பெண்ணின் கர்ப்ப பாத்திரத்தை முன்வைத்து செய்யப்படும் கௌரவக் கொலைகளை நேர்மையாக பதிவு செய்த திரைப்படங்களின் பட்டியலில் சய்ராத் மராத்தி திரைப்படத்துக்கும் முக்கிய இடமுண்டு
இப்படத்தில் முற்பாதி மட்டுமே வணிக நோக்கில் அமைந்துள்ளது, படம் இவர்கள் கரும்புக்காட்டில் பதுங்கித் தப்புகையிலேயே வேறு வடிவம் பெற்றுவிடுகிறது, கிட்டத்தட்ட அந்த 45-60 நிமிடத்துக்கு பின்னணி இசை இல்லை,ஹைதராபாதின் குன்றுகள் நிரம்பிய நிலப்பரப்பில் நிஜமான சேரியை தெலுங்குப் படங்களே இத்தனை நிஜமாக காட்டியதா தெரியவில்லை, குணா படத்தில் கமல் இந்த நிலப்பரப்பை சரியாக உள்வாங்கி செட் போட்டிருப்பார், சாங்கியா என்கிற நாகராஜோ நிஜமாகவே அச்சேரியை காட்டிவிட்டார்,எனக்கு இந்தியும் தெலுங்கும் புரிந்து கொள்ள முடியும், கஷ்டப்பட்டு மராத்தியையும் உள்வாங்கிக் கொண்டேன், இது சென்சார் காப்பி ப்ரிண்ட் ஆனால் சப்டைட்டில் இல்லை, படத்தை இங்கே நான் பார்ப்பதற்குள் போன வாரம் தூக்கிவிட்டனர், படம் இங்கு நல்ல வெற்றி, சாங்கியா தலைமையில் அரச்சியும், பர்ஷ்யாவும் இங்கே வந்திருந்த வீடியோவைப் பார்த்தேன், நமக்குத் தேவையானவை எல்லாம் கால தாமதமாகத் தான் கண்ணில் படும்
படத்தை விரிவாக விரைவில் எழுதுவேன்