அருமை நண்பர்களே!!!
நண்பர் கருந்தேளுடன் |
நண்பர் மயில்ராவணனுடன் |
இந்த விடுமுறையில் செலவு செய்த பணத்துக்கு [தலைக்கு 20 ரூபாய்] பிரயோசனமாக இருந்த ஒன்று என்று!!! எனப் பார்த்தால் வண்டலூர் மிருககாட்சி சாலையில் [செவ்வாய் விடுமுறை] லயன் சஃபாரிக்கு [தலைக்கு 20 ரூபாய்] சென்று வேனில் போய் 3 அடி தொலைவில் இருந்து ஆண்சிங்கம்,பெண்சிங்கம் இரண்டையும் பார்த்தது,[ஹைதராபாதின் மிருககாட்சி சாலை எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்]வெண் புலிகளின் விளையாட்டையும் பார்த்தது,பின்னர் தலைக்கு நூறு ரூபாய் தந்து யானை மீது குடும்பத்துடன் சவாரி செய்தது[4-00 முதல் 5-30வரை மட்டுமே]மிக அருமையான அனுபவம் என்பேன்,
இதுவரை கோவில் யானையிடம் ஆசி மட்டும் வாங்கியிருந்த எனக்கு அது மிகப்புதிது, 2008ல் இருந்தே யானை சவாரி புழக்கத்தில் உள்ளதாம்,என் முறை வர சுமார் 3 வருடமாகியிருக்கிறது, உள்ளே சுற்றிப்பார்க்கச் செல்ல சைக்கிள் வாடகைக்கு கிடைக்கிறது[டெபாசிட்-200ரூபாய்] மணிக்கு 15ரூ முதல் 30 ரூ வரை.[கியர் சைக்கிள்] ,மிருக காட்சி சாலையை பணியாளர்கள் ஓரளவுக்கு நன்றாகவே பராமரிக்கிறார்கள். நான் சிறு வயதில் பார்த்திருந்த ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் மிகவும் வளர்ந்து ஆஜானுபாகுவாயிருந்தது புகைப்படங்களை பிகாசாவில் ஏற்றிய பின்னர் பகிர்கிறேன், விடுமுறைக்கு பின்னான காலகட்டம் மிகவும் சோம்பேரித்தனமாய் உள்ளது. இன்று காலை சரியாக 8-30 மணிக்கு வேலைக்கு வந்தேன்.எதோ சோளப்பொரி போல வேலைகள் இருந்தது,5-30க்கே அவற்றை முடித்த பின்னர் இதோ தட்டச்சுகிறேன். இனி மேல் தான் ஒவ்வொன்றாக அசைபோட்டு எழுதவேண்டும்.
ஒருமாத விடுமுறையில் கண்டுகளித்தவை தான் எத்தனை?சென்ற பயணங்கள் தான் எத்தனை?.என் செல்போனில் நிறைய மிஸ்கால்கள் இருந்தன, கோவிலில் உள்ளே இருந்ததால் எடுத்திருக்க முடியாமல் போயிருக்கும்,திரும்ப அழைத்துப்பார்த்தால் அநேகம் ஏர்டெல் காலர் ட்யூன் எண்ணாக இருந்து தொலைத்தமையால் நிறைய எண்களை திரும்ப அழைக்கும் எண்ணத்தை கைவிட்டேன்,நண்பர்கள் தவறாக எண்ண வேண்டாம். அதாவது பரவாயில்லை!!! வண்டியில் போய்க்கொண்டே இருக்கும் போது போன் வருகிறது, ஆனால் ஒன்றும் கேட்க வில்லை,சரி என்று கட் செய்ய எண்ட் பட்டன் ப்ரெஸ் செய்தால்,எதோ ஒரு சர்வீஸ் ஆக்டிவேட் ஆகிறது, எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பா!!?இது வரை நான் காலர் ட்யூனே வைத்ததில்லை.வைக்கவும் போவதில்லை.
என்வீடான பம்மலில் இருந்து பல்லாவரம் [2கிமீ தூரம்]போக LPG ல் ஓடும் ஆட்டோவிற்கு 1மாதம் முன்னர் 40 ரூபாய் வாங்குவார்கள்,இப்போது பெட்ரோல் 3 ரூபாய் விலை உயர்ந்ததால் அத்துடன் 10 ரூபாயை அடாவடியாக உயர்த்தி 50 ரூபாய் ரவுண்டாக வாங்குகின்றனர்.இதற்காகத்தான் குடும்பத்துடன் வெறும் 10கிமீ போனாலும் ஃபாஸ்ட்ட்ராக் அல்லது சென்னை கால் டாக்ஸி சொல்லி தருவித்து அதிலேயே செல்கிறோம்.ஆட்டோ அராஜகத்துக்கு முன் துபாய் டாக்ஸியே தேவலைப்பா!!!
ஒருமுறை ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸியில் என் வீடு இருக்கும் பம்மலில் இருந்து தாம்பரம் செல்ல என்னிடம் 173 ரூபாய் வாங்கிவிட்டான்[மீட்டர் காட்டிய தொகை].என் மனைவியோ போனில் பேசுகையில்,130 ரூ தான் வரும் முதல் ஐந்து கிலோமீட்டர் சென்றதும் தான் மீட்டரே ஓட ஆரம்பிக்கும் என்றாள்.அப்போது தான் கால் டாக்ஸி மூன்று கிலோமீட்டருக்கு முன்பே அதாவது அவன் ஏர்போர்டிலே இருந்து வருகையிலேயே, மீட்டரை போட்டுக்கொண்டு வந்தது புரிந்தது,எப்படியெல்லாம் நம்மை ரூட் கேட்டும்,பல கேள்விகள் கேட்டும்,எஃப் எம் கேட்டும்,காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியும் திசை திருப்புகின்றான்கள்?.
அது தான் நான் சென்னையில் அடைந்த ஒரே ஏமாற்றம். அதன் பின்னர் கால் டாக்ஸி பிடிக்கும் போது மீட்டரை ஃப்ரெஷாக கண்முன்னரே போட சொன்னேன். இதாவது தேவலை, ஒரு முறை எக்மோருக்கு ரயில் பிடிக்க,கால் டாக்ஸியில் செல்லும் போது கிண்டி ஸ்பிக்கின் எதிரே உள்ள கூட்டமான ஒரு பெட்ரோல் பங்கில் சொல்லாமலே நுழைந்த கால் டாக்ஸி பெருங்கூட்டத்தில், நுழைந்து கேஸ் ஃபில் செய்தான்,10 நிமிடம் ஆகியிருந்தது,அதற்கு வருத்தம் கூட படவில்லை,எக்மோரில் மீட்டர் தொகை செலுத்துகையில் 10 நிமிடம் வெயிட்டிங் தொகை 8 ரூபாயை சரியாக கழித்துக்கொண்டே செலுத்தினேன். எப்போதும் டிப் கொடுப்பவன், அன்று கொடுக்கவில்லை. நீங்களும் கண்முன்னர் நடக்கும் தவறுகளை விடாமல் கேளுங்கள்,அப்போது தான் சிலரேனும் திருந்துவார்கள்.
=====0000=====