நீங்கள் ஏசி அறையில் படுப்பவரா?!!!

ண்பர்களே!!!
ன்று நம் வீடுகளில் காற்றோட்டம், வெளிச்சம்,சுத்தமான தண்ணீர் இருக்கிறதோ? இல்லையோ? ஏர்கண்டிஷனர் இருக்கும், இன்றைய குழந்தைகள் ஏசி அறைகளிலேயே பிறக்கின்றன, ஏசிக்காற்றுக்கு பழகியும் விடுகின்றன, பெரியவர்களும் தான்,அரைமணிநேரம் மின்வெட்டுக்கே தாக்கு பிடிக்கமுடியவில்லை,இன்வெர்டரும் வைத்திருக்கிறோம்.  அதை தவறு என்றே சொல்லவில்லை.அதற்கு உண்டான பாதுகாப்பு, பராமரிப்புகளை பேணிவருகிறோமா?என்பதே கேள்வி.
சென்ற வருடம் ஒரு அறையை ஏர்கண்டிஷன் செய்தவர்கள், பக்கத்து படுக்கை அறைக்கும் ஏசி போடுவோம், ஹாலுக்கும் ஏசி போடுவோம் என்று, 3பேஸ் கனக்‌ஷன் நிறைய செலவு செய்து வாங்கியாவது இரண்டாவது ஏசியையும் பொருத்திவிடுகின்றோம்,
டுத்தமுறை உங்கள் ஏசியை ஆன் செய்யும் முன்னர், உங்கள் ஏர்கண்டிஷனர் கீழ்கண்ட ஐந்து பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதா? என்று சோதித்துப்பார்க்கவும், அப்படி இல்லை என்றால் தயவுசெய்து சிறிதும் தயங்காமல், கீழ்கண்ட  பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  உங்கள் ஏசியில் துரிதகதியில் செய்து விடவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இப்படி ஒரு அபாயம் அடங்கியிருப்பதை நினைக்கையிலேயே  நெஞ்சு படபடக்கிறது.
=====0000======
நண்பர்களே எதோ? ஆர்டிஎக்ஸ் குண்டு வெடித்தது போல் இருக்கும் அறையை பாருங்கள்
ஏ.ஸி. வெடிக்கும்? [ஜூவி செய்தி]

'வரதாபாய்...' என ஒரு காலத்தில் மும்பையை அதிரவைத்த வரதராஜ முதலியாரின் மகள் மகாலட்சுமி, தன் கணவர் ஹேமந்த் சந்தருடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். அவர் களது வீட்டில் இருந்த ஏ.ஸி. வெடித்து எரிய... இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனால், ஏர்கண்டிஷன் உபயோகப்படுத்தும் மக்கள் மத்தியில் பீதி!

விண்டோ ஏ.ஸி-யில் பிரச்னை ஏற்பட்டுத்தான் இந்த சம்பவம் நடந்தது என்கிறார்கள். இது குறித்து, மயிலாப்பூர் உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜிடம் கேட்டபோது, 'மின்கசிவு காரணமாகத்தான் விபத்து என்று சோதனையில் தெரிந்தது. ஃபியூஸ் போகக் கூடாது என்பதற்காக ஃபியூஸ் கேரியரில் 'திக்' கம்பி போட்டதால், ஒயர் ஹீட் ஆகி எரிந்து, ஏ.ஸி-யில் விபத்து நடந்து இருக்கிறது. அடுத்து, பிரேத பரிசோதனை முடிவுக்காகக் காத்து இருக்கி றோம்!'' என்றார்.

ஏ.ஸி. வெடிக்குமா?! கலீல் என்ற அனுபவம் வாய்ந்த ஏ.ஸி. மெக்கானிக்கிடம் விசாரித்தபோது, நமக்குத் தெரியாத பல சங்கதிகளை அடுக்கினார். 
1.'வீடு கட்டி ஒயரிங் செய்யும்போது ஏ.ஸி-க்கு எனத் தனியாக ஒயர் கனெக்ஷன் போடவேண்டும். இதற்கு, 720 ஸ்கொயர் எம்.எம். ஒயர் தனியாக உள்ளது. ஆனால், பெரும்பாலானோர் எல்லாவற்றுக்கும் போடுவதுபோல, 320 ஸ்கொயர் எம்.எம்-மையே போடுவார்கள். இது லோடு தாங்காது.

2.ஏ.ஸி-க்கு என்று தனி ஸ்விட்ச் பாக்ஸும் உண்டு. டிப்பர் ஸ்விட்ச் என்போம். அளவுக்கு அதிகமான மின்சாரம் செல்லும்போது தானாக அது ஆஃப் ஆகிவிடும். இப்போது உள்ள மாடல்களில், 20 ஆம்பியருக்கு மேல் சென்றாலே ஆஃப் ஆகிவிடும். ஆனால், பழைய மாடலில் 30 ஆம்பியருக்கு மேல் சென்றாலும், ஆஃப் ஆகாது. இப்படி அளவு அதிகமாகும்போது கேபிள் சூடாகி எரிய ஆரம்பித்துவிடும்.

3.ஏ.ஸி-யை சர்வீஸ் செய்வது தான் மிக முக்கியம். சிலர் சர்வீஸ் செய்வதே கிடையாது. சிலர் ஆண்டுக்கு ஒரு முறை செய்வார்கள். ஆனால், மூன்று மாதத்துக்கு ஒரு முறை சர்வீஸ் தேவை. அப்படி செய்தால், இப்படி தீப்பிடிப்பது, வெடிப்பதுபோன்ற பிரச்னைகள் வராது. 

4.ஏ.ஸி-யை சர்வீஸ் செய்யும்போது, தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களான, ஏ.ஸி-யில் உள்ள ஃபேன் மோட்டார், கம்ப்ரஸர் மோட்டர்களை சரிபார்ப்போம். ஒயர் கனெக்ஷன் லூஸாக இருந்தாலும், சூடாகி எரியலாம். ஹீட் ஆகி எரியும் வாய்ப்பு உள்ள இடங்களை சர்வீஸின்போது செக் செய்வோம்!'' என்றவர், தொடர்ந்து...

4.''ஏ.ஸி-யோடு இலவச ஸ்டெபிலைசர் தருகிறார்கள் என்று அதை வாங்கி அப்படியே பொருத்திவிடக் கூடாது. அது சீன தயாரிப்பாக இருக்கக்கூடும். அதில் உள்ளே அலுமினியத்தால் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், தாமிரத்தில் இருக்க வேண்டும். எனவே, நல்ல தரமான ஸ்டெபிலைசர் பயன்படுத்துவதும் முக்கியம். 

5.அடுத்தது, டிரான்ஸ்ஃபார்மர். நகரம் வளர்ச்சி அடைவதற்கு முன்பு வைக்கப்பட்ட பழங்கால டிரான்ஸ்ஃபார்மர்தான் ,அதன் ஆயுள் குறைந்தது 50வருடமாவது இருக்கும், அதை மின்வாரியங்கள் மாற்றுவதோ ,புணரமைப்பதோ இல்லை. முன்பு ஒரு ஊரில் 1000 குடும்பங்கள் இருந்த  குடியிருப்பு பகுதியில் ,இன்று 10,000 குடும்பங்கள். வீடுகள், ஃபிளாட்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் பழைய டிரான்ஸ்ஃபார்மர்களால் வோல்டேஜ் பிரச்னை ஏற்படுகிறது. அந்தந்தப் பகுதி மக்கள், மின் வாரியத்துக்குக் கடிதம் எழுதி,  டிரான்ஸ்ஃபார்மரை எப்பாடுபட்டாவது மாற்ற வேண்டும்...'' என்று முடித்தார்.

இனி ஒரு ஏ.ஸி. வெடிக்க வேண்டாமே!
- பா.பிரவீன்குமார் படம்: நன்றி ஜூனியர் விகடன்.

26 comments:

DrPKandaswamyPhD சொன்னது…

தகவல்களுக்கு மிக்க நன்றி.

ஸாதிகா சொன்னது…

அவசியமான இடுகை.நன்றி.

பெயரில்லா சொன்னது…

சார்,எங்க வீட்ல கம்மனாட்டி பசங்க மட்டமான வயரை தான் போட்டிருக்கானுங்க,ட்ரிப் ஆயிக்கிட்டே இருந்துது,இது பார்த்துவிட்டு,செக் பண்ணேன்,இதை ஏசி வித்த கடைகாரங்களே வந்து 3000வாங்கிகிட்டு செஞ்சு குடுத்தானுங்க,இதே அலுமினிய காயில் ஸ்டெப்லைசர் தான் ஃப்ரியா குடுத்துருப்பாங்க போல, அதையும் பார்க்கனும்.திருட்டு நாய்ங்க.இடுகைக்கு நன்றி

kannan. சொன்னது…

அண்ணாச்சி அது 720 ச.செமி இல்லை. 7 AWG. kannan from Abu dhabi.

கொழந்த சொன்னது…

எங்கவீட்டில இந்த பிரச்சனையே இல்ல..
அப்படியே Water Heaterகளையும் செக் செஞ்சா நல்லது..

எஸ்.கே சொன்னது…

உபயோகமான பதிவு. ஒரு சந்தேகம் ஏசி அதிகம் பேர் பயன்படுத்துவதால்தான் அடிக்கடி முக்கியமாக இரவுகளில் மின்தடை/மின் பற்றாக்குறை ஏற்படுவதாக கூறுகின்றனர். அது உண்மையா?

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

ஏழை அனானி said...

சார்... நானெல்லாம் தூசித்தரையில படுக்கிறவன்... என்னை உசுப்பேத்தி உட்டுட்டீங்களே.. இப்ப பாருங்க.. ஏசி வாங்காம உடுறதில்லை :-) வாங்கிட்டு, அப்புறம் டிரிப் ஆகுதான்னு சொல்றேன்... :-)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

ஆமாம்... ஏசிக்கினே அறைல படுத்தா பிரஷர் வந்துராது? - லஞ்ச் சாப்பிட்டுவிட்டு வந்து மொக்கை போடும் சங்கம்

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி கார்த்தி :)

RNS சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@டாக்டர் கந்தஸ்வாமி
நன்றி ஐயா

@ஸாதிகா
நன்றி

@பெயரில்லா
ஐயோ,சீக்கிரமாக சரி செய்யவும்

@கண்ணன்
நண்பரே நாம் பேசியிருக்கிறோமா?
நலம் தானே?நீங்கள் சொல்வது அமெரிக்கன் வையர் கேஜ் ஸ்டாண்டர்ட்ஸ்,இதில்
தரப்பட்டுள்ளது இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸின் படி அமைந்த லேமேன் லாங்வேஜ் யூனிட்.அதுவும் ஜூவியில் வந்தது,ஆகவே அப்படியே விட்டுவிடுகிறேன்.தகவலுக்கு மிக்க நன்றி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@எஸ்.கே
நன்றி.
ஆமாம் நண்பா,ஏர்கண்டிஷனர்கள் கடந்த 4வருடங்களில் மிகவும் பெருகிவிட்டது. வெப்பமும் தாறுமாறாக ஏறியே விட்டது.,கரண்ட் கட்டாகி சில நிமிடம் உற்று பாருங்கள்,உயர் அழுத்தம் வரும்.ஏன்?அப்போது ஏசி கடாஃப்ல் இருந்து ஆன் ஆக சிறிது நேரமெடுக்கும்,அதன் பின்னர் ஃப்லக்சுவேஷன் தான்,அதுவும் புறநகர் பகுதிகளில் சுத்தம்,ஏசி போட்டிருந்தாலும் கூலிங் இருக்காது,அல்லது 16 அல்லது 18 புள்ளியில் வைக்கவேண்டியிருக்கும்,கொடுமை.
====
இதற்கு ஒரே வழி:-
அறையின் உயரத்தை இப்போது 3-00மீ என்றால்,4மீ வைத்து கட்டவேண்டும்.
சன்னல்களை நிறைய உபயோக்கிக்கவேண்டும்.சன்னல்களை க்ராஸ் வெண்டிலேஷன் படி , top and bottom2 ஷட்டர்கள் அகலம் பெரிதாக வடிவமைத்து.கொசுவலையும் அடித்து,பாதுகாப்பு க்ரில்கள் & வெல்டுமெஷ்கள் நெருக்கமாக வைத்து பயன்படுத்தவேண்டும்.அப்போது நிச்சயம் ஏசி தேவையிருக்காது.தவிர கூரையில் தெர்மல் இன்சுலேஷன் பெயிண்ட் அடித்தால்.உள்ளே வெப்பம் மட்டுப்படும்.கூரைக்கு மேல் கட்டாயம் வெதரிங்கோர்ஸ் போட வேண்டும்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்
நண்பா,
நானும் தூசித்தரையில் படுப்பவனே
எனக்கு முழங்கையை தலைக்கு கொடுத்து,துண்டைவிரித்தோ அதுகூட விரிக்காமலோ படுத்தாலும் தூக்கம் வந்துவிடும்,கொசுமட்டும் ஆகாது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

கருந்தேள்
நண்பா,
ஏசிக்கினே அறையில் படுத்தா
ஆகா இன்னா கண்டுபிடிப்பு,நான் ஒண்னு சொல்றேன்,பூசிக்கினே அறையில் படுத்தா பிபி குறையும்,அட சந்தனத்தை,கூலாயிருக்கும்ல அதனால்,டிஃபன் சாப்பிடும் முன் பின்னூட்டத்துக்கு பதில் போடுவோர் சங்கம்.ஷார்ஜா கிளை

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@நாஞ்சில் நன்றி நண்பா

@ஆர் என் எஸ்
நன்றி நண்பரே

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//கொழந்த சொன்னது…

எங்கவீட்டில இந்த பிரச்சனையே இல்ல..
அப்படியே Water Heaterகளையும் செக் செஞ்சா நல்லது..//

@கொழந்த
என்னது ஒரு முன்னாள் அரசு ஊழியர் வீட்டுல ஏசி இல்லையா?அடடே!!!என்ன கொடுமை சார்?!!!

நண்பரே இதை கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது,இருப்பதை வைத்து நிறைவாய் வாழும் மனிதர்களும் நம்மருகே தான் உள்ளனர்,மிக்க நன்றி,வாட்டர் ஹீட்டர் வெடித்தவுடன் தான் நமக்கு அதை சோதிக்கவேண்டும் என்று தோன்றும்.நம் ஆட்களில் நிறைய பேர் கார் வாங்கியபோது சீட்டில் இருக்கும் பாலிதீன் கவரையே பிரிக்க மாட்டேன் என்கின்றனர்,ரீசேல் வேல்யூ போய்விடுமாம்,கருமம்,கருமம்,இப்படியே உபயோகித்து சூடாகி என் நண்பன் ஒருவனுக்கு முதுகிலும்,புட்டத்திலும் கட்டி வந்தது. வெளி தோற்றம் நன்றாய் இருந்தால் ஒரு பொருள் நன்றாய் இயங்குகிறது என்று தன்நிறைவு கொள்கிறோம். என்பதற்கு சொல்லவந்தேன்.

கொழந்த சொன்னது…

எங்க வீட்டை சுற்றியுள்ளவர்கள் எல்லோரிடத்திலும் கார் இருக்கு. எங்ககிட்ட 10 வருஷத்திற்கு முன்னாடி உள்ள CD100 மட்டுமே..இன்னும் பல இல்லைகள். ஆனா ரொம்ப நேர்மையா சம்பாரிச்ச எல்லா காசும் ஹாஸ்பிட்டளுக்கே போயிருச்சு....சொல்லனும்னு தோணிச்சு...உங்க புரிதலுக்கு நன்றி

கொழந்த சொன்னது…

// நிறைய பேர் கார் வாங்கியபோது சீட்டில் இருக்கும் பாலிதீன் கவரையே பிரிக்க மாட்டேன் என்கின்றனர்//
இது நம்ம நாட்டின் பிறவிக் குணம்.ஒரு விளம்பரம் பார்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன். Remote,கார்,ஸ்கேல்,மெத்தை,சோபா இது மாதிரி எல்லாம் நம்ம ஊருல பாலிதீன் கவரோட இருப்பதை காட்டி - Avoid AIDS use Condom என்ற ரீதில முடிப்பாங்க(Mtvனு நெனைக்கிறேன்)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கொழந்த
மிக்க மகிழ்ச்சி
உங்கப்பாவின் பெஸ்ட் ப்ராடக்ட் நீங்கள்.
எல்லா அரசு ஊழியரும் பிள்ளைகளையும் அரசுப்பணியில் சேர்த்துவிடவேண்டும் என்று குறியாய் இருப்பார்கள்.
===
எனக்கு தெரிந்து ஒரு ஆர்டிஓ தினமும் 30ஆயிரம் சம்பாதிக்கிறார்.அந்த 15 அடி ரோட்டில்அவர் பஜீரொ வைத்திருக்கிறார்.இப்போது தன் வீட்டுக்கு 20லட்சம் செலவில் சோலார் சிஸ்டம் ப்ரொடக்‌ஷன் யூனிட் போட்டுவிட்டாராம்.நாட்டுக்கு ஒரு நல்லவர்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

கொழந்த சூப்பர் விளம்பரமாயிருக்கே,அப்படியாவது உறைச்சா சரி,சீட்டில் கவரை பிரிக்காதவர்களை நான் கஞ்சமகாபிரபு லிஸ்டில் சேர்த்துவிட்டேன்.உங்களுக்கும் அது போல ஆசாமிகள் தெரிந்தால் நினைவுபடுத்தி சொல்லுங்கள்.

கொழந்த சொன்னது…

இருங்க..விளம்பரத்த தேடிகிட்டு இருக்கேன்...கிடச்ச உடனே உங்களுக்கு லிங்க் அனுப்புறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மிகவும் உபயோகமான தகவல்களைத் தந்திருக்கிறீர்கள் நன்றி!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கொழந்த
நன்றி

@பன்னிகுட்டி ராமசாமி
நண்பரே,பேரை சொல்லவே சங்கடமா இருக்கு.:)நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///கீதப்ப்ரியன்|Geethappriyan| கூறியது...
@கொழந்த
நன்றி

@பன்னிகுட்டி ராமசாமி
நண்பரே,பேரை சொல்லவே சங்கடமா இருக்கு.:)நன்றி///


என்ன சார் இதுக்குப் போயி, நாங்கள்லாம் ஜாலியான பசங்க! ஆமா எங்கே சார் ஓட்டு போடறது ஒன்னும் தட்டுப்படல?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நண்பா அப்படியா அப்போ ஜமாய்க்கலாம்,ஓட்டுப்பட்டை இருந்தால் கவனம் அதிலேயே போவதை தடுக்கமுடியலை அதுதான் எடுத்துவிட்டேன்.நன்றி நண்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நேரமிருந்தா நம்ம கடைப்பக்கம் ஒரு எட்டு வந்துட்டுப்போங்க சார்!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)