் அன்னா மரியா மாண்ட்செல்லி திரைக்கதையில் ஸ்டீவ் ஜேக்கப் இயக்கி 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ட்ராமா வகை திரைப்படம் இது. ஒரு கதாநாயகன் எப்போதும் ஜெயிக்க வேண்டும்,அவனுக்கு தாழ்வுகளே வரக்கூடாது என்போருக்கான படம் அல்ல இது .
========== 

படத்தின் கதை:-
ருமுறை விவாகரத்து பெற்ற தென்னாப்பிரிக்க வெள்ளை இன ஆங்கில இலக்கிய பேராசிரியர்-டேவிட் லூரி [ஜான் மால்கோவிச்],கேப் டவுனில் தனிமையில் இருக்கிறார். எப்போதும் வரும் மலேசிய விலைமாதுவும் கூட இவரை கவர்ச்சியின்மையால் ஒதுக்குகிறாள், 52 வயதான இவர், தன் கல்லூரி வகுப்பிலேயே காதல் -இலக்கியம் படிக்கும் கலப்பு-கருப்பிண பெண்ணான மெலனி ஐசக்கை, துரத்தி துரத்தி வலைவீசுகிறார், கவிதையால் அர்சிக்கிறார். இவரின் கட்டாயத்தாலும் , இண்டெர்னல் மதிப்பெண்ணுக்கு  பயந்தும் அப்பெண், இவருக்கு விரும்பாமலே இரையாகிறாள்.
வர் அவளின் உறவை தொடர்ந்து எதிர்பார்க்க, அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொள்ள,அவள் காதலனும் அப்பாவும் குறுக்கிட்டு, பிரச்சனை பெரிதாக, பல்கலைக்கழக நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டு, இவர் கட்டம் கட்டப்படுகிறார், இவர் அவர்கள் தண்டிக்கும் முன்னர், சுதாரித்துக் கொண்டு, என்ன? முடிஞ்சது முடிஞ்சு போச்சு, நான் குற்றம் செய்தேன், ஆனால் வருத்தமெல்லாமில்லை,  ஆனதை பார்த்துக்கொள்! 

ன தன் லெஸ்பியன் மகள் லூசி [ஜெசிக்கா ஹெய்ன்ஸ்] வசிக்கும் கிழக்கு கேப்பிற்கு நீண்டகார் பயணம் செய்து போகிறார். அங்கே மகளின் காதலி பிரிந்து போயிருக்க மகள், குழல் துப்பாக்கியின் துணையுடனும் தேவையில்லாத  தத்துவ குப்பைகொண்ட சித்தாந்தத்துடனும் வாழ்கிறாள். 
[லூஸி ஆள் நல்ல அழகாயிருந்தாலும் லூசி பேசும் பேச்சால் நமக்கு அறையலாம் போலிருக்கிறது, அப்படி ஒரு பாத்திரப்படைப்பு]
லூசி முன்பு வெள்ளையர்  பூர்வகுடி-தென்னாப்பிரிக்கருக்கு செய்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தமாக, தன் நிலத்திலேயே பெட்ரஸ் என்னும் கருப்பினத்தவனை தங்க வைத்திருக்கிறாள், அவனுக்கு தன் நாய் பண்ணையிலும்,  நர்சரிசெடிகள் பண்ணையிலும் வேலை தந்து, அவன் பக்கத்து நிலம் வாங்க வழிவகை செய்கிறாள். பெட்ரஸ் நினைத்த நேரத்தில் வீட்டுக்குள் வந்து நினைத்ததை செய்ய உரிமை தந்திருக்கிறாள். இது டேவிட்டிற்க்கு கடுப்பை கிளப்பினாலும் மகளின் அகம்பாவத்தால் பொறுத்துப்போகிறார். வாராவாரம் நடக்கும் உழவர் சந்தைக்கு இவர், மகள், பெட்ரஸ் போய் பூச்செடிகள்,காய்கற்கள் விற்று வருகின்றனர். இந்நிலையில் பெட்ரஸ் மாயமாகிறான்.

ப்போது டேவிட் , லூஸின் குடும்ப தோழியான விலங்குகள் மருத்துவ  க்ளீனிக் நடத்தும் பெவ் என்னும் பெண்மணியிடம்  குறைந்த கூலிக்கு வேலை பார்க்கிறார்,  ஊரில் பிடித்து வந்த தெருநாய்களை குளிப்பாட்டி, தடுப்பூசி ,தீனி போட்டு, யாரும் வாங்கிச் செல்லாத பட்சத்தில் அவற்றை விஷஊசி போட்டு கொன்று  எரியூட்டுவதே இவரின் பிரதான வேலை. மிகுந்த மனவருத்தத்துடன் அதைசெய்கிறார். [இது தென் ஆப்பிரிக்காவில் நிதர்சனம்,அங்கே தீனியும்,புல்லும்,நீரும்  அதிகம் செலவாகிறது என காட்டு யானைகள் கூட கும்பலாக அரசினால் சுட்டுக் கொல்லபடுகின்றன]

ருநாள் மகளும் இவரும் நடை போய் விட்டு வருகையில் ஆப்பிரிக்க கருப்பின இளைஞர்கள் மூவர், இவர்கள் தோட்டத்துக்குள் வந்து, இவர் வீட்டு கூண்டு நாய்களை சீண்ட,  லூசி என்னவென்று விசாரிக்க, அவர்கள் ஒருவனின் சகோதரிக்கு பிரசவ வேதனை-மிகவும் சிக்கல்,போன் செய்ய வேண்டும் என கெஞ்ச,லூசி ஒருவனை மட்டும் வீட்டுக்குள் கூட்டிப்போகிறாள், டேவிட் சற்றும் எதிர்பாராத வேளையில் மற்ற ஒருவன் டேவிட்டை தள்ளிவிட்டு, வீட்டுக்குள் சென்று உள்ளே சென்ற மற்றொருவனுடன் சேர்ந்து லூஸியை வெறியுடன் புணர்கின்றனர். 
வர் ஒருவன் மீது வளர்ப்பு நாயை ஏவி விடுகிறார்,வீட்டின் கதவை உடைத்து திறந்து உள்ளே போனவரை மண்டையில் கட்டையைக் கொண்டு அடித்து, கழிவறையில் இவரை தள்ளி,வெளியே கதவை தாழிட்டும் விடுகின்றனர், லூஸியை மாறிமாறி வெறியுடன் புணர்ந்த  மூவரும்,பின்னரும் நிறவெறி அடங்காமல் வீட்டில் இருந்த டீவி முதல் கக்கூஸ் ப்ரஷ் வரை எடுத்துக்கொண்டு, டேவிட்டின் கார் டிக்கியில் அடைத்தவர்கள், வெறி அடங்காமல் கூண்டில் குலைத்துக் கொண்டிருந்த வளர்ப்பு நாய்கள் அத்தனையையும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றுவிடுகின்றனர்.
ழிவறையில் மயக்கத்திலிருந்து விழித்த டேவிட் , வெண்டிலேட்டர் வழியே அதைப்பார்த்துவிட்டு கத்துகிறார், கதவை திறந்து உள்ளே வந்த கயவர்கள்  இவர் மீது எத்தில் ஆல்கஹாலை ஊற்றி, கொளுத்தியும் விட்டு, கதவையும் தாழிட்ட பின்னர்  இவரின் காரையும் திருடிக்கொண்டு போகின்றனர். இவர் கொஞ்சமும் தாமதிக்காமல் கழிவறை கோப்பையின் நீரில் தலையை விட்டும், அதிலிருந்து தண்ணீர் எடுத்தும் தீயை அணைக்கிறார். [இந்த ஒரு காட்சி ஒன்றே போதும்-மால்கோவிச்சின் அபார திறமைக்கு]

மிகுந்த வலியிலும் லூஸி குளித்துவிட்டு பாத்ரோபுடன் வந்து கதவை திறக்கிறாள், இருவருக்குமே அவமானத்தால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியவில்லை. அகம்பாவம் பிடித்த லூஸி வலியை வெளியே காட்டிக்கொள்ளவில்லை, போலிசிடமும்  போய் புகார் கொடுக்கவில்லை, இவர் மட்டும் காரும் ஏனைய பொருளும் கொள்ளையடிக்கப்பட்டன என புகார் அளிக்கிறார். இவர் லூசியிடம் ஹெஐவி தாக்குதல், விடி நோய் தொற்று ,கர்ப்பம் நேரக்கூடும், மருத்துவரிடம் போவோம் என்றதற்கும், பிடிவாதமாய் மறுக்கிறாள், அவளுக்கு ஒரே கவலை, தான் பிடிவாதமாய் விலகியிருந்த அப்பா முன்னர் இப்படி அவமானம் நேர்ந்துவிட்டதே என்பது தான். இப்போது காயத்துக்கு சிகிச்சைபெற்று வந்த டேவிட்  பிணமான நாய்களை மண் தோண்டி புதைக்கிறார். ஒரு நாய் மட்டும் அதிர்ஷ்டவசமாக கழுத்தில் கத்தி வெட்டுடன் உயிர்பிழைத்தது தான் ஒரே ஆறுதல்.

லூஸி இவரை ஒரு தொண்டு நிறுவன ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போகிறாள், அங்கு அமர்ந்திருந்த ஊர்ப்பட்ட கூட்டம்,இவரின் எரிந்துபோன,காயம்பட்ட நிலையிலும் இவரை சிகிச்சைக்கு உள்ளே அனுப்ப மறுக்கிறது, இவர் வலியுடன்  நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுகிறார்.

லூஸிக்கு அப்பாவின் மேல் இனம் தெரியாத கோபம் இருக்கிறது, அப்பா ஒரு ஸ்த்ரி லோலன், இவர் மெலனி ஐசக்குக்கு உடலால் செய்த செயலால் தான் வேறுவழியில் தானும் உடலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என ஆழமாய்  நம்புகிறாள், இனி அப்பாவின் எந்தவித அறிவுறையையும் கேட்பதில்லை என பிடிவாதமாய் இருக்கிறாள்.

ப்போது பக்கத்து வீட்டுக்கார ஆளான பெட்ரஸுக்கு நிலம் அரசு மூலம் கிடைத்தும் விடுகிறது, அவனுக்கு இவளின் நீர்தேக்க தொட்டியிலிருந்தே நீரை பாசனத்துக்கு வழங்குகிறாள், அவன் புதிதாய் வீடு கட்டிக்கொள்ள ஆரம்பிக்கிறான்,  ஊரில் இருந்து தன் புதிய  மனைவியையும் கூட்டி வந்தவன், நிலம் கிடைத்ததை கொண்டாட பெரிய விருந்தை கிடா வெட்டி, உறவை கூட்டி கொண்டாடுகிறான்.
ந்த விருந்தில் அப்பாவும் பெண்ணும் கலந்துகொள்ள, அங்கே லூஸியை வன்புணர்ச்சி செய்த நாரப்பயலும் இருக்கிறான், அவன் மனநலம் பிழறியவன், பெட்ரசின் மனைவியின் அக்கா மகன் என்றும் தெரிகிறது,டேவிட் கொதித்து அவனை போலீஸில் பிடித்துக்கொடுப்பேன் என மிரட்டி,போன் செய்யப்போக லூஸி அரைக்கிறுக்கு போல வந்து தடுக்கிறாள்.
பெட்ரஸ் வீட்டில் விருந்து நடக்கிறது, போலீஸ் வந்தால் பெட்ரஸ் மானம் போய்விடும் என பிதற்றுகிறாள். பின் எதற்கும் இவரை மதிக்கவில்லை,பின் வந்த நாட்களில் பெட்ரஸின் விட்டிலேயே அந்த மனநலம் பிழறிய இளைஞன் தங்கிக்கொள்கிறான். இவர்களுக்கு பெட்ரஸின் சுயரூபம்,நிலத்தை அபகரிக்க அவன் ஆட்களை விட்டே அராஜகம் செய்யசொல்லி போட்ட  இரட்டை வேடம் புரிகிறது.

ருநாள் லூஸி உள்ளே குளித்துக்கொண்டிருக்க, வெளியே வெண்டிலேட்டர் வழியாக அந்த மனநிலை பிழறிய இளைஞன் எட்டிப்பார்ப்பதை பார்த்தவர், விரைந்து போய் அவனை கீழே தள்ளி அடிக்கிறார், உதைக்கிறார். சத்தம் கேட்டு பாத்ரோபை சுற்றிக்கொண்டு வந்த லூஸி, டேவிட்டிடமிருந்து அந்த இளைஞனை விடுவிக்கிறாள், அவனை வலிக்கிறதா? என கொஞ்சலாய் கேட்கிறாள், அப்போது லூஸியின் திரண்ட மார்புகளை பார்த்து அழுகையை அடக்கிய இளைஞன், கறுவிக்கொண்டே, வீ வில் கில் யூ என சொல்லிய படி நட்டு வைத்த செடிகளை சிதைத்துவிட்டு ஓடுகிறான்.

ருந்தும் மகளால் எதுவும் செய்யவிடாமல் தடுக்கப்பட்டவர், ஒரு கட்டத்தில் பெட்ரஸிடன் போய் நீ அந்த குற்றவாளியை வீட்டிலேயே தங்க வைத்துள்ளாயே? உனக்கு நன்றியே இல்லையா? எனறு கேட்க, அந்த பன்னாடை, அவன் சிறு குழந்தை, அவனுக்கு ஒன்றும் தெரியாது, லூஸியை நான் திருமணம் செய்துகொள்கிறேன், அவளுக்கு அது தான் பாதுகாப்பு என்கிறார். கொதித்துப்போன இவர் லூஸியிடம் போய் இதை சொல்ல, அவளும் அதை முட்டாள் தனமாக ஏற்றுக்கொள்கிறாள்.
கேனைத்தனமாய் சப்பை நிபந்தனைகள் இடுகிறாள், பெயருக்கு தான் அவனுக்கு நான் மனைவி, கட்டிலில் அல்ல, இந்த நிலம் அவனுக்கு சொந்தம் ஆகட்டும், ஆனால் வீட்டை தரமாட்டேன், என் அனுமதியில்லாமல் என் வீட்டுக்குள்ளே அவன் வரக்கூடாது என்கிறாள், இவருக்கு கண்கள் இருள்கிறது, இதைப் போய் அவனிடம் சொல்ல சொல்கிறாள், இவர் அவனால் உனக்கு பாதுகாப்பு அல்ல, ஆபத்து தான்,உன் அம்மாவுடன் ஹாலந்துக்கு போய்விடு என்கிறார். 
லூசி மறுக்கிறாள், நான் என் கொள்கையில் தோற்றுவிடுவேன், மேலும் நான் கருத்தரித்துள்ளேன், நான் ஒரு பெண், அந்த ஒரு பாவமறியா சிசுவை அழிக்க மாட்டேன் என குப்பை தத்துவம் பேசுகிறாள். இனி இவர்கள் என் மக்கள், இவர்கள் தான் என் உறவுகள் என்கிறாள், இவர் செய்வதறியாமல் கண்ணீருடன் ஊரைவிட்டே வெளியேறுகிறார்.

கேப்டவுனுக்கு இவரால் பாதிக்கப்பட்ட மெலனி ஐசக்கின் வீட்டுக்கு சென்றவர், அவள் அப்பாவிடமும், அவள் அம்மா, இளைய சகோதரியிடமும் மண்டியிட்டு, வணங்கி மன்னிக்க சொல்லி விட்டு, தான் வேலை செய்த பல்கலைக்கழகம் செல்கிறார், அங்கே மெலனி இயல்பு வாழக்கைக்கு திரும்பிவிட்டிருக்கிறாள், மேடை நாடகத்தில் சிரிப்பு வேடமும் பூண்டு நடிக்கிறாள், இவர் ஆனந்தப்படுகிறார். 
1.டேவிட் லூரிச் மெலனியிடமும் மன்னிப்பு கேட்டாரா?
2.கயவன் பெட்ரஸ் தண்டிக்கப்பட்டானா?
3.டேவிட் மீண்டும் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தாரா?
4.மகள் லூஸி என்ன ஆனாள்?

போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
=================
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-
=================
முழுக்கதையும் படிக்க:-
ங்கே இருந்த மெலனியின் காதலன் இவரை அடிக்காத குறையாக சிகரெட்டை மேலே எரிந்து எச்சரித்து அனுப்புகிறான், மிகவும் குற்ற உணர்வும், சுயபச்சாதாபமாய் உணர்ந்தவர், காரில் பயணிக்கையில் சிக்னலில் கிராக்கி பிடிக்கும் ஒரு விலை மாதுவை , தன் காரில் கூட்டிக்கொண்டு போய் வாய்ப்புணர்ச்சி பெறுகிறார்.  தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் இவர் வாழ்ந்த வீடு சென்றவர், வீட்டை  மாணவர்கள் அடித்து நொறுக்கியிருக்க, எஞ்சியிருந்த ஒரு புல்புல் தாராவை மட்டும் தன்னுடன் எடுத்துக்கொண்டு மீண்டும் கிழக்கு கேப்பிற்கே திரும்புகிறார்,

ப்போதும் விலங்குகள் க்ளினிக் நடத்தும் பெவ்விடமே போய் தங்கிக் கொண்டு வேலை செய்கிறார்,மதிக்காத மகளை புரிந்து கொண்டு அன்பு செலுத்த ஆரம்பிக்கிறார்.  இப்போது இவரின் திமிர் சுத்தமாய் வடிந்து விட்ட நிலையிலும் இவருக்கு பெண்ணின் அரவணைப்பும், உடல்சுகமும் தேவைப்பட கவர்ச்சியில்லாத, பருமனான,வயதான பெவ்வை இச்சைக்கு நெருங்குகிறார், முதலில் மறுத்த பெவ், பின்னர் யோசித்த பின்னர் இசைகிறாள், இருவரும் முழு  ஈடுபாட்டுடன், பாதுகாப்புடன், க்ளீனிக் நேரம் முடிந்தவுடன் தரையிலேயே படுக்கை விரித்து புணருகிறார்கள். இப்போது இவருக்கு திமிர் நீங்கி  குற்ற உணர்வு தலை தூக்குகிறது,

ய்வு நேரங்களில் புல் புல் தாராவை வாசிக்கிறார், கர்ப்பிணி மகளை அவளுக்கே தெரியாமல் சந்தை சென்று ஒளிந்திருந்து பார்க்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் பிரிவை தாங்க முடியாதவர்  காரை தொலைவில் நிறுத்திவிட்டு, நிறைமாத கர்ப்பிணியாய் , புதிய பூச்செடிகள் ஊன்றிக்கொண்டிருக்கும்  மகளை எட்ட நின்று பார்க்கிறார்,  இந்த முறை லூஸி என்று குரல் கொடுக்கிறார்,  தொண்டை அடைக்க குரல் எழும்பவில்லை, செல்ல நாய் ஓடிவந்துவிட,  மகள் அயற்சியாய் திரும்பி அப்பாவை பார்த்து புன்னகைக்கிறாள், உள்ளே வருகிறீர்களா? தேநீர் தயாரிக்கிறேன், என்றவளுக்கு ,யோசிக்காமல் சரி என்கிறார்.
=========000=========
படத்தின் ஒளிப்பதிவு அபாரம்-ஸ்டீவ் அர்னால்ட்,பளிங்கு போல்  சுத்தமான தென் ஆப்பிரிக்காவின் அழகை நவீன கேமரா யுத்திகளுடன் அள்ளி வந்துள்ளார். படத்தின் திரைக்கதையை மனைவி எழுத இயக்கத்தை கணவர் செய்திருக்கிறார். அழகான திட்டமிடலுடன் எடுத்த படம். படத்தின் சில விடயங்களில் எனக்கும் ஏனையோருக்கும் ஒவ்வாமை இருந்தாலும் புக்கர் பரிசு பெற்ற புதினத்தை சிதைக்காமல் அப்படியே படமாக்கியிருக்கின்றனர். இசையும் பிரமாதம்-ஆண்டனி பார்டோஸ். படத்தில்  அப்படி ஒன்றும் கலவிக்காட்சிகள் டீட்டெய்ல்டாக இல்லாவிட்டாலும் டிஸ்டர்ப்டு கண்டண்டுக்காக குடும்பத்தோடு பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.புதினம் கிடைத்தால் அவசியம் வாங்கிப்படிக்கவும்.
 கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-

Directed by Steve Jacobs
Produced by Steve Jacobs
Anna Maria Monticelli
Emile Sherman
Written by J. M. Coetzee (novel)
Anna Maria Monticelli (screenplay)
Starring Eriq Ebouaney
Jessica Haines
John Malkovich
Music by Antony Partos
Cinematography Steve Arnold
Editing by Alexandre de Franceschi
Release date(s) 2008
Running time 120 min.
Language English
Xhosa
Afrikaans
Zulu
===============
சிறு குறிப்பு:-
இந்த படத்தை பற்றி எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தன் தளத்தில் கசக்கும் காமம் என்னும் பெயரில் எழுதிய விமர்சனம் இன்று   படித்தேன், சுட்டிக்கு நன்றி செ.சரவணகுமார். இதை மிகவும் அருமை என ஒற்றை சம்பிரதாயமான சொல்லுக்குள்  அடக்க முடியவில்லை, தன்னை டேவிட் லூரியாகவே உணர்ந்திருக்கிறார். பைரனின் கவிதை வரிகளை ,பல இடங்களில் அழகாய் உள்வாங்கி மேற்கோள் காட்டியிருக்கிறார்.அவரின் பதிவின் சுட்டி

20 comments:

மயில்ராவணன் சொன்னது…

அண்ணே வழக்கம்போல ஃபுல்மீல்ஸ் விமர்சனம். நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டாச்சு. கீபோர்டு மாதத்திற்கு ஒண்ணு வாங்குவீகளோ?

செ.சரவணக்குமார் சொன்னது…

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கார்த்திக்கேயன்.

எஸ்.ரா இந்தப் படத்தை சிலாகித்து அவரது தளத்தில் எழுதியிருந்தார். ஆர்வம் மேலிட உடனே தரவிறக்கிப் பார்த்தேன். அற்புதமான படம் நண்பா.

பட விமர்சனங்களில் நீங்கள் கொடுக்கும் தகவல்கள் அபாரம்.

பகிர்வுக்கு நன்றி.

ஜெய் சொன்னது…

கண்டிப்பா 18+ இருக்கறதுக்கான அடிப்படை தகுதியே, விமர்சனத்துல ஒரு கில்மா போஸ்டர் போட்டு இருக்கணும்.. எத்தனை பேரு ஏமாந்து போனாங்களோ.. இந்த பாவமெல்லாம் உங்கள சும்மா விடாது கார்த்திக்கேயன்.. இருங்க படிச்சுட்டு வர்றேன்..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@மயில்,
ஃபுல்மீல்ஸா?:))கீபோர்டா,என் லேப்டாப்ல மாத்தோனும்?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@சரவணகுமார்,
நண்பரே எஸ்ராவின் தளம் சென்று ஆவலாய் தேடினேன்,அங்கே ஆர்கைவ்ஸ் இல்லை போல இருக்கு,பழைய பதிவுகளை தேடவோ படிக்கவோ வசதியில்லை,இனி அவர் தளம் தொடர்ந்து படிக்கிறேன்.இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தது.முக்கியமாக மால்கோவிச்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஜெய்,
எதுவும் கில்மா போட்டோ கிடைக்கலை,அதுவும் தவிர ஆபீஸில் அதுபோல படங்களை பார்ப்பதில் பலருக்கு சிக்கல் இருக்கிறது நண்பா,அதனால் தான் நான் தவிர்த்துவிடுவது,

ஜெய் சொன்னது…

// இந்த ஒரு காட்சி ஒன்றே போதும்-மால்கோவிச்சின் திறமைக்கு //
படம் வெறித்தனமா இருக்கும்போல..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜெய் கண்டிப்பா வீர்யமான படம்

இராமசாமி கண்ணண் சொன்னது…

அருமையான விமர்சனம்.

கனவுகளின் காதலன் சொன்னது…

நண்பரே,

மிக அருமையான விமர்சனம். மால்கோவிச், க்ளுனியுடன் வரும் நெஸ்கபே விளம்பரம் எனக்கு பிடித்தமான ஒன்று.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@இராமசாமி கண்ணன்,
வாங்க நண்பா,நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கனவுகளின் காதலன் ,
நண்பரே இருவருமே எனக்கு பிடித்தவர்கள்,இந்த ஜோடி பர்ன் ஆஃப்டர் ரீடிங்கில் அதகளம் செய்திருக்குமே!
நான் அந்த நெஸ்கேப் விளம்பரம் பார்த்ததேயில்லி,யூட்யூபில் தேடி பார்க்கிரேன்,நன்றி.

ஹாலிவுட் பாலா சொன்னது…

இவர் படம்னு பர்டிகுலரா பார்த்ததில்லைங்க கார்த்திக்கேயன். அப்பப்ப இவர் தலை காட்டும் burn after reading மாதிரி படங்கள்ல பார்த்திருக்கேன். கடைசியா Being John -ல பார்த்தேன்.

இப்போதைக்கு... ஆண் சிங்கத்தையும், பெண் சிங்கத்தையும் பார்த்துட்டுத்தான் அடுத்தப் படம்னு முடிவு பண்ணியிருக்கேன். நெட்ஃப்ளிக்ஸ் க்யூல போட்டாச்சி. வரும்போது பார்த்துடுறேன்.

அப்புறம்.. ஒரு தகவல் பிழை. இவர் ரெண்டு முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்-ன்னு imdb/wiki சொல்லுது. வெற்றி பெற்றதில்லை.

அப்பா

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலி பாலி,
தல தகவல் பிழைக்க்கு மிக்க நன்றி,பாருங்க தல இவரை ரொம்ப பிடிச்சு, நானே குடுத்துட்டேன் போல,சாரி தல,இப்போவே மாத்திடுறேன்,பழைய ஃபார்முக்கு வந்தத்துக்கு பெர்சனலா நன்றி.
====
ஆண்சிங்கம்னா யாரு தல அண்ணன் அழகிரி தானே?அவரை நீங்க போய் பாக்கனுமா?எதுக்கு?
====
தல பெண்சிங்கம் பாக்கும் முன் உங்கள் மெடிக்கல் இன்ச்யூரன்ஸ் காலாவதி ஆகலை என்பதை உறுதி செய்யவும்.நன்றி

Sabarinathan Arthanari சொன்னது…

விமர்சனம் நல்லா இருக்குங்க

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@சபரிநாதன் அர்த்தநாரி
நன்றி நண்பரே

M.S.R. கோபிநாத் சொன்னது…

வழக்கம் போல அருமையான விமர்சனம். பார்த்துடுவோம்..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@M.S.R. கோபிநாத்
நன்றி நண்பரே

Prasanna Rajan சொன்னது…

வாவ் இதை எப்படி மிஸ் செய்தேன். ஜே.எம்.கூட்ஸியின் “ The Master of Peters berg", எனக்கு மிகவும் பிடித்த நாவல். தமிழில் சா.தேவதாஸ் அவர்கள் மொழிபெயர்க்க வெளிவந்துள்ளது. பாத்துட்டா போச்சு.

பகிர்விற்கு நன்றி கார்த்திகேயன்...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பிரசன்னா ராஜன்,
வாங்க நண்பா,நானே மெயில் அனுப்பி சொல்லலாம்னு இருந்தேன்,உங்க ஏரியாவாச்சே இது!எப்படிதான் இப்படி தேடி படித்து ரசிக்கிறீர்களோ?பொறாமையாயிருக்கு.சா.தேவதாஸ் படைப்புகள் கிடைத்தால் படிக்கிறேன் நண்பா.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)