அருமை நண்பர்களே!!!
சாருவின் 'சரசம் சல்லாபம் சாமியார்' புத்தகம் தடை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இதுவரை படிக்காதவர்கள், அதனை வாங்கிப் படித்து, நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள். ஏனெனில், தடை செய்யப்பட்டு விட்டால், அப்புத்தகம் இனிமேல் எங்கும் கிடைக்காது. நூலகங்களிலும் படிக்கக் கிடைக்காது, மறு பதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்த புத்தகம் படிக்கும் போதே நம் குடும்பத்தில் ஒருவர் இதுபோல ஆன்மீக காலிகுலாவின் ஆசிரமத்தில் மாட்டியிருந்தால் என்னாவா யிருக்கும்?!!! என்ற பதட்டம் ஆட்கொள்வதை தவிர்க்க இயலாது. அவ்வளவு நிஜமான சுவையான எழுத்து நடையைக் கொண்டது. ஆனால் இந்த உலகத்தில் யாரும் உண்மையை பேசவே கூடாதே? !!!! யாரையாவது விமர்சித்தால் கூட சார் போட்டு தானே விமர்சிக்க வேண்டும். ஐயகோ!!!
கேட் வின்ஸ்லேட் நடித்த ஹோலிஸ்மோக் என்னும் படம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஆஸ்திரேலிய இளம்பெண் இந்திய போலி சாமியாரிடம் மாட்டிக்கொள்வாள், சாமியாரிணியும் ஆகிவிடுவாள். அவளை அவளின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று பகீரதபிரயத்தனம் செய்து டீ-ப்ரோக்ராமிங் கவுன்சிலிங் செய்வார்கள், அது எத்தனை கடினமானது? கொடுமையானது? அவமானகரமானது? என்று படம் பார்த்தால் மட்டுமே ஒருவருக்கு புரியும். இந்திய போலிச் சாமியார்களால் ஆட்கொள்ளப்படும் வெளிநாட்டு இளம் பெண்களை திருத்துவதற்கே அமெரிக்காவில் நிறைய டீப்ரோக்காமர்கள் ஆஃபீஸ் போட்டு அமர்ந்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? !!!
மதங்கள் தங்களது வராலாற்றுப் பாத்திரத்தை இழந்த பிறகு புதிய வழிபாட்டுக் குழுக்கள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்ள விழைகின்றன. கடவுள்கள் மனிதர்களிடமிருந்து அன்னியமான பிறகு மனிதக் கடவுளர்கள் எங்கெங்கும் அவதரிக்கின்றனர். என்ற மனுஷ்யபுத்திரனின் பலம் வாய்ந்த மதிப்புரையைக் கொண்டிருக்கிறது
உலகில் மிகக்கொடியது எந்த வகையிலேனும் பிறரால் ஏமாற்றப்படுதலே ஆகும், ஆன்மீக பிராது நித்யானந்தன் போன்றவர்கள் இன்று ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்தக நிறுவனமாக மாற்றிவிட்டனர் என்றால் மிகையில்லை. சாமியார்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும் காமக்களியாட்டங்கள், சாமியாரின் ஊருக்கே உபதேசம் ரக அபாயகரமான நிழல் நடவடிக்கைகள் . சொத்துக்குவிப்புகள்.
அவை அப்பாவி குடும்பஸ்தர்கள், மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகளது நம்பிக்கைகளை.வாழ்வில் எதிலும் நாட்டம் போய் நிம்மதி தொலைத்தவர்களின் அந்தரங்கங்களை வெகு ஆழமாய் காயப்படுத்துவது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு? சுய பச்சாதாபமுடையவர்களாக, மனப்பிறழ்வு கொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக எடுத்தாண்டிருக்கிறார். இப் புத்தகம் பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டுப்போய் விடக்கூடாது என்பதாலேயே அதைப்பற்றி எழுத அவசரம் காட்டவில்லை. ஆனால் இந்த புத்தகம் ஆளும் கட்சியினரின் மிரட்டலின் பேரில் மிகுந்த கெடுபிடிக்குள்ளாயிருக்கிறது .
தமிழில் மிக அபூர்வமான நெஞ்சுரத்துடன் எழுதப்பட்ட புத்தகம், கண்மூடித்தனமாக சாமியார்களின் மகுடிக்கு பாம்பாய் ஆடும் கார்பொரேட் பக்தர்களுக்கு இதை நான் பலமாய் சிபாரிசு செய்கிறேன். சாரு நித்தியானந்தனிடமிருந்து நிறைய பணம் வாங்கிக்கொண்டு அவனுக்கு கொபச வேலை செய்தார் என்று பழி வந்தது, ஆனால் புத்தகம் படிக்கும் ஒருவருக்கு அது எவ்வளவு வடிகட்டிய பொய் என்று தெரியவரும்.
இந்த புத்தகம் படித்து முடித்த பின்னர் வாசித்தவருக்கு ஏற்படும் நித்தியின் மீதான் கொலைவெறி அடங்க நாளாகும், அவனுக்கு கால் கழுவிவிட கட்டணம் எவ்வளவு? அவனை வைத்து தங்கத்தேர் இழுக்க கட்டணம் எவ்வளவு?அவன் ஆசிரமத்தில் சேர வாங்கப்படும் உறுதிமொழிப்பத்திரம் எவ்வளவு பயங்கரமானது? பிடதி ஆசிரமத்தில் விடிய விடியப் பாடப்படும் ? டாடி மம்மி வீட்டில் இல்லே,தடைபோட யாருமில்ல.? மெட்டிலமைந்த பிரச்சாரப்பாடல்களைப் பற்றிய அலசல்கள்.
அவன் பிரித்த குடும்பங்கள் எத்தனை? ஆசிரமத்துக்கு வரும் தம்பதிக்கு அவனின் ஆஸ்தான வழக்கறிஞர் வழக்காடி விவாவகத்து வாங்கித்தர எவ்வளவு கட்டணம்? அவன் சாமியாரினியாக்கிய அழகிய, நன்கு படித்த பெண்கள் தான் எத்தனை? இதில் நித்தியானந்தன் தன் மோசடியை எப்படி துவங்கினான்? எப்படி நடிகைகளை வசமாக்கினான்?,
ஏன் தமிழகத்தில் ஆசிரமம் துவங்காமல் பெங்களூருவின், பிடதியில் ஆசிரமம் துவங்கினான்? பிரம்மச்சரியம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு சுமார் 5000 குடும்பங்களை சின்னாபின்னமாக்கிய கொடியமிருகத்தை எத்தனை முறை தூக்கில் போட்டாலும் தகும் என ந்மக்கு தோன்றவைக்கும்.
ஏன் தமிழகத்தில் ஆசிரமம் துவங்காமல் பெங்களூருவின், பிடதியில் ஆசிரமம் துவங்கினான்? பிரம்மச்சரியம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு சுமார் 5000 குடும்பங்களை சின்னாபின்னமாக்கிய கொடியமிருகத்தை எத்தனை முறை தூக்கில் போட்டாலும் தகும் என ந்மக்கு தோன்றவைக்கும்.
சாருவின் மனைவி மற்றும் 300 பேர்,நித்தியானந்தனுடன் கும்பமேளாவுக்கு தலைக்கு 1லட்சம் கொடுத்து மாட்டிக்கொண்டது எப்படி? எல்லோரிடமும் ஓசியிலேயே ஓ** **** நித்தியானந்தனுக்கும் ,ஏனைய மகா அவதார் பாபாஜி, காசி மாநகரத்தின் அகோரிகள், சாய்பாபா,போன்ற மகான்கள் எப்படி வேறுபடுகின்றனர்?என்று அடி ஆணிவேரையே உருவி ஆராய்ந்திருக்கிறார்.
இது குமுதம் ரிப்போரில் வெளிவந்திருந்தாலும் தொகுப்பாக படிப்பதில் உள்ள சுகமே தனி, படிக்காத தொடர்களை அருமையாக தொடர்ச்சியாக படிக்க முடியும்.புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தில் இடையே நம் நண்பர் கருந்தேள் ராஜேஷைப்பற்றியும் அவரின் மனைவியை பிடதி ஆசிரமத்திலிருந்து மீட்க உதவியதாக மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.
எல்லவற்றிற்கும் மேலாக கடைசி 29வது அத்தியாயத்தில் சாரு நித்தியானந்தனுக்கு முன்வைத்த 25 சாட்டையடி கேள்விகள், நித்தியானந்தனுக்கு நாக்கு என ஒன்றிருந்தால் அதைபிடுங்கிக்கொண்டு சாகட்டும், அவனை நடைபிணமாக்கும் இந்த சரசம் சல்லாபம் சாமியார் புத்தகம், இதற்கு யாரும் முன்னுரை எழுதாது என்பது மாபெரும் இழுக்கு, இதை ஆங்கிலத்தில் அதன் சாரம் கெட்டுப்போகாமல் மொழி பெயர்க்கவேண்டும் என்பதே என் அவா.நடக்குமா பார்ப்போம்?!!!!
இதை என் உறவினர்கள் அத்தனை பேருக்குமே சிபாரிசு செய்தேன், அத்தனை பேருமே அதை கண்கள் அகலக் கேட்டு நித்தியானந்தனை அஷ்டோத்திர கெட்டவார்த்தைகளால் திட்டி மனதில் உள்ள பாரத்தை இறக்கினர், ஒரே புத்தகத்தை பல வருடங்களுக்கு பிறகு எங்கள் வீட்டிற்குள் போட்டிப் போட்டு பறித்து படித்தோம் என்றால் அது இந்த புத்தகம் தான்.
இன்றைய தேதியில் இத்தனை தைரியமாக ஒரு ஆன்மீக பிராதுவை விமர்சித்து இவ்வளவு ட்ரான்ஸ்பிரன்ஸியாக அதுவும் ஒரு தமிழ் இலக்கிய உலகில் எழுதுவது துர்லபமே, சாரு இந்த புத்தகம் எழுதியதற்கு அவருக்கு கோடானு கோடி நன்றிகள்,இதை மிகுந்த நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பதிப்பித்த கவிஞர், மனுஷ்யபுத்திரனின் உயிர்மை வெளியீட்டிற்கு மிக்க நன்றிகள்.புத்தகம் விலை-ரூ85
இன்றைய தேதியில் இத்தனை தைரியமாக ஒரு ஆன்மீக பிராதுவை விமர்சித்து இவ்வளவு ட்ரான்ஸ்பிரன்ஸியாக அதுவும் ஒரு தமிழ் இலக்கிய உலகில் எழுதுவது துர்லபமே, சாரு இந்த புத்தகம் எழுதியதற்கு அவருக்கு கோடானு கோடி நன்றிகள்,இதை மிகுந்த நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பதிப்பித்த கவிஞர், மனுஷ்யபுத்திரனின் உயிர்மை வெளியீட்டிற்கு மிக்க நன்றிகள்.புத்தகம் விலை-ரூ85
எழுத்து சுதந்திரம் இல்லா ஜனநாயகம் ஒரு போலி ஜனநாயகம்?!!!
======00000=======