மாதொருபாகன் நாவலின் முன்னுரையை படித்தாலே எல்லோருக்கும் புரியும் படி இது
உண்மையாக திருச்செங்கோட்டில் நடந்த தான் கேள்விப்பட்ட சம்பவங்களின்
பாதிப்பில் எழுதியது என்று அதில் விளக்கியிருந்தார் பெருமாள் முருகன்,
முன்னுரையின் தலைப்பே “ரகசிய ஊற்றுக்களின் ஒன்று” என்றிருக்கிறது.இந்த நான்கு பக்கங்களால் விளைந்த வினை தான் இத்தொடர் போராட்டங்கள்.
டாட்டா அறக்கட்டளைக்கு [IFA] மாதொருபாகன் நாவலின் உள்ளடக்கத்துடன் இவர் விண்ணப்பித்து,அவர்கள் அதை அங்கிகரித்து.இவருடைய கள ஆய்வை விரிவு படுத்தி செய்யத் தந்த உதவித் தொகையில் சுமார் 2 வருடம் ஆராய்ந்து ஆறபோட்டு இதை எழுதினேன் என்று புளி போட்டே விளக்கி விட்டிருந்தார் பெருமாள் முருகன்,
நாவல் உருவாக தனக்கு உதவிய அத்தனை நபர்களின் பெயரையும் வெள்ளந்தியாக குறிப்பிட்டும் இருந்தார்.
இப்படி நியோகா [http://en.wikipedia.org/wiki/Niyoga] முறையில் பிறந்தவர்களை சாமி கொழந்த ,சாமி குடுத்த பிள்ள என திருச்செங்கோட்டின் சுற்று வட்டார ஊரார் அழைப்பர் என்றும் அவர் தன் முன்னுரையில் எழுதியிருக்கிறார்,
இவை மட்டும் அந்த முன்னுரையில் இல்லை என்றால் யாரும் மாதொருபாகனை எதுவுமே சொல்லியிருக்க முடியாது, இது மற்ற எழுத்தாளர்கள் எழுதிய குழந்தையில்லா தம்பதிகள் நாவல்கள் போல மற்றோர் புனைவாகவே இருந்திருக்கும்.
2010ல் எழுதிய இந்நாவல் ஐந்து வருடம் கழித்து இப்படி நெகடிவ் பப்ளிசிட்டியைப் பெற்றிருக்கிறது, இதை பட்டவர்த்தனமாக களப்பணி செய்து எழுதியியதாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார் என்றால்,இப்படி என்றேனும் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்பார்த்தாரா?சாதி வெறி கும்பல் இவரை எப்படி துன்புருத்தியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.