ஸ்விம்மிங் பூல்[2003][18+][Swimming Pool][இங்கிலாந்து]

ண்பர்களே!!!
ஸ்விம்மிங் பூல் என்னும்  படம் பார்த்தேன்.   மிகவும் அழகான ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளது.  படம் முடிந்தவுடன் இயக்குனர் ஃப்ரான்காய்ஸ் ஓசோன்,  இயக்கிய படங்கள் எல்லாவற்றையுமே தரவிறக்கிவிட்டேன்  ,  ஒவ்வொன்றுமே சர்ச்சைக்குரியவை, நம் வீட்டாரோடு பார்க்கமுடியாதவை. வாழ்வை அணு அணுவாக ரசிக்கும்,ருசிக்கும் மேல்தட்டு மக்களை சித்தரிக்கும் படங்களே இவர் அதிகம் இயங்கும்  தளமாக இருக்கிறது.

டமெங்கும் ஒளிவுமறைவில்லா நிர்வாணம்.  இவர் தேர்ந்தெடுக்கும் இளம் பெண்கள் பாத்திரத்தின் வயது அதிகம்போனால் 18 இருக்கலாம். தவிர  ஒரு அழகும் அறிவுடனும் சேர்ந்த முதிர்ந்த பெண்ணின் பாத்திரமும் வைத்து கதையை சித்தரிக்கிறார். பெண்களின் மார்பகங்களை இவ்வளவு அழகாக காட்டி நான் பார்த்ததில்லை.  இந்த இயக்குனர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.   இருந்தும்  இவரின் பெண்களின் மீதான  அபார ரசனை ஒவ்வொரு ஃப்ரேமிலும் மிளிர்கிறது.   நோ ஹைடிங். ஸ்ட்ரெய்ட்ஃபார்வர்ட்னெஸ் தான் முழுதும். இனி இவரின் ஒவ்வொரு படமாய் பார்க்கவேண்டும். சாரு எழுதி வியக்கும் அழகிய ஃப்ரான்ஸை அப்படியே கண்முன்  நிறுத்திருக்கிறார் இயக்குனர். 

francois-ozon
டத்தில் அங்கே இலக்கியவாதிகள் இயங்கும் முறையை அப்படியே புடம் போட்டும் காட்டியிருக்கிறார். பார்த்து முடித்ததும் ஒன்று விளங்கியது, அமெரிக்க, ஆங்கில, ஐரோப்பிய கலைஞர்களுக்கு மலம் கழிப்பதற்கு கூட அபார மூட் தேவைப்படுகின்றது. கால் அங்குல மயிரை பிடுங்குவதற்கு கூட, [முடி வெட்டுவதைச் சொன்னேன் சார்] ஆற அமர  விஞ்ஞானி ரேஞ்சுக்கு யோசிக்கின்றனர். பில்ட் அப் கொடுக்கின்றனர். முன்கூட்டியே தீர்மானித்து தான் செய்கின்றனர். ஆனால்  நம் கலைஞர்கள் சுவிட்ச் போட்டதும் கதை எழுதுகிறோம், பதிவெழுதுகிறோம்,பத்தி எழுதுகிறோம், பாட்டெழுதுகிறோம், பாட்டு பாடுகிறோம், இசையமைக்கிறோம், படத்துக்கு சீன் சொல்கிறோம். டிசைன் செய்கிறோம். மென்பொருளுக்கு கோட் எழுதுகிறோம். ஆமாம் சாமி சொல்கிறோம். ஹிஹி. இது பரம்பரை ஜீன்வழி வருவது, இதை அவ்வளவு எளிதாய் மாற்றமுடியாது. இவ்வளவு பில்டப் கொடுப்பதால் கால் அங்குல மயிரை பிடுங்கியவர்கள் வி ஆர் ஃப்ரம் சிவிலைஸ்ட் பார்ட் ஆஃப் த வேர்ல்ட் என்கின்றனர். ஸ்ஸ்ஸ் முடியலை. எனவே ஆங்கில ஐரோப்பிய இலக்கியவாதிகளுக்கு கொடுத்து வைத்த மகராசன்கள் என்னும் சொல்லே மிகவும் சரியாயிருக்கும்!!!.  

யக்குனர் இதில் முடிவில் நம்மை மிகத் தெளிவாக குழப்புகிறார், இருந்தாலும் பிடிக்கிறது, கலைப்பட விரும்பிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம். ஃப்ரான்ஸை ஏன்? கேளிக்கைகளுக்கும் வாழ்வின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ருசித்து அனுபவிப்பதற்க்கும் ஏற்ற இடம் என்கின்றனர். என ஒருவர் படத்தை பார்த்து விளங்கிக் கொள்ளலாம். இது போல மிக அருமையான படங்களை மிகக்குறைந்த செலவில்  எடுக்கமுடியும் என நினைக்கவே பெருமை தான். படத்தில் எந்த ஒரு ஒளிவுமறைவுமின்றி மேல்தட்டு படைப்பாளிகளின் வாழ்கைமுறையை மிக அழகாக விமர்சித்திருக்கிறார்,  கண்ணாடி வீட்டினுள் இருந்து கல் எறிவதைப்போன்ற இவரின் படைப்புகள், ஒளிவு மறைவில்லாத கூடாக் காமத்தை அளவின்றி கொண்டிருக்கின்றன. ஃப்ரான்ஸு நாட்டு கலைசினிமாவில் இவரது படைப்புகள் முக்கிய இடத்தையும் வகிக்கின்றன.
===========0000===========
படத்தின் கதை:-

ங்கிலாந்தில் வசிக்கும் சாரா மார்ட்டன் [Charlotte Rampling]என்னும் புகழ்பெற்ற மர்ம நாவல் எழுத்தாளருக்கு கற்பனை வறட்சி ஏற்படுகிறது,  புதிதாக நாவல் எழுத  கரு கிடைக்கவில்லை. இருந்தும் அவரின் பதிப்பாளர்  ஜான் பாஸ்லோட் [Charles Dance]இவர் தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் வகை மர்ம நாவல்கள் எழுதுவதையே விரும்புகிறார். அதையே மக்கள் இவரிடம் எதிர்பார்ப்பார்கள் என அறிவுரைக்கிறார். இவரை புக்கர் ப்ரைஸ் உட்பட எந்த விருதுக்கும் பரிந்துரைக்கமாட்டேன் என்றிருக்கிறார்.  சாராவை தன் உடற்பசிக்கும், பணத்தேவைக்கும்  தயவு தாட்சண்யமின்றி பயன்படுத்திக்கொள்கிறார்.


சாராவுக்கு மர்மநாவல்கள் மிகவும்அலுக்கிறது, அவரின் நாவலை யாராவது படித்துவிட்டு பாராட்டினாலும் கூட வெறுப்பாயிருக்கிறது, புதிதாய் படைக்கவேண்டும் என்னும் வேட்கை வாட்ட, ஜானிடம் தான் எரோடிக் த்ரில்லர்  எழுதட்டுமா? என்று அனுமதிக்கு கேட்க, ஜான் உனக்கு தேவையான அளவுக்கு பணம் இருக்கிறது,மேலும் எதற்கு அதீத புகழ்?

சாரா நீ வெற்றிகரமாய் இயங்கும் க்ரைம்,இன்வெஸ்டிகேஷன்,மர்டர் கொண்ட மக்களிடம் பெயர் பெற்ற டோர்வெல் சீரீஸிலேயே இயங்கு.   நீ  ஃப்ரான்ஸில் லகோஸ்டேக்கு அருகே உள்ள என் பண்ணைவீட்டுக்கு சிறிது நாள் போய் தங்கி விட்டுவா,!!! மலைத்தொடரின் அருகாமையுடன் பிரம்மாண்டமான வீட்டில் பெரிய அற்புதமான நீச்சல்குளமும்  இருக்கிறது,  மிகப்பெரிய பண்ணையும் இருக்கிறது,

நீ திரும்ப இங்கிலாந்து வரும்போது நிச்சயம் கற்பனை வறட்சி நீங்கி வருவாய், நானும் எனக்கு வேலை ஒழிந்தால் வந்து பார்க்கிறேன். என்று அனுப்ப, இவர் ரயிலில் வருகிறார். மிகஅழகான ஊர். அந்த தேசத்தில் பிறந்தவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள், பார்க்கும் இடமெல்லாம் அப்படி ஒரு அழகு, ஃப்ரான்சுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு அழகும்? பசுமையும், எழிலும்,தட்பவெப்பமும் என்று நம்மை ஏங்க வைக்கிறது.

வீடும் இவருக்கு மிகவும் பிடித்துப்போகிறது, தனக்கு நீச்சல்குளம் நோக்கிய ஒரு படுக்கைஅறையை தேர்ந்தெடுக்கிறார்.கிராமத்துக்குள் போய் தனக்கு வேண்டிய வெண்ணெய், பழங்கள், பால், ரொட்டி, ஒயின், தேன் வாங்கிக்கொள்கிறார். சுத்தமான காற்றை ஆசைதீர அனுபவிக்கிறார். ஒவ்வொரு அணுவையும் ரசிக்கிறார். ஆனால் கதைக்கான கரு தான் அமையவில்லை, சன்னலை மூடுகிறார், திறக்கிறார். குளிக்கிறார், ரசனையாக உடுத்துகிறார். நீச்சல் குளம் தார்பாய் போட்டு மூடியிருப்பதால் நீந்தி குளிக்கமுடியவில்லை. தொலைக்காட்சி பார்க்கிறார்., பிராண்டி குடிக்கிறார். ஈசிச் சேரை போட்டுக் கொண்டு நீச்சல் குளத்தின் அருகே அமர்கிறார். அப்போதும் திருப்தியடையாமல் தோட்டத்து கஃபேவில் வந்து அமர்கிறார்.

ரவில் கீழே கார் சத்தம் கேட்க, திருடனோ ? என பயந்தவர், தன் பதிப்பாளரின் மகள் அழகிய ஜூலி[Ludivine Sagnier] ,தன் பெட்டி படுக்கைகளுடன் பண்ணை வீட்டுக்குள் வரவும், மிகவும் கடுப்பாகிறார், இவரின் தனிமை தான் கதை எழுத கருவையே உருவாக்கும், அதை யாரும் குலைப்பதை துளியும் விரும்பவில்லை. ஜூலி இவருடன் நட்பாய் இருக்க முயன்றாலும், சாராவின் பொறாமையும் தலைக்கனமும், 20களில் உள்ள ஜூலியிடம் நட்பாய் இருக்க முடியவில்லை. சாராவுக்கு நீச்சல்குளத்தில் இலைகள் விழுந்திருப்பதால் நீந்தபிடிக்கவில்லை. ஆனால் ஜூலி பிறந்தமேனியாகவே நீந்துகிறாள். தோட்டக்காரன் மார்சல் கிழ்வனிடம் சொல்லி நீச்சல் குளத்தை சாரா நீந்த தூர்வாருகிறாள் ஜூலி.

ஜூலி அபார அழகி, பக்கத்து ஊரில் எதோ எளிய வேலை பார்க்கிறாள், அவளின் அம்மாவுக்கும் பதிப்பாளருக்கும் முன்பே மணமுறிவு ஏற்பட்டிருக்கிறது, அது குறித்து ஜான் சாராவிடம் சொல்லாத கடுப்பு வேறு, அதைப்பற்றி மேலும் அறியத்துடிக்கும் ஆஃப்டர் ஆல் பெண் மனம் வேறு.  சாரா தூங்குகையில் ஜூலி குளியல் தொட்டியில் நீர் நிரப்பி குளிக்கிறாள். சத்தமாகவும் பாட்டு போட்டு ஆடுகிறாள்.


ருந்தும் சாரா ஜூலியிடம் மெல்ல  நெருங்கி போட்டு வாங்குகிறாள்,  ஜூலியோ விடாக்கண்டி. எதையும் சொல்லாமல் அம்மா மணமுறிவால் பாதிக்கப்பட்டு, வேறு ஒரு சிற்றூரில் வசிக்கிறாள். அவள் எழுதிய  ஒரு அருமையான புதினம் பதிப்பாளர் அப்பா ஜானால் தீக்கிறையாக்கப்பட்டது என்கிறாள். மேலதிக விபரங்களை ஜானிடமே கேள் என்கிறாள். ஜான் இவளின் பணத்தை, புகழை, திறமையை திருடித்தின்னுவதை ஊகித்து கண்டும் பிடிக்கிறாள்.எள்ளி நகையாடுகிறாள்.
 
சாரா அவளுடன் வெளியே சிரித்தவள். உள்ளே புழுங்குகிறாள். ஒரு கட்டத்தில் இத்தனை அழகும், புதிருமான ஜூலியையே நாம் ஏன் ? கதைக்கான கருவாக கொள்ளக்கூடாது ?!!! என்று ஜூலியையே பிரதான பாத்திரமாக மையப்படுத்தி ஸ்விம்மிங் பூல் என்னும் நாவலை தன் மடிக்கணிணியில் ரகசியமாக எழுதுகிறார். ஜூலியை தொடர்கிறார்.அணு அணுவாய் உணர்கிறார்.

ஜூலி பண்ணைவீட்டில் திறந்த மார்புகளுடனே திரிபவள்.  தவிர நித்ய கல்யாணி சாரி நித்ய சம்போகி. வயது, வரைமுறையில்லாத ஆடவர் உறவுகளை விரும்புபவள். ஒருநாள் முப்பது வயது ஆணை கூட்டி வந்து ஹாலிலேயே வைத்து புணர்ந்தவள். பொழுது விடிந்ததும் சோஃபாவிலேயே தூங்குகிறாள். அப்பாவின் அன்புக்கு மிகவும் ஏங்கியதால், அப்பாவின் வயதிலிருக்கும் 50வயது மதிக்கத்தக்க ஆணையும் அழைத்து வந்து இரவு சம்போகிக்கிறாள்.

தைக்கண்டு கோபப்பட்ட சாராவிடம் ஜூலி அந்த வயதான ஆண், பன்றிபோல குறட்டை விடுகிறான் என்பதால தான்  சோஃபாவில் படுத்ததாக சொல்கிறாள்.  எல்லாவற்றிற்கும் மேலாக தோட்டக்கார கிழவன் மார்சல் மற்றும் முந்தைய நாள் இரவு வந்த 50 வயது ஆளுடன் திறந்தவெளியில் 3சம் ஆர்கியும் வைத்துக்கொள்கிறாள். ஜூலியின் உள்ளாடை தோட்டத்தில் கிடக்க, அதை சிலாகித்து பொறுக்கி வந்த சாரா, பெரும் கற்பனை வெடித்துக் கிளம்ப, இன்பரசக்கதைகளை ஆர்வமாய் வ[அ]டிக்கிறாள்.

சாராவும் இப்போது நன்கு உடுத்துகிறாள்.  வெளியே அடிக்கடி கிராமத்துக்கு போகிறாள், அங்கே கஃபேயை நிர்வகிக்கும்  நாற்பதுகளில் இருக்கும் ஃப்ரான்கை வித்தியாசமாக, நாளடைவில் ரசித்துப் பார்க்கத் துவங்குகிறாள். தோட்டக்கார கிழவன் மார்சல், தான் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு சன்பாத் எடுக்கையில் தன்னை வெறிப்பதையும் உள்ளூர ரசிக்கிறாள்.  இரண்டு நாள் காணாமல் போன ஜூலி கண்களிலும் கன்னத்திலும் வீக்கத்துடன் வீடு வர,         பதறியவள் ஜூலியிடம் என்ன ஆயிற்று ?!!! எனக் கேட்க,  ஒரு ஆண் இவளை அடித்து இன்புற நினைத்து தோற்றதாயும், தான் அவனை ரத்தம் வர திருப்பி அடித்ததாயும் பெருமையுடன் சொல்கிறாள்.

ரு நாள் சாரா வெளியே சென்றிருக்கும் சமயம் ஜூலி , சாராவின் அறைக்குள் வந்து சாரா இதுவரை தன்னை மையப்பாத்திரமாய் வைத்து எழுதிய நாவலின் பக்கங்களை வேகமாக படித்து கரைத்து குடிக்கிறாள். எழுத்தாளரின் கற்பனைக்கு ஏது வேலி? அந்த மெய்யும் பொய்யுமான சம்பங்களின் கோர்வையை கிரகித்து உள்வாங்கி கிரங்கிய ஜூலி அதுவாகவே உருமாறுகிறாள்.

ள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்பது போல கொஞ்சநாளாக , சாரா ரசிக்கும் ஃப்ரான்கைகூட ஜூலி விட்டுவைக்காமல், இரவு மது விருந்துக்கு கூட்டிவருகிறாள். தாம் இவ்வூரிலேயே வளர்ந்தமையால் ஊரில் தனக்கு தெரியாத ஆண்களே இல்லை என்கிறாள். மூவரும் கஞ்சா புகைக்கின்றனர். பிராண்டி அருந்துகின்றனர். இசைக்கு நடனம் ஆடுகின்றனர். ஃப்ரான்குக்கு வயதான, மெச்சூர்டான, நாவலாசிரியையான சாராவையே மிகவும் பிடித்திருக்கிறது.  நடனம் முடிந்தவுடன் ஃப்ரான்க் கிளம்புகிறேன் என்று சொல்ல, ஜூலி அவனை நீச்சல் குளத்துக்கு நீந்த அழைக்கிறாள்,

ஃப்ரான்க் முடியாது என்கிறான், ஜூலியோ சாரா நீந்த வந்தால் நீ வருவாய்   தானே ?!!! என்று மடக்க, அவன் மௌனிக்க, சாரா தனக்கு தூங்கவேண்டும் என்று மேலே சென்றவள், படுக்கையறை பால்கனி வழியாக நீச்சல் குளத்தை பொறாமையோடு பார்க்க, அங்கே உல்லாசமாய் முழு நிர்வாணமாக நீந்தும் இருவரையும் பார்த்து பொருமுகிறாள், நீந்தி முடித்ததும் குளத்தின் பக்கவாட்டு திட்டில் வைத்து  ஜூலி ஃப்ரான்கிற்கு ஆர்வமாய் வாய்புணர்ச்சி கொடுப்பதையும்   அவஸ்தையுடன் பார்க்கிறாள்.

ஃப்ரான்கிற்கோ ஆனந்தம் . சாராவோ உள்ளே தீய்ந்து கருகியவள்,ஒரு கல்லை எடுத்து நீச்சல் குளத்தில் எறிய, ஃப்ரான்க் தர்மசங்கடப்பட்டவன் . விருட்டென ஜூலியை விட்டு விலகி ஆடைகள் அணிந்து கிளம்ப, மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜூலி, அது தடைபடவும் மிகுந்த ஆக்ரோஷமாகி ஃப்ரான்கிடம் சண்டை போடுகிறாள். சாராவுக்கு குரூர திருப்தியுடன் தூக்கமும் வர உள்ளே போகிறாள்.

றுநாள் நீச்சல்குளம் தார்ப்பாயால் மூடப்பட்டிருக்கிறது. சாரா அதன் ராட்டினத்தை சுற்றி தார்பாயை விளக்கியவள், அங்கே சிகப்பு நிற காற்றடித்த மிதவை மிதப்பதை பார்க்கிறாள். அங்கே தரையில் ரத்தகறையையும் பார்க்கிறாள்.  இவளுக்கு பதட்டம் தொற்றிக்கொள்கிறது. ஃப்ரான்கை ஊர் முழுக்க மொபெட்டில் சென்று தேடுகிறாள். ஃப்ரான்க் ஒரு தனியன் என அறிகிறாள். தோட்டக்காரனின் வீடு எங்கே ? எனக் கேட்டு விசாரித்து அங்கே செல்ல.அங்கே அவரின் குள்ள மகளைப்பார்த்து, மார்சலை தன் வீட்டுக்கு வந்துபோகுமாறு சொல்ல சொல்கிறார். ஜூலி பற்றி அவளிடம் விசாரிக்க, அவள் ஜூலியை தெரியும் நல்ல அழகி என்கிறாள். அவள் அம்மா பற்றி கேட்க, அவள் கார் விபத்தில் இறந்துவிட்டாள். எனச் சொல்லி கதவு சாத்துகிறாள்.

சாரா வீட்டுக்கு வந்தவள் சிகப்பு காற்றடித்த மிதவையில் ஜூலி நீந்தி மிதப்பதை பார்க்கிறாள். அங்கே இருந்த ரத்த துளி யாருடையது ? என கோபமாய் கேட்க, ஜூலி, தான் கையை முன்பு அறுத்துக்கொண்டேன், அந்த ரத்தம் என்று பிதற்ற, சாரா,  அவளை உண்மையை சொல், உன் அம்மா இறந்துவிட்டாள் தானே?!!! நீ ஃப்ரான்கை கொன்றாய் தானே !!!? என பிடித்து உலுக்க, அவள் சாராவிடம் எல்லாம் உன்னால் தான்!!!. எல்லாம் உன் நாவலுக்காகத்தான்!!! என்கிறாள்.

இனி என்ன ஆகும்?!!!
1.சாரா நாவலில் அப்படி என்ன தான் எழுதியிருந்தாள்?
2.ஜூலி ஃப்ரான்கை அன்று என்ன தான் செய்தாள்?
3.சாரா தன் கதையின் கருவான ஜூலிக்கு என்ன கைமாறு செய்தாள்?
4.சாரா தன் ஸ்விம்மிங் பூல் என்னும் நாவலை ஜானிடம் கொடுத்து வெளியிட்டாரா?
போன்றவற்றை மிகுந்த சுவாரஸ்யங்களுடன் டிவிடியில் பாருங்கள். இயக்குனர் நம்மை தெளிவாய் கதைக்குள் கதை வைத்து குழப்பியிருக்கிறார், அதையும் அனுபவியுங்கள்.படம் தரவிறக்க சுட்டி

படத்தின் யூட்யூப் முன்னோட்ட காணொளி:-
===========0000===========

===========0000===========
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து;-
Directed by François Ozon
Produced by Olivier Delbosc
Written by François Ozon
Emmanuèle Bernheim
Starring Charlotte Rampling
Ludivine Sagnier
Charles Dance
Distributed by Focus Features
Release date(s) May 18, 2003 (2003-05-18) (Cannes)
July 2, 2003 (2003-07-02)
Running time 94 minutes
Country France
United Kingdom
Language English
French
Gross revenue $22,441,323
===========0000===========
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)