படத்தின் கதை இன்றைய நிஜ வாழ்வில் வெளிப்படையாகவே நடப்பதுதான். உங்களுக்கு ஈரோடு மாவட்ட முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலராகவும் தமிழக அரசின் முன்னாள் கைத்தறி துறை அமைச்சருமாக பதவிவகித்து வந்த என்.கே.கே.பி.ராஜாவை தெரிந்திருக்கும், ஈரோடு அருகே உள்ள பெருந்துறையை சேர்ந்த சிவபாலன் என்னும் விவசாயியின் மெயின் ரோட்டை ஒட்டிய பெரிய விவசாய நிலத்தையும் தென்னந்தோப்பையும் அபகரிக்க, அவரின் மொத்த குடுமபத்தையும் அடியாட்களை விட்டு கடத்தி, சிறைவைத்து அவரின் வயதான மாமனாரையும் அடித்தே கொன்ற ஒரு மாபாதகர். அந்த வழக்கை பத்திரிக்கைகள் சடுதியில் மறந்திருக்கலாம், ஆனால் என்றாவது சத்தியம் ஜெயிக்கும் என்றிருக்கும் பொது மக்கள் மறந்திருக்க முடியாது,
மண்ணாசைக்கு அந்த கட்சி இந்த கட்சி என எந்த கட்சியும் விதி விலக்கல்ல, அரசியல்வாதிகள் எப்போது நம் நிலத்தை [என ஒன்று இருந்தால்] இதுபோல அடித்து பிடுங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நிலத்தை கொடுத்துவிட்டால் உயிராவது மிஞ்சும். என்ன சரிதானே?!!, அந்த சம்பவத்தை அப்படியே நேரில் பார்ப்பது போல இப்படம், என்ன ஒன்று !!! படத்தின் முடிவில் சத்தியம் ஜெயிக்கிறது!!குற்றவாளிகள் தண்டனை அடைந்தனர். ஆனால் நிஜத்தில் இல்லை.:(
இந்தப் படத்தை பாராட்ட எத்தனையோ? காரணங்கள் உண்டு, பொல்லாதவன், அஞ்சாதே போன்ற படங்கள் நமக்கு மிகவும் தாக்கத்தை உண்டாக்கியதற்கு காரணம் என்ன? !!! பொல்லாதவனில் திருடப்படும் ஒரு பைக்கை எப்படி ? பைக் திருடர்கள் பேட்டைக்குள் கடத்திப்போய் சில நாட்கள் மணலுக்குள் பதுக்கியபின், லாவகமாக பாலீத்தின் சுற்றி கண்டெய்னர் லாரியில் ஏற்றி இலங்கை, நேபால், வங்காளம், போன்ற நாடுகளுக்கு அனுப்புகின்றனர்?!!, கடத்தப்படும் பைக்கில் எப்படி ப்ரவுன் சுகர், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அடைத்தும் கடத்துகிறார்கள்?!!! , என ஆணிவேரையே வெளியே உருவியதுபோல படம் பிடித்திருப்பார்கள். அது சொன்ன சேதி புதிது.
அஞ்சாதே-ல் பணத்துக்காக பணக்கார குழந்தைகள், கல்லூரிப்பெண்களின் கடத்தல் எப்படி நிகழ்கிறது? கடத்தல்காரர்களின் அகோரமுகம், அவர்களின் தொழில் ரகசியம், கடத்தல்காரர்களை ஒடுக்கப் போராடும் நேர்மையான போலீசாரின் ஆழ்ந்த அற்பணிப்பு இவற்றை நட்பு என்னும் தனி இழையோடு சேர்த்து மிக அழகாக சொல்லியிருப்பார்கள்.
அதுபோலவே இந்த படத்திலும், அமீக்கஸ் கூரி [Amicus curiae] என்றால் என்ன? எப்படி பொதுநல வழக்கு போடவேண்டும்?. மோசடியை மோசடியால் வெல்வது எப்படி ? போலிச்சான்றிதழ்கள், போலிப்பத்திரங்கள், எப்படி தயாரிக்கப்படுகிறது? கம்யூனிஸ்ட் கட்சியின் இரட்டைத்தன்மை, எப்படி கேடுகெட்ட ,பேராசை கொண்ட நிலத்தரகர்கள் 100 வருட பழமையான சொத்தின் முத்திரைத் தாளையும் கூட, தயாரித்து அடுத்தவரின் அரிய சொத்தை தனதாக்கிக் கொள்கின்றனர்?, கிரயம் செய்யும் நிலத்தில் எத்தனை வகை உண்டு? எப்படி ஒரே சொத்தை பலருக்கு தரகர்கள் இலகுவாக விற்கின்றனர் ?, எப்படி கேடுகெட்ட அரசியல்வாதிகள், அரசு ஏழைகளுக்கு இலவசமாக வழங்கிய நிலத்தை ஒரு அமைச்சரின் கைக்கூலிகள் எப்படி மொத்தமாய் சுருட்டி கையப்படுத்துகிறார்கள்?!!!
மேலும் நில மோசடிக்காரர்களுக்கு துணைபோகும் கேடு கெட்ட போலீசார், மாஜிஸ்த்ரேட். சப் ரெஜிஸ்ட்ரார், என்று நெஞ்சை படபடக்கச்செய்யும் திகிலுடன் குடும்பம், நட்பு, காதல் என்னும் பிரதான இழையுடனும் சேர்த்து சொல்லியிருக்கின்றனர் ,
இதில் புவனேந்திரன் என்னும் மோசடி டாகுமெண்ட் ரைட்டராக வந்த ஜெகதி ஸ்ரீகுமாரை மிஸ்டர் ஃப்ராட் என்றே அழைக்கலாம், அப்படி ஒரு கன கச்சிதமான வேடப்பொருத்தம். லாஜிக் மீறல் இல்லாத படம் பார்க்க நினைப்போர், அவசியம் பார்க்க வேண்டியபடம் இது .
இரண்டாவது சிறப்பம்சம் மோகன்லாலை படத்தில், காற்றாலை வைத்து தனக்கான மின்சாரத்தை தானே தயாரித்துக்கொள்ளும், 150 அரிய வகை கறவை பசுக்களை தொழுவத்தில் பாடல் ஒலிபரப்பி, பால்கறக்கும், இயற்கை மண்புழு உரம் போட்டு மா, தென்னை, பலா, நெல் விதைக்கும், கோழிப்பண்ணையும் வைத்திருக்கும் ஒரு அல்ட்ரா மாடர்ன் விவசாயியாக சித்தரித்திருந்தது எனக்கு மிகவும் பிடித்தது,
படம் பார்க்கும் அனைவரையும் கவரும் என்பது திண்ணம், நகரவாசிகளான நாம் தான் இந்த அவசரயுகத்தில் இயற்கை எழில், மாசற்ற நீர், காற்று, கால்நடைகள் , பச்சை வயல்,ஓங்குதாங்கான மரங்கள், தோப்புகளை அனுதினமும் எப்படி இழக்கின்றோம்?!! , அவற்றிலிருந்து எப்படி அந்நியப்பட்டு நிற்கிறோம்?!! என்றும் நிச்சயம் உணர்த்தும்,
நாம் வாழும் காங்கிரீட் காட்டுக்குள் ஒரு சிறு மரக்கன்றாவது நடும் எண்ணத்தையும் இப்படம் தோற்றுவிக்ககூடும். இதுபோல எண்ணம் விதைக்கும் படங்கள் அதிகம் வரவேண்டும், அதை மக்களும் கொண்டாடி வரவேற்கவேண்டும். மோகன்லால் என்னும் மகாநடிகரின் படு இயல்பான நடிப்பில் உருவான மற்றொரு படம்.
பாரதியாரின் காணி நிலம் வேண்டும் என்னும் பாடலின் பொருளை புரிந்து அமைத்தது, நடித்தது போல இருந்தது மோகன்லாலின் தன் மூன்று ஏக்கர் பூமியின் மீதான பாசமும், நேசமும்.
சில கொடியவர் அதை அபகரிக்கையில் சாம,பேத,தண்டம் இவை மூன்றையும் எடுக்கிறார். படம் பார்க்கும் ஒருவருக்கு நம் நிலமே பிடுங்கப்பட்டது போல வெகுண்டு எழ வைக்கும், அலட்டலில்லாத நிஜமான நடிப்பு. என்னே ஆளுமை?!!!. ஸ்டீரியோ டைப் நடிப்பை பார்த்து நொந்துபோன நம் கண்களுக்கு ஆகச்சிறந்த மாற்று, 300 படங்களை செய்தும் துளியும் பந்தாயில்லை, 4 தேசிய விருதுகள் இவரது கிரீடத்தில். இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படம் பார்க்கும் அனைவரையும் கவரும் என்பது திண்ணம், நகரவாசிகளான நாம் தான் இந்த அவசரயுகத்தில் இயற்கை எழில், மாசற்ற நீர், காற்று, கால்நடைகள் , பச்சை வயல்,ஓங்குதாங்கான மரங்கள், தோப்புகளை அனுதினமும் எப்படி இழக்கின்றோம்?!! , அவற்றிலிருந்து எப்படி அந்நியப்பட்டு நிற்கிறோம்?!! என்றும் நிச்சயம் உணர்த்தும்,
நாம் வாழும் காங்கிரீட் காட்டுக்குள் ஒரு சிறு மரக்கன்றாவது நடும் எண்ணத்தையும் இப்படம் தோற்றுவிக்ககூடும். இதுபோல எண்ணம் விதைக்கும் படங்கள் அதிகம் வரவேண்டும், அதை மக்களும் கொண்டாடி வரவேற்கவேண்டும். மோகன்லால் என்னும் மகாநடிகரின் படு இயல்பான நடிப்பில் உருவான மற்றொரு படம்.
பாரதியாரின் காணி நிலம் வேண்டும் என்னும் பாடலின் பொருளை புரிந்து அமைத்தது, நடித்தது போல இருந்தது மோகன்லாலின் தன் மூன்று ஏக்கர் பூமியின் மீதான பாசமும், நேசமும்.
சில கொடியவர் அதை அபகரிக்கையில் சாம,பேத,தண்டம் இவை மூன்றையும் எடுக்கிறார். படம் பார்க்கும் ஒருவருக்கு நம் நிலமே பிடுங்கப்பட்டது போல வெகுண்டு எழ வைக்கும், அலட்டலில்லாத நிஜமான நடிப்பு. என்னே ஆளுமை?!!!. ஸ்டீரியோ டைப் நடிப்பை பார்த்து நொந்துபோன நம் கண்களுக்கு ஆகச்சிறந்த மாற்று, 300 படங்களை செய்தும் துளியும் பந்தாயில்லை, 4 தேசிய விருதுகள் இவரது கிரீடத்தில். இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
திலகன் ஒரு மகத்தான பெர்ஃபெக்ஷனிஸ்ட் நடிகர், இவர் ஸ்படிகம் என்னும் படத்திலும் மோகன்லாலின் கொடுங்கோல் டீச்சர் அப்பாவாக வந்து அதகளம் செய்திருப்பார், இதிலும் ஜெர்மியாஸ் என்னும் ஆர்ப்பாட்டமில்லாத ஒர் கிருஸ்துவ விவசாயி அப்பா வேடம். அவர் மனைவி எல்சம்மாவாக கவியூர் பொன்னம்மா, இது கம்பெனி நடிகர்கள் என்பது போலான ஒரு குடும்ப கேங்க், சுகுமாரி வேறு சித்தியாக, பாசக்கார குடும்பம். இதில் மேத்யூஸாக வந்த மோகன்லாலுக்கு மூன்று ஜோடிகள் , அழகிய முதிர்கன்னி லஷ்மி கோபாலஸ்வாமி, அழகிய அரசு வழக்கறிஞர் லஷ்மிராய், தனியார் டிவியில் காம்பியரரான ஷப்பியான ப்ரியங்கா,
இதே மூன்று நடிகைகளை வைத்து தெலுங்கிலோ, தமிழிலோ?!!! படமெடுத்திருந்தால் மூன்று பேரையும் மழையில் ஆடவிட்டு சாத்துகுடி ஜீஸ் போட்டது போதாமல், இவர்களின் அம்மாக்களையும் வேறு எக்குதப்பாய நாயகனோடு இணைத்து டூயட் பாடவும்,ஆடவும் வைத்திருப்பார்கள். சோ சேட். இதில் நாயகிகள் ஒருவருடனும் மோகன்லாலுக்கு டூயட்டே இல்லை, என்ன ஒரு அக்கிரமம்?!!!
படத்தின் வசனங்கள் செம கூர்மை,குறிப்பாக நேர்மையான அரசு வழக்கறிஞர் பிரபலன் [சீனிவாசன்] பேசும் ஒரு நறுக் வசனம் சபாஷ் சொல்ல வைக்கும்.அது ஒரு கூட்டமில்லாத சாலை,எதோ லேகியம் விற்பவன் ,பரிசுச் சீட்டு விற்பவன் போல பிரசார ஜீப்பில் ஏறி மைக் பிடித்த சீனிவாசன், படபடவென மருத்துவக்கல்லூரிகளில் உடல்தானத்தில் நடந்து வரும் முறைகேடுகளை ஊழலை அரசு விரைவில் எடுத்து விசாரிக்கவேண்டும் , பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்கிறார். மைக்கை அணைக்கிறார், இறங்குகிறார்.
யாரும் இவரை கவனிக்கவில்லை, இவரும் அதை கண்டுகொள்ளவில்லை, இதைப்பார்த்து பரிதாபமும் ஏளனமும் தொணிக்க மோகன்லால் ,நீங்கள் ஏன் ? இப்படி உங்கள் பொன்னான நேரத்தை யாருமே கவனிக்காத விஷயத்துக்கு செலவிடுகிறீர்கள்? என்கிறார், அதற்கு அவர் எல்லோரின் கவனமும் வேண்டுமென்றால் நான் கேபெரே தான் நடத்தனும்,
நான் கையடி[கைதட்டல்] வேண்டி இதை செய்யவில்லை, தானுண்டு தன் வேலை உண்டு என்று சாலையில் செல்லும் நூறு பேரில் ஒருவன் இதை காதில் கேட்டு இவன் என்ன சொல்கிறான்? என்று ஒரு கணம் சிந்தித்தாலே அது தனக்கு கிடைத்த வெற்றிதான் என்கிறார். என்ன ஒரு பொறுமை, தீர்க்கதரிசனமான தொலைநோக்கு பார்வை, இது போல படம் முழுக்க நிறைய சிலேடையான, கருத்தாழம் பொதிந்த வசனங்கள், காணக்,கேட்க கிடைக்கும்,
மற்றும் ஒரு காட்சியில் உள்ளூர் யானை ஒன்று உலக அதிசயமாக இரட்டை குட்டியை ஈன்றிருக்கும், அதை தொலைக்காட்சிக்கு கவர் செய்ய வரும் பெட்சியிடம் [ப்ரியங்கா] அந்த ஊர்த்தலைவர்,யானை இரட்டை குட்டி போட்டதற்கு காரணம் நான் தான் என செய்தியில் வருமாறு செய்ய சொல்வார், அதற்கு மோகன்லால் ஸ்பாண்டேனியசாக என்ன?!! யானை இரட்டை குட்டி போட்டதற்கு நீங்கள் காரணமா?!!! எனக்கேட்டு சிரித்து மடக்குவார், அவர் உடனே மறுத்து இல்லை இல்லை, நான் குடிலுக்கு ஏசி யும் மெத்தையும் போட்டு கொடுத்தேன் என்பார்.அமர்க்களம்.
லஷ்மி கோபாலஸ்வாமி செம அழகு, கண்டிப்பான கூட்டுறவு வங்கி உயர் அதிகாரி வேடம் இவர் பரம்மரத்திலும் கலக்கியிருப்பார். லஷ்மிராய்க்கு கண்டிப்பான அரசு வழக்கறிஞர் வேடம் பார்வையிலேயே எள்ளும் கொள்ளும் இருவருக்கும் வெடிக்கிறது . பிரியங்கா துரு துருவென அழகிய டிவி காம்பியர்,,சிரித்த பெரிய முகம், மூவருமே நல்ல அழகிகள், படித்தவர்கள், அன்பானவர்கள், இறுதியில் மோகன்லால் இந்த மூவரில் மனைவியாக தேர்வு செய்தது யாரை? அது ஏன் ? என்பதும் மிகவும் சுவாரஸ்யம்.
வில்லன் அலுவா சாண்டியாக வந்த லாலு அலெக்ஸ் , மோகன்லாலின் ஆப்த நண்பராக வந்த ஷங்கர் போன்ற ஏனைய பாத்திரங்களும் மிகவும் உணர்ந்து செய்திருந்தார்கள். மொத்தத்தில் இது போல படங்கள் மலையாளத்தில் வருவது மலையாளிகளின் மற்றொரு கொடுப்பனை.
மோகன் சித்தாராவின் இரு பாடல்கள், பிண்ணணி இசை இனிமை, இதில் இசைப்புயலின் எந்த இசைக்கோர்வையையும் இவர் பயன்படுத்தவில்லை, திவாகரின் கேமரா அருமை, இப்படி ஒரு படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸுக்கு நன்றி, இவர் ஏற்கனவே உதயானுதாரம்,நோட்புக் போன்ற சிறப்பான படங்களை இயக்கியுள்ளாராம். அதையும் பார்க்க ஆவலெழுகிறது.உதயானு தாரம் தான் தமிழில் வெள்ளித்திரையாக வந்ததாம்.
படத்தில் கடைசியில் ஹோட்டலில் வைத்து நிலத்தை ரெஜிஸ்டர் செய்யும் காட்சியை ஒருவர் வாழ்நாளில் மறக்கவே முடியாது, ரோப் கட்டி எடுக்காத இயல்பான தெருச்சண்டை போடுவது போலான, ஒரு சண்டைக்காட்சியும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று.
ஈவிடம் ஸவர்கமானு=சொர்க்கம் தான் சந்தேகமேயில்லை
=======0000=======
இப்படம் முழவதும் யூட்யூபில் ஆங்கில சப்டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது,
படத்தின் யூ ட்யூப் முன்னோட்ட காணொளி:-
=======0000=======