டஸ்டின் ஹாஃப்மேன் எனக்கு மிகப்பிடித்த நடிகர், இவர் ஸ்ட்ரா டாக்ஸ் 1971 படத்தில் ஒரு கணித ஆராய்ச்சியாளர் கதாபாத்திரம் ஏற்றிருப்பார், அத்தனை இயல்பாயிருக்கும், ஊரக இங்கிலாந்தில் தன் அழகிய மனைவியின் பாரம்பரிய வீட்டிற்கு விடுமுறைக்கு விலையுயர்ந்த ஜாகுவார் கன்வெர்டிபிளில் வருவார், நீண்ட விடுமுறைக்கு வேண்டி வீட்டை புராதான பொருட்களைக் கொண்டு உள் அலங்காரம் செய்வார்.
அவ்வூரில் இவர் மனைவியின் பழைய பள்ளித் தோழர்களுக்கும் ஊராருக்கும் இவர் பழம் போலத் தெரிவார்,அந்த நண்பர்கள் இவரது வீட்டுத் தொழுவத்தின் மேற்கூரை ஓட்டை மாற்ற பணிபுரிவர்,எத்தனை மெதுவாக வேலை செய்ய வேண்டுமோ அப்படி, அவர்களின் நோக்கம் இவர் மனைவியை எப்பாடு பட்டாவது அடைவது.அதற்கு கொம்பு ,சீவி விடுவது போல இவர் மனைவியும் அவர்கள் முன்பு அப்படி சிறப்பு தரிசனம் தந்து சீண்டுவாள், அவர்கள் பற்றி இவரிடம் புகார் கூறி சிண்டும் முடிவாள்
இதனால் மேலும் கடுப்பானவர்கள் இவர் மீது தெரு நாய்க்கு உண்டான காய்ச்சலில் இருப்பர்,இவரை ஒவ்வொரு தருணத்திலும் மட்டம் தட்டிக் கொண்டே இருப்பர்,
இவரின் படித்த பாலிஷான புறத் தோற்றத்தை வைத்து எளிதாக ஏமாற்றி, வேட்டைக்கு அழைத்துப் போய் காட்டில் தனியே விட்ட அந்த குழு,
விரைந்து வந்து இங்கே வீட்டில் தனியே இருக்கும் மனைவியை ஒருவர் பின் ஒருவராக வன்புணர்ந்து விடுவர்,( இதில் அக்காட்சியில் அவளின் பழைய காதலன் அவளை வன்புணர்கையில் அதை விரும்பி ஒத்துழைத்தாளா? அல்லது கணவனை நினைத்துக் கொண்டாளா? என பட்டி மன்றமே இணையத்தில் உண்டு)
அக்கொடியவர் குழு அத்துடன் நில்லாமல் இவரின் வளர்ப்புப் பூனையையும் தூக்கிலிட்டுக் கொன்று விடுவர்,
அது முதல் வீறு கொண்டு புது மனிதனாகப் புறப்படும் இவர், மெல்ல காய்நகர்த்தி காதல் மனைவி பார்வையிலும் நம் மனதிலும் வீரனாய் உயருவார்,
இவரது வீட்டில் நடக்கும் கடைசி 20 நிமிட வன்முறைக் காட்சிகள்,துப்பாக்கிச் சூடு காட்சிகள் என்றும் மறக்க முடியாது, அப்படக்குழுவாலே திரும்ப எடுக்க முடியாது
அந்த கொடிய நண்பர்களையும் ஊரின் பிற மூத்த அயோக்கியர்களையும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் புஷ்பம் போல அங்கே தண்டிப்பார், அட்டகாசமான அண்டர்ப்ளே என்றால் இப்படத்தில் டஸ்டின் ஹாஃப்மேன் செய்தது தான்,
இதில் கணவன் மனைவிக்குள் அடுத்தடுத்து நிகழும் ரொமான்ஸ் மிக அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் . இந்த கல்ட் படத்தையும் ரீமேக் செய்து பின்னாளில் சோரம் போக வைத்தனர்
PS: இப்படத்தை தழுவி மலையாளத்தில் வெளியான வரத்தன் திரைப்படம் பற்றி இங்கே படியுங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=10156772621106340&id=750161339