சென்னை பறக்கும் ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு!

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்.

என்னும் மேல்/கீழ்கண்ட தட்ஸ் தமிழ் செய்தியை படித்த உடன் எனக்கு மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது,பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் உயிரையும் ,உயிரினும் மேலான கற்பையும் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஓய்வு நேரத்தில் கராத்தே,குங்ஃபு போன்ற ஏதேனும் தற்காப்பு கலையை கட்டாயம் கற்றுக்கொள்ளுங்கள்.

ஹார்ட் கேண்டி படம் பார்த்திருக்கிறீர்களா? அப்படி பார்த்திருந்தால் , 32 வயதுள்ள ஒரு பெடோபைல் தன்மையுள்ள கொலைகாரனிடம் மாட்டிக்கொண்ட  14வயதுப்பெண் எல்லன் பேஜ் எப்படி சம்யோஜிதமாய் சமாளித்து அவனை சுளுக்கெடுப்பாள் என புரியும்.

ஹேண்ட் பேக்குக்குள் வைக்கக்கூடிய கைக்கடக்கமான  டேசர்[TASER] என்னும் ஸ்டன் கன் களை உபயோகிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள், இவை எல்லா பெரு நகரங்களில் உள்ள ஹண்டிங் கிட் ஷாப்களில் கிடைக்கக்கூடும்,  ஒரு  ஹை ஃபை மொபைல் போனை 20,000 ரூபாய் தந்து வாங்கினால் அது ஆபத்துக்காலத்தில் திருட்டு தான் போகும்,ஆனால் டேசர் இருந்தால்?, கூகிளில் தேடி பிடித்து வாங்குங்கள், விஷமகுடிகாரக் கபோதிகள் உங்களை நெருங்குகையில் இதைக்கொண்டு ஷாக் கொடுத்தால் அவர்கள் நிலைகுலைந்து விடுவர், அப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பி ஓடிவிடமுடியும்,இதில் உள்ள ஒரு ட்ரா பேக்,என்ன என்றால்? இது ஒரு முறை உபயோகித்த பின்னர்,கார்ட்ரிட்ஜ் மாற்ற வேண்டுமாம்.

ரி,இதுபோல சாதனங்கள் வாங்க வழி இல்லாதவர்களுக்கு!!,இருக்கவே இருக்கிறது பெப்பர் ஸ்ப்ரே, இதை உங்களிடம் வம்பு செய்யும் கயவர்களின் கண்ணில் அடித்தால் நிச்சயம் நிலைகுலைந்து போவர்..சரி இதெல்லாம் எங்கே கிடைக்கும்? தேடுங்கள், கண்டிப்பாக நம் பெருநகரங்களில் 500 ரூபாய்க்குள் கிடைக்கும். மேலும் கயவாளிப்பயல்களின் விதைக் கொட்டையை நோக்கி பலமாய் எத்தவும் பழகிக்கொள்ளுங்கள், சத்தியமாக இது பலனளிக்கும், இன்னும் சேஃப்டி பின்களையும் மிளகாய் தூளையும் நம்பாதீர்கள், இது ஹைடெக் யுகம். இது தமிழக காவல்துறையின் பெப்பர் ஸ்ப்ரேயை பற்றிய டெமோ, 
பெப்பர் ஸ்ப்ரேயை சென்னையில் வசிப்போர்,காவல்துறையிடம் விண்ணப்பம் பூர்த்தி செய்து,ஒப்புதல் வாங்கிய பின்னர் பயன்படுத்தலாம். இதை குழுவாய்  சூழும் விஷமிகளின் கண்ணில் அடித்தவுடனே மூன்று மணிநேரத்திற்கு பயங்கர எரிச்சல் உண்டாகி,அவர்களுக்கு கண்ணே தெரியாதாம்.பார்க்க படம்.

மேலும் உங்கள் குழந்தைகளுக்கு இப்போதிருந்தே தற்காப்புகலையை நன்கு பயிற்று வையுங்கள்.  நம் திருநாட்டின் அவமானமாய் பேருந்துகளிலும், ரயில்களிலும் பெண்கள் ,ஏன் பலசமயம் ஆண்களே ஹோமோக்களாலும், செக்ஸ் வெறியர்கள், பெடோபைல்களாலும் பாதிக்கப்படுகின்றனர், நாம் பழகி வளர்ந்த கலாச்சாரம் காரணமாக உடலால் பட்ட தீங்கை வெளியே சொல்ல பயப்படுகிறோம். அவமானமாய் கருதி விட்டுவிடுகிறோம், சிறு குழந்தைகளுக்கு நன்கு விபரம் தெரியும் வரை பெடோபைல் தன்மையுள்ள ஆசாமிகளிடமிருந்து அவர்களை காப்பது பெற்றோரான உங்கள் கையில் தான் உள்ளது.

எனக்கு இதையும் இங்கே பகிர தோன்றியது , படுக்கை அறையில் தேவையா? கேமரா போன்கள்&கேமராக்கள்:-
க்கால இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்குமே எந்த அறிவுறைகளும் பிடிப்பதில்லை, காதலர்கள், கணவன்,மனைவி இருவருமே , அந்தரங்கத்தில் இருக்கும் போது, கேமராவில் படம், காணொளி எடுப்பதை,அது பெர்சனல் உபயோகத்துக்கு என்றாலும் தவிருங்கள், அது எதோ ஒரு ரூபத்தில் எடுப்பவரின் களவாணித்தனத்தாலோ,கவனக்குறைவாலோ, இணையத்தில் வெளி வந்துவிடும் அபாயம் நிறைய உண்டு, அப்புறம் ஆதம்பாக்கத்தில் படுக்கையறையில் வைத்துக்கொண்ட புனிதமான அந்தரங்கத்தை அமெரிக்காவில் ஒருவர் இணையத்தில் ஆவலாய் பிட்ஸா சாப்பிட்டுக்கொண்டே  பார்க்கும் அவலமும் நேரிடும்.மேலும் நிறைய காதலர்கள் காதலிக்கும் பெண்ணை ருசித்துவிட்டு,இந்த வீடியோவை சோவினிர் போல வைத்துக்கொள்கின்றனர்,எதிர்காலத்தில் அதை வைத்து மிரட்டி உறவை தொடரவோ,அவளின் மணவாழ்க்கைய குலைக்கவோ கூடும்.

மீபத்தில் ஒரு வலைத்தளத்தின் சுட்டி எங்கோ தென்பட,தேடிப்பிடித்து உள்ளே போனால், கல்லூரிப் பெண்களையும், குடும்பத்தலைவிகளையும், அன்னியோன்யமாய்  இருந்த தமபதியரையும்,  பீச்,பார்க்,ஹோட்டல்,நெட் கபே, ஏடிஎம் என லேபிள் வாரியாக பிரித்து வீடியோக்கள் எடுத்து ஆபாச தளத்தில் அடுக்கியிருக்கின்றனர் விஷமிகள்.அதில் ஆன்லைனில் சுமார் 55 பேர். ஃபாலோவர் 200 பேர்.  அதில் குறிப்பிட வேண்டிய விடயம், பெண்ணின் சம்மதத்துடனே எல்லா வீடியோவும் படமாக்கப்பட்டிருக்கிறது, ஒரு பெண்ணும் கேமரா முன்னர் ஆட்சேபனயே தெரிவிக்கவில்லை. ஆகவே மக்களே இனியேனும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்,

ன்னியரோ, கணவரோ, யார் அந்தரங்கத்தை வீடியோ எடுத்தாலும் உடனே மொபைல் போனையோ, கேமராவையோ பிடுங்கி அழியுங்கள்,கணவன், அல்லது காதலன் அதையும் மீறி மிகவும் கெஞ்சினால் செவிட்டில் அறையுங்கள். மெமெரி கார்டு உங்கள் க்ரெடிட் கார்டை விட பத்திரமாய் வைக்க வேண்டிய வஸ்து.

காபாவிகள், தான் எளிதாய் அனுபவித்ததை சைக்கோத்தனமாக , உலகுக்கே பங்கு போடும் செயலாக, கயவர்கள் நிறைய பேர், மாணவர் போலவும், எக்ஸிக்யூட்டிவ் போலவும், அப்பாவி காதலன், கணவன்  தோரணையிலும் உலவுகின்றனர்.

பெற்றோர் கூட பார்க்காத பெண்ணின் பூரணத்தை கண்ட கயவர்களையும் பார்க்க விட வேண்டாம். நான் அந்த தளத்தை புக்மார்க் செய்யவில்லை. [தயவுசெய்து உடனே இதுபோன்ற வீடியோக்களை நெட்டில் தேடி பார்க்க வேண்டாம்] எப்போதாவது அபூர்வமாக சட்டம்  கண்விழித்து பஜாருக்குள் ரெய்டு போய், 40 ரூபாய்க்கு விற்கப்படும் டிவிடிக்களை  கைப்பற்றும்,அப்போது உங்கள் போட்டோக்கள், வீடியோக்கள் பத்திரிக்கையில் வந்து மானம் போவதை விட முன்பே ஜாக்கிரதையாக இருக்கலாம்.அந்தரங்கம் மிக புனிதமானது.
 ==============000=============

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம். [ தட்ஸ் தமிழ் செய்தி:-]

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை பறக்கும் ரயில் நிலையத்தில் தனிமையில் இருந்த காதலர்களைச் சூழ்ந்த ஒரு கும்பல் காதலியை கற்பழிக்க முயற்சித்தது. அந்த முயற்சியில்,காதலர் படுகொலை செய்யப்பட்டார். காதலியிடமிருந்த பொருட்களைப் பறித்துக்கொண்டு அக்கும்பல் தப்பி ஓடி விட்டது.

சென்னை மக்களை அச்சத்தில் உறைய வைக்கும் வகையில் நடந்துள்ள இந்த கொடூரச் சம்பவம் குறித்த விவரம் ..

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு சலூன் கடை வைத்திருந்தார். இவருடைய அத்தை தனலட்சுமி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.

அத்தை வீட்டுக்கு அடிக்கடி வருவார் சரவணன். அப்போது அதேபகுதியில் வசிக்கும் நான்சி என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. நான்சி பி.சி.ஏ முடித்து விட்டு சர்ச் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

காதலியைப் பார்ப்பதற்காக அடிக்கடி சென்னை வருவார் சரவணன். அப்போது அவரும், நான்சியும், ஆளரவமில்லாத கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்திற்குப் போய் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.

அதேபோல நேற்றும் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. காதலர்கள் தனிமையில் இருப்பதைப் பார்த்த அவர்களிடம் நெருங்கி கலாட்டா செய்ய ஆரம்பித்தனர்.
அவர்களை சரவணன் தட்டிக் கேட்டுள்ளார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத அந்த கும்பல், நான்சியை கற்பழிக்க முயன்றனர். இதைத் தடுக்க முயன்றார் சரவணன். இதையடுத்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியது அக்கும்பல். இதில் சரவணன் அங்கேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்து நான்சி கதறினார். அதை கண்டுகொள்ளாத அக்கும்பல் நான்சி அணிந்திருந்த தங்க் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டது.

தகவல் போலீஸாருக்குக்கிடைத்ததும் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷகீல் அகமது உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

கொலையாளிகள் ரவுடிக்கும்பலாக இருக்கக் கூடும். அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார்ச ந்தேகிக்கின்றனர்.

சென்னையில் உள்ள பல்வேறு பறக்கும் ரயில் நிலையங்கள் ஏதோ பாழடைந்த மாளிகை போலத்தான் காணப்படுகிறது. பல ரயில் நிலையங்களில் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு சுத்தமாக இருப்பதில்லை.

அரசு அலுவலகங்கள், புதிய தலைமைச்செயலகம் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் பகுதியான சேப்பாக்கம் ரயில் நிலையத்திலேயே பல நேரங்களில் தனியாக போக முடியாது. அந்த அளவுக்கு ஆளரவமற்று இருக்கும்.

இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள் தனியாகவரும் பெண்கள் மற்றும் காதல் ஜோடிகளிடம் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபடும்நிலை ஏற்படுகிறது.

இதைத் தடுக்க ரயில்கள் வரும், போகும் நேரம் வரையிலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் போதிய அளவில் போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என பொதுமக்கள் கருதுகிறார்கள்.

=============0000=============
சிறு குறிப்பு:- மேற்கண்ட கொலை பாதக செயலை செய்த கொடியவர்கள், ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி பெயிலில்  தான் வெளியே வந்திருக்க வேண்டும், அவர்களுக்கு தான் அந்த தவ்ளத்தனம் இருக்கும். அவர்களை காவலர்கள் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் வழக்கு போட்டு,சொந்த காசில் டீசல் போட்டு, கோர்ட்டுக்கு மாஜிஸ்த்ரேட் முன்னர் கொண்டு போய் நிப்பாட்டுவதை விட, அவர்களின் விதைக்கொட்டையையாவது உங்கள் ஸ்ட்ராங்கான பூட்சுகாலால்  நசுக்கி கூழாக்கி விடுமாறு ,மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,மனித எருமை,சாரி மனித உரிமை பேசுவோருக்கு பயப்பட வேண்டாம்.அவன் அவன் வீட்டுக்கு இது போல நேர்ந்தால் தெரியும் சேதி!
=============0000=============

51 comments:

ஹாலிவுட் பாலா சொன்னது…

//,உயிரினும் மேலான கற்பையும் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்///

ஆணாதிக்க... பார்ப்பனீயம்...

ஒழிக.. ஒழிக...

குஷ்பு.. வாழ்க.. வாழ்க.

ஹாலிவுட் பாலா சொன்னது…

சொல்ல மறந்துட்டனே...

கார்த்திக்கேயனும்.. ஒழிக..ஒழிக..


(இதையும்.. எரர் வந்துடுச்சி-ன்னு சொல்லி பப்ளிஷ் பண்ணாம விட்டுடாதீங்க தல! :) :) )

ஹாலிவுட் பாலா சொன்னது…

///சமீபத்தில் ஒரு வலைத்தளத்தின் சுட்டி எங்கோ தென்பட,தேடிப்பிடித்து உள்ளே போனால்,கல்லூரி பெண்களும்,குடும்பத்தலைவிகளும்,அன்னியோன்யமாய் இருந்த தமபதியரும், பீச்,பார்க்,ஹோட்டல்,நெட் கபே, ஏடிஎம் என லேபிள் வாரியாக வீடியோக்கள் எடுத்து அடுக்கியிருக்கின்றனர் விஷமிகள்///

இது அபாண்டமான குற்றச்சாட்டு.

தைரியமிருந்தா உங்களால.. அது என்ன லிங்க்னுன்னு கொடுத்து ப்ரூஃப் பண்ண முடியுமா???

(ஓகே.. ஓகே... முறைக்கறீங்க. கும்மியடிச்சி மேட்டரை கெடுக்க விரும்பலை. மீ த எஸ்கேப்)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிவுட் பாலா
தல ஆஃபீஸ்ல போயுமா?கும்மி,சரியான நம்பரை மெயில் பண்ண சொன்னேனே?
அந்த லின்கு தானே உங்களுக்கு மெயில்ல அனுப்புறேன்,வீட்டுல பாத்துட்டு அடிவாங்கினா நிர்வாகம் பொறுப்பல்ல.[ரொம்ப கொடிய விஷயம் தல,தேடிக்கண்டுபிடிக்கும் தொலைவில் தான் எல்லாம் இருக்கு]
=====
எனக்கு,ஆணியம்,பெண்ணியம்,தோரியம்,ப்ளூட்டோனியம் எதுவும் தெரியாது தல.இது செம சீரியஸான மேட்டர்.நம்ம ஊர்ல டேசருக்கு லைசென்சு கேப்பாங்கன்னு நினைக்கிறேன்.மிளகு ஸ்பிரேயே இப்போதான் மானிய விலைல வழங்க ஆரம்பிச்சிருக்காங்க.[நம்ம் ஊர் பஜார்ல கள்ள மார்க்கெட்டில் கிடைக்காத பொருள் தான் உண்டா?]தல நான் தான் தெளிவா இந்த ”ப்ளாக்கர்” எரர்னு சொன்னேனே! அது என்னை குறிக்கும்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

லைசனஸ் கொடுக்கறது இருக்கட்டுங்க. இதை சாக்கா வச்சி... தெரியாம மேல படுறவங்களையும் சேர்த்தில்ல... பெண்ணியவாதிகள் பழிவாங்குவாங்க?

எனக்குத்தெரிஞ்சி பெண்ணியம் பேசறவங்களோட ஒரே கொள்கை.... Just Hate Males.

ஜெட்லி சொன்னது…

ஆமாங்க என் நண்பர்கள் கூட நிறைய சொல்வாங்க...
வழிப்பறி பயங்கரமா இருக்கும் என்று...
அதனால நான் போறதே இல்லை...

Sabarinathan Arthanari சொன்னது…

தேவையான கோபம் & தகவல்

நன்றி

வினோத்கெளதம் சொன்னது…

ரொம்ப கொடுமையான விஷயம் குரு..நினைக்கவே பயங்கரமா இருக்கு..பயமாவும் இருக்கு..

ஜோதிஜி சொன்னது…

குஷ்பு சங்க நிரந்தர பொதுச்செயலாளிரிடம் கேட்காமல் தன் கருத்தை கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தான்தோன்றித்தனமான கழக உடன்பிறப்பான பாலா வை கட்டம் கட்டப்படுகிறார்.

அறிவுத்தேடல் சொன்ன நல்ல விசயத்தை மீறி லிங்க கேட்ட (தல எனக்கும்) தையும் வன்மையாக கண்டிக்கப்படுகிறார்.

ஜோதிஜி சொன்னது…

கொண்டு போய் நிப்பாட்டுவதை விட, அவர்களின் விதைக்கொட்டையையாவது உங்கள் ஸ்ட்ராங்கான பூட்சுகாலால் கூழாக்கி விடுமாறு ,மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,

கார்த்திகேயன் வயறு புண்ணா பேச்சு. பாலாவின் தாக்கம். எப்படி? இப்படி-?

ஜோதிஜி சொன்னது…

ஆளரவமில்லாத கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்திற்குப் போய் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.

பிரச்சனையே இங்கிருந்து தான் ஆரம்பிக்குது கார்த்தி.
பய புள்ளைகள சூதனமா இருக்கங்ன்னா கேட்க மாட்டேன்னு இப்படி லவ்வ வளர்த்தா " கிடைக்காதான்னு" அலையுற கும்பலுக்கு வேறு வழி?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிவுட் பாலா,
தல,
நண்பர்கள் கிட்ட எதையுமே சொல்லாம மூடி வைக்காதீங்க,
மனம் என்னும் குக்கர் வெடிச்சிடபோவுது.கருந்தேள் கிட்டயும் பேசுங்க

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜெட்லி
வாங்க நண்பா,
உஷாரா இருங்க,சேப்பாக்கம் ஸ்டேஷனே, சமூக விரோதிகள் சீட்டு விளையாடும் இடமாமே?சூதானம் தேவை நண்பா.எனக்கேன்னவோ
சமூக விரோதிகள் அங்கே தான் பதுங்கி தங்குவாங்கன்னு டவுட்டா
இருக்கு.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@சபரிநாதன் அர்த்தநாரி
வாங்க நண்பரே,
சமுதாயத்தில் முன் ஜாக்கிரதை முத்தன்னாவாய் இல்லாட்டி மிகவும் கஷ்டம் போலும், உங்கள் ஜோதிட ஆராய்ச்சி திறமை மூலம்
யாருக்கெல்லாம்,எந்த தசாபுக்தி காரர்களுக்கெல்லாம்,இது போல சமூக விரோதிகளால் கண்டம் நேரக்கூடும், என ஆய்வுக்கட்டுரை செய்தால்,மகிழ்வேன்.
என் வேண்டுகோளும்.நிச்சயம் நம்பிக்கையுள்ளோர் பலன் பெறுவர்.

Software Engineer சொன்னது…

அன்பு பதிவரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டிருக்கிறேன். தயவு செய்து கோவிக்காமல் வருகை தருவும். பிடித்திருந்தால் கமெண்ட் போடவும். நன்றி!
http://kaniporikanavugal.blogspot.com/

Software Engineer சொன்னது…

அன்பு பதிவரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டிருக்கிறேன். தயவு செய்து கோவிக்காமல் வருகை தருவும். பிடித்திருந்தால் கமெண்ட் போடவும். நன்றி!
http://kaniporikanavugal.blogspot.com/

sriram சொன்னது…

மிக பயங்கரமாக உள்ளது.சென்னை முன் போல இல்லை. முடிந்த வரையில் இம்மாதிரி இடங்களை தவிர்க்க வேண்டும்.

-ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net

பின்னோக்கி சொன்னது…

சென்னையில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து பல வருடங்கள் ஆச்சு. சரி. அரசியல் வேண்டாம். எல்லாரும் சற்று பாதுகாப்புடன் நடக்க வேண்டும். பயமாக இருக்கிறது.

ஹார்டு கேண்டி படம் பார்த்து பயந்திருக்கிறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வினோத் கவுதம்
ஆமாம் குரு,ஒரு பக்கம் கூட்டமா சாயுது,
தென்சென்னை,அண்ட் வட சென்னை ரயில் நிலையங்களில் செம கூட்டம்
கிழக்கு சென்னையில், ரயில் நிலையங்களில் ஈஅடிக்கிறதாம்.கொடுமைல்ல.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜோதிஜி,
தலைவரே,பாலா குஷ்பு ரசிகராம்,குஷ்புக்கு கோயில் கட்டியதற்கு மிகப்பெரிய தலைமையாம்.ஹாஹாஹா.சும்மா,அவர் லின்க் எல்லாம் கேக்கவே இல்லை தலைவரே,உங்களுக்கும் கிடையாது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஸ்ரீராம்
உண்மைதான் நண்பரே,
நீங்களும் உங்க தளத்தில் உங்க கருத்துக்களை பதியலாமே?நன்றி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@சாஃப்ட்வேர் இஞ்சினியர்,
நண்பா உங்க மூனு இடுகைக்கும் ஓட்டும் கருத்தும் முன்னமே போட்டுட்டேன்,நிறைய எழுதுங்க

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பின்னோக்கி,
ஆமாம் நண்பரே,
ஜோதிஜி சொல்லுவது போல சின்னஞ்சிருசுகள்,கொட்டம் தாங்கலை,
மெய்மறந்து லவ் செய்கின்றனர்,பீச்சில் அப்படி இருப்பதை பார்த்து நிறைய
ரவுடிகள்,பையனை அடித்து,பெண்ணை முடித்து வீடியோவும் எடுத்து கொண்டு போலீசிடம் போனால் வீடியோவை விற்றுவிடுவோம் என மிரட்டுகின்றனராம்,எல்லாம் செவிவழி செய்திதான்,நினைக்கவே கொடுமைல்ல?.

காலேஜ் கட்டடித்து வந்த இளம்பெண்,10 எருமைகள்,நினைக்கும் போதே பதறுது.

மயில்ராவணன் சொன்னது…

ரொம்ப வருத்தமா இருக்கு இம்மாதிரி சம்பவங்களை பார்த்தால். நிற்க.சீக்கிரமே எங்கள் தங்கம்,
என்கவுண்டர் சிங்கம் இந்தியா வந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல முடிவா எடுப்பாரென்பது என் போன்ற இந்தியர்களின் அவா.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மயில் ராவணன்,
என்னையா ஆஃபிசர்?புல்லரிக்கிது.வுட்டா டுப்பாக்கி குடுத்து போட விட்ருவீர் போலருக்கே?

//என் போன்ற இந்தியர்களின் அவா.//

அப்போ நாங்க எல்லாம் என்ன செவ்விந்தியரா?ஓவர் குசும்புய்யா உமக்கு.
அதுஎன்னய்யா? என்கவுண்டர் சிங்கம்,எச்சிக்கலை சிங்கம்?ஜாதிய தானே இழுக்கற?ஜாக்ரத!!!

கண்ணா.. சொன்னது…

//தைரியமிருந்தா உங்களால.. அது என்ன லிங்க்னுன்னு கொடுத்து ப்ரூஃப் பண்ண முடியுமா???
//

அதானே...எதையும் ஆதாரம் இல்லாமல் நாங்க நம்ப மாட்டோம்.. முதல்ல ஆதாரத்தை காட்டுங்க.... அப்புறமா நாங்க சொம்ப தூக்கிட்டு வாறோம். :)

கண்ணா.. சொன்னது…

btw,

இது நல்ல முன்னெச்சரிக்கை பதிவு தல... அவசியமானதும் கூட

:)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கண்ணா,
லின்கே தான் வோனுமா?
கேபி சுந்தராம்பாள் மேடத்தின் ஔவையார் லின்க் குடுப்பேன் பரவால்லையா?:)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நானும் வந்துட்டேன் . . என்ன கொஞ்சம் லேட்டு.. அது பரவாயில்ல. .

இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ஒண்ணு எனக்கே நேர்ந்துருக்கு.. நானு சென்னைல இருந்தப்ப, நைட்டு பீச்சுக்குத் தனியா போவேன்.. அப்ப ஒருதடவ, நைட்டு பத்து இருக்கும்.. தண்னி பக்கத்துல நின்னுக்கினு இருந்தப்போ, தூரத்துல இருந்து ஒருத்தன் ஓடி வந்து, என்கிட்ட நின்னு, “சார்.. ப்ளீஸ்.. தொட்டு மட்டும் பார்த்துக்குறேன் சார்” அப்புடீன்னு கேட்டான்.. இன்னொருத்தனும் சைட்ல இருந்து வந்து, என்னையே குறுகுறுன்னு பார்த்தான்.. உடு ஜூட் !!! ;-)

நீங்க எழுதிருக்குறது கொடும .. நாம தான் நம்மள பாதுகாத்துக்கணும்.. இந்தக் கருத்த சொல்லிட்டுப் போற நேரத்துல..

//ஆணாதிக்க... பார்ப்பனீயம்...

ஒழிக.. ஒழிக...

குஷ்பு.. வாழ்க.. வாழ்க.//

பாலாவோட இந்தக் கருத்துக்களை வழிமொழிஞ்சி கிளம்பறேன்.. ;-)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்-ராஜேஷ்
வாங்க நண்பா,
உங்களுக்கும் இது நேர்ந்திருக்கா?பேருந்து,பொது இடம் என ஒன்னையும் . விடமாட்டேங்கிறாய்களே?!!கொடுமக்காரனுங்க.
நல்லவேளை பூமாதேவி-சீதா தேவி குஷ்பு வாழ்கன்னு சொல்லாம விட்டிங்களே.:))

ஜெய் சொன்னது…

ஆளில்லாத இடம் மட்டும் இல்லைங்க... மவுண்ட் ரோட்ல பட்டப்பகல்ல போற பஸ்ல பொண்ணுங்களை தொந்தரவு பண்ணறாங்க... ரவுடிங்க எல்லாம் இல்லைங்க... காலேஜ் பசங்களே போதும்... கும்பலா செட்டு சேர்ந்தாலே வெறிபிடிச்சுதான் அலையறாங்க...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஜெய்,
நெசமாத் தான் சொல்லுறீங்களா?
நான் சமீபத்தில் காலேஜ் பக்கமே போனதில்லை,இந்தளவு இருக்கா?இப்போல்லாம் பசங்க பல்சர் இல்லாமல் காலேஜ் போறதில்லைன்னு நினைச்சேன்.இப்புடியும் இருக்கா?ஆனா எல்லாம் காலேஜும் உள்ளேயும் வெளியேயும் ரேக்கிங் பண்ணகூடாதுன்னு அறிவிச்சிருக்கே?

ILLUMINATI சொன்னது…

//எனக்குத்தெரிஞ்சி பெண்ணியம் பேசறவங்களோட ஒரே கொள்கை.... Just Hate Males.//

அப்பிடியே வழிமொழிகிறேன்!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இல்யுமினாட்டி
நண்பா,நான் நடுநிலைவாதிப்பா.
பெண்கள் ,சிரிச்சாலும் கோவப்பட்டாலும் ரசிப்பேன்.
பெண்களால் எல்லா ஆண்களையும் வெறுக்கமுடியாதுன்னு நினைக்கிறேன்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

//பெண்கள் ,சிரிச்சாலும் கோவப்பட்டாலும் ரசிப்பேன்.///

இதை யாருனா... கார்த்திக்கேயன் வீட்டுக்கு பார்சல் பண்ணுங்கப்பா!!

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//நண்பா,நான் நடுநிலைவாதிப்பா.
பெண்கள் ,சிரிச்சாலும் கோவப்பட்டாலும் ரசிப்பேன்.
பெண்களால் எல்லா ஆண்களையும் வெறுக்கமுடியாதுன்னு நினைக்கிறேன்//

அடடா... இது அப்புடியே என்னோட கருத்தும் கூட.. என்னால பெண்களை வெறுக்கவே முடியல நண்பா . . அத்தனை பெண்களையும் எனக்குப் புடிச்சிருக்கு... ;-)

பை த பை, எங்க வூட்டம்மாவுக்கு இது தெரியுமே ;-)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள் நண்பா.
அப்புடியா சங்கதி,இதப்படிங்க முதல்ல..

சரக்கு ஊத்தி தரும் மனைவியை நம்பலாமா?
http://narumugai.com/?p=4432

ViNo சொன்னது…

//மனித எருமை,சாரி மனித உரிமை பேசுவோருக்கு பயப்பட வேண்டாம்.அவன் அவன் வீட்டுக்கு இது போல நேர்ந்தால் தெரியும் சேதி!

nalla irukku :)

ஹாலிவுட் பாலா சொன்னது…

//சரக்கு ஊத்தி தரும் மனைவியை நம்பலாமா?//

ஹி.. ஹி.. ஹி.. எங்க வூட்டுல... அந்தப் பிரச்சனையில்லைங்க. யாரு வேணும்னாலும் ஊத்தி குடிச்சிடுவோம்!! ;)

ஹாலிவுட் பாலா சொன்னது…

என்னது கார்த்திக்கேயன் ப்லாகில் பின்னூட்டம் திறந்திருக்கா......????!!!

ஐயோ... ஐயோ.. ஐயோ.. எல்லாரும் ஓடியாங்க.. கும்முவோம்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

பறக்கும் ரயிலுக்கு ரக்கையிருக்கா தல???

(இப்படி கும்மினா.. திரும்ப பொட்டியை மூடிடுவீங்க. ஸோ மீ ஸ்டாபிங் :) )

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வினோ,
நலமா?நன்றி நண்பா :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிவுட் பாலா
தல,நம்ம கருந்தேள் பிளாக்கை பார்த்துட்டு தான் எடுத்து விட்டேன்,என்ன தான் எழுதறாங்களோ எழுதட்டும்,பொறுமையும் வளர்த்த்துக்கலாமில்லை?
தல நீங்க எவ்ளோ வேணுமோ கும்முங்க தல?யார் கேப்பா?உங்க பேச்ச கேட்காம சிங்கம் பார்த்தேன்,டிவிடியை உடைச்சி போட்டேன்.:)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//சரக்கு ஊத்தி தரும் மனைவியை நம்பலாமா?//

ஹி.. ஹி.. ஹி.. எங்க வூட்டுல... அந்தப் பிரச்சனையில்லைங்க. யாரு வேணும்னாலும் ஊத்தி குடிச்சிடுவோம்!! ;)

அடடா இதுதான் தல,பொண்ணு எடுத்தா சேட்டன்மார் வீட்ல பொண்ணெடுக்கனும்னு சொல்றது,லக்கி கைஸ்.:)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

அய்யா... நானும் வந்துட்டேன்.. நானும் வந்துட்டேன் கும்மிக்கி.. (ஆஹா... ஊரெல்லாம் அடங்குனபொறவு நான் மட்டும் வந்துருக்கனே.. இதுதானாய்யா என்னோட டக்கு ???) . . .

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//சரக்கு ஊத்தி தரும் மனைவியை நம்பலாமா?//

//ஹி.. ஹி.. ஹி.. எங்க வூட்டுல... அந்தப் பிரச்சனையில்லைங்க. யாரு வேணும்னாலும் ஊத்தி குடிச்சிடுவோம்!! ;)//

ஆஹா... இத.. இத ... இந்த எடத்தைப் புடிக்கத்தான் நானு முட்டி மோதிக்கினு கீறேன்.. சீக்கிரமே நானும் இப்புடிப் பின்னூட்டமிடுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. ;-)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//பறக்கும் ரயிலுக்கு ரக்கையிருக்கா தல???//

அதே டவுட்டுதான் எனக்கும் !! ;-)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

என்னது ரயிலுக்கு ரக்கையா,அரசு ரயிலுக்கு வீல் இருந்தா போதாதா?

@அடப்பாவி புரட்சிக்காரைங்களா!!!!!!!!
இங்க தனிமையில ஒருத்தன் தவியா தவிக்கிறேன்,என்னைய மாத்தி மாத்தி வெறுப்பேட்த்துறீங்க?கவனிச்சிக்கிறேன்
:(((((((((((((((
ஆஃபீஸ்கு போய்ட்டு இருக்கேன்.பூந்து விளையாடுங்க

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//பூந்து விளையாடுங்க//

இந்த வார்த்தையில் இருக்கும் கடுமையான அரசியல் தெறிக்கும் கருத்தைக் கண்டித்து, 18+ படங்கள் பார்க்கும் போராட்டத்தை இப்பொழுதே தொடங்குவேன் என்று அறிவிக்கிறேன் ;-)

நிலா முகிலன் சொன்னது…

நச் பதிவு. இன்றைய காலக்கட்டத்தில் தேவையான பதிவும் கூட.

Saravanan சொன்னது…

வணக்கம்.
"இது விளம்பரத்திற்காக அல்ல".

இந்தியாவில், பெப்பர் ஸ்பிரே தேவை படுபவர்கள் தங்கள் முழு முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.

விலை ரூபாய் 250 மட்டும்.

ம.சரவணன் - திருப்பூர்
saravanan.m.tirupur@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)