தீன் தீவாரின் என்னும் ஹிந்திமொழியின் மாற்றுசினிமா திரைப்படத்தைக் காண சமீபத்தில் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது, இது இயக்குனர் நாகேஷ் குக்குனூர் என்னும் மாற்று சினிமா இயக்குனரின் முத்திரை படைப்பு, இவரின் படைப்புகள் அதிகம் மொழிஅபிமானம் இல்லாமல் இருக்கின்றன. இவரின் கதாபாத்திரங்கள் அநேகம் பேர் பெருநகர மாந்தர்கள். இந்தி, ஆங்கிலம், தெலுங்கு என கலவையாக திரையில் பேசுவர். நாம் அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும் கதாபாத்திரங்களே இவரின் கதையின் மாந்தர்களாக உலா வருகின்றனர். இவரின் படைப்புகள் உண்மைக்கு வெகு அருகே பயணித்து யதார்த்தத்தை அதிகம் பறைசாற்றும்.
இவரை நாம் ஹைதராபாத் ப்ளூஸ் பாகம் -1&2 , இக்பால் போன்ற படங்களில் இருந்து பார்க்கத்துவங்கவேண்டும். நானும் அப்படிப் பார்த்ததின் விளைவாகவே இந்த தீன் தீவாரின் என்னும் சிறைச்சாலையை சுற்றி பின்னப்பட்ட ஒப்பற்ற படைப்பையும் காண நேரிட்டது. நம் நாட்டிலும் அந்நியப்படங்களை சொறியாமல்,உருவாமல்,திருடாமல் நேர்த்தியான படைப்புகளை வழங்க முடியும் என்பதறகான உதாரணம் இந்த படம். முதலில் ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் போன்றதொரு படைப்போ? என்று எனக்கு அயற்ச்சி ஏற்பட்டதென்னவோ உண்மைதான்.
இவரை நாம் ஹைதராபாத் ப்ளூஸ் பாகம் -1&2 , இக்பால் போன்ற படங்களில் இருந்து பார்க்கத்துவங்கவேண்டும். நானும் அப்படிப் பார்த்ததின் விளைவாகவே இந்த தீன் தீவாரின் என்னும் சிறைச்சாலையை சுற்றி பின்னப்பட்ட ஒப்பற்ற படைப்பையும் காண நேரிட்டது. நம் நாட்டிலும் அந்நியப்படங்களை சொறியாமல்,உருவாமல்,திருடாமல் நேர்த்தியான படைப்புகளை வழங்க முடியும் என்பதறகான உதாரணம் இந்த படம். முதலில் ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் போன்றதொரு படைப்போ? என்று எனக்கு அயற்ச்சி ஏற்பட்டதென்னவோ உண்மைதான்.
ஆனால் ,படத்தின் அசைக்கமுடியாத பலமான திரைக்கதை,நம் எண்ணத்தை தவிடுபொடியாக்கி அடுத்து என்ன நிகழுமோ? என்று ஆவல் மேலிட வைக்கிறது. ஏன் ? ஒரு கட்டத்தில் ஷஷாங்கையே மிஞ்சப்பார்க்கிறது என்பேன். யாருக்கு தெரியும்? கமல்ஹாசன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு கூட விருமாண்டி என்னும் ஒப்பற்ற படைப்பை உருவாக்குவதற்கான உத்வேகம் கொண்டிருக்கக்கூடும். ஏனெனில், அப்படி ஒரு வீச்சு உள்ள கதையும், நேர்த்தியான திரைக்கதையும் நான் லீனியர் உத்தியைக்கொண்டிருக்கும் காட்சியமைப்புகளும் கொண்டுள்ளதே!!!, தரமான படம் பார்க்க விழைவோர் விரைந்து தேடிக்காணவேண்டிய ஒப்பற்ற படைப்பு.
இந்தப்படம் ஓர் முண்ணணி கதாநாயகனுக்காக எழுதப்படவேவில்லை என்பேன்,அதனால் தான் எத்தனை ஆறுதல்?, கதைக்கான நாயகர்களாக இதில் நஸ்ருதீன் ஷா [இவர்,என்ன ஒரு அபார நடிகரப்பா?!!!] , ஜாக்கி ஷராஃப்,நாகேஷ் குக்குனூர் மற்றும் முக்கிய பாத்திரமாக ஜூஹி சாவ்லாவும் உண்டு,[ஜூஹி சாவ்லா தன் வாழ்வில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த படம்]மிகப்பெரிய நிம்மதி பாடல்களே இல்லை,ஆயினும் பிண்ணணி இசை பிரமாதமான ஒன்று.இது போல நல்ல படங்கள் தமிழிலும் உரிமை வாங்கி எடுக்கப்படவேண்டும் என்பதே உள்ளக்கிடக்கையாயுள்ளது.
இந்தப்படம் ஓர் முண்ணணி கதாநாயகனுக்காக எழுதப்படவேவில்லை என்பேன்,அதனால் தான் எத்தனை ஆறுதல்?, கதைக்கான நாயகர்களாக இதில் நஸ்ருதீன் ஷா [இவர்,என்ன ஒரு அபார நடிகரப்பா?!!!] , ஜாக்கி ஷராஃப்,நாகேஷ் குக்குனூர் மற்றும் முக்கிய பாத்திரமாக ஜூஹி சாவ்லாவும் உண்டு,[ஜூஹி சாவ்லா தன் வாழ்வில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த படம்]மிகப்பெரிய நிம்மதி பாடல்களே இல்லை,ஆயினும் பிண்ணணி இசை பிரமாதமான ஒன்று.இது போல நல்ல படங்கள் தமிழிலும் உரிமை வாங்கி எடுக்கப்படவேண்டும் என்பதே உள்ளக்கிடக்கையாயுள்ளது.
படத்தின் கதையை சொல்ல மிகுந்த ஆவல் எழுகிறது, ஆனால் அது படம் பார்க்கும் நண்பர்களின் ஈடுபாட்டை, ஆர்வத்தை குலைத்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். ஆகவே மையக்கதையை மட்டும் சொல்கிறேன்.
கைதி-1.ஜக்கு[ஜாக்கி ஷராஃப்] இவர் ஒரு வக்கீல்,மனைவியின் கள்ளக்காதல் தெரிந்தும் அவளை மிகவும் நேசிக்கிறார். அந்த கிராதகி ஒருநாள் இரவு ஓட்டமெடுக்கப்போவதை தொலைபேசியில் ஒட்டுக்கேட்டவர்,விரைவாக வீடு திரும்புகிறார். முதுகுகாட்டித் துங்கும் அவளை வெறியுடன் கத்தியால் பலமுறை குத்துகிறார். பின்னர் பிணத்தைக்கட்டிக்கொண்டு கிடந்து அழுது தேற்றுகிறார். ஜக்குவுக்கு அவருடைய ஒப்புதலின் பேரிலேயே தூக்கு தண்டனை தாமதமின்றி கிடைக்க மரணவாயிலுக்கு காத்திருக்கிறார்,
கொலைபாதகத்துக்கு ஜக்கு உண்மையிலேயே வருந்தியதாலும், மனைவியின் மீதான அபாரமான நேசத்தாலும் மேல்முறையீடே செய்யவில்லை, ஒரே தங்கை மிகவும் கெஞ்சுகிறாள் பலனில்லை,அம்மாவோ அவமானத்தால் தூக்கில் தொங்கிவிடுகிறாள். இவர் சிறையில் தரப்படும் தண்டனையைக்கூட விரும்பி அனுபவித்து வாழ்கிறார், இவரின் கைப்பக்குவத்தில் உருவாகும் பருப்பு சாம்பாரும், பொரியலும் மிகப் பிரசித்தம். சிறையில் இப்படி ருசியான உணவா? என்று, அதை சில தொழிற்சாலைகளும் தங்கள் தொழிலாளர்களுக்கு என்று பணம் தந்து வாங்கிக்கொள்கின்றன.
கைதி-2.[நாகேஷ் குக்குனூர்],நாக்யா என்னும் நாகேந்திர ரெட்டி ஒருசாதாரண தெலுங்கு மீடியம் படித்த அக்கவுண்டண்ட், நீதிபதியின் மகளான பணக்கார காதலியை கைபிடித்தவர் . அவளிடம் அனுதினமும் இருவரும் வேலைக்கு செல்லும் போது சாலையிலேயே திட்டுக்கள் வாங்குகிறார். அம்மாவைப் பற்றியு
இவர் அவளின் துப்பட்டாவை பிடித்து காப்பாற்ற கைதூக்கியதை பார்த்த பொதுமக்கள், தர்ம அடி போட்டு,போலீஸில் ஒப்படைக்க, நீதிபதி மாமனாரின் பழிவாங்கும் நடவடிக்கையால், போலீஸ் காவலில் த்ரி டிகிரி ட்ரீட்மெண்ட் கிடைத்து, நான் தான் அவளைத் தள்ளிவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்து, தூக்கும் கிடைத்து, இப்போது சிறையில், இதுவரை மன்னிப்புக்கு எத்தனை அப்பீல்கள் எல்லாம் இருக்குமோ? அத்தனைக்கும் மனு செய்திருப்பார். எல்லாமே சுவற்றிலடித்த பந்தாய் திரும்பி வந்துவிடுகின்றன. சிறையில் தூக்கம் வராப்பொழுதுகளில் நிலவைப்பார்த்துக்கொண்டே புல்லாங்குழல் வாசித்தும் நண்பன் ஜக்குவிடமிருந்து பிரவாகமாக ஊற்றெடுக்கும் ஆங்கிலக்கவிதைகளை கேட்டும் ரசிக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் அப்படி நட்பு பாராட்டுகின்றனர்.
கைதி-3. [நஸ்ருதீன் ஷா] இஷான் என்னும் பலே திருடன், சில பல ஏமாற்று, மோசடிகள் செய்தவர். ஒரு பெரிய தொகையை தேற்றிக்கொண்டு ஊரைவிட்டே ஓட்டமெடுக்கும் நோக்கத்துடன் ஓர் சிறிய வங்கிக்கு சென்று விக், ஒட்டு மீசை அணிந்திருந்தவர் துப்பாக்கி முனையில் பெண் கேஷியரிடமிருந்து பணக்கட்டுகளை வாங்கி பையில் அடுக்குகிறார், வேகம் வேகம் என்று மென்மையாக அவளை அதற்றியவர். பிரபல கிஷோர்குமாரின் ஹிந்திப் பாடலையும் பாடுகிறார்.
கைதி-3. [நஸ்ருதீன் ஷா] இஷான் என்னும் பலே திருடன், சில பல ஏமாற்று, மோசடிகள் செய்தவர். ஒரு பெரிய தொகையை தேற்றிக்கொண்டு ஊரைவிட்டே ஓட்டமெடுக்கும் நோக்கத்துடன் ஓர் சிறிய வங்கிக்கு சென்று விக், ஒட்டு மீசை அணிந்திருந்தவர் துப்பாக்கி முனையில் பெண் கேஷியரிடமிருந்து பணக்கட்டுகளை வாங்கி பையில் அடுக்குகிறார், வேகம் வேகம் என்று மென்மையாக அவளை அதற்றியவர். பிரபல கிஷோர்குமாரின் ஹிந்திப் பாடலையும் பாடுகிறார்.
கீழே மக்கள் கூட்டம் பயந்து நடுங்கியபடி படுத்திருக்க, பணப்பையை எடுத்துக்கொண்டு இவர் பாடியபடியே நகர, கேஷியர் பெண் சரியாக அலாரத்தின் பொத்தானை அமுக்குகிறாள். இவர், மென்மையாக கோபித்தவர், துப்பாக்கியைக் காட் டி ச்சும்மா லுல்லுல்லாயிக்கு மிரட்ட மட்டும் செய்கிறார். இவர் விதி வலியதாயிருக்க, கீழே படுத்திருந்தவனின் காலை பதட்டத்தில் மிதித்துவிட, கைவிரல் விரல் தவறி துப்பாக்கியின் ட்ரிக்கர் அமுக்கப்பட்டு, தோட்டா லேமிடேட் செய்யப்பட்ட பிளைவுட்டை துளைத்து கேஷியர் பெண்ணின் வயிற்றையும் துளைத்து அவளைக் கொல்கிறது,
அதில் இவரது விதி இன்னும் மோசமாயிருக்க,அவளின் பிரேதப் பரிசோதனையில் அவள் வயிற்றிலிருந்து இரு குழந்தைகளும் அறுத்து எடுக்கப்பட, இவருக்கு ஆப்பு இறுகுகிறது, ஒரு கலக்கலான சந்தர்ப்பத்தில் போலீசிடம் சிக்கிய இவருக்கு ”குழந்தைக் கொலையாளி” என்று உடனடியாக தூக்கு தண்டனையும் கிடைக்கிறது. இருந்தும் இவர் தான் சுடவேயில்லை, ஆகையால் வருந்தவுமில்லை என்கிறார், ஆகையால் நிறைய மேல் முறையீடுகள் செய்கிறார்.வக்கீல்களையும் மாற்றுகிறார்.இந்த முறை இவரின் கேஸை விசாரிக்க ஒரு பெண் நீதிபதி அமர்கிறார்.அவர் இவரின் வக்கீலை அழைத்து கடுமையாக எச்சரித்தமையால் அவரும் வழக்காட முடியாது என்று விலகிகொள்ள ,இவர் தன் கையே தனக்குதவி என்று முடிவெடுக்கிறார்.
இஷான் தான் கொள்ளை அடித்த பணத்தை தன் மாமாவிடம் கொடுத்து பதுக்கிவைத்தும் உள்ளார், இதுவரை 6 முறைக்கு மேல் சிறையிலிருந்தும் தப்புகிறார். இவரின் சாதுர்யமான சாந்தமான பேச்சால் காண்போரையெல்லாம் நட்பாக்கிக் கொள்கிறார். போலீசாரி
பார்க்கும் யாரிடமும் உன்னை இதற்கு முன் உங்களை எங்கோ ? பார்த்திருக்கிறேன் என்று சொல்லியே நண்பனாகிவிடும் சாமர்த்தியமும் கைவரப் பெற்றிருக்கிறார். அவ்வபோ து சிறைக்கு வரும் பார்வையாளர் வழியே, ஊறுகாய்க்குள் பாலீத்தினில் மடிக்கப்பட்டு ரூபாய் நோட்டுக்களை லஞ்சம் கொடுக்க தருவிக்கிறார். இவரை கெட்டவன் என்றே ஒதுக்கமுடியாதபடிக்கான ஒரு கதாபாத்திரம், அத்தனை அழகு இவர் அதை ஏற்றுச் செய்தவிதம், இவர் என்ன பாத்திரம்? ஏற்று நடித்தாலும் நஸ்ருதீன் ஷா தெரியமாட்டார், அந்த கதாபாத்திரம் தான் தெரியும், அப்படி ஒரு வித மாயவித்தை வாய்த்தவர்.[இவரின் மான்சூன் வெட்டிங் என்னும் படத்தின் தந்தை பாத்திரம் அத்தனை அழுத்தமானது,இதுவரை பார்க்காவிட்டால் விரைந்து பார்த்துவிடுங்கள்]
அடுத்ததாக சந்திரிகா என்னும் கதாபாத்திரம் [ஜூஹி சாவ்லா] அடடா!!! இதுவரை, இத்தனை அழுத்தமான, மனதில் பதியும், உண்மைத்தன்மையுள்ள, பாத் திரம் ஏற்று இவர் நடித்து பார்த்ததில்லை, அதற்காகவே இவரைப் பாராட்டலாம். 40களில் இருக்கும் அழகிய குடும்பப்பெண் சந்திரிகா ஒரு பத்திரிக்கையாளர், சிறைச்சாலை பற்றியும் மரணதண்டனை பெற்று தம் முடிவு நாளுக்கான பயணச்சீட்டை கையில் வைத்துக்கொண்டு கடைசி ரயிலுக்காக காத்துக்கொண்டிருக்கும் கைதியின் மனநிலையை பற்றியும் அறிய பெரும்பாடுபட்டு , ஜெயில் வார்டனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சிறைக்குள் வருகிறார். நல்லவேளையாக கைதிகள் யாரும் இவரிடம் பிரா சைஸ் கேட்கவில்லை,[!]
அடுத்ததாக சந்திரிகா என்னும் கதாபாத்திரம் [ஜூஹி சாவ்லா] அடடா!!! இதுவரை, இத்தனை அழுத்தமான, மனதில் பதியும், உண்மைத்தன்மையுள்ள, பாத்
மரணதண்டனைக்கைதிகள் மூவரும் நான் லீனியர் பாணியில் இவரிடம் பேட்டியளிக்கும் அந்த நீண்ட நெடும் காட்சி மிகவும் உற்சாகம் அளிக்கிறது. அது புதிய உத்தியாக எனக்கு தோன்றி அட சொல்லவும் வைத்தது. சந்திரிகா கைதிகளிடம் நம்பிக்கையை பெறுகிறார்.ஜக்கு தான் செய்த கொலையப்பற்றிய குற்ற உணர்வு மிகுந்திருப்பதால் தன்னால் பேட்டியளிக்க முடியாது தன் கேஸ் ஃபைலை பார்க்கச்சொல்லி பிடிவாதம் பிடிக்கிறார்.
நாக்யா தான் நிரபராதி என்று மட்டும் சொல்கிறார்.இஷானோ தான் செய்தது கொலையல்ல,ஒரு விபத்து,அப்படி அறியாமல் செய்த விபத்துக்கு தான் எப்படி? பொறுப்பாவேன் என்கிறார். நான் எதிர்பார்க்கும் விடுதலையை சட்டம் தராத பட்சத்தில் அதை தேடி எடுத்துக்கொள்வேன்,மூன்று உயிர்கள் போனது பற்றி நினைக்கையில் தனக்கு எந்த வருத்தமுமே உள்மனதில் ஏற்படவில்லை. என்கிறார். என்கிறார். எதற்கு பொய்யாக அனுதாபப்படவேண்டும் என்கிறார்.
நாக்யா தான் நிரபராதி என்று மட்டும் சொல்கிறார்.இஷானோ தான் செய்தது கொலையல்ல,ஒரு விபத்து,அப்படி அறியாமல் செய்த விபத்துக்கு தான் எப்படி? பொறுப்பாவேன் என்கிறார். நான் எதிர்பார்க்கும் விடுதலையை சட்டம் தராத பட்சத்தில் அதை தேடி எடுத்துக்கொள்வேன்,மூன்று உயிர்கள் போனது பற்றி நினைக்கையில் தனக்கு எந்த வருத்தமுமே உள்மனதில் ஏற்படவில்லை. என்கிறார். என்கிறார்.
இதே நேரத்தில் ஜெயிலர் சந்திரிகாவிற்கு சீஃப் ஜஸ்டீஸ் என்று ஒருவரை அறிமுகப்படுத்த, அவர் , நாக்யா என் மருமகன்,அவன் வாயால் நான் தான் என் மனைவியை கொன்றேன் என்று வாக்குமூலம் சாதுர்யமாக வாங்கி வீடியோகேசட்டில் பதிந்து கொடுத்துவிடு!!!, பின்னர் உன் கண்வன் உனக்கு கொடுக்க மறுக்கும் விவாகரத்தை நேரம் விரயமில்லாமல்,உன்னை அலைக்கழிக்காமல் நொடியில் வாங்கி கொடுக்கிறேன், என்கிறார்.
சந்திரிகாவோ தன் சொந்த விவகாரம் எப்படி? இவருக்கு தெரியும் என திகைக்க, அவர், நாக்யா என்னும் கொலைக்காரன் சம்பந்தப்பட்ட எந்த விஷயமும்? என் விஷயம் தான் என்கிறார். இப்போது தான் சந்திரிகாவின் வயது முதிர்ந்த கணவனை நாம் பார்க்கிறோம், திருமணத்துக்கு வரன் பார்க்கும் விடயத்தில் எப்படித்தான்? பெற்றோர்கள் சொதப்புகிறான்களோ ? என்றொரு கேள்வி நம்மில் அநேகம் பேருக்கு, நெட்டை குட்டையான, பொருத்தமில்லாத ஜோடிகளைப் பார்க்கையில் தொக்கி நிற்கும் பாருங்கள்?!!!.
சந்திரிகாவோ தன் சொந்த விவகாரம் எப்படி? இவருக்கு தெரியும் என திகைக்க, அவர், நாக்யா என்னும் கொலைக்காரன் சம்பந்தப்பட்ட எந்த விஷயமும்? என் விஷயம் தான் என்கிறார். இப்போது தான் சந்திரிகாவின் வயது முதிர்ந்த கணவனை நாம் பார்க்கிறோம், திருமணத்துக்கு வரன் பார்க்கும் விடயத்தில் எப்படித்தான்? பெற்றோர்கள் சொதப்புகிறான்களோ ? என்றொரு கேள்வி நம்மில் அநேகம் பேருக்கு, நெட்டை குட்டையான, பொருத்தமில்லாத ஜோடிகளைப் பார்க்கையில் தொக்கி நிற்கும் பாருங்கள்?!!!.
அப்படி நமக்கும் இந்த ஜோடியைப்பார்க்கையில் எரிச்சல் வருகிறது, ஈனத்தனமான குடிகாரன் அவன், சந்திரிகா அவனுக்கு தேநீர், பலகாரங்கள் தயாரித்துத்தர சிறிதும் அதை மதியாதவன், டீவீ பார்க்கிறேன் என்று தெரியலையா? என்கிறான். நடுநிசியில் சந்திரிகாவை கட்டிலில் நைட்டியில் பார்த்ததும் குடிபோதையில் கிறுக்கேற அப்படியே நொறுக்கியவன்,அவளை அவள் விருப்பமின்றி கூடுகிறான்.
அவளை சமைத்துபோட்டு, துவைத்துப்போட்டு எனக்கு தேவைப்படுகையில் காலை விரித்துப்படு என்று பட்டவர்த்தனமாக சொல்லும் ஒரு படைப்பு இந்த கணவன் பாத்திரம், ஆனால் அதுதானே? பல பெண்கள் வாழ்வில் இந்த கொடுமையான சமுதாயத்தில் நிதர்சனம். அப்படிப்பட்டவன் சந்திரிகா வேலைக்குப்போகிறாள் என்று கேள்விப்பட்டால் என்ன ஆகும்? மேலும் அந்த சீஃப் ஜஸ்டீஸ் வேறு சந்திரிக்காவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக பற்றவைக்க,கணவன் அவளை அடித்து துன்புறுத்துகிறான்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல ,தன்னை கேவலமாக மிருகத்தனமாக நடத்திவரும் கணவனுக்கு இவள் எப்படி பாடம் புகட்டினாள்?கணவனை எப்படி மறுநாளே ,முழுஒப்புதலுடனான விவாகரத்தை பதிய வைத்தாள் போன்றவற்றை ஒருவர் தவறவிடவே கூடாது.
இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தைப்பற்றி இங்கே எழுதவே கூசுகிறது,ஆனால் எழுதாமல் விடமுடியாது,ஆம்!!! அவன் பெயர் தான் கௌதம், அவனின் அண்ணன் ஒரு ஆளும்கட்சி எம் எல் ஏ, தீவிர ஓரினச்சேர்க்கையாளனான கௌதம் , சிறைக்குள் வரும் புதிய அப்பாவி கைதிகளை கண்கட்டி வித்தை செய்து, கை கால்களைக் கட்டி கதவடைத்து குதப்புணர்ச்சியும் செய்து விடுகிறான்,அதில் என்ன ஒரு கோரம் என்றால்,இந்த இழி குடி வந்தவன் ஒரு ஹெச் ஐ வி பாசிட்டிவ்,ஏற்கனவே இருவருக்கு இவன் எயிட்ஸை பரிசளித்திருந்தாலும்,எம் எல் ஏ அண்ணனின் தயவால் அரசு டாக்டரிடம் இருந்து ஹெச் ஐ வி நெகட்டிவ் என்று,சான்றிதழ் வாங்கி பொது செல்லிலேயே சுகபோகமாக கழிக்கிறான்,
தட்டிக்கேட்பார் யாருமில்லாததால் அவன் ஒரு தண்டல்காரந்தான்.தன்னை சகித்து கொண்டு,உடன்பட்டால்,சுதந்திரதின சிறைவிழாவில் முதலமைச்சரிடம் இருந்து மன்னிப்பு வாங்கித்தருவேன் என்று மார்தட்டும் ஒரு இழிபிறவி, சிறைக்கு வந்த அப்பாவி இளைஞன் மல்லியை ஒருநாள்,ஏமாற்றி, குதப்புணர்ச்சி செய்துவிட, போலீசார் தீவிர யோசனைக்கு பின்னர் அவனை லட்டி சார்ஜ் மட்டும் செய்கின்றனர்,மல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட,டாக்டர் மல்லிக்கும் நோய்தொற்றுக்கான சாத்தியம் அதிகம் என்கையில் நமக்கு தூக்கிவாறிப்போடுகிறது,சமுதாயத்தில் இப்படித்தான் எயிட்ஸ் நோய் அதிகம் பரவுகிறது என்னும் சுடும் உண்மை ,முகத்தில் அறைகிறது.நல்ல மனம் கொண்ட வார்டன் ஒரே வழிதான் உள்ளது என்று மல்லிக்கு மனநிலை பிழறிவிட்டது என்று சான்றிதழ் வாங்கி,அவனை மனநல மருத்துவமனைக்கு அனுப்பும் காட்சி நெஞ்சை பிசைகின்றது. சிறைச்சாலை என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று புடம் போட்டுக்காட்டிய படம் இதுவாகத்தான் இருக்கும்.
என்ன தான் இஷான் [நஸ்ருதீன் ஷா] ஒரு சுயநலமியாக இருந்தாலும் அவர் மனதிலும் இரக்கம் இருக்கிறது என்பதற்கு சான்றாக,மல்லிக்காக சிறை வார்டனிடம் மன்றாடும் இஷான் மனதில் நிற்கிறார்,மல்லி மனநல மருத்துவமனைக்கு மாறிச்சென்றுவிட்டாலும்,கௌதமால் இன்னொரு அப்பாவிக் கைதி பாதிக்கப்படக்கூடாது என்னும் எண்ணத்தால், முகத்துக்கு சோப்பு போட்டுக்கொண்டிருக்கும் கௌதமை பனியனில் கல்லைக்கட்டி அவன் முகத்தில் தாக்கி நிலைகுலையச்செய்தபின்னர் ,அவனின் பிறப்புறுப்பையும், விதைக்கொட்டையையும் நசுக்கித் தாக்கும் தீவிரம் படு யதார்த்தம்.
இன்னும் சொல்லாமல் விட்டது மோகன்[குல்ஷன் க்ரோவர்] என்னும் ஒரு சிறைவார்டன் கதாபாத்திரம்,என்னே ஒரு பங்களிப்பு?!!!எல்லா சிறைகளிலும் இவரைப்போல முன்மாதிரியாக சிறை வார்டன் இருந்துவிடவேண்டும் என்பேன்,முடிந்தவரை கைதிகளை மனிதனாக நடத்துகிறார்,ஒழுக்கத்தை தன்நம்பிக்கையை வளர்க்கிறார்,பல அரசியல் மாமாக்கள் குறுக்கீடுகள் இருந்தும் நேர்மை,நிதானம் கடைபிடிக்கிறார்.எல்லாவற்றிற்கும் மேலாக அரசாங்கத்திடம் நிதியுதவி கோராமல்,கைதிகளின் உழைப்பிலேயே பயிர்கள்,பழங்கள்,காய்கறிகள் விளைத்து,அவற்றை விற்று,நல்ல மளிகை பொருட்கள்,சிக்கன் என்று நல்ல சாப்பாடு போடுகிறார்.கைதிகளுக்கு நல்ல சுதந்திரம் கொடுத்து,வெளியுலகைப்பற்றிய நினைவே வரவிடாமல் செய்கிறார்.
அப்படி தன் சிறை தண்டனையை ஏறத்தாழ கழித்துவிட்ட,வயதான கைதி ஒருவர் வெளியே சென்றால் தனக்கு உறவினர் என்று யாரும் இல்லை,ஆகவே தனக்கு நன்னடைத்தைக்கு வழங்கப்படும்,ரெமிஷன் வேண்டாம் என்று கெஞ்சும் விந்தையும் இங்கே நடக்கின்றது. ஆனால் வெளியேற விரும்பியவன் மனம்போல வெளியேறுவதும்,வெளியேற விரும்பாதவன் மனம்போல சிறையினுள்ளேயே தங்கிவிடுவதும் என்ன சாத்தியமா,சிறையில்?அதற்கு ஏற்ப ,சுதந்திர தின சிறை விழாவில் வெளியேற ஏங்கும் நாக்யாவுக்கும்,இஷானுக்கும் முதலமைச்சரின் மன்னிப்பும்,விடுதலையும் கிடைக்காமல்,வெளியேற விருப்பமேயில்லாத அந்த வயதான சிறைக்கைதி மன்னிப்பு பெறுவது நிகழ்கிறது,கூடவே ஓரினச்சேர்க்கையாளன் கௌதமிற்கும் மன்னிப்பு கிடைக்கிறது,அதுதானே வாழ்க்கை?
எனவே அந்த வயதான கைதி,மிகவும் நொந்தவர்,மண்ணள்ளிக்கொட்டும் சம்மட்டியைக்கொண்டு கௌதமை பின்மண்டையில் அடித்து,மூளையை பிளக்கிறார்,போலீசாரைப் பார்த்து இப்போது நான் இங்கே தானே இருக்கவேண்டும் என்கிறார்.மிக அருமையான காட்சியது.ஒரு சில திரைப்படங்கள் அர்த்தமற்ற எரிச்சலைடய வைக்கும் ட்விஸ்டுகளைக் கொண்டிருக்கும்,தமிழில் ஏகம் உதாரணம் உண்டு,அவற்றில் இருந்து மிகவும் மாறுபட்ட கதைக்கு தேவையான ட்விஸ்டுகளை இப்படம் கொண்டிருப்பதாலேயே எனக்கு இப்படம் மிகவும் பிடித்தது என்பேன். படத்தின் முடிவு என்பதை ஒருவர் அவ்வளவு எளிதாக கணித்துவிடவே முடியாதது என உறுதியாகச் செல்வேன்,அது தான் ஒரு நேர்த்தியான திரைக்கதையின் பலம்,
ஒரு பொருளின் தரத்தை மதிப்பிட ஒப்பீடுகள் தேவையாக இருக்கிறது,அந்த கருமத்துக்காகத்தான் நாம் ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிடுகிறோம்,அந்த வகையில் இந்த படத்துக்கு ஈடான ஒப்பீடு எது என்றால் அப்படி ஒன்று இல்லை எனச்சொல்லவேண்டியிருக்கிறது,இது அப்படி ஒரு படைப்பாக மிளிர்கிறது.
ஜக்குவுக்கு தூக்கு தண்டனைக்கான தேதி முடிவாகிறது,நாக்யாவுக்கு துக்கம் மிகவும் தொண்டையை அடைக்கிறது,இஷான் சிறையிலிருந்து தப்பிக்க நாளும் குறித்தாகிவிட்டது,சந்திரிகா தன் கொடுமைக்கார கணவனிடமிருந்து விடுதலை கிடைக்கப்போகிறதை எண்ணி மகிழ்ந்தவள்,தனக்கு உள்ளத்துக்குள் குறுகுறுப்பாய் ஒன்றை உணர்கிறாள்,ஆம்! அவளுக்குள் காதல் பூத்துள்ளது,அது யார் மீது?நாளையே தூக்கில் தொங்க இருக்கும் ஜக்குவின் மீதா?நிச்சயம் சந்திரிகா இந்த டாகுமெண்டரி படத்தை வைத்து தனக்கு விடுதலை வாங்கிகொடுப்பாள் என நம்பும் நாக்யாவின் மீதா?அல்லது சிறையிலிருந்து தப்பி மனம் போல வாழ்க்கை வாழத்துடிக்கும் கோட்டிக்கார இஷான் மீதா?
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை,ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிறார்களே?அது இந்த ஜக்கு,மற்றும் நாக்யா விஷயத்தில் நடக்குமா?!!!பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என்கிறார்களே? [கமலின் தசாவதாரத்தை சொல்லவில்லை] அப்படி ஒன்று இருக்கிறதா? விடையில்லா கேள்விகளுக்கு இயக்குனர் நாகேஷ் குக்குனூர் எப்படி விடையெழுதினார் என்று காணத்தவறாதீர்கள்.நிச்சயம் நான் முடிவை சொல்லாமல் போனதற்காக என்னை பாராட்டுவீர்கள் என நம்புகிறேன்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை,ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிறார்களே?அது இந்த ஜக்கு,மற்றும் நாக்யா விஷயத்தில் நடக்குமா?!!!பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என்கிறார்களே? [கமலின் தசாவதாரத்தை சொல்லவில்லை] அப்படி ஒன்று இருக்கிறதா? விடையில்லா கேள்விகளுக்கு இயக்குனர் நாகேஷ் குக்குனூர் எப்படி விடையெழுதினார் என்று காணத்தவறாதீர்கள்.நிச்சயம் நான் முடிவை சொல்லாமல் போனதற்காக என்னை பாராட்டுவீர்கள் என நம்புகிறேன்.
இந்தப்படம் சிறைக்குள்ளே கிடைத்த இயற்கை வெளிச்சம்,மற்றும் இரவில் குண்டு பல்பு வெளிச்சத்தில் படம் பிடித்தமையால்,பச்சை மற்றும் பழுப்பு நிற டோன்களிலேயே காட்சிகள் அமைந்திருக்கின்றன,ஆயினும் ஒளிப்பதிவு இயக்குனர் அஜயன் வின்செண்ட் தன் பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார். இப்படம் 36 நாட்களில் மிகவும் வேகவேகமாக படம் பிடிக்கப்பட்டதாம், ஏன் தெரியுமா?இப்படம் எடுத்தது ஹைதராபாதின் பழைய சிறைச்சாலையில்,அது இடிக்கப்படப்போவதை அறைந்த குழு அங்கே சென்று அனுமதி கேட்க,மிகுந்த கெடுபிடிக்கு பின்னர் அனுமதி கிடைத்ததாம்,
ஒவ்வொருவரும் மிகுந்த அற்பணிப்புடன் பங்காற்றியதால்,படம் விரைந்து முடிக்கப்பட்டதாம்,பின்னர் சிறைச்சாலை தரை மட்டமாகி இப்போது அங்கே ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது எனப்படித்தேன்.சலீம் சுலைமானின் பிண்ணணி இசை மிகமிக நேர்த்தி,ஒரு பிண்ணணி இசை எங்கு ஒலிக்கவேண்டும், எங்கே அடக்கிவாசிக்கவேண்டும்? என்று எண்ணி பங்காற்றியுள்ளனர். அற்புதம்!!!.இதுபோல நல்ல படைப்புகள் வணிகரீதியாக நன்றாக ஓடாமல் போவது தவறே அல்ல, யாரும் பாராமல் போவது தான் தவறு என்பேன், ஆகவே இதையும் இதைப்போல மாற்று சினிமாக்களையும் தேடிப்பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொருவரும் மிகுந்த அற்பணிப்புடன் பங்காற்றியதால்,படம் விரைந்து முடிக்கப்பட்டதாம்,பின்னர் சிறைச்சாலை தரை மட்டமாகி இப்போது அங்கே ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது எனப்படித்தேன்.சலீம் சுலைமானின் பிண்ணணி இசை மிகமிக நேர்த்தி,ஒரு பிண்ணணி இசை எங்கு ஒலிக்கவேண்டும், எங்கே அடக்கிவாசிக்கவேண்டும்? என்று எண்ணி பங்காற்றியுள்ளனர். அற்புதம்!!!.இதுபோல நல்ல படைப்புகள் வணிகரீதியாக நன்றாக ஓடாமல் போவது தவறே அல்ல, யாரும் பாராமல் போவது தான் தவறு என்பேன், ஆகவே இதையும் இதைப்போல மாற்று சினிமாக்களையும் தேடிப்பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தீன் தீவாரின்=சீனப்பெருஞ்சுவர்
படம் தரவிறக்க சுட்டி:-
திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
Directed by | Nagesh Kukunoor |
---|---|
Produced by | Metalight Productions (Elahe Hiptoola, Sanjay Sharma) |
Written by | Nagesh Kukunoor |
Starring | Nagesh Kukunoor Naseeruddin Shah Jackie Shroff Juhi Chawla |
Music by | Salim-Sulaiman |
Cinematography | Ajayan Vincent |
Editing by | Sanjib Datta |
Distributed by | Shemaroo Video Pvt. Ltd. |
Release date(s) | 1 August 2003 |
Country | India |
Language | Hindi |
Budget | 2.1 crore (US$455,700) |
Gross revenue | INR 4,703,000 (India) (15 August 2003) (sub-total) |