ரோட் டு லடாக் குறும்படம்[2003][இந்தியா] [15+] [Road To Ladakh]

ண்பர்களே!!! சமீபத்தில் டாரண்ட் தளத்தை நோண்டிக்கொண்டிருந்த போது இந்த குறும்படம் கண்ணில் பட்டது,பெயர் நன்றாயிருக்கிறதே!!! என்ற ஆவல் மேலிட தரவிறக்கினேன், பார்க்க ஆரம்பித்தேன், நல்ல ஈர்ப்பு, அபாரமான காட்சியாக்கம், படபடப்பை எகிறவைக்கும் பிண்ணனி இசை, தவிர இர்ஃபான் கான் என்னும் இந்திய பேரலல் சினிமாவின் தலைக்கல் வேறு , மனிதர் இதிலும் கலக்கியிருக்கிறார், படத்தில் 7 வருடம் முன்பே துணிச்சலாக உடலுறவுக்கு பின்னான அசதியில் தன் புட்டத்தையும்  கேமராவுக்கு காட்டியிருக்கிறார்.

னிதர் சலாம் பாம்பே படத்தில் சிறுவன் சாய்ப்பாவுக்கு காசுக்கு கடிதம் எழுதித்தரும் வேடத்தில் அறிமுகமானவர்,அதில் ஒரு வார்த்தைக்கு 50 பைசா என்று சிறுவனிடம் கேட்டு, அவன் அம்மாவுக்கு என்னை நினைத்து கவலைப்படாதே!!! என எழுத எக்ஸ்ட்ரா 1.50 ரூபா ஆகும் என்று கதிகலங்க வைப்பார். சிறுவன்  சாய்ப்பா போனதும், இதெல்லாம் எங்கே போய் சேரப்போகிறது?  என்று அதை கசக்கி எறிவார். அதில் அழுத்தமாக பதிந்தவர், சரசரவென அகில உலக கவனத்தை, பேரலல் சினிமாவில் தன் உழைப்பை ஈந்ததின் மூலம் பெற்றிருக்கிறார். இவரின் உடல்மொழி, பார்வை, வசன உச்சரிப்பு  எந்த கதாபாத்திரம் செய்தாலும் இவருக்கு கைகொடுத்திருக்கிறது.

ஸ்லம்டாக் மில்லியனரில் இன்ஸ்பெக்டர் வேடம், நேம்சேக்கில் அமெரிக்கவாழ் வங்காள குடும்பதலைவன் வேடம், மைக்ரேஷன் என்னும் எயிட்ஸ் பிரச்சார குறும்படத்தில் ஒரு ஹோமோசெக்சுவல் ஆசாமி கணவன், மைட்டி ஹார்ட் படத்தில் பாகிஸ்தானிய இன்ஸ்பெக்டர்,கதை பறையும் போல் aka குசேலன் ஹிந்தி ரீமேக்கான பில்லுவில் தமிழ் பசுபதியின் வேடம் என்று நீங்காமல் மனதில் நிற்பார்.
 =====0000=====
ந்த படத்தின் இயக்குனர் அஸ்வின் குமாருக்கு முதல்படம், மிகக்குறைந்த பட்ஜெட், படத்துக்கு இரண்டே பிரதான  பாத்திரம், அருமையான ரோட்மூவி + ரொமாண்டிக் த்ரில்லர் குறும்படம்,  இதற்கு இர்ஃபான் கானும் அமெரிக்க மாடல் நடிகை கோயல் புரியும் பணமே வாங்கிக்கொள்ளவில்லையாம்,  தவிர அட்வென்சர் டூரிசம் செல்வதாக நினைத்துக்கொண்டு தங்கள் வாகனங்களிலேயே அந்த லே என்னும் இந்தியாவின் கடல்மட்டத்தின்  மிக உயரமான  மலைத்தொடருக்கு வந்து  போனார்களாம்.

ந்த லடாக் செல்லும் சாலை, எதிர்படும் சிறு தொங்கு பாலங்கள், சிற்றாறுகள், மிகக்குறுகலான ஹேர்பின் பெண்டுகள், அபாயகரமான பள்ளத்தாக்குகள் , தேநீர்கடை , இரவு தங்கும் தார்பாய் டெண்டு லாட்ஜுகள், அங்கே தங்கி ஓயாமல் சரணம் சொல்லும் புத்தலாமாக்கள்,  சிடுக்கெடுத்து பேன் வாரும் சீக்கியர்கள், மூனு சீட்டாடும் மங்கோலிய நாடோடிகள் என்று நாம் அதிகம் பார்த்திராத ஒரு லொக்கேஷன்.

குறும்படம் என்பதாலும் முழு சுவாரஸ்யத்தையும் நீங்கள் உணர வேண்டும் என்பதாலும் கதை சொல்லாமல் செல்கிறேன்.  இதில் அகோர தனிமையாலும் கோகெய்ன் போதையினாலும் வேட்டையாடப்பட்டு எதைத் தேடிப்போகிறோம்?!!!   என்றே தெரியாத,    மாடல் அழகி கோயல் புரி [ Koel Purie] செமத்தையான அழகு, என்னமா? துணைக்கு மிகவும் ஏங்கி, தேக்கிவைத்த விரகதாபத்தை கட்டுடைத்த வெள்ளமாய் பிரதிபலிக்கிறார்?!!! அருமையான நடிப்பு,   இவரை நான் சாமுராயில் வந்த அனிதா என்றே நினைத்தேன். அப்படி ஒரு உருவ ஒற்றுமை.  படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

து இந்திய பாகிஸ்தானிய எல்லை, கார்கில் போர் நடந்த  இடத்துக்கு மிக அருகில் வேறு இருப்பதால்,  அந்த இடங்களில் சென்று படம் பிடிக்க குழுவினர் மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கவேண்டும், படம் முழுக்க கேமரா மேன் ராஜ்ஜியம் தான்.  தவிர கதையிலும் இராணுவ கேம்ப் சம்மந்தப்பட்டுள்ளது, ஒரு சிறந்த ஆர்மி ஆஃபிசர் வேடமும் உண்டு.  மொத்தம் 12 நாட்களில் எடுக்கப்பட்ட படம்,  லைவ் ரெகார்டிங்,  டப்பிங் இல்லை,  இதே இயக்குனரின் அடுத்த குறும்படமான த லிட்டில் டெரரிஸ்ட் 2005 ஆஸ்கர் நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டதாம்.  அதையும் பார்த்துவிட்டு பகிர்கிறேன்.

இது யூட்யூப் முன்னோட்ட காணொளி:-

=====0000=====

10 comments:

பெயரில்லா சொன்னது…

கீதப்ப்ரியன்,நல்ல விமர்சனம்,கதை சொல்லாமல் போனது எனக்கு உபயோகமாயிருக்கும்,நான் டவுன்லோட் செய்துவிட்டேன்,

மைதீன் சொன்னது…

அறிமுக படுத்தியதற்கு நன்றி! பார்த்துவிட்டு கருத்துரையிடுகிறேன்.

எஸ்.கே சொன்னது…

பொதுவாக குறும்படங்களை விரும்பி பார்ப்பேன். இர்ஃபான்கான் நல்ல நடிகர். நிச்சயம் பார்க்கிறேன்.

த லிட்டில் டெரரிஸ்ட் நன்றாக இருக்கும்! அந்த இயக்குநருடையதா! அறிமுகத்திற்கு நன்றி! நல்ல குறும்படங்களை அறிமுகம் செய்யுங்கள்!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

அறிமுகத்திற்கு நன்றி நண்பரே தாங்கள் தந்திருக்கும் முன்னோட்ட குறும்படமே எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது . பகிர்வுக்கு நன்றி

இராமசாமி கண்ணண் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி :)

மரா சொன்னது…

மெய்யாலுமே அருமையான படம்.நல்லவேளை கதையச் சொல்லலை. பட லொகேஷன் மற்றும் அமைதியான பிண்ணனி இசை இப்படம் முழுக்க அருமையா இருக்கும். இர்ஃபான் போலவே ராகுல் போஸ் ரெண்டு பேருமே நல்லா நடிப்பாய்ங்க. பகிர்வுக்கு நன்றி சேட்டன் :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பெயரில்லா
அப்படியா சங்கதி?உங்க ஊரு ஜாக்சன்வில்லா?:))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மைதீன்
நண்பரே,நன்றி பாருங்க பிடிக்கும்

@எஸ்கே
நண்பா
லிட்டில் டெரரிஸ்ட் பார்த்துட்டீங்களா?
அடடா?என்ன படம்?வாவ்,மூனே கதாபாத்திரம் வச்சு என்னமா?சொன்னான் மெசேஜு வாவ்,சான்சே இல்லை.
நன்றி

@பனித்துளி சங்கர்
நன்றி நண்பா

@இராமசாமி
நண்பரே,ஏன் எந்திரன் பதிவுக்கு வரலை?எதும் கோபமா?:))

@மரா
என் மக்கா,உனக்கோசரம் தான் நான் பதிவே எழுதுறேன் என்றால் மிகையில்லை:))

☀நான் ஆதவன்☀ சொன்னது…

தல டவுண்லோட் ஆகல எனக்கு. இந்த வாரம் மீட் பண்ணி வாங்கிக்கிறேன்.

மைதீன் சொன்னது…

பார்த்து விட்டேன் நண்பரே, உண்மையிலே மிக அற்ப்புதமான படத்தைதான் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.கோயல் புரியின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)