இயக்குனர் மௌலியின் அண்ணே அண்ணே படத்தில் வரும் அந்தநாள் ஆசைகள் பாடல் இசைஞானியின் ஆத்மார்த்தமான இசையமைப்பில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்.
இப்படத்தின் அலுவலகம் மற்றும் தொழிற்சாலைக் காட்சிகளை டிஐ சைக்கிள்
அம்பத்தூரில் படமாக்கியிருப்பர், அந்த நிறுவனத்தின் முதலாளி மௌலி, இப்பாடலில்
அவரின் செவ்வி-இம்பாலா கன்வர்டிபிளை ட்ரைவர் அனுமந்து ஓட்டி வருவார்.
இவரின் சிறுவயது ஆசைகளை தேடித்தேடி பூர்த்தி செய்வது போல நிறைய டீடெய்ல்கள்
கொண்ட காட்சிகள் இருக்கும், அதில் இவர் ஷிவாஸ் ரீகல் ஃபுல்லைக் கொடுத்து வாட்ச்மேனிடம் பீடிக்கட்டு வாங்குவதும் அடக்கம்.
இப்படம் மற்றும் மௌலி அவர்கள் 80களில் இயக்கிய சுமார் 30 தமிழ் மற்றும்
தெலுங்கு படங்களுக்கு பிசி ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவு. மௌலி 2002 ல் இயக்கிய
நளதமயந்திக்கு சித்தார்த் [மும்பை எக்ஸ்ப்ரெஸ் புகழ்] ஒளிப்பதிவு,
அவர் 2003 ல் இயக்கிய பம்மல் கே சம்மந்தம் படத்துக்கு ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு, இவரின் முன்னாள் frequent collaborator ஆன பிஸி ஸ்ரீராமை இவர் அணுகத் தயங்கினாரா? அல்லது அவர் மறுத்திருப்பாரா தெரியாது.
ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமின் படங்களை மௌனராகத்துக்கு முன், மௌன ராகத்துக்கு பின் என்று பிரித்தால் சரியாக இருக்கும். வயிற்றுப் பிழைப்புக்குச் செய்தவை , ஆத்மதிருப்திக்குச் செய்தவை என்றும் பிரிக்கலாம்.