இந்திய ஐகான் இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை ஹிந்தியில், தமிழில்,தெலுங்கில் எடுப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
அது என்னவா?!!!
அது என்னவா?!!!
1.கடைசிவரை சஸ்பென்ஸை குலைக்காத, டார்க்ஹ்யூமர் கோட்டிங் செய்யப்பட்ட, பிரமாதமான ட்விஸ்டுகள் கொண்டதுமான நான் லீனியர் திரைக்கதை வடிவம்.
2.அமெர்ரோஸ் பெர்ரோஸ் படத்தில் நடித்த உங்கள் அபிமான நட்சத்திரங்கள் அங்கங்கே சிறு வேடங்களில் நடித்த படம். தவிர ஸ்பெயின் நாட்டின் அருமையான நட்சத்திரங்கள் பங்காற்றிய படம். எந்த கதாபாத்திரமும் இதில் திணிக்கப்பட்டதல்ல,எதாவது ஒரு செய்தியை சொல்லிச்செல்கிறது. கள்ளநோட்டு அடித்து அதை இஸ்திரி செய்வது எப்படி?!!! என்னும் டெமோவும் கூட உண்டு.
3.மிக அழகாக வடிக்கப்பட்ட நான்கு மிகுந்த மனோதைரியம் கொண்ட பெண்கள் கதாபாத்திரங்கள், இதையே நவீன ராமாயணம் என்று மணி தன்னை தேற்றிக்கொண்டு இந்த நான்கு பெண்கள் தான் ராமர், லட்சுமணர், பரதர், சத்ருகனர், என்றும் மாற்றி அமைக்கலாம். பிரதான பாத்திரத்துக்கு ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா, ப்ரியாமணி, மூப்பு கொண்ட மூத்த சகோதரி வேடத்துக்கு சுஹாசினி [தேசிய விருது பெற்றவராயிற்றே!!!]
4.தவிர இதில் பேபிஃபேஸ் என்னும் செல்லப்பெயரில் வரும் பிரதான கதாபாத்திரம், ஏற்கனவே சூர்ய பார்வை என்னும் திருட்டுக்கதையில் அர்ஜுனும் , தலைநகரம் படத்தில் குஸ்புவின் கணவரும் செய்த, நியாயமான கேங்ஸ்டர் பாத்திரங்கள் கொண்டிருந்த சமூக சிந்தனையை கொண்டிருக்கிறார், அது என்னதா? அது தான் பெண்களை, குழந்தைகளை வதைக்க மாட்டேன், கொல்லமாட்டேன் என்பதே . இந்த பாத்திரத்தையே மணிரத்னம் ஹனுமனாக சித்தரித்துக் கொள்ளலாம்.
5. நான்கு சகோதரிகளில் அனா என்னும் விலைமகள் கதாபாத்திரத்துடன், அவளின் அற்பணிக்கப்பட்ட வாய்புணர்ச்சியால் மனதைப் பறிகொடுத்து , மனைவியாக்கி கொள்ளும் அட்டகாசமான. ஃபெலிக்ஸ் என்னும் வில்லன் கதாபாத்திரம், கதாநாயகன் பேபிஃபேஸும் இவனுடனேயே நட்புக்கு இலக்கணமாக கூடவே இருப்பதால் துரியோதனன், கர்ணணாக கூட இவர்களை சித்தரிக்கலாம்.
ஆக அட்டகாசமான ராமாயணம் + மகாபாரதம் கலந்த கோம்போ ஆஃபராக மிளிரக்கூடும் இப்படம். ஃபெலிக்ஸ் என்ன ஒரு ஆர்ப்பாட்டமான கேங்ஸ்டர் அவன்?!!!, ஒரே ஒரு வசனம் சோற்றுப்பதமாக தருகிறேன், பெண்ணே இது மரக்கட்டையல்ல, உன் பற்களை பார்த்து பயன்படுத்து என்பதுதான் அது!!!. எத்தனையோ ஹாலிவுட் படங்களில் வாய்ப்புணர்ச்சி காட்சிகள் வந்திருந்தாலும், இது போல டார்க்ஹ்யூமர் பார்த்ததில்லை.
6.இதயத்துடிப்பு கூட்டும் பிண்ணணி இசை, ஸ்பானியர்கள் தங்கள் இசைக்கு பெயர் போனவர்களாயிற்றே,!!! இது சோடைபோகுமா என்ன?!!! இதை இன்னும் எத்தனை படங்களில் பிரதி எடுப்பார்களோ?!!!, ஆகவே மூலத்தை பார்த்துவிடுங்கள், அய்யா ஒரிஜினலை சொன்னேன்.
7.தவிர க்ளிஃப்ஃபாங்கர், பேங்க் ஜாப் படங்கள் போலவே பணக்கொள்ளையை சுற்றி பிண்ணப்பட்ட கதை, செம லாஜிக்கலாக உருவாக்கபட்ட காட்சிகள். நிறைய சிஜி வேலைகள் இருந்தாலும் அசல் எது? சிஜி எது என்றே தெரியாது!!! மற்றும் Marta Velasco இன் எடிட்டிங். பல மில்லியன் கணக்கான கொரிய நாட்டு கரன்சி அச்சடித்தல், மெக்ஸிக்கன் அண்டர்வேல்ட் வாழ்க்கை, பழிதீர்த்தல், என அருமையான உள்ளடக்கம் கொண்டது. சகவாசத்துக்காக கருவருத்தல் சுப்ரமணியபுரத்தில் மட்டுமல்ல ஸ்பெய்னிலும் நடக்கும் என்றும் சொன்ன படம்.
8.இதில் மணிரத்னம் எல்லாவற்றையும் தேசிவெர்ஷனுக்கு மாற்றி விடமுடியும், ஆனால் அந்த ஃபெலாசியோ என்னும் வாய்புணர்ச்சி மேட்டரை? அடடா,?!!! அதை கொஞ்சம் கூட பார்வையாளருக்கு அருவருப்போ, அதைச்செய்யும் அந்த பெண்கள் மீது களங்கமோ, அவப்பெயரோ? வராத வண்ணம், அதையும் ஒரு தொழிலாகவே பாவித்து பார்த்து கவனமாக இயக்கியுள்ளார் இயக்குனர்.
ஆனால் நம்மூரில் எடுக்கப்படும் படங்களில், ஒரு கழிவறை துப்புறவாளனைக் கூட கண்ணியமாக சித்தரிக்க மாட்டார்களே!!! அதற்காக சொன்னேன். தவிர இதில் 4 பெண்களில் ஒரு சகோதரி , அவள் போய் தங்கும் ஹோட்டல் அறைகளிலெல்லாம் ஆல்பம் வாங்கிப் பார்த்து, விபச்சாரன்களை [விபச்சாரியின் ஆண் வெர்சன்] அறைக்கே தருவித்து ஆசைதீர புணர்கிறார். இவ்வுலகில் தனித்து விடப்பட்ட பெண்களுக்கும் ஆசைக்கான வடிகால் தேவைதானே?!!நல்ல காட்சியாக்கமும் உருவகமும் அது.
சமூகத்தில் பெண்களில் மட்டுமா விலைமாதுக்கள் உண்டு,?ஆண்களில் இல்லையா?!!! சுகம் கொடுப்பதும் எடுப்பதும் இரு பாலருக்குமே பொது தானே? பின்னே ஏன்? மற்ற படங்களில் மட்டும் ஒரு தட்டையான பேத மனப்பானமை?!!! , இன்னும் ஏன் காலங்காலமாக இங்கு பெண்களே விபச்சாரிகளாக, ஆண்களே வாடிக்கையாளர்களாக காட்டப்படவேண்டும்? இது சமூகத்தில், பெருநகர, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வெளிப்படையாகவே நடந்தாலும், செலுலாய்டில், நான் தேடிப் பார்க்கும் சினிமாவில் புதிது. இதன் மேக்கிங்குக்காகவே குறைந்தது 3 முறையாவது பார்க்க வைக்கும்.
வளர்ந்த நாடுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், சீனா, ஜப்பான், மற்றும் யூரோவில் செலவு செய்யும் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் விபச்சாரம் கொடிகட்டிப்பறக்கிறது. உலகிலேயே அதிகம் சுற்றுலா செல்பவர்கள், சொகுசுக்கு அதிகம் செலவிடுபவர்கள் ஸ்பெயின் நாட்டினர். இவர்களுக்கு அடுத்து தான் ஏனைய நாட்டினர்.
அந்த நாட்டிலேயே நிறைய இளைஞர்கள் போதிய கல்வியறிவை பெற, தொடர முடியாததாலும், நன்றாக சொகுசாக வாழ ஆசைப்பட்டும் போர்னோகிராபிக் படங்களில் நடிப்பதையே தவறல்ல என்கின்றனர். நிறைய பேர் நிழல் உலக தொழில்களில் அபாயம் தெரிந்தும் நுழைகின்றனர். அதை அருமையாக இப்படத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குனர். வளர்ந்த நாடுகளை பற்றி தெரிந்துகொள்ள பிபிசி என்னும் பொய்+புரட்டு சேனலைப் பார்த்து ஏமாறாதீர்கள்,!!! இது போன்ற உலக சினிமாக்களை தேடிப்பாருங்கள்.

9.இது கேமரா மேன்களுக்கான, புதிது புதிதாக ஷாட் யோசிப்பவர்களுக்கான படம், இயக்குனர் Agustín Díaz Yanes ற்கும் ஒளிப்பதிவாளர் Paco Femenia ற்கும் கற்பனைப் பஞ்சமே ஏற்பட்டிருக்காத படம், படத்தில் கேமராவும் இன்னொரு கதாபாத்திரமே, திரை வல்லுனர்களுக்கு ஆகச்சிறந்த ரெஃபரன்ஸ் மெடீரியல் இப்படம்,
தவிர சரசரவென வெட்டப்பட்ட எடிட்டிங், மெதுவாக படம் நகர்ந்தாலும் காட்சிகள் காண்போருக்கு அறுசுவை விருந்தே!!!. பாலிவுட்டுக்கு செம டெம்ப்ளேட், ஆக்கம் மற்றும் அறிவுத்திருடர்களான, சஞ்சய் குப்தா[ஸிந்தா-ஓல்ட்பாய்] ,சுரேஷ் நாயர்,சஞ்சய் தத், நிதின் மன்மோஹன், மகேஷ் பட், இம்ரான் ஹஸ்மி , அனுராக் பாசு , கரன் ஜோஹர்,டேவிட் தவான் போன்றோர் முந்துவார்களா? அல்லது நமது இருட்டுக்கடை sorry !!! இருட்டுப்பட இயக்குனர் மணி, அமீர், கௌதம் மேனன் போன்றோர் வெல்வார்களா? என்று!!!! பொறுத்திருந்து பார்ப்போம்.
படம் தரவிறக்க டாரண்ட் சுட்டிக்கு.
படம் தரவிறக்க டாரண்ட் சுட்டிக்கு.
படத்தின் யூட்யூப் முன்னோட்ட காணொளி அவசியம் பாருங்கள்!!!
=====0000======