தப்புத் தாளங்கள் [1978] இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகங்கள்-பாகம்-1தப்புத்தாளங்கள் 1978 திரைப்படத்தில் ரஜினியின் தம்பி சோமா கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று  பெரும் பொருளீட்டும் கதாபாத்திரம். நம் சமகாலத்தின் பிரபல கொலைகாரனும், அரசியல் மற்றும் பெண் தரகனும்,சாராய வியாபாரியுமான  ஆட்டோசங்கரின்  கேரக்டர் ஸ்கெட்சை தப்புத்தாளங்கள் படத்தில் ரஜினியின் தம்பி சோமா என்னும் நடிகர் சுந்தர்ராஜ் செய்த கதாபாத்திரத்திற்கு அப்படியே கொடுத்திருந்தார் பாலச்சந்தர்.

ஆட்டோ சங்கர்   70களின் பிறபாதிகளிலேயே குற்றங்களை செய்யத் துவங்கிவிட்டான், அதனால் தான் இந்த கேரக்டர் ஸ்கெட்ச்களின் பொருத்தத்தை எண்ணி வியந்தேன், ஆட்டோ சங்கர்  1980ன் பிற்பாதியில் அவன் மாட்டியது அவனது கெட்ட நேரத்தில், அப்போது அவன் நிறைய கொலைகளை செய்து விட்டிருந்தான், அவன் அன்று மாட்டியிருந்திருக்காவிட்டால் அவனும் இன்று ஒரு கல்வித்தந்தை.

சுந்தர் ராஜை தமிழ் கன்னடம் என ஒரேநேரத்தில்  இப்படம் மூலம் அறிமுகம் செய்தார் இயக்குனர்.நடிகர் சுந்தர் ராஜ் தமிழர் என்றாலும் ரமேஷ் அரவிந்த் போலவே பாலச்சந்தரால் கன்னடத்திலும் அறிமுகம் செய்யப்பட்டு அங்கே பிரபலமாகிவிட்டார்,

 படத்தில் சோமா   திருவான்மியூர் போன்ற ஓர் புறநகரின் பலே சாராய வியாபாரி, பலே பெண் தரகன், பலே கொலைகாரன்,பலே ரேபிஸ்ட், பல பெண்களை ஒப்பந்தம் போட்டு குடும்பம் நடத்தி தூக்கி எறிபவன். பைக்கையும் அடிக்கடி மாற்றும் பழக்கம் கொண்டவன். படத்தில் இவரது ஜாவா பைக்கும் ஒரு கதாபாத்திரமாகவே காட்டியிருப்பார் இயக்குனர்,

இவருக்கு ஒரு வித்தியாசமான மேனரிசத்தை வைத்திருந்தார் இயக்குனர்,சோமா தன் புட்டத்தாலேயே எதிராளியை ஆணோ பெண்ணோ அவர்களை அவர்களின் இடுப்பில் இடிக்கும் ஒரு வினோதமான பழக்கம் கொண்டவன், தன் ஜாவா பைக்கில் வீட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி வலம் வருபவன்.
இந்த அயோக்கியனைக்கூட மரியா என்னும் அனாதைப் பெண் கதாபாத்திரம் காதலிக்கிறாள்,அவளுக்கு அவன் எத்தனை அயோக்கியத்தனம் செய்தாலும் கள்ளமில்லா சிறுவயது தோழமையையே அவள்  சோமாவிடம் எதிர்பார்க்கிறாள்,ஆனால் சோமாவோ அவளை வைப்பாட்டியாக வைத்துக்கொள்கிறேன் என்கிறான்.

இந்த மரியா என்னும் கதாபாத்திரத்தில் பிரமிளா ஜோஷி என்னும் நடிகையை  தமிழ் கன்னடம் என ஒரேநேரத்தில்  இப்படம் மூலம் அறிமுகம் செய்தார் இயக்குனர். இன்றைய கன்னட சினிமாவில் சுந்தர்ராஜும், பிரமீளா ஜோஷியும் நிரூபனமான குணச்சித்திர  நடிகர்கள், ஆதர்ச தம்பதிகளும் கூட, இவர்களின் மகள் மேக்னாராஜையும் 2010ல் பாலச்சந்தர் தயாரித்த  கிருஷ்ணலீலை என்னும் படத்தில் நடிகர் ஜீவனுக்கு ஜோடியாக அறிமுகம் செய்தார்.

1 comments:

ThiruSenthamizh சொன்னது…

இதே நடிகர் சுந்தர் பின்னர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படத்திலும் பாலச்சந்தரின் நூல்வேலி படத்திலும் நடித்துள்ளார்.மேலும் இதே நடிகை பிரமீளாவும் ஆர்.சுந்தர்ராசனின் வைதேகி காத்திருந்தாள் படத்திலும் நடித்துள்ளார் என்பதையும் இங்கு நினைவு கூர்கிறேன்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)