த‌ கில்லீங் ஃபீல்ட்ஸ் (1984) மரண வயலும் முடிந்த வாழ்வும்


அங்கீகரித்தமைக்கு நன்றி:-


லியுக எமனான கொடுங்கோலன் போல்பாட்டின்  மே 13, 1976 முதல் ஜனவரி 7, 1979 வரையான‌ ஆட்சிக்கொடுமைகளை இரு நண்பர்களின் நட்பின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த உண்மைகதை இது . 1984 ஆம் ஆண்டு ப்ரூஸ் ராபின்சனின் திரைக்கதையில் , ரோலண்ட் ஜாஃபின் இயக்கத்தில், க்ரிஸ் மென்கெஸின் ஒளிப்பதிவில் (won oscar) ஜிம் க்ளார்க்கின் எடிட்டிங்கில்(won oscar) மைக் ஒல்ட்ஃபீல்டின் உன்னத இசையில் வெளிவந்து , 3 ஆஸ்கார் விருதுகளையும் எண்ணற்ற விருதுகளையும் வென்று போகிறபோக்கில் ஏனையோர் மனதையும் கொள்ளைகொண்ட‌ படம்.

மேற்கு ஆணையிடும் கிழக்கு அடிபணியும்,மேற்கத்தியர் கிழக்கத்தியரை உபயோகித்துவிட்டு தூக்கி எறிவர். போன்றவையே மேற்கத்தியரைப் பற்றி எப்போதும் நம் மனதில் உள்ள பிம்பமும் நிஜமும் ஆகும்.விதிவிலக்குகளும் உண்டு என்று சொன்ன‌ படம்.

ங்கள் மேலதிகாரிக‌ள் என்றாவது, நீ எங்கே தங்கி இருக்கே?உன் குழந்தைகள் எங்கே படிக்கின்றனர்?உன் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளதா? எனக் கேட்டுள்ளனரா?இந்த படம்  எப்பேர்ப்ட்ட கல் நெஞ்சங்களையும் அசைத்து தன் கீழே பணிபுரிபவனைப்பற்றி ஒரு கணம் யோசிக்க வைக்கும். விசுவாசத்திற்கு எப்படி நன்றி செய்ய வேன்டும் என ஆணித்தரமாக விளக்கும். நட்புக்கு இனம்,மதம், நிறம் மதம் எதுவும் ஒரு தடையல்ல எனவும்  புரியவைக்கும்.

கொடியவன் போல்பாட்டின் கேஹ்மர் ரூஜ்  அரசால் பீடிக்கப்பட்ட கம்போடியாவின் நாம் பென் நகரில்  இருந்து அமெரிக்க, ப்ரிட்டன், ஃப்ரெஞ்சு தூதரகங்கள் மூடப்பட்டு எல்லா மேற்கத்தியர்களும் வெளியேறும் போது நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளர் சிட்னி ஷாம்பெர்க் (Sam Waterston,)ம் அவரது கம்போடிய செய்தி உதவியாளர் பித் ப்ரானும் (Haing S. Ngor,) (won oscar) செத்து செத்து பிழைத்த   கனங்கள் ,பட்ட‌ சொல்லோனாத்துயரங்கள் , அதில் இனம் காரணமாக ப்ரான் மட்டும் ஃப்ரெஞ்சு தூதரகத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட , குற்ற உணர்வால் துடிக்கும் சிட்னி . கடைசியில் ப்ரான் என்ன ஆனார்? மீண்டும் தன் நண்பனை சந்தித்தாரா? தன் மனைவி குழந்தைகளுடன் இணைந்தாரா? என்னும் உணர்ச்சிகரமான போராட்டங்களின் தொகுப்பை , சூட்டோடு சூடாக காணத்தவறாதீர்கள்.

படத்தில் மனதை புரட்டிப்போட்ட  காட்சிகளின் தொகுப்பு:‍

1.ன்றளவும் விடுபடாத‌புதிராக அமெரிக்க படையினர் "கோஆர்டினேட் பிழை "என சொல்லி கேஸை முடித்த "குடியிருப்பு பகுதியில் போடப்பட்ட‌ ஆகாயமார்க்க குண்டும்,சேதமான குடியிருப்பு பகுதிகளும், பலியான 200க்கும் மேற்ப்பட்ட கம்போடிய மனித உயிர்களும்,உயிருக்கு போராடும் பிஞ்சுகளும் படத்தில் காண்கையில் மனதை உருக்கும்.


2.சிகப்பு கெமர்களிடம் பிடிபட்ட  நண்பர்கள் சிட்னியையும் , ஜோன் ஸ்வைனையும், அல் ராக்காஃபையும் காப்பாற்ற ப்ரான் படை வீரர்களை விடாமல் முகத்தில் உயிர்பயம் வரவழைத்து கண்ணீருடன்  கைகூப்பி கெஞ்சுவதும், அவர்கள் சொன்ன வேலைகளை செய்து நண்பர்களை மயிரிழையில் உயிர்மீட்டு காத்து வரும் காட்சி மனித நேயத்தின் உச்சம்.

3. கிருஸ்து காலண்டர் இனி செல்லாது,என் சொல்லி year zero என்னும்  கம்போடிய காலண்டரை புகுத்தி, "மீண்டும் கற்காலம் செல்வோம் "என்னும் மிஷனும். விவசாயிகளே உண்மையான உழைப்பாளி என்னும் மாவோயிச சிந்தனையை அறைகுறையாக புரிந்துகொண்டு  உயிர்பலிவாங்க‌ தயாரான மரண வயல்களும்  , "கம்யூனிஸ்டு பார்ட்டி ஆஃப் கம்பூச்சியா" என்னும் பெயரும் மனதையும் வயிற்றையும் ஒரு கலக்கு கலக்கும்.

4.யாருக்கும் எங்கேயும் பாதுகாப்பு இல்லை என்பது போல தூதரகங்கள் காலிசெய்யப்பட்டு,தூதுவர்கள் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடுவதும், அடைக்கலம் புகுந்த அரசியல்வாதிகளை தூதரகங்கள் பயந்துபோய் துரத்திவிட்டு எதிரியிடமே பிடித்துக் கொடுப்பதும் ,மேற்கத்தியர்களுக்கு மட்டுமே அடைக்கலமும் நாட்டைவிட்டு வெளியேற்றமும்  என பாரபட்சம்  காட்டும் மனிதாபிமானமற்ற செயல் என அடுக்கலாம்.

5.கொடிய மிருகம் போல்பாட்  ஆட்சியை கைப்பற்றியதும் ஊருக்குள் வரும் பீரங்கிகளும் , இவன் நல்லவன் தான் போல‌ என‌ மக்கள் கொடுக்கும் ஆர‌வரமான வரவேற்ப்பும். அது 1 நாள் கூட நிலைக்காமல் நகர‌ மக்களை உடல் வருத்தி வயல் வேலை செய்ய அடிமைகள் போல துப்பாக்கி முனையில் கூட்டிப்போகும் காட்சி மனதை உருக்கும்.

6.ழகிவிட்டால் கடைசி வரை நின்று உதவும் நல்ல உள்ள உள்ளம் கொண்ட மேற்கத்தியர்களையும் இதன் மூலம் இனம் காண்பீர்கள்.பிரானுக்காக ஒரு காலாவதியான அமெரிக்க பாஸ்போர்டை கொணர்ந்து வயது விபரங்களை சுரணடிஅழித்து, படாத பாடு பட்டு கேமராவும் பிலிமும் கிடைக்க நண்பனை பாஸ்போர்டுக்கு படம் எடுத்து ,டார்க்ரூமில் வைத்து கழுவுகையில் டெவலப்பிங் சொல்யூஷன் திரவம் திடமாகவும்,போட்டோ பேப்பர் மட்டமாகவும் இருக்க, டெவெலப்பான நண்பனின் உருவம் மேஜிக் போல நொடியில் மறைய உயிர் நண்பர்கள் படும் வேதனை சொல்லில் எழுதமுடியாது.

ருவழியாக‌வேறு ஒரு போட்டொவை  ஒப்பேற்றி பாஸ்போர்டில் ஒட்டி தூதரக அதிகாரியிடம் தர அவர் அதில் போட்டொவே இல்லை,அழிந்துவிட்டது என திருப்பி கொடுத்து நண்பனை வெளியேறியே ஆக வேண்டும் என் நிர்ப்பந்திக்க அவர்கட்கு ஏற்படும் சொல்லோனாத் துயரம் . கடவுளே ! யாருக்கும் ஏற்பட‌க்கூடாது.

7. யிர் தப்பிய நண்பன் சிட்னி அமெரிக்காவில்  நண்பன் ப்ரானின் ஆங்கிலம் தெரியாத குடும்பத்துக்கு செய்யும் பேருதவி,பிரிந்து போன  நண்பன் ப்ரான்  4 வருடமாக கொடிய மரணவயலில் வேலை செய்து ஒவ்வொரு முகாமாக தப்பித்து தாய்லாந்து எல்லை செல்ல படும் மரண வேதனை,அவனைக்காக்க அமெரிக்காவில் இருந்து சிட்னியால் எடுக்கப்படும் 500க்கும் மேற்ப்பட்ட முயற்சிகள்,மனுக்கள்.

8.1976 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிக்கையாளனாக தேர்ந்தெடுக்கப்பட்டு புலிட்ச்சர் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியில் இந்த மகத்தான விருது பாதி என் நண்பன் ப்ரானுக்கு சேரவேன்டும் , அவன் உதவியில்லாமல் என்னால் இதை நிகழ்த்தியிருக்கவே முடியாது என அருகே இல்லாத‌  நண்பனுக்கும் விருதை பங்கிட்டுக்கொடுக்கும் பாங்கு.அடுத்தவர் உழைப்பை தன் உழைப்பென சொல்லி தன் பெயரை போட்டு நல்ல பெயரை வாங்கிக்கொள்ளும் எவருக்கும் ஒரு செருப்படி. அந்த பாங்கு பார்ப்பவரின் கண்களை நிச்சயம் குளமாக்கும்.

9.ரணவயல்களில் நிகழ்த்தப்படும் மூளைச்சலவை சொற்பொழிவும் ,படித்தவர்களையும் , புத்த துறவிகளையும், இசுலாமியர்களையும், ஊனமுற்றோர்களையும். வயதானோர்களையும் சிறைபிடித்து கண்களைக்கட்டி பின்னந்தலையில்  சிங்களகோழைகள் போல சுட்டும், உயிருடன் உள்ள போதே தோலை உரித்தும் , சுத்தியால் மண்டையை உடைத்தும் , தோள் எலும்புகளை அடித்து உருகுலைத்தும்,பிளாஸ்டிக் காகிதம் கொண்டு முகத்தை பொத்தி மூர்ச்சையாக்கி கொன்றும் , பின்னந்த்தலையில் ட்ரில் பிட்டால் திருகிட்டும் ,பின்னர் பிணங்களை நீரில் வீசிவிடுவதும், மாஸ் க்ரேவ் என்னும் ப்ரேதக்குவியல்களை ஒரெ குழியில் கொட்டி அடக்கம் செய்வதும்.கொல்வதில் தான் எத்தனை விதம்? கொடுமையின் உச்சமாக கைதியையே தனக்கான சவக்குழியை தோண்டச்செய்யும் "நமக்கு நாமே திட்டம்"அப்பப்பா!.

10.ப்ரான் விவசாயக் கைதிகளுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும்  2 மிகச்சிறிய தட்டு  அரிசிக்கஞ்சி குடித்தும் வயிற்றுப்பசி அடங்காமல் நிலத்தில் மேய்ந்த ஓணானை பிடித்து கஞ்சிக்கு தொட்டுக்கொள்ளுவதும், உச்சக்கட்ட பசியில் பசுமாட்டுத் தொழுவத்தில் திருட்டுத்தனமாக நுழைந்து பசுவின் கழுத்துமணியை பிடித்துக் கொண்டே , பசுவின் கழுத்து சதையை குழைத்து கீறி ரத்தம் குடிப்பதும் நமக்கு உண்மையான பஞ்சம் என்றால் என்ன? என காட்டிவிடும்.

11. டத்தில் இரு நண்பர்களையே பிரதானமாக காட்டியிருந்தாலும் நட்புக்கு பாலமாக,சிகரமாக வந்த மற்ற  நண்பர்கள் ஜோன் ஸ்வைன் (Julian Sands) மற்றும் அல்ராக்காஃப்  (John Malkovich ) பற்றி குறிப்பிடாவிட்டால் கட்டுரையே முழுமையடையாது.அவ்வளவு நேர்த்தியான நடிப்பும் அவதானிப்பும். இது போன்ற நண்பர்கள் கிடைத்தால் ”பிறந்த பயனை நான் அடைந்தேன்” என‌ ஒருவன் சொல்லிக்கொள்ளலாம்.

12. "To keep you is no benefit, to destroy you is no loss". "உன்னை உயிருடன் வைத்திருப்பதால் எனக்கு லாபமேதுமில்லை, உன்னை கொன்று புதைப்பதால் நஷ்டமேதுமில்லை"  என்ற சித்தாந்தப்படி களமிறங்கிய இந்த கயவர் கூட்டம் சுமார்  17 லட்சம் மக்களை (அந் நாளின் 29% மக்கள்தொகை) கொன்று குவித்துள்ளனர் என ஊடகங்களில் படித்து அறிகையில் வயிறெரிகிறது.

இந்த கயவன் போல்பாட் 1998 ஆம் ஆண்டு  வியட்நாமிய படையினரின் வீட்டு சிறையில் மிக எளிதாக தூக்கத்திலேயே உயிர்விட்டதைத் தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. விந்தையான உலகமடா? என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.

டிஸ்கி:‍

லக சினிமாக்கள் நமக்கு கடந்த கால வரலாற்று நிகழ்வுகளையும், உலகின் நடப்பு நிகழ்வுகளையும்,வெவ்வேறு இன , மத, மக்களின் கலாச்சார வழக்கங்களையும் நமக்கு படிப்பிக்கின்றன.ஆகவே உலக சினிமாக்களை ஆதரியுங்கள். ஒரு 500பக்க புத்தகம்  சொல்லி புரியவைக்கும் விஷயங்களை அதிர்வலைகளை ஒரு   2டே மணி நேர உலகசினிமா ஏற்படுத்தக்கூடும். எனவே உலக சினிமாக்களை பாருங்கள் பிற‌ருக்கும் அறிமுகம் செய்யுங்கள். நன்றி!

===========================================

படத்தின் முன்னோட்டக் காணொளி================================
போல்பாட்டும் நாஜிகள் போலவே செய்த கொலைகளுக்கு டாகுமெண்டேஷன் செய்திருக்கிறான்.ஏற்கனவே முன்னோர் இழைத்த தவறுகளில் இருந்து பாடம் கற்காமல் இவனும் ஒரு ப்ளூப்ரிண்டை விட்டு போயிருக்கிறான்.அதற்கான புகைப்படத்தொகுப்பு :-
===========================================
படக்குழு விபரம் விக்கிபீடியாவில் இருந்து:‍
Directed by Roland Joffé
Produced by David Puttnam
Written by Bruce Robinson
Starring Sam Waterston,
John Malkovich,
Haing S. Ngor,
Julian Sands
Music by Mike Oldfield
Cinematography Chris Menges
Editing by Jim Clark
Distributed by Warner Bros.
Release date(s) November 2, 1984 (USA)
Running time 141 min
Country United Kingdom
Language English, French, Khmer

இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.
-------------------

39 comments:

ஹாலிவுட் பாலா சொன்னது…

தல.. நானும் இந்தப் படத்தை.. சமீபமா எடுத்து வச்சேன். இன்னும் பார்க்கலை! வரலாறுதானே.. ரொம்ப இண்ட்ரஸ்டிங்.

உடனே பார்த்துடுறேன். நல்ல வேளை நீங்க எழுதினதால்.. இந்த படம் தப்பிச்சது! :) :) :)

ஹாலிவுட் பாலா சொன்னது…

//// உலகசினிமாக்கள் நமக்கு கடந்தகால வரலாற்று நிகழ்வுகளையும்,உலகின் நடப்பு நிகழ்வுகளையும்,வெவேறு இன,மத,மக்களின் கலாச்சார வழக்கங்களையும் நமக்கு படிப்பிக்கின்றன.///

ஆனா.. படம் எந்த நாட்டில் இருந்து வந்ததுங்கறது ரொம்ப முக்கியம். அமெரிக்கர்கள் எடுக்கும் படத்தில்.. அவங்க உத்தமர்கள்-ன்னுதான் காட்டுவாங்க.

எந்த நாட்டில் இருந்து வந்தாலும் பெரும்பாலும்... இந்த படங்கள் எல்லாம் ஒரு சார்பாதான் எனக்குப் படுது. அடுத்து வரலாறை சுவாரசியமா கொண்டு போக வேண்டிய கட்டாயம் (வரலாற்றின் எதிர்ப்பதம் சுவாரசியம்).

அதுக்காக.. இவங்க படம் முழுக்க.. மசலா தூவனும். டைட்டானிக், ப்பேர்ல் ஹார்பர் மாதிரி. இருந்தாலும்..

பக்கம் பக்கமா.. படிக்கற விஷயத்தை.. கொஞ்சம் எளிமையாக்கும். அதனாலயே..எனக்கு வரலாற்றுப் படங்கள் ரொம்ப பிடிக்கும். இரண்டாம் உலகப் போர் படங்கள் என் ஃபேவரிட்.

சென்ஷி சொன்னது…

கார்த்திக்கேயனிடமிருந்து மற்றுமொரு நல்ல திரைப்படத்தின் விமர்சனம்! நன்றி நண்பா..

KISHORE சொன்னது…

உங்க விமர்சனம் நல்லா இருக்குங்க கார்த்திகேயன்.

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமையான விமர்சனம் நண்பரே. சுட்டியும் அளித்ததற்கு நன்றி. தமிழ்மணத்தில் இணைந்த பின் முதல் முறையாக உங்களின் இந்த இடுகைக்கு ஓட்டுப் போட்டிருக்கிறேன்.

கோபிநாத் சொன்னது…

அண்ணே வழக்கம் போல கலக்கிட்டிங்க...இறக்கிடுஉவோம் ;)

pappu சொன்னது…

கொஞ்சம் வயித்தெரிச்சலாதான் இருக்கு அவனப் பத்தி படிக்கும் போது. வார் படங்கள் அனைத்தும் உருக வைப்பவைகள்.

ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…

உண்மையிலேயே நீங்கள் அறிவைத் தேடிக்கொண்டு இருப்பவர் தான் கார்த்திகேயன். உங்கள் முந்தைய விருப்பம் குறித்த படைப்பில் ஆங்கிலம் கற்றுக்கொண்டது முயற்சித்தது (என்னைப்போலவே) பாலகுமாரன் எழுத்தின் மூலம் என்று உணர்ந்து கொண்ட போது முதல் ஆச்சரியம்.

வளர்ந்து, வளர்த்துக்கொண்ட சிந்தனைகள் இந்த அளவிற்கு உங்களை கொண்டு வந்து நிறுத்தி உள்ளது மொத்த அதிசயம்.

நான் படித்த புத்தகங்கள் பின் ஊட்டத்தில் தெரிவிப்பது இல்லை. காரணம் எத்தனையோ வருடங்களுக்கு முன் படித்த சிந்தனைகள் படிமங்களாக உள்ளே தேங்கி அழுக்காக இருப்பதை, அன்றாடம் பார்க்கும் ஊடகமும், படிக்கும் செய்திதாள்கள், சந்திக்கும் நபர்கள் உணர்த்தும் பாடங்களில் இருந்து கோர்க்கும் போது அது வணங்கும் கோவில் போல வந்து அமைந்து விடுகின்றது.

உங்களைப்போல நல்ல சூழ்நிலையில் வாழ்க்கை அமையாத அமைதியான சூழ்நிலை இல்லாத ஒரு காரணமாகவும் இருந்து தொலைக்கலாம்.

ஆனால் இன்னமும் நிறைவேறாத லட்சியமாகவே இருந்த ஆங்கில படங்களின் அணிவகுப்பு உங்கள் அறிமுகத்திற்குப் பிறகு அந்தக்குறையும் சாத்தியமாகிக்கொண்டுருக்கிறது. அதுவும் இந்த சுட்டிக்கு முத்தம் தரத் தோன்றுகிறது.

இது போல மற்றவைக்கு கொடுத்து இருக்கிறீர்களா என்று இனிமேல் பார்க்க வேண்டும். அடுத்த மாதம் தான் இதை தரவிறக்கம் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

நண்பர் சொன்னதும் உண்மை. எவர் எடுத்தார். எந்த அளவிற்கு மசாலா?

பத்திரிக்கையாளர் போல தொடுத்த தொடுப்பு இன்னமும் வியப்பாய் இருக்கிறது. அது தான் உங்கள் ஆளுமை. நான் தொடர்ந்து வந்து கொண்டுருக்கும் ஆச்சரியமும் கூட.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

கார்த்திகேயன். மிக நேர்த்தியான விமர்சனம்.

//உலகசினிமாக்கள் நமக்கு கடந்தகால வரலாற்று நிகழ்வுகளையும்,உலகின் நடப்பு நிகழ்வுகளையும்,வெவேறு இன,மத,மக்களின் கலாச்சார வழக்கங்களையும் நமக்கு படிப்பிக்கின்றன.ஆகவே உலக சினிமாக்களை ஆதரியுங்கள். ஒரு 500பக்க புத்தகம் சொல்லி புரியவைக்கும் விஷயங்களை அதிர்வலைகளை ஒரு 2 டே மணி நேர உலகசினிமா ஏற்படுத்தக்கூடும். எனவே உலக சினிமாக்களை பாருங்கள் பிற‌ருக்கும் அறிமுகம் செய்யுங்கள். நன்றி
//

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் பணி பாராட்டத்தக்கது :)

கலையரசன் சொன்னது…

மறுபடியும் உன்னிடமிருந்து ஒரு கலக்கலான விமர்சனம்...
I Loved IT!!

பின்னோக்கி சொன்னது…

இடி அமீன் பற்றிய படம் பார்த்ததிலிருந்து, இவனைப் பற்றி எதாவது படம் வந்திருக்கிறதா எனத் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. நீங்கள் அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி. கண்டிப்பாக பார்க்கிறேன்.
வழக்கம் போல விமர்சனம் அருமை.

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

படத்தை இனி தான் பார்க்க வேண்டும் , சில சமயம் இந்த மாதிரி படங்கள் பார்க்க சரியான சூழல் வேண்டும் ....மம்மூட்டி நடித்த, நான் 15 + வருஷங்களுக்கு முன் பார்த்த " பாதயம் " என்ற படத்தை அண்மையில் தனியாக பார்த்தேன், அப்படியே ஒவ்வொரு காட்சியும் திரும்ப வந்தது , மறக்கவே இல்லை ... லாலு அலெக்ஸ், மற்றும் அந்த பெண் மிக அருமையாக நடித்திருப்பார்...முன்பு அவ்வளவு மலையாளம் தெரியாது ..இப்போ புரியும்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலிவுட் பாலா
தல,
பதில் பின்னூட்டமிட முயன்று ப்ளாக்கர் போனால் உள்ளேயே நுழையமுடியவில்லை.
அதுதான் ஜிமெயிலிலேயே பதிலிடுகிறேன்.
தல இப்புடியெல்லாம் சொன்னா நான் அழுதுருவேன்.
அவ்வ்வ்.
ஆனாலும் ரொம்பத்தன்னடக்கம் தல உங்களுக்கு.
வினோத்திடம் பேசும் போதும் உங்களைப்பற்றி பேசினோம்.
நல்லதாகத்தான்.வருகைக்கு நன்றி தல

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தல அற்புதமான கருத்து செரிவு கொண்ட பின்னூட்டம் போட்டிருக்கீங்க,விட்டால் இதையே எடுத்து டிஸ்கியாக போட்டுடுவேன் தல. கண்டிப்பாக அமெரிக்க படங்கள் நமக்கு பாதி உண்மையை மட்டுமே சொல்லும்.
full metal jacket
we were soldiers
saving the private ryan
thin red line
pearl harbour
அப்படின்னு அடுக்கலாம். என்ன வரலாறுன்னாலே காத தூரம் ஓடிய நான் இன்னிக்கு கடந்தகால நினைவுகளை நினைச்சு
பொருமுகிறேன் என்றால் படங்கள் மூலம் கற்றவையே.தல எதாவது சினிமா இண்டோ பாகிஸ்தான் போரை மையமாக வைத்து வந்துள்ளதா?இருந்தால் சொல்லவும் தேடிபிடித்து பார்க்கிறேன்.

//பக்கம் பக்கமா.. படிக்கற விஷயத்தை.. கொஞ்சம் எளிமையாக்கும். அதனாலயே..எனக்கு வரலாற்றுப் படங்கள் ரொம்ப பிடிக்கும். இரண்டாம் உலகப் போர் படங்கள் என் ஃபேவரிட். //

தல 100 சதம் உண்மை,புத்தகத்தை திறந்தால் தாலாட்டு பாடாமலே தூக்கம் வருது. தல நீங்க க்ரேட்.
எப்படித்தான் 2 குட்டீஸ் வச்சிக்கிட்டு அருமையா பதிவு எழுதுறீங்க? இங்க நான் ஃப்ரீபேர்ட். வீட்டுல இருந்தேன் சான்சே இல்லை.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வா சென்ஷி மாப்பி,
வேலை ஒவருடா மாப்பி, இன்னைக்கு ஒரு மூணுமணி நேரம் ஃப்ரீயா இருந்தேன், சரி ஒரு பதிவு போடுவோம்னு போட்டதுடா, எழுத்து பிழை சரி பண்ண உள்ள நுழைய பாக்குறேன் முடியலையே. ப்ளாக்கர்ல எதோ ப்ராப்ளம் உள்ளது போல வருகைக்கு மிக்க நன்றி மாம்ஸ்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க கிஷோர்,
அப்போதிலிருந்து பளாக்கை திறக்க முயன்றேன், முடியவில்லை, வருகைக்கு மிக்க நன்றி, வேலைக்கு அப்ளை பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அன்புத்தம்பி கோபி
உன் தொடர்வருகைக்கும் அன்புக்கும் நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க பப்பு,
இவனும் நாஜிகள் போலவே செய்த கொலைகளுக்கு டாகுமெண்டேஷன் பண்ணியிருக்கான்.ஏற்கனவே முன்னோர் இழைத்த தவறுகளில் இருந்து பாடம் கற்காமல் இவனும் ஒரு ப்ளூப்ரிண்டை விட்டு போயிருக்கான்.மெண்டல்பயல்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் சரவணகுமார்,
தொடர் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி, யாமம் புத்தகம் சென்ஷியிடம் கேட்டுள்ளேன்,சீக்கிரம் படிப்பேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஆகா,வாங்க ஜோதிஜி,
வணக்கம்,இவ்ளோ பெரிய பின்னூட்டம்,அதுவும் கலக்கலாக.
போட்டதற்கு மிக்க நன்றி.உங்களுக்குள்ள இருக்கும் உலக சினிமா ரசிகனை எழுப்புங்கள்.
என்னால் முடிந்த அளவுக்கு படம் தரவிறக்க சுட்டிகளை அனுப்புகிறேன்.
உங்க மனசு தங்கம்க,அறிவுத்தேடல்னு ஒரு பதிவு போட்டு கலக்குறீங்க.
பழமைபேசலாம் என இன்னொரு பதிவு போட்டு ஒவ்வொருவரையும்
மறைமுகமாக கவுரவிக்கும் பாங்குக்கு ஒரு ஓபோட்டுக்கறோம்.
வருகைக்கு நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் செந்தில்வேலன்,
உங்களிடமிருந்து பெறும் இந்த வார்த்தைகளும்,தொலைபேசி
அழைப்புகளும் எப்போதும் எனக்கு பக்கபலம்.
வருகைக்கும் அற்புதமான கருத்துக்கும் நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாடா கலை மாப்பி,
என்னடா நீயும் பிசியா?
உன் வார்த்தகள் எப்போவுமே எனக்கு ஊக்கம் தருபவைடா.
போன் பண்ணுரேன் ஃப்ரீயானதும்.வருகைக்கு நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் பின்னோக்கி,the last king of scotland பார்த்தீர்களா?
இடிஅமீனை பற்றி ஓரளவு கவர் செய்திருப்பர்.நானும் விபரமாக தேடி உங்களின் அப்டேடிற்கு உதவுகிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க சுந்தர் சார்,
நீங்க சொன்னதும் சரிதான்.
வீடுல தனியாவோ அல்லது ஒரே ரசனை கொண்டோருடன்
இணைந்தோ படம் எப்போதும் பார்க்க வேண்டும்.இல்லைன்ன‌
ஒட்டவே ஒட்டாது. எனக்கு இங்க அதுஒரு ப்ள்ஸ்பாயிண்ட்.
மோகன்லால் எனக்கும் மிகப் பிடிக்கும்.மிக நல்ல நடிகர்

கானா பிரபா சொன்னது…

இந்தப் பட டிவிடி சமீபத்தில் தான் வாங்கினேன், கம்போடியாவிற்குச் சென்ற நாட்களில் இன்னும் அந்தக் கொடூர சுவடு இருப்பதைக் கண்டு கவலை ஏற்பட்டது

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தல கானாப்ரபா,
வாங்கஜி, உங்க புத்தகம் கம்போடியாவும் அவசியம் படிக்கும்
லிஸ்டில் உள்ளது, ஊருக்கு போனதும் வாங்கி படிக்கிறேன்.
வருகைக்கு நன்றி தல.

நாகா சொன்னது…

அருமையான விமர்சனம், விளக்கம் கார்த்தி. ஃபாலோயர்ஸ் விட்ஜெட் இருப்பதே தெரியவில்லை, நான் நீங்கள் இன்னும் இணைக்கவில்லை என்றே எண்ணியிருந்தேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க நண்பர் நாகா,
உங்க நல்ல வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.ஃபாலோவர் விட்ஜட்டை வைக்க சொல்லி அறிவுறுத்தியதே நண்பர் செந்தில்வேலன் தான்.
அவர் தான் எப்படி ? தமிழ்மணத்தில் இணைக்கும் இடுகைக‌ளுக்கு
லேபில் தரவேன்டுமெனவும் சொன்னார்.அவருக்கும்
உங்களுக்கும் நன்றி.

ஹாலிவுட் பாலா சொன்னது…

///எதாவது சினிமா இண்டோ பாகிஸ்தான் போரை மையமாக வைத்து வந்துள்ளதா?///

ஹிந்திப் படங்கள் மட்டும்தான் வந்திருக்குங்க கார்த்திக்கேயன். ஹாலிவுட் நிச்சயமா.. இந்த மாதிரிப் படங்களை எடுக்க மாட்டாங்க.

நம்மை கிண்டல் பண்ணி, ஒரு காமெடி ஷோவில் பேசறதுக்குக் கூட அவங்களுக்கு கொஞ்சம் பயம்தான்னு நினைக்கிறேன். ஏன்னா. நமக்கு எதையும்.. ஜோக்கா எடுத்துக்கத் தெரியாது. சும்மா யாராவது வாயை விட்டா கூட... ‘கூடி கூப்பாடு’ போட்டுடுவோம்.

இந்த விஷயத்துக்கு நிறைய உதாரணம் தர முடியும். நாமளே இந்தப் படங்கள் எடுத்துகிட்டாதான் உண்டு.... நம் சார்பு நிலையை மட்டும்! :)

////////எப்படித்தான் 2 குட்டீஸ் வச்சிக்கிட்டு அருமையா பதிவு எழுதுறீங்க/////

என்னங்க இது.. குடும்பத்துக்குள்ள குழப்பத்தை உண்டாகிடுவீங்க போல இருக்கு? இன்னொரு குழந்தை எங்க இருந்து வந்ததுன்னு.. என் வைஃப் கேட்டா என்ன பதில் சொல்லுவேன்! :) :) :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தல மீள் வருகைக்கும் நன்றி,
ஆமாம் தல நான் விக்கிபீடியாவில தான் பாகிஸ்தானியர் பண்ணின அட்டூழியங்களை படித்து கொதிதேன்,ஹிந்தி படம் தேடி பாக்கணும்.
நம்மாளுங்க ஒண்ணு குழைவோம், இல்லை முசுடாக இருப்போம்,

தல யாரோ உங்க பின்னூட்டத்தில குட்டீஸ்னு போட்டதைத்தான் 2என கணக்கில் எடுத்திருப்பேன்.
சீக்கிரமே அந்த யோகமும் அமையட்டும் தல.
ரெண்டு பெண்களின் அப்பாக்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்களாம்.
:))))
எனக்கும் ஐயா இப்படித்தான் வாழ்த்தியுள்ளார்.

வினோத்கெளதம் சொன்னது…

சூப்பர் விமர்சனம் குரு..
இந்த பட விமர்சனம் ஏற்கனவே எம்கயோ படித்ததுபோல் நியாபகம்..
பார்த்துட வேண்டியது தான்..

வினோத்கெளதம் சொன்னது…

///////எப்படித்தான் 2 குட்டீஸ் வச்சிக்கிட்டு அருமையா பதிவு எழுதுறீங்க/////

//என்னங்க இது.. குடும்பத்துக்குள்ள குழப்பத்தை உண்டாகிடுவீங்க போல இருக்கு? இன்னொரு குழந்தை எங்க இருந்து வந்ததுன்னு.. என் வைஃப் கேட்டா என்ன பதில் சொல்லுவேன்! //

இது என்ன புது கதை..எல்லாம் நம்ம பப்பு பய பண்ண குழப்பம் தான்..
இருந்தாலும் இருக்கலாம்..:)))

பேநா மூடி சொன்னது…

விமர்சனம் சிறப்பாக இருந்தது .... படம் உங்களை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை உங்கள் வார்த்தைகளில் உணர முடிந்தது........

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை குரு வினோத்,
உங்க அருமையான ஊக்கங்கள் தான் என்னை மேலும் திறம்பட எழுதச்ச்செய்யும்,வருகைக்கு நன்றி

pappu சொன்னது…

விமர்சனம் அருமயா இருக்கு.

/////
இது என்ன புது கதை..எல்லாம் நம்ம பப்பு பய பண்ண குழப்பம் தான்..
இருந்தாலும் இருக்கலாம்..:)))///

நான் என்னய்யா பண்ணுவேன். கொஞ்சம் தெளிவா சொல்லனும்ல. நான் மட்டுமில்லாமல் இப்படி பல பேரு தப்பா சொன்னா அதுக்கு பொறுப்பு பாலாதான். எங்கயோ (உண்மைய) உளறீட்டாருன்னு நினைக்குறேன். :)

கெளப்பி விட்டாச்சு!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் பப்பு,
ஓ அப்படியா விஷயம்? நம்ம தல உண்மையிலேயே பெரிய ஆள் தான். ;)))))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் பேநா மூடி
உங்க அருமையான ஊக்கங்கள் தான் என்னை மேலும் திறம்பட எழுதச்ச்செய்யும்,வருகைக்கு நன்றி

நிலா முகிலன் சொன்னது…

நான் பள்ளி படிக்கும்போது இதனை வீடியோவில் பார்த்தேன். மனதை பிசயவைத்த படம். ஒரு வாரமாக இப்படம் என்னை தூங்க விடவில்லை. நா பார்த்து நாளாகிவிட்டது. மீண்டும் ஞாபகபடுதியமைக்கு நன்றி. உங்களுக்கு ஒன்று தெரியுமா, படத்தில் சிட்னிக்கு உதவி புரிந்த அந்த கம்போடியா டாக்டர், அமெரிக்காவில் செட்டில் ஆகி பல வருடங்கள் வாழுந்து பின்னர் தற்கொலை செய்து கொண்டு செத்துபோனார். உங்கள் பதிவு மிக நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@நிலாமுகிலன்,
வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)