நீங்கள் குறும்படங்களில் ஆர்வம் இருப்பவரா? சரி , இல்லாதவரா? உங்களிடம் 15 நிமிடம் இருக்கிறதா?!!! அதை உபயோகமாக செலவிட துடிப்பவரா?!!! அப்படியென்றால் இது உங்களுக்கான குறும்படமே, சென்ற ரோட் டு லடாக் பதிவில் லிட்டில் டெரரிஸ்ட் என்னும் குறும்படம் பார்த்துவிட்டு எழுதுகிறேன் என்று சொன்னேன் அல்லவா?!!! அடடா, இன்று தான் அதை பார்த்தேன், என்ன ஒரு படம்?!!! 15 நிமிடத்துக்குள் என்ன தீர்க்கமான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஷ்வின்குமார்,
இந்த படம் பார்வையாளர்களை ஒரு உலுக்கு உலுக்கி மனதையே நகர்த்தும் சக்தியும்,சங்கதியும் கொண்டது, திரைக்கதைக்கு தான் எப்படி? வருகிறது, இப்படி ஒரு சக்தி? இனம் ,மதம் ,மொழி,கடந்து பார்வையாளனை வசப்படுத்தி கவிழ்க்கும் ஒரு வித்தை!!! என நான் வியந்து வந்திருக்கிறேன், ஃபில்ம் மேக்கர் என்பது தான் என்ன ஒரு வேலை? !!! என்ன ஒரு கௌரவம்?!!! அதை இயக்குனர் அஷ்வின்குமார் போன்ற ஆட்கள் தாராளமாய் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொள்ளலாம், ய ஃபில்ம் பை என்று போட்டு அரைகுறை கருத்து சொல்லிவிட்டு,கலவரங்களை மூளவிடும் இயக்குனர்கள் முன்பு நிஜமாய் சேதி சொன்னபடம்.
வழக்கம்போலவே குறும்படம் என்பதாலும், நண்பர்கள் பார்க்கும் போது சுவாரஸ்யம் கெடக்கூடாது என்பதாலும் கதையை சொல்லாமல் விடுகிறேன். இது நிச்சயம் ஒவ்வொரு ஆரம்ப,நடுநிலை,உயர்நிலை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள், மற்றும் விடுமுறை & வார நாட்களில் தொலைகாட்சிகளிலும் திரையிடப்படவேண்டிய குறும்படமே.
ஏன்? திரை அரங்குகளில் நியூஸ் ரீலாக கூட போட்டு காட்டலாம், அப்படி ஒரு கதைக்கரு இதில் பொதிந்துள்ளது!!! என்னவா? அது தான் ஒற்றுமை, சகோதத்துவம் வளர்த்தல், அனைத்து உயிர்களிடத்தும் அன்பாயிருத்தல், சகிப்புத்தன்மை, துவேஷம் விடுதல், மதவாதம் கைவிடுதல், மதநல்லிணக்கம் பேணுதல், என சொல்லிக்கொண்டே போகலாம். என்னைக்கேட்டால் குறும்படங்கள் எடுப்பது தான் கடினம் என்றும் நினைக்கிறேன். ஏனென்றால் குறும்படங்கள் மனதிருப்திக்காகவும், பார்க்கும் பார்வையாளர்களிடையே குறுகிய கால அளவுக்குள் நல்ல கருத்து கூறுதலுக்காகவும், உன்னதமான கலைக்கு மரியாதையாகவும், நேரவிரயத்தை தடுப்பதற்காகவும் படைக்கப்படுபவை,
இக்குறும்படத்தை பார்க்கும் எத்தனையோ?!!! பேரில் என்னைப்போலவே இந்த படம் சொன்ன கருத்தை புரிந்து, மதநல்லிணக்கம்,சகோதரத்துவம் வளர்த்தால் அதுவே இயக்குனர் அஷ்வின்குமாருக்கு கிடைத்த வெற்றியாகும்.
ராஜஸ்தான் மாநிலத்தில்,இந்திய பாகிஸ்தானிய எல்லையை ஒட்டிய பொக்ரான் போன்ற ஒரு குக்கிராமத்தில், சித்தரிக்கப்படும் இந்த கதைக்களத்தில், மூன்றே பிரதான பாத்திரங்கள். அற்புதமான அற்பணிக்கப்பட்ட நடிப்பு, இவர்கள் யாருமே முன் அனுபவமுள்ள நடிகர்கள் அல்ல, பிரதான பாத்திரமான சுல்ஃபுகார் தெருவில் வசிக்கும் ஒரு ஏழைச்சிறுவன், அரசுப்பள்ளி ஆசிரியராய் வந்த சுஷில் ஷர்மா ஒரு அரசு குமாஸ்தா, அவரின் மகளாய் வந்த மேக்னா 12ஆம் வகுப்பு மாணவியாம், என்ன ஒரு வாழ்நாள் சாதனை?!!! இந்த படத்தில் நடித்தது மூலம் மூவருக்கும் கிடைத்துள்ளது, பணம், புகழ், ஆஸ்கார் நாமினேஷன் போன்றவற்றை விடுங்கள், அந்த ஆத்ம திருப்தி இருக்கிறதே!!! அடடா,அது கோடி கொடுத்தாலும் கிடைக்காது, குறும்படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
படத்தின் யூட்யூப் முன்னோட்ட காணொளி:-
மேல்விபரங்கள் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by | Ashvin Kumar |
---|---|
Produced by | Ashvin Kumar, Dilip Singh Rathore, Sarah Tierney |
Written by | Ashvin Kumar |
Starring | Zulfuqar Ali (Salim), Sushil Sharma, Megnaa Mehtta |
Cinematography | Markus Hürsch |
Release date(s) | 2004 |
Running time | 15 min |
Language | Hindi/Urdu |