பிடித்தவையும் பிடிக்காதவையும் (லைக்ஸ் அண்ட் டிஸ்லைக்ஸ் சங்கிலித்தொடர்)


Likeநான் தனிமனிதனாக  யாருக்கும்  அடங்காதவனாக  ஜன நெரிசலான தெருவின் திண்ணை அரட்டையில் இருக்கும் போது  இது போன்றதொரு  பட்டியலை கொடுத்து திட்டுடா கார்த்தி என்றால் பக்கம் பக்கமாக திட்டியிருப்பேன்,சில சமயம் புகழ்ந்தும் இருப்பேன்.ஆனால்  ஊடகம்  என  வரும்  போது ஒருவரை  பிடிக்கும் என்றோ? பிடிக்காது  என்றோ? சொல்லுவதில் மிகவும் தயக்கமாக உள்ளது.

என்னதான் ஆயிரம் நியாய தர்மம் இருந்தாலும் ஒருவரை வெறுப்பது அழகல்ல.அதுவும் குரு ரமண கீதம், ராஜாவின் ரமண மாலை போன்றவற்றை அனுதினமும் கேட்டுவிட்டு அவ்வாறு செய்வது நன்றாக இருக்காது,ஆகவே சிறிது நாசூக்காக சொல்ல முயன்றிருக்கிறேன்.அல்லது இந்த பதிவுக்கு மட்டும் கொஞ்சம் விடுமுறை விட்டிருக்கிறேன்.யார் மனதையாவது காயப்படுத்த நேர்ந்தால் மன்னிக்கவும்.
1. இசையமைப்பாளர்:-
பிடித்தது:-
 ராகதேவன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை தான் ,என் அம்மாவை இழந்து, ரிசெஷனில் வேலை இழந்து , பல துயரங்கள் என்னை ஆட்கொண்ட போதும் ஆற்றுதலை தேற்றுதலை ,ஆழமான தெய்வ பக்தியை, அம்மாவின் மீதான பாசத்தை, மனைவியின் மீதான காதலை, வாழ்வின்  மிக அற்புதமான கணங்களை அழகாக மீட்டுக்கொடுத்தது ராசையாவின் இசையே,  நன்றி ராஜா சார்.
பிடிக்காதது:-
யுவன் ஷங்கர் ராஜா தான், அப்பாவின் சட்டைப்பையில் கைவிடாமல் பெரும்பாலான மக்கள் கேட்டு லயித்த மேற்கத்திய ஆல்பங்களை சுட்டு , பாடுபட்டு இசையமைத்து எடுத்த பெயரையும் கெடுத்து சட்டியை கீழேபோட்டு உடைத்துக்கொள்வது.இவரின் சொந்த சரக்கு மிக நன்றாகவே இருக்கும்:-உதாரணம் :- பருத்திவீரன்
2. பாடகர் :-
பிடித்தது:-
எஸ்.பி.பி தாங்க, என்ன அருமையான குரல் வளம்?!, ஆயிரம் நிலவே வா ! வில் எம்ஜியாருக்கு பிண்ணணி பாடி துவங்கிய பயணம் இன்னும் தடங்கல் இல்லாமல் எட்டுத்திக்கும் முழங்குகிறது,இவர் யாருக்கு பாடினாலும் அவரே பாடினது போல இருக்கே?எப்புடி?இவரின் தங்கத்தாமரை மகளே! எனக்கு மிகவும் பிடிக்கும்.
பிடிக்காதது:-
வேற யாரு?உதித் நாரா(வா)யன் தான், பெரியம்மா (பிரியமான)பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லை என பாடி  நம் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாத்தித்தவர்.இதுக்கு மேல வேணாம், இவருக்கெல்லாம் மேலும் மேலும் தமிழில் வாய்ப்பு தேடி வருதே? அதைச் சொல்லனும்!இவருக்கு தமிழ் உச்சரிக்க சொல்லிக்கொடுத்து வைரமுத்துவே வெறுத்துவிட்டாராம்.
3. எழுத்தாளர்;-
பிடித்தது:-
எழுத்து சித்தர் பாலகுமாரன் தாங்க,எனக்கு மிகவும் தன்னம்பிக்கை கொடுத்தவர்.ஆதர்ச மனிதர்.
இவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்களின் தொழில்கள் எல்லாம் அந்த துறைவல்லுனராலேயே குற்றம் கண்டுபிடிக்கமுடியாதுங்க,அவ்வளவு நேர்த்தி,ஆங்கிலமே   தெரியாமல் இருந்த எனக்கு டீடோடலர், வர்ஜின், ஸ்காலர், டிப்லோமாட் , ஸ்டிலடோ போன்ற கலைச்சொற்களை எளிய எழுத்தில் படிப்பித்தவர்.கெட்டதை சொல்லி நல்லதை சொல்பவர்.இவரின் கூடல் குறித்த வர்ணனைகளுக்காகவே இவரை படிக்க ஆரம்பித்தேன், நான் மேலும் படிக்க படிக்க அது என் வாழ்வை புடம் போட உதவியது என்றால் மிகைஇல்லை, நன்றி ஐயா.
பிடிக்காதவர்:-
வேறு யாரு? அதுதான் நம்ம சாரு!.
எவ்ளோ பெரிய எழுத்தாளராக வேணுமனா இருக்கட்டும்க, அடுத்தவரின் புகழில் வயிறு எரிந்தால் அது அழகா?என்னை படி, என்னை படி, என்னை மட்டுமே படி , நானே உயர்ந்தவன், எல்லோருமே மட்டம் ,அடுத்தவரின் படைப்புகள் தலையணைகள், அல்லது மலம் துடைக்கும் காகிதங்கள், இதுவே இவரின் வேத வசனம்,என்ன தான்  கூவினாலும் ஒருவருக்கு விதிப்பலன் இருந்தால் மட்டுமே புகழும் விருதும் தேடிவரும். கடவுளே! முதல் பத்தி நினைவுக்கு வந்ததால்  நான் எஸ்கேப்பு.
4.இயக்குனர்:-
பிடித்தது:-
வேறு யாரு? நம்ம  மண்ணின்  மைந்தர்  நெறியாள்கையாளர்  தங்கர் பச்சான் தாங்க,இவர் எல்லாம் நான் படிக்கையிலேயே படம் எடுத்திருந்தால் நான் கூட கலெக்டராவோ டாக்டராவோ ஆயிருப்பேனோ?என்னவோ?(அவ்வ்வ்வ்) இவரின் அழகி, தென்றல்,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு என எதுவும் சோடை போனதில்லை, நடிகர்களுக்கு பதிலாக மண்ணின் மைந்தர்களை அறிமுகப்படுத்தும் இவரின் அணுகுமுறையும் நெறியாள்கையும் எப்போதும் என் ஃபேவரிட் தான்.
பிடிக்காதது:-
செல்வராகவன், இவரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்கப்போன என் சினிமாப்பைத்தியமான  நண்பன் அரைப்பைத்தியமாக திரும்ப வந்தான், எப்படி தெரியுமா? இரண்டாம் உலகப்போரின் யூத கைதி போல, பசியில் துடித்து,எதோ ஒரு ரசாயன மேக்கப்பால்  உடம்பெல்லாம் சிரங்கு வந்து 3 மாதம் நடித்ததற்கு பணமும் தராமல் சென்னைக்கு வித்தவுட் ரயிலில் வந்தானாம். இவரெல்லாம் படம் எடுத்து என்ன ஆகப்போகுது? இதுபோல 500க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர் அல்லாத எக்ஸ்ட்ராக்களை பிடித்து இப்படி கொடுமைப்படுத்தினாராம், என் நண்பன் இப்போ ஒருவழியாக மனதளவில் தேறி சைட் சூபர்வைசராக இருக்கிறான்.

5. நடிகர்:-
பிடித்தது:-
கொள்கை,கருத்து வேறுபாடுகள் மலையளவு இருந்தாலும் அட்டகாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த கலைஞானி கமலஹாசன் தானுங்க.இவரின் பிகமி, ஆண்டி மேரேஜ், ஏத்திசம் போன்ற எவ்வளவோ பிடிக்காதவை இருந்தாலும் இவரின் படம் என்றால் எனக்கு உயிர். இவர் திட்டி கேடிருக்கீங்களா? நான் கேட்டிருக்கேன். ஹய்ட் ஆஃப் அப்யூசிவ் என்ற சொல் சரியாக இருக்கும் அப்படி ஏசுவார். என் கலை இயக்குனர் நண்பன் கமல விநாயகம் அவனை விருமாண்டி ஷூட்டிங்கின் போது ஏசினார் பாருங்கள், எதற்கு? யாரொ அவனை கமல் என்று கூப்பிட்டது இவர் காதில் விழுந்ததற்கு, நாங்கள் கூசிப்போனோம். இவரிடம் மிகவும் பிடித்ததே , அடுத்த அரை மணியில் அதே நபரிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்காமல் மேலும் வேலை வாங்கியது தான். இருந்தாலும் இவரின் நடிப்பு எனக்கு எதையும்விட மிகவும் பிடிக்கும்.
பிடிக்காதது:- விஷால் தாங்க, என்ன கொடுமையான பாடி லாங்குவேஜும், மிடுக்கு என்று நினைத்து இவர் செய்யும் துடுக்கும், வாயை வேறு கோணிக்கொண்டு பேசுவது சகிக்காது, இவர் பார்க்க பாய் நெக்ஸ்ட் டோர் ஆஃப் தமிழ் நாடு போல இருந்தாலும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்து இன்னும் வரலாம், இவர் நிறைய படங்களில்  நடிகர் அர்ஜுனை போய் இமிடேட் செய்வது போலிருக்கிறது.
6. நடிகை:-
பிடித்தது:-
நடிகை அர்ச்சனாங்க இவர் நடித்த எந்த படமும் அச்ட்டையாகவோ ஏனோதானோன்னோ இருக்காதுங்க,கடைசியாக பார்த்து வியந்தது ஒன்பது ரூபா நோட்டு.
இடைச்செருகலாக விதி முறையை தளர்த்தி என் ஜென்ம சாபல்யத்திற்காக:-
குத்து ரம்யா என்னும் திவ்யஸ்பந்தனா  பற்றியும் சொல்லிக்கிறேன் . என்னமோ இவங்க படம் அதிகமா  செய்யாட்டியும்  கூட எனக்கு  ரொம்பவும் பிடிக்கும்.ஆள் கும்முனு இருப்பதாலோ?(இருக்கும் , இருக்கும் )
பிடிக்காதது:-
நமீதா:- மாமிச மலை போல உருண்டும், நிலம் அதிர நடந்தும் , முழுத்திரையையும் மறைக்கும் வாழும் சூர்பனகை,  நமீதா ரசிகர்கள் என்னை மன்னிப்பாராக. இவர் கொஞ்சம் ஸ்லிம்மாகி தெறமை காட்டுனாதான் என்னா?
7.  அரசியல்வா(ந்)திகள்:-
பிடித்தது:- புரட்சித்தலைவி தான், ஏனோ தெரியலை இந்த அம்மாவை எவ்வளவோ முயன்றாலும் வெறுக்க முடியவில்லை, துணிச்சலுக்கு பெயர் போனவர் என்றாலும் எடுப்பார் கைப்பிள்ளை இமேஜால் தடம் புரண்டவர், இன்னும் ட்யூன் செய்து கொண்டு குறைகளை திருத்திக்கொண்டால் எல்லோர் மனதிலும் இடம்பிடித்து இனியாவது வெறுப்பாவது சம்பாதித்துக்கொள்ளாமல் இருக்கலாம்.
பிடிக்காதது:-
வேறு யார் ? சாட்சாத் சிக் ஃபேஸ் ஆற்காடு வீராசாமிதான். நிலவும் ரிசெஷனில் எல்லா தொழிற்சாலைகளுக்கும் திட்டமிட்ட பகுதி நேர மின்வெட்டு அறிவித்து பலபேரின் வேலையை பறித்து அவர்களை பகலாட்டம் சினிமா தியேட்டரில் பார்க்க வைத்தவர், கடந்த ஆட்சியையே குறைசொல்லி திட்டியே வரும் அவசர பழியை திசைதிருப்புவார்.
நான் ஊருக்கு வந்து தங்கிய ஒருமாதத்தில் நான் யாரையாவது திட்டினேன் என்றால் இவராகத்தான் இருக்கும். எங்கள் ஏரியாவில் இன்னும் நான்கு முதல் ஆறு மணி நேர அறிவிக்காத மின்வெட்டு அமலில் உள்ளது, சொல்லிவைத்தால் போல நடு நிசி 12-00 மணிக்கு மின்வெட்டாகி 2-00 மணிக்கு வரும் போகும் அவலமும் உண்டு, இவரை திட்டி ஓய்ந்தபின் யூபிஎஸ் இன்வெர்டர் வாங்கிவிட்டேன், இப்போது இவரை நினைப்பதே இல்லை.
திமுக ஆட்சியை மக்கள் வெறுக்க முக்கிய காரணிகளில் இவருக்கே முதலிடம்
================================================================
நாமாக  நமக்கு  பிடித்த  பிடிக்காதவற்றை  எழுதுவது சுய புராணம் பாடுவதாக இருக்கும் என்பதனாலோ என்னவோ? தொடர்பதிவிட நண்பர்கள் மிக அன்புடன் அழைக்கிறார்கள். தமிழ் வலையுலக சுவாரஸ்யங்களில் இது போன்ற தொடர் பதிவுகளும் இன்றியமையாத ஒன்று. என்னை பாசத்துடன், கொஞ்சி, கெஞ்சி அழைத்த நண்பர்  செந்தில்வேலன் மற்றும் பின்னோக்கி க்கும் மனமார்ந்த  நன்றி!!

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருத்தல் வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும் (எங்கே? தொடர் பதிவுன்னாலே கருங்கல்லை கொண்டு அடிக்கிறாங்கஜி)
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இந்தத் தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்க இருப்பது:-
அது ஒரு கனாக்காலம் திரு. சுந்தரராமன் அவர்கள் ( அமீரகத்தில் இருக்கும் இவர் ,எங்கள் எல்லொருக்கும் சொந்தக்காரர். மிக யதார்த்தமான எழுத்துக்களுக்கும் சொந்தக்காரர்)
ஜோதிஜி தேவியர் இல்லம். (திருப்பூரில் இருந்து புறப்பட்ட இந்த தேசிய கீதம்,  இவரின்  நுட்பமான வார்த்தை பிரயோகங்கள் நமக்கு புதிய வாசிப்பனுபவத்தை தரும்)
மிஸ்டர் .ரோமியோ(பாய்)என்னும் ராஜராஜன் (இளமை துள்ளலுடன் எழுத என்னமோ எழுதுகிறேன் என்னும் பெயரில் சென்னையிலிருந்து வண்டியை கிளப்பியுள்ளார்)கூடிய விரைவில் பட்டையையும்  கிளப்புவார்.
செ. சரவணகுமார் ( சவுதியில் இருக்கும் இவர். லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டு என்பது போன்ற புனைவுகளுக்கு சொந்தக்காரர்.)
================================================
டிஸ்கி:-
மேலே இப்புடி சொல்லியிருக்கானே,அப்படி சொல்லி இருக்கானேன்னு தப்பா நினைக்க வேண்டாம்,அது எல்லாம் ஒரு லுல்ல்ல்லுல்லாயிக்கு தான் அப்படின்னு மட்டும் சொல்ல மாட்டேன்.  வழக்கம் போல நட்புக்கரம் கொடுக்கும் வாங்கும்
3607123925_9e369ebd8b_o
டாட்டா- பை பை சீயூ
என்றும் நட்புடன்

31 comments:

ஷோபிகண்ணு சொன்னது…

//நடிக்கப்போன என் சினிமாப்பைத்தியமான நண்பன் அரைப்பைத்தியமாக திரும்ப வந்தான்,//

அடக் கொடுமையே... இப்பவே டென்ஷ்னானா எப்படி நாளைக்கு ஆஸ்கர் வாங்கறது...

Sampath சொன்னது…

உதித் நாராயணனை மட்டும் ஒருமையில் திட்டுற மாதிரி இருக்கு ... அதை கொஞ்சம் மாத்திடுங்க பாஸ் ...

Sampath சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Romeoboy சொன்னது…

ஆட்டத்துக்கு நான் ரெடி ... அழைத்தமைக்கு நன்றி சகா ..

வினோத்கெளதம் சொன்னது…

குரு எல்லாமே கலக்கல் ..

//குருரமண கீதம்//
இதை கொஞ்சம் பிரித்து எழுதுங்கள்..

எல்லாமே இயல்பா அப்படியே மனசுல இருந்து வந்த மாதிரி இருக்கு..

pappu சொன்னது…

இதுல என்ன சொல்ல இருக்கு. எல்லாம் விருப்பு வெறுப்புகளப் பத்தின விஷயம். ஆனால் கொடுத்த விளக்கங்கள் நல்லா விவரமா கொடுத்திருக்கீங்க!

வேந்தன் சொன்னது…

//டாட்டா- பை பை சீயூ
என்றும் நட்புடன்//
என்பதற்கு மேல் உள்ள ஒரு அனிமேசன் படம்
இவன்... நல்லவன்... இல்ல...
இப்படி திரும்ப திரும்ப சொல்லுது அதை என்ன எண்டு பாருங்கோ ஹிஹிஹி...:))))

கோபிநாத் சொன்னது…

உன்னை விட்ட இந்த மாதிரி எழுதயாரல முடியும் ;))

தூள் ;)))

கலையரசன் சொன்னது…

// வேற யாரு?உதித் நாரா(வா)யன் தான், பெரியம்மா (பிரியமான)பொண்ணை ரசிக்கலாம் //

தமாசு.. தமாசு.. நல்லா உனக்கு நகைச்சுவை வருதே! கீப் இட் அப்!!

Jawahar சொன்னது…

கார்த்தி, முன்னைக்காட்டிலும் பெட்டரான வேலை கிடைச்சிருக்குமே? கடவுள் ஒரு கதவை மூடும் போது இன்னொன்றைத் திறப்பார், அப்படி புதிதாகத் திறக்கிற கதவு தங்கக் கதவாக இருக்கும்.

போகட்டும், உதித் பற்றின உங்க கருத்திலே எனக்கு உடன்பாடு இல்லை. அதைப் பத்தி ஒரு இடுகையே போடப் போறேன்.

http://kgjawarlal.wordpress.com

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

ஹாஹாஹா.. கார்த்திகேயன்.. முதல்ல பார்த்தவுடன் ரொம்ப பூசி முழுகப் போறீங்கனு பார்த்தா கலாய்ச்சுட்டீங்க போங்க..

ராஜாவைப் பற்றிக் கூறிய போது நெகிழ வைத்து விட்டீர்கள்.

சாரு, நமீதா, யுவன், விஷால் எல்லோரையும் போட்டு வருத்ததைப் படித்து வாய் விட்டுச் சிரித்தேன்.

//ஆள் கும்முனு இருப்பதாலோ?(இருக்கும் , இருக்கும் )// :)
//வேற யாரு?உதித் நாரா(வா)யன் தான், பெரியம்மா (பிரியமான)பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லை என பாடி
// :)
உங்க கிட்ட இப்படி ஒரு விமர்சகர் இருக்கிறார் என்பது தெரியாமல் போயிற்றே. கலக்கல் :)

☀நான் ஆதவன்☀ சொன்னது…

//பெரியம்மா (பிரியமான)பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லை என பாடி நம் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாத்தித்தவர்.//

யோவ்வ்வ் செம காமெடி :)

ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…

உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவா என்று சிரமப்பட்டு தேடி உள்ளே வந்து விட்டேன். ஆனால் செந்தில் சொன்னது போல ஐந்து நிமிடம் மனம் விட்டு சிரித்தேன். அற்புதமாக டைமிங் சென்ஸ், நக்கல், நையாண்டி, உண்மை இன்னும் பல.

ஏற்கனவே சண்முகப்ரியன் கொடுத்த குடு இன்னமும் குரும்பியில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது கார்த்திக். காந்திக்கு பிறகு கமலா என்று?

ஆனால் உங்கள் விருப்பங்கள், கருத்து, நோக்கம் 99 சதவிகிதம் என்னுடைய சிந்தனைகளாகவே இருக்கிறது.

நீங்கள் மேலோட்டமாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் தயை செய்து சுந்தர், நாகா இருவருக்கும் இதை தொடரச் செய்யுங்கள். இருவரிடமும் மாறுபட்ட கோணங்கள் நமக்கு கிடைக்கும்.

மின்வெட்டு மாமா பற்றி பத்து பதிவுகள் எழுத முடியும்?
நாரவாயன் ரொம்ப நேரம் சிரித்தேன்.
குத்து ரம்யா உண்மை.
மச்சான் மயக்கியது உண்மை.
சித்தர் சிறந்தவர். ஆனால் நல்லவர் அல்ல,தனி அனுபவம்.
செல்வராகவன் செல்லாத ராகவன் வாழ்க்கையில்.
அர்ச்சனா மனைவிக்கு முன்னோடி.
உங்கள் தலைவி கருத்து என்னுடையதும்.
கமல் பதிவில் பார்த்து படித்து இருந்தால் புரியும்.
தங்கர் இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஊடகத்தில் பேசாமல் இருந்தால் நிச்சயம் ஜெயித்து விடுவார்.
ராசா இசையில் மட்டும் தான். வாழ்க்கையில் அல்ல. மகனுக்கு அவர் நிறத்தைப் போல இருட்டு தான் பிடிக்கும் போலிருக்கு.

மருத்துவரிடம் செல்ல வேண்டியவனை மனம் முழுக்க சிரிப்புடன்?

சுந்தர் நாகாவுக்கு அனுப்பவும். ப்ளிஸ்.

பின்னோக்கி சொன்னது…

அப்பாடி !! என்ன ஒரு ஆராய்ச்சி ஒவ்வொரு விருப்புக்கும் வெறுப்புக்கும். சூப்பர். தனிமனிதனாக யாரும் இவர்களை வெறுப்பது இல்லை. விருப்பதும் வெறுப்பதும் இவர்களின், சமூகம் பார்க்கும் முகத்தைத் தான்.

சென்ஷி சொன்னது…

செல்வராகவன் விசயம் :(((((

ரொம்ப கொடுமை! பதிவு வழக்கம்போல அருமை

செ.சரவணக்குமார் சொன்னது…

அன்புள்ள நண்பர் கார்த்திக்.

பிடித்த பிடிக்காத உங்களின் அனுபவங்களின் தொகுப்பு அருமை.

இந்தப்பதிவினைத் தொடர என்னை அழைத்ததற்கு நன்றி நண்பரே. ஆனால் பதிவுலகில் எனக்குத்தெரிந்தவர்கள் நீங்கள், பா.ரா, நர்சிம் போன்ற சில நண்பர்களே. அனைவருமே இந்த தொடர்பதிவினை எழுதி அசத்திவிட்டீர்கள். மற்றொரு நாளில் நான் என் விருப்பப் பட்டியலைப் பதிவிடுகிறேன்.

பதிவுலகில் முதல்முறையாக என்னை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்தது நீங்கள்தான்,

அன்பும் நன்றியும் நண்பா.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஷோபிகண்ணு சொன்னது…

//நடிக்கப்போன என் சினிமாப்பைத்தியமான நண்பன் அரைப்பைத்தியமாக திரும்ப வந்தான்,//

அடக் கொடுமையே... இப்பவே டென்ஷ்னானா எப்படி நாளைக்கு ஆஸ்கர் வாங்கறது...//

வாங்க அருமை நண்பர் ஷோபிக்கண்ணு , முதல் வருகைக்கும் கருத்தும் நன்றி, இப்போ அவன் ஒழுங்கா வேலை பாக்குறானுங்க.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//Sampath சொன்னது…

உதித் நாராயணனை மட்டும் ஒருமையில் திட்டுற மாதிரி இருக்கு ... அதை கொஞ்சம் மாத்திடுங்க பாஸ் ...//

வாங்க அருமை நண்பர் சம்பத் , முதல் வருகைக்கும் கருத்தும் நன்றி, நீங்க சொன்னபடி
பன்மையில மாத்தியாச்சுங்க பாஸ்:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வினோத்கெளதம் சொன்னது…

குரு எல்லாமே கலக்கல் ..

//குருரமண கீதம்//
இதை கொஞ்சம் பிரித்து எழுதுங்கள்..

எல்லாமே இயல்பா அப்படியே மனசுல இருந்து வந்த மாதிரி இருக்கு..

வா குரு,
உன் சொல்படியே அதுக்கு ஸ்பேஸ் விட்டாச்சுப்பா,
உன் வருகைக்கும் மனமார்ந்த பாராட்டுக்கும் நன்றிப்பா குரு.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வேந்தன் சொன்னது…

//டாட்டா- பை பை சீயூ
என்றும் நட்புடன்//
என்பதற்கு மேல் உள்ள ஒரு அனிமேசன் படம்
இவன்... நல்லவன்... இல்ல...
இப்படி திரும்ப திரும்ப சொல்லுது அதை என்ன எண்டு பாருங்கோ ஹிஹிஹி...:))))//

வாங்க அருமை நண்பர் வேந்தன் ,
சரியான காமெடி பண்ணிட்டீங்க, ரொம்பவே ரசித்தேன்,அந்த அனிமேஷன் எனக்கு ஒட்டு போடு ,ஓட்டு போடுன்னு சொல்லுதாம் , நான் கேட்டுட்டேன்.:)))))))))வருகைக்கும் சிரிப்பு மூட்டியதற்கும் நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

கோபிநாத் சொன்னது…

உன்னை விட்ட இந்த மாதிரி எழுதயாரல முடியும் ;))

தூள் ;)))//

அருமைத்தம்பி கோபிநாத், உன் தொடர் ஆதரவுக்கு நன்றி, புகழ்ச்சி ரொம்ப ஓவராக இருக்கு, பயமா இருக்கு:)))))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

கலையரசன் சொன்னது…

// வேற யாரு?உதித் நாரா(வா)யன் தான், பெரியம்மா (பிரியமான)பொண்ணை ரசிக்கலாம் //

தமாசு.. தமாசு.. நல்லா உனக்கு நகைச்சுவை வருதே! கீப் இட் அப்!!//

கலை மாப்பி,
எங்க நீ குட் போஸ்டுன்னு போடுவியோன்னு பயந்தேன் மாப்பி, நீயே சொன்னா அபீலே இல்லைடா
வருகைக்கு நன்றி, நாய்க்கு பேரு வச்சியே , சோறு வச்சியா? இதை தமிலிஷ்ல சேத்திருக்கலாமில்ல?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

Jawahar சொன்னது…

கார்த்தி, முன்னைக்காட்டிலும் பெட்டரான வேலை கிடைச்சிருக்குமே? கடவுள் ஒரு கதவை மூடும் போது இன்னொன்றைத் திறப்பார், அப்படி புதிதாகத் திறக்கிற கதவு தங்கக் கதவாக இருக்கும்.

போகட்டும், உதித் பற்றின உங்க கருத்திலே எனக்கு உடன்பாடு இல்லை. அதைப் பத்தி ஒரு இடுகையே போடப் போறேன்.//

வாங்க ஜவஹர் சார்
உதித் நாராயணினின் இந்தி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் கொஞ்சம் ட்ராக்கை பின்பற்றியோ?
அல்லது அரைமணியில் ஃப்ளைட் பிடிக்கும் அவசரம் இல்லாமல், நல்ல உச்சரிப்புடன் பாடலாம் என்பதே என் விருப்பம்.வந்ததற்கு நன்றிசார்.
கடவுளின் ஆசியால் எனக்கு நல்ல வேலை சார்ஜாவில் 2 டே வாரங்களில் கிடைத்தது.மீண்டும் நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

ஹாஹாஹா.. கார்த்திகேயன்.. முதல்ல பார்த்தவுடன் ரொம்ப பூசி முழுகப் போறீங்கனு பார்த்தா கலாய்ச்சுட்டீங்க போங்க..

ராஜாவைப் பற்றிக் கூறிய போது நெகிழ வைத்து விட்டீர்கள்.

சாரு, நமீதா, யுவன், விஷால் எல்லோரையும் போட்டு வருத்ததைப் படித்து வாய் விட்டுச் சிரித்தேன்.

//ஆள் கும்முனு இருப்பதாலோ?(இருக்கும் , இருக்கும் )// :)
//வேற யாரு?உதித் நாரா(வா)யன் தான், பெரியம்மா (பிரியமான)பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லை என பாடி
// :)
உங்க கிட்ட இப்படி ஒரு விமர்சகர் இருக்கிறார் என்பது தெரியாமல் போயிற்றே. கலக்கல் :)//

வாங்க அருமை நன்பர் செந்திவேலன்,
எதோ நீங்களும் பின்னோக்கியும் என்னை இந்த பதிவு எழுத அழைத்ததால் தான் சாத்தியமாயிற்று,அதற்கும் வந்ததற்கும் நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

☀நான் ஆதவன்☀ சொன்னது…

//பெரியம்மா (பிரியமான)பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லை என பாடி நம் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாத்தித்தவர்.//

யோவ்வ்வ் செம காமெடி :)//

வாங்க அருமை நண்பர் சூர்யா,
நீங்களே இப்புடி சொன்னதுல எனக்கு இன்னும் மகிழ்ச்சி தேவுடு,வருகைக்கு மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…

உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவா என்று சிரமப்பட்டு தேடி உள்ளே வந்து விட்டேன். ஆனால் செந்தில் சொன்னது போல ஐந்து நிமிடம் மனம் விட்டு சிரித்தேன். அற்புதமாக டைமிங் சென்ஸ், நக்கல், நையாண்டி, உண்மை இன்னும் பல.//

வாங்க அருமை ஜோதிஜி,
உங்கள் ஆழமான கருத்துக்களுக்கும் தொடர் ஊக்கங்களுக்கும் மிக்க நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

பின்னோக்கி சொன்னது…

அப்பாடி !! என்ன ஒரு ஆராய்ச்சி ஒவ்வொரு விருப்புக்கும் வெறுப்புக்கும். சூப்பர். தனிமனிதனாக யாரும் இவர்களை வெறுப்பது இல்லை. விருப்பதும் வெறுப்பதும் இவர்களின், சமூகம் பார்க்கும் முகத்தைத் தான்.//

வாங்க அருமை நன்பர் பின்னோக்கி,
எதோ நீங்களும் செந்திவேலனும், என்னை இந்த பதிவு எழுத அழைத்ததால் தான் இதெல்லாம் சாத்தியமாயிற்று,அதற்கும் தொடர் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//சென்ஷி சொன்னது…

செல்வராகவன் விசயம் :(((((

ரொம்ப கொடுமை! பதிவு வழக்கம்போல அருமை//

அருமை நண்பன் சென்ஷி உன் தொடர் வருகைக்கு நன்றிடா மாம்ஸ்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//செ.சரவணக்குமார் சொன்னது…

அன்புள்ள நண்பர் கார்த்திக்.

பிடித்த பிடிக்காத உங்களின் அனுபவங்களின் தொகுப்பு அருமை.//
வாங்க அருமை நண்பர் சரவணகுமார்,
தொடர் வருகைக்கும் , நல்ல கருத்துக்கும் நன்றி.

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

// வேற யாரு?உதித் நாரா(வா)யன் தான், பெரியம்மா (பிரியமான)பொண்ணை ரசிக்கலாம் //// வேற யாரு?உதித் நாரா(வா)யன் தான், பெரியம்மா (பிரியமான)பொண்ணை ரசிக்கலாம் //

ஹஹஹஹ. நானும் நோட் பண்ணிருக்கேன்... சகிக்கலை
கார்த்திக்...சூப்பரா இருந்தது. நல்ல ரசிப்பத்திறன் உடையர் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள்.

jackiesekar சொன்னது…

கார்த்தி ரொம்ப நல்லா எழுதி இருக்கே.. முகிகியமா.. பாலகுமாரன் சான்சே இல்லை... அதே போல் சாருவுக்கு சம்மட்டி அடி...

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)