டெட் மேன் வாக்கிங்(1995) – மனதுக்குள் கேட்கும் மரண ஓலம் (18+)


அங்கீகரித்தமைக்கு நன்றி:-

ருமை  நண்பர்களே,சான்றோர்களே.மரணதண்டனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு  அரங்கேற்றப்படும் உயிர்க்கொலை  சரியா? தவறா?

கொலைகுற்றத்துக்கு மரணதண்டனை   தான்  தீர்வா? என  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல கேட்ட மற்றொரு படம். படம் பார்ப்பவர்களுக்கு தங்கள் முடிவு  மரணதண்டனை சரியே ! என இருந்தால் அதில்  நிச்சயம் தடுமாற்றம் ஏற்படச்செய்யும்.

ணம் படைத்த குற்றவாளிகள் யாரேனும் மரணதண்டனை அடைந்து தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிர் விட்டதை  நீங்கள் பார்த்ததுண்டா? நிச்சயம் இராது, ஏன் என்றால் அவர்கள் சமூகத்திலேயே பெரிய ப்ரொஃபெஷனல் வக்கீல்களிடம் சென்று அவர்களின் திறமையான வாதத்தாலும் பெயர்தெரியாத மருத்துவ சம்பந்தப்பட்ட வியாதிகளையும் காரணம் காட்டி ப்ரெசெண்டேஷன் செய்து  தாம் பெற்ற மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விடுவர் உதாரணம் நொய்டா-நிதாரி சம்பவ புகழ்  நரமாமிசம் தின்னும் மிருகம் மனீந்தர் சிங் பாந்தர்,

 ரி விஷயத்துக்கு வருகிறேன். டெத் ரோ என்னும் வாழ்வுக்கும் சாவுக்குமான இடைப்பட்ட கால அளவில் ஒரு மரணதண்டனை கைதி தினம் தினம் செத்து பிழைக்கிறான். ஒருவனுக்கு தான் இந்த தேதியில், இந்த நேரத்தில், இந்த இடத்தில் இந்த விதத்தில் தான் மரணம் சம்பவிக்கும் என தெரிந்துவிடுகின்றபோது அவன் படும் வேதனை சொல்லி மாளாது.அவன் பாதி ஏற்கனவே இறந்துவிடுகிறான், மீதமுள்ள நடைபிண உடலையும் உயிரையும் தான் இவர்கள் மீண்டும் கொன்று புதைக்கின்றனர் என்கிறது படம்.

ப்படி வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவன் பலிகடாவாகி கொலை அறைக்குள் தண்டனை நிறைவேற்ற கூட்டிச்செல்லப்படும்போது சிறைக்காவலர்கள் " அரோகரா" " அரோகரா"  என்பது போல "டெட் மேன் வாக்கிங்" "டெட் மேன் வாக்கிங்" என்கிறார்கள். அது தான் இந்த படத்துக்கான பெயர்க்காரணம். நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய…

மேத்யூ போன்ஸ்லேட் (ஷான் பென்) ஹிட்லரையும், கொடிய ஆர்யன் ப்ரதர்ஹுட் இனத்தையும் சிலாகிப்பவன். இனவெறி  கொண்டவன். ஹிட்லரின்  கொடிய நாஜிப்படையில் தான் இருந்திருக்கவேண்டும் என விரும்புபவன்.   கடந்த ஆறு வருடங்களாக‌ சிறையில் தனி அறையில்  மரண தண்டனை விதிக்கப்பட்டு  டெத்ரோவில் வெயிட்டிங்  லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளான்.  அப்படி என்ன தான்  இவன் குற்றம்  செய்தான்?


ளம் காதல்ஜோடிகள் தனியார் காட்டுக்குள் , காரில் டேட்டிங்கில் கலவிக்கு தயாராகையில் மேத்யூ போன்ஸ்லேட்டும்,ஏர்ல் டெலக்ராய்ஸ்(ரேமண்ட் ஜே.பேரி) ம் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து,அந்த பெண்ணை இருவரும் மாறிமாறி கற்பழித்து,அதில் ஏர்ல் அந்த பெண்ணை குரூர இன்பத்துக்காக‌ வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தி கிழிக்க‌, மேத்யூ போன்ஸ்லேட் ஷாட் கன்னால் அந்த காதலனை தலையில் சுட்டுவிட்டு அகல்கின்றனர், அதில் ஏர்ல் வக்கீலுக்கு பணம் தண்ணீராக செலவழித்து ஆயுள் தண்டனை வாங்கி விட‌, இவனுக்கு  பணம் இல்லாததால் ஏப்பைசோப்பயான வக்கீல் மாட்டி வழக்கை கோட்டை விடுகிறான். சமூக நிறுவனங்கள் இவன் வழக்கை எடுத்து நடத்த விரும்பாத நிலை

ப்போது ஒரே நம்பிக்கை ஒளி பொதுத் தொண்டு சேவகி ஸிஸ்டர் ஹெலன் பிரிஜென் (சூசன் செரன்டன்)(won oscar).இவன் அவருக்கு முதலைக் கண்ணீர் வடித்து கடிதம் எழுத,அவர் அவனை மிகக்கருணையுடன்  எவருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல்அணுகி குறைகளைக் கேட்டு பாவமன்னிப்பு வழங்க ஏத்தனிக்க, இவனோ அவள் அன்பை ,கருணையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவரிடமே மரியாதை குறைவாகவும்,பேச்சில் காமம் கலந்தும் சொற்களை உதிர்த்து அவரை காயப்படுத்துகிறான்.

ன் முயற்சியில் சற்றும் தளராத ஹெலன் அவன் குடும்பத்தார், அவன் கொன்றவர் குடும்பத்தார் எல்லோரையும் சென்று சந்திக்கிறார்,அவர்களின் ஏச்சு பேச்சுக்கும் ஆளாகிறார்.அவன் அம்மாவை மட்டும் இவரது விடாமுயற்ச்சியால் மனமிறங்கச் செய்கிறார்.இவன் வழக்கு மீதான கருணைமனு பரிசீலனை விசாரனைக்கு வர இவனது கொலை கற்பழிப்பு புகைப்படங்கள்,ஆறு பேர் அடங்கிய நீதிபதிகளால் பார்வையிடப்பட்டு மேலும் கடுப்பாகி ஒரே வாரத்தில் தண்டனை என உறுதி செய்யப்படுகிறது. ஹெலன் மற்றும் அவரின் ஆஸ்தான தொண்டு நிறுவன வக்கில் ஹில்டன் பார்பரும்( ராபர்ட் ப்ராஸ்கி) மனம் தளராமல் மேல் முறையீட்டுக்கு முயல்கின்றனர். அவன் அம்மாவுக்கு மகனின் மீதான வெறுப்பு மறைந்து பாசம் பிறக்கிறது.

சிறை வளாகத்தில் இருக்கும் சகோதரர் க்ளைட் பெர்சி (ஆர்.லீ.எர்மி) ஹெலனை நோக்கி நீ ஒரு நயவஞ்சக மிருகத்துக்கு உதவ எத்தனிக்கிறாய், அவன் திருந்தாத ஜென்மம்,என அறிவுறை சொல்கிறார்.அப்போதும் ஹெலன் தன் கொள்கையில் மனம் தளர‌வேயில்லை


ஹெலன் தினமும் இவனை சிறையில் சந்தித்து பைபிளில் இருந்து நீதிக்கதை சொல்கிறார். திருந்தாத ஜென்மமான இவனிடம் அன்று என்னதான் நடந்தது என கேட்க? இவன் அன்று தான் கோகெய்ன்  உட்கொண்ட போதையில் இருந்ததால் என்ன நடந்தது என்றே தெரியாது!. தான் நிரபராதி என்றும், அந்த காதலர்கள் மேல் தான் தவறு, தன் முன்னாள் காதலி மீது தான் தவறு,அவள் இவனுக்கு பிறந்த பெண் குழந்தையை அனாதை விடுதியில் விட்டுச் சென்றதால் தான் நான் போதைக்கு அடிமையானேன் என அநியாயத்துக்கு பிதற்றுகிறான்.ஹெலன் இப்போதும் மனம் தளறவில்லை.அவனை திருத்தமுடியும் என நம்புகிறார்.

ரண தண்டனைக்கு மூன்றே நாள் இருக்கும் போது மைக்கேல் வெறுப்பின் உச்சத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு தந்த‌ பேட்டி ஹெலனுக்கு இவன் திருந்துவானா?என்னும் சந்தேகத்தை உண்டு பண்ணுகிற‌து. தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் தனக்கு பிடித்த அரசியல் தலைவர் ஹிட்லர், பிடித்த  இயக்கம்‍  நாசிசம், கையில் ஆயுதம் கிடைக்கப்பெற்றால் முதலில் கொல்வது கருப்பர் இனம், செவ்விந்திய இனம் மற்றும் யூத இன மக்கள், என்றும் தான் ஒரு சுத்தமான ஆர்யன் ப்ரதர்ஹுட் இனவிரும்பி என்றும்  தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த

வன் மேல் முறையீடு செய்திருந்த கருணை மணுக்கள்  நிராகரிக்கப்படும் அபாயமும் ஏற்படுகிறது.ஹெலனின் தொண்டு நிறுவனத்தில் இருக்கும் கருப்பின மற்றும் பழங்குடி அநாதை குழந்தைகள் கூட பயத்தில் ஹெலனிடமிருந்து தள்ளியே இருக்கின்றனர்.

வர் வேறுவழியின்றி அவனுக்கு பரியல் சூட் வாங்கி வருகிறார். அவன் ஹெலனிடம் தனக்கு உண்மை அறியும் பரிசோதனைக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யுமாறு கேட்க, இவர் கர்த்தரிடம் மனம் உருகி மன்னிப்பு கேள்,உன் கேவலமான அவப்பெயரை துடைத்துக்கொண்டு கண்ணியமான மரணத்தை தழுவு என அறிவுறை சொல்கிறார். மனதளவில் நொறுங்கிப்போன  இவனுக்கு தைரியம் தருகிறார். இறுதிவரை இவன் கூடவே இருப்பேன் என தெம்பூட்டுகிறார்.

ந்த அறிவுரைகள் அவன் காதுகளில் விழுந்ததா?மூளைக்கு எட்டியதா?பாவ மன்னிப்பு வாங்கினானா? இறந்து போன‌ காதலர்களின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டானா? போன்ற நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகளை   டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!

==================================
படத்தின் முன்னோட்டக் காணொளி




==================================


மேலை நாடுகளில் மரண தண்டனை பற்றி குறிப்பிடப்படவேண்டிய விஷயங்கள்:‍-
*த
ண்டனை நாளுக்கு ஒரு வாரம் முன்பே சிறை அதிகாரிகள்  கைதியை நிற்க வைத்து அளவெடுத்து  சவப்பெட்டி செய்ய ஆர்டர் கொடுப்பார்கள்.கைதிக்கு பொசுபொசுவென்று இருக்குமே என்று கவலையே படமாட்டார்கள்.

*கைதியின் வீட்டிலிருந்தே பரியல் சூட் என்னும் க‌றுப்பு நிற  சூட் கச்சிதமாக தைக்கப்பட்டு சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.அவர்கள் அதை கைதி கொல்லப்பட்ட பின் அவருக்கு அணிவிப்பர்.இதுக்கு பேர் தான் இறுதி மரியாதையோ?

*இறுதி தினத்தன்று தண்டனைக்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கைதியின் குடும்பத்தார் கடைசியாக பார்த்து திரும்பிவிடுகின்றனர், தொட்டு பேசவோ, முத்தம் கொடுக்கவோ, ஆரத்தழுவி விடை கொடுக்கவோ?முடியாது.வேண்டுமெனில் வெளியில் காத்து இருந்து கையோடு பூத உடலை வாங்கிச்செல்லலாம், ஆனால் அந்த துணிச்சல் ரொம்ப அபூர்வமே!

*கைதிக்கு ஆசைப்பட்ட உணவை சிறை சமையல் கூடத்திலேயே சமைத்து கொடுப்பர்,அல்லது பலத்த சோதனைக்கு பின்னர் KFC ல்  இருந்து கூட தருவிப்பர் (கடைசி ஆசை தானே?) அதில் என்ன கொடுமை என்றால்?  இவன்  கம்பிகளுக்கு  பின்னே  சாப்பிடுகையில், வெளியே பஃபே நடக்கும் அதில்  வழக்குக்கான சாட்சிகள், குற்றம் சாட்டியவர்கள், இவன் சாக சாமியை வேண்டியவர்கள், தேவாலய சகோதரிகள், சகோதரர்கள் , இவனை எதிர்த்து வாதாடியவர்கள், சார்பாக வாதாடியவர்கள் , டாக்டர்கள் என எல்லோரும் ஒன்றாக டின்னரை முடிப்பர். (இல்லாட்டி பசிக்கும்ல, சாவதை பார்த்தபின் சாப்பிட முடியாதில்லையா?)

*கைதிகள் முடிதிருத்தப்பட்டு , சவரம் செய்யப்பட்டு, கைகால்களில் உள்ள ரோமங்கள் ஊசிபோட நரம்பு எளிதாக புடைத்துதெரியும் வண்ணம் சவரம் செய்யப்பட்டு.பின்னர் நன்கு குளிக்கவைக்கப்படுவர்.

* பின்பு நல்ல துவைத்த சீருடையும் டயாப்பரும் அணிவிக்கப்படுவர். (அடல்ட் டயாப்பர்‍ = தண்டனை நிறைவேறும் போது பலருக்கு பீதியில் மலம் வந்துவிடுமாம், பயத்தில் சிறு நீரும் வெளியேறிக்கொண்டே இருக்குமாம் ) உள்ளே கைதி கொண்டு செல்லப்பட்டவுடன் கண்ணாடியின் திரைச்சீலை திறக்கப்பட்டு, இவன் கைகால்கள் ஸ்ட்ரெட்சர் போன்ற படுக்கையில் இறுக்கி கட்டப்பட்டு, இரண்டு கைகளிலும் நரம்பு தேடிஎடுக்கப்பட்டு,

2x 3 =6 மூன்று வித விஷ மருந்துகள் அடைக்கப்பட்ட  பிஸ்டன் எந்திரத்தில் இருந்து வெளியேறும் மருந்து குழாய்களை கைதியின் இரண்டு கைகளிலும் குளுக்கோஸ் போல ஏற்றுகின்றனர். அதை வெளியே உள்ள கண்ணாடி வழியே சாட்சிகளும்,டாக்டர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்,உயிர்காக்கும் டாக்டரே விஷ மருந்தை பரிந்துரைத்து ,தருவித்து வாங்குவதும் ,அதை கைதியின் உடலில் செலுத்துவதும் வேடிக்கையே!

*சில நொடிகளில் மயக்கத்துக்கு தள்ள=Sodium thiopental, கைகால்கள், நரம்புமண்டலம்,தசைகள்,ஏனைய அவையங்களை செயலிழக்க செய்ய=Pancuronium bromide இதயம் மூளையை செயலிழக்க செய்ய=Potassium chloride.இதுக்கு பேரு தான் முக்கூட்டு மருந்தோ? ஆக 10முதல் 20 நிமிடங்களில் கைதி சொல்லொனாத்த்துயரை அனுபவித்து பரலோகம் சென்று விடுவது நிச்சயம்.

* வெளியே பெல் அடித்ததும் எல்லோரும் வெளியேற வேண்டும், வெளியே நடக்கும் சிறிய சொற்பொழிவில் இறந்தவர் விபரம்,அவர் தின்ற ஆகாரம், குடித்த நீரின் அளவு, சாக எடுத்துக் கொண்ட நேரம், மருந்து வாங்க செலவழிக்கப்பட்ட வரிப்பணம் எவ்வளவு என விளக்குவர். பின்னர் பிரேத பரிசோதனை முடித்து சூட் அணிவித்து வளாகத்தின் வெளியே காத்திருக்கும் உறவினர் வசம் பூத உடல் ஒப்படைக்கப்படுகின்றதாம்.

* செத்தவன் கூட எளிதாக செத்திருப்பான்,அவனை நினைத்து அவன் உறவுகள் காலத்துக்கும் விடும் கண்ணீர் இருக்கே?.

*அமெரிக்கா , சீனா, கனடா,போன்ற  நாடுகளில் அமலில் இருக்கும் இந்த கொடிய லெதல் இன்ஞெக்ஷன் முறை கடவுளே இப்படி ஒரு சாவு மட்டும் வரவே கூடாது என நினைக்க வைக்கும்.இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை  " எலக்ட்ரிக் சேர்" என்னும் கொடிய முறை அமலில் இருந்ததாம். அதில் கைதியை அமர வைத்து கை கால்களை கட்டி, மூன்று விதமான வோல்டேஜ் மின்சாரத்தை பாய்ச்சி கொல்லும் போது ,சில சமயம், தலையில் தீப்பிடித்து தீ ஜுவாலை கொழுந்துவிட்டு எரியுமாம், கொடிய நாற்றம் ஏற்படுமாம், முதலில் மூளை , பின்பு இதயம், பின்பு அவயங்கள் என செயலிழக்க வைத்து ஒரு ஆளை முழுவதும் கொன்று முடிக்க 15‍ முதல் இருபது நிமிடம் பிடிக்குமாம்,  பல நேரங்களில் நாற்காலியில் கட்டப்பட்ட பட்டை அறுந்து விடுமாம், உடம்பும் எங்கோ எகிறிப்போய் விழுமாம், மர நாற்காலியே எரிந்த சம்பவங்களும் உண்டாம். கொல்லும் இடமோ  ஆடறுக்கும் இடம் போல ஆகி, அதை அப்புற‌ப்படுத்துவதற்குள் போதும் !போதும்! என ஆகிவிடுமாம்.இதற்கு பெயர் காட்டுமிராண்டித்தனமாம். (ஐயோ, ஐய்யோ!!!!)
 
கவே ஒரு ஜீவன் வலிக்காமல் சாவதற்கு ஏற்ற வகையில் லீதல் இன்ஜெக்ஷன்  போட்டு கொலை செய்யும் முறையே இன்றும் பரவலாக கடைபிடிக்கப்படுகிறதாம். அட நல்லவனுங்களா!!!!!!

ஆனால் உச்சரிப்பதற்கு மிக எளிமையாக உள்ள இந்த லீதல் இன்ஜெக்ஷன்  உண்மயிலேயே மிகவும் கொடிய முறையாகும். நம் இந்தியா, இன்ன பிற ப்ரிடிஷார் ஆண்ட நாடுகளில் வழக்கிலிருக்கும் தூக்கு போடுதலே வலி குறைவான தண்டனை முறையாம். இதற்கு பெயர் ஜீவ காருண்ய முறையாம். (ஐயோ, ஐய்யோ!!!!)
 
ம்  நாடுகளில் மரண தண்டனை பற்றி குறிப்பிடப்படவேண்டிய விஷயங்கள் பற்றி ட்ரான்ஸ்பரன்ஸியான தகவல்கள் இல்லை இருந்தால் அதுபற்றி தெரிந்தவர்கள் வலையேற்றவும்.

ஷாங்க் ரிடெம்ஷன், மிஸ்டிக் ரிவர் புகழ் டிம் ராபின்ஸ்  அற்புதமான இயக்கத்திலும் தான் ஒரு சக்கரவர்த்தி தான் என நிரூபித்த படம்.மனிதர் ஒவ்வொரு ஃப்ரேமிலும் இருப்பை பிரதிபலிக்கிறார்.

ஷான் பென்னின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம்.21க்ராம்ஸ்,மிஸ்டிக் ரிவர், மில்க் போதும், செம துணிச்சல்காரர், இவர் ஏற்கும் சவாலான பாத்திரங்களுக்கு நான் ரசிகன் இந்த முறையும் ஏமாற்றவில்லை. இந்த படம் பார்த்துவிட்டு இவரை சிலருக்கு பிடிக்காமலும் கூட போகக்கூடும். அந்த அள‌வுக்கு பெர்ஃபெக்ஷன் காட்டியிருந்தார்.இவருக்கு ஆஸ்கர் தந்திருக்கலாம்.

சிஸ்டர் ஹெலன் மிக அருமையான நடிப்பை வழங்கியிருந்தார்,இவருக்கு ஆஸ்கர் வழங்கி கவுரவித்தது மிகச்சரியே!கண்களே பேசுகின்றது கருணைமொழி, இந்த ஸிஸ்டர் ரோலுக்கு ஏற்ற நடிகை.

ருணை கொண்ட வக்கில், மைகேல் போன்ஸ்லேட்டின் அம்மா, இறந்த காதலர்கள், அவர்களின் பெற்றோர்கள் என மிக அருமையாக நடித்திருந்தனர்.

இதுவும் ஒரு உண்மைக்கதையே! சம்பவ இடம் மற்றும் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டு இதே பெயரில் டெட் மேன் வாக்கிங் என்னும் புத்தகமாக வந்து பின்னர் படமாகவும் வந்துள்ளது.

டெட் மேன் வாக்கிங் புத்தகம் நிறைய வெறுப்பை மட்டுமே சம்பாதித்ததாம், ஆனால் இந்த படம்  எல்லோரின் ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்று மனதில் நீங்கா இடம் பிடித்ததாம். படத்தின் இசை பற்றி சொல்லியே ஆகவேண்டும் , மாபெரும் இசை வித்தகர்களின் ஆல்பங்கள் ஒரே படத்தில்  பயன்படுத்தப்பட்டது இந்த படத்திற்காகத்தான் இருக்கும். அதிலும்  குறிப்பிடப்படவேண்டியது நம் பாகிஸ்தானிய‌ இசைமேதை நஸ்ரத் படே அலி கான் அவர்கள் பாடிய த லாங் ரோட்  என்னும் ஆல்பம்,அதன் ஆலாபனைகள் உங்கள் உள்ளத்தை உருக்கும்.

டத்தில் வரும் மைக்கேல் போன்ஸ்லெட் பாத்திரம், அவன் நண்பன் பாத்திரம் நிஜ வாழ்வில் இருவருக்குமே எலெக்ட்ரிக் சேரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாம்.
==================================
 டிஸ்கி:-

திரு. ஷண்முகப்ரியன் ஐயா அவர்கள் என்

அடால்ப் ஹிட்லரின் கடைசி பனிரெண்டு நாட்கள் (18+) 

என்னும் பதிவில் இட்ட மிக நுட்பமான கருத்து.

 திரைக்கதையில் ஒரு உத்தி இருக்கிறது.யாருடைய பார்வையில் இருந்து கதை சொல்லப் படுகிறதோ? அந்தக் கதாபாத்திரத்தின் மேல் நமக்கு நம்மை அறியாமலேயே அனுதாபம் வந்து விடும்.மிகக் கொடியவன் கூட அவனது மனதின் வழியே பார்த்தால் அவன் நல்லவன் போல் தெரிவான்.நாம் எல்லோருமே நமக்கு நமே நல்லவர்களாக இருக்கும் மனித மனத்தின் மாயம் இது. தமிழில் உதாரணம் உதிரிப் பூக்கள்.
------------------------------------------------------------------
எப்படி? ச்சும்மா அதிருதில்ல?

============================================ 

லீதல் இன் ஜெக்ஷன் என்னும் எமன் :‍
மன உறுதி கொண்டோர் மட்டும் பார்க்க வேண்டிய கானொளி:‍




====================

Directed by Tim Robbins
Produced by Jon Kilik
Tim Robbins
Rudd Simmon
Written by Helen Prejean (book Dead Man Walking as Sister Helen Prejean C.S.J.)
Tim Robbins
Starring Susan Sarandon
Sean Penn
Robert Prosky
Lois Smith
Jack Black
Editing by Lisa Zeno Churgin
Studio PolyGram Filmed Entertainment
Working Title Films
Distributed by Gramercy Pictures (USA)
Release date(s) December 29, 1995 (USA)
Running time 122 minutes
Country United States
Language English


===================
இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.
-------------------
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)