மைனர் குஞ்சு பஞ்சாயத்து சாத்தப்பனாக நடிகர் நந்தகுமார் |
இவருக்கு முதன் முதலாக நல்ல நகைச்சுவைக் கதாபாத்திரமும் வசனமும் கொடுத்தது
கே.பாலசந்தர் தான்.அழகன் திரைப்படத்தில் இவர் நாரதகான சபாவில் டிக்கெட்
கிழித்து பார்வையாளரை அனுமதிப்பவர், இவரை மதுபாலா ஒரு முறை போட்டோ எடுத்து
தாஜா செய்து,விஐபி நுழைவுவாயிலில் நுழைந்து அமர்வார்,
அதே போல மதுபாலா மம்மூட்டியுடன் காரில் செல்கையில் நந்தகுமார் காருக்குள் குனிந்து போட்டோ என்னாச்சு? என்று கண்டிப்புடன் கேட்டு விட்டு நகர்ந்ததும், மம்மூட்டியிடம் இவர் தன் ஊதாரி அப்பா எப்போதும் சிக்னல் சிக்னலாக அலைவார் என்று கூறி இரக்கம் சம்பாதிப்பார்.அதே போல தன் தாய் என்று ஆசிரியரான கே.எஸ்.ஜெயலட்சுமியின் புகைப்படத்தைக் காட்டி இருவருக்கும் சதா சண்டை அதனால் தான் எனக்கு வீட்டுக்கே போக பிடிக்கவில்லை என்பார்.
ஒருசமயம் இவரகள் மூவரின் உறவுச் சிக்கலை தீர்த்து வைக்க எண்ணிய
மம்மூட்டி,கே.எஸ்.ஜெயலட்சுமியை பின்தொடர்ந்து சென்று நாரத கான சபாவில்
வைத்து சந்திப்பார்,அங்கே நந்தகுமாரும் வாயிலில் டிக்கெட் கிழித்துக்கொண்டு
இருப்பார், இருவரையும் கேண்டீனுக்கு அழைத்துச் சென்று கவுன்சிலிங் செய்ய
ஆரம்பித்து மம்மூட்டி பல்பு வாங்கும் காட்சி மிக அருமையான ஒன்று.
அங்கே இவரை கே.எஸ்.ஜெயலட்சுமி அய்யனார் சிலைக்கு எண்ணெய் தேய்த்தார் போல இருக்கும் இவரைப் போயா?என்னுடன் முடிச்சு போடுறீங்க என்று மம்மூட்டியிடம் சண்டைக்கு வர, நந்தகுமார் கடும் மன உளைச்சல் அடைந்தவர் இவரை நீ என்ன அழகியோ?!!! பப்புளி மாஸு,புகாரி ஓட்டல் பிரியாணி டேக்ஸா என்று கண்டமேனிக்கு கே.எஸ்.ஜெயலட்சுமியை ஏசுவார், ரகளையான காட்சி அது.
https://www.youtube.com/watch?x-yt-cl=85114404&v=ZmAzhZKEl6U&x-yt-ts=1422579428#t=15