இரண்டு வயது கொண்டாடிய சண்டாள ரிசெஷன்!!!

சென்ற இருவாரங்களாக,ஏன்?இப்போதும் கூட முழுக்க மிகுந்த பணிச்சுமை, இரவு வீடு திரும்பவே நடுநிசி 2-00 ஆகிறது,மறுநாள் 9-00 மணிக்கு மீண்டும் வேலை ஆரம்பிக்கும். இப்போதும் அப்படியே, ஒரு குழுவாக இப்படி இயங்குவதால் அயற்சிக்கே இடமில்லை.நான் மட்டும் இப்படி உழைக்கிறேனே என்ற பேச்சுக்கே இடமில்லை, முதலாளி கூட அருகே ஒரு கணிணியில் வேலைசெய்து கொண்டிருப்பார். தனக்கு காஃபி ஃபிக்ஸ் செய்யும் போது நமக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்கும் அற்புதங்கள்,இங்கே அமீரகத்தில் நிகழ்கின்றன.

து போல எல்லாம் உழைத்து பல வருடங்கள் ஆகின்றன,சென்னையில் தான் இப்படி அதிகம் 24மணிநேரம் தொடர்ந்து  வேலை செய்தது,சுமார் 6 வருடங்கள் முன்பு சென்னை ஓஎம்ஆர்-ஐடி காரிடாரில் ஐடி பார்க்குகள் அதிகம் வரத்துவங்கியபோது, எங்கள் ஆர்கிடெக்ட் அலுவலகத்தில் சுமார் 20 ஐடி பார்க்குகள்,கால் செண்டர்கள் டிசைன் செய்து கொண்டிருந்தோம், அதில் சான்சா,[xanza] சத்யம், டிசிஎஸ்,சதர்லேண்ட் என அடக்கம். , எங்களுடையது பேஸ்மெண்ட் ஆஃபீஸ் ஆகையால் வெளியே கலவரமே நடந்தாலும் தெரியாது, மரம் செடி,கொடியே இருக்காது. சதா ஏசியில் இருந்து உடம்பே உஷ்ணமாயிருக்கும், நேரத்துக்கு சாப்பிட முடியாததால், பசியெடுக்காது, பசித்தபோது சாப்பிடமுடியாதபடி பணிச்சுமை அழுத்தும்.

ண்கள் செவசெவ என எரிந்தபடி இருக்கும். விட்டில் மதியம் சென்று தூங்கும் போது யாராவது ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிட முடியும். குழந்தையை கொஞ்சக்கூட நேரமிருக்காது.விடிகாலையில் அலுவலகத்தில் வீடு திரும்ப வண்டியை எடுக்கும் போது தான், முந்தைய நாள் அடித்த வெயிலுக்கு டயரே பஞ்சர் ஆயிருப்பது தெரியும். இதையெல்லாம் நிறைய அனுபவித்திருக்கிறேன். குறையே சொன்னதில்லை.

2006 டிசம்பரில் இங்கே ஒரு துடிப்பில்,கட்டாயத்தில் அமீரகம் வந்தவுடன், மனம் கிடந்து துள்ளியது, வேலை பிடித்திருந்தது, ஆனால் 10 பேர் செய்யும் வேலையை 100 பேர் செய்தனர். செம சிரிப்பாய் இருந்தது.என்ன தான் உலகின் உயரமான கட்டிடத்தில் வேலை என்றாலும் சம்பளம் குறைவாதலால், மனம் லயிக்கவில்லை,நல்ல பெயர் எடுத்தும்,வெறும் ஒரு வருடத்தில் ,மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து, வேலை மாறிவிட்டேன்.

னால் அந்த செப்டம்பர் 15, 2008 இப்படி வாழ்க்கையை புரட்டி போடும் என்று நினைக்கவே இல்லை. வீடு வாங்கினேன். மறுமாதமே வேலை போனது, மறுவாரமே இறைவன் சித்தத்தில் வேறு வேலை கிடைத்தது. இதோ இப்போது உள்ள ஆஃபீஸிலும் 80சதம் ஆட்குறைப்பு நடந்தேறிவிட்டது. ப்ராஜக்டுகளே சுத்தமாக இல்லை. மனம் சென்னையில் செய்தது போன்ற அயராத உழைப்பை  எப்பொதும் நிகழ்த்த துடிக்கிறது.  ஆகவே சலிக்காது காம்பெடிஷன் ப்ராஜக்டுகள் எடுத்து செய்கிறோம்,வென்றால் வேலை உண்டு, இல்லையேல் இல்லை. தொடர்ந்து வேலை இருக்குமா?பார்ப்போம்.

மீரகத்தில், செலவு செய்யும் ஒவ்வொரு திர்காமுமே தகும். சில ஆஃபீஸ்களில் வெள்ளி,சனி இரு வாரநாட்கள் விடுமுறை. வாரத்துக்கு 45 மணி நேரம் மட்டுமே வேலை. குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடியும்,தரமான சுற்றுப்புறம், தரமான கல்வி, தரமான வாழ்க்கைத்தரம் எல்லோருக்கும் நிச்சயம்.ஆனால் கடந்த இரு வருடங்களாக வேலை நிரந்தரமின்மை என்னும் அச்சுறுத்தல் மனதுக்குள் புகுந்து கொண்டு மணிஅடிக்கிறது. ஆனால் இதுவும் கடந்து போகும். இதை இன்னும் இரு வருடம் கழித்து நினைத்துப்பார்க்கையில் சிரிக்கவும் நேரிடலாம்.அல்லது நினைவுக்கே வராமலும் போகலாம்.

ன் கண் முன்னாலேயே என் பல நண்பர்கள் வேலை இழந்து தாயகம் சென்றனர். அதில் வடலூரான் கலையரனும் அடக்கம்.  எனக்கு கையறு நிலை. யாருக்கும் உதவக்கூட முடியவில்லை.ஊரில் உள்ள நண்பர்களுக்கும் சிவி மூவ் செய்து உதவமுடியாத நிலை. எங்காவது வேலைக்கு ஆள் உள்ளே எடுத்தால் தானே?

ப்போது உள்ள நிலையில் பெரும்பானோர் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள், ஆனால் வேலையை விட்டு அனுப்பாதே,என்னால்  இந்த சூழலில் வேலைதேடி அலைய முடியாது என்கின்றனர். என்னுடன் வெறும் பாஸ்போர்ட் காப்பி கொடுத்து 250,000 திர்காம்  வரை [ரூ31லட்சம்] வங்கிக்கடன் வாங்கிய ஏனைய பேர் இன்னும், ஒரு தவணை கூட கட்டாமல் மிகுந்த மனோ தைரியத்துடன் இருக்கின்றனர். வங்கிகள் போன்செய்து கேட்டால் ஜென்டில் மேன் ஸ்டைலில் பணம் செல்வாயிடுச்சு , வேலை கிடைத்தால் கொடுக்கிறேன்!!! என்கின்றனர். எப்பா என்னா தைரியம்? என்றே நினைக்க தோன்றுகிறது.ஏகம் பேர் 2 வருடம் முன்பே அப்ஸ்காண்ட் ஆகிவிட்டனர்.

ன் போன்ற எப்படியாவது தவணையை  ஒழுங்காகக்கட்டும் ஆட்களுக்கு வங்கிகள் மேலும் அபராதமும், வட்டிக்கு, வட்டியும். போட்டுவருகின்றன, தவணை தொகையை குறைக்கமுடியாது, தவணைகாலத்தை நீட்டிக்கமுடியாது,நோ லோன் ரீஸ்ட்ரக்சர் ஃபார் யுவர் கைண்ட் ஆஃப்  ஸ்கீம் என்னும் தேய்ந்து போன பதிலையும் திரும்ப திரும்ப சொல்லிவருகின்றனர். ஐயா வங்கிகளே!!! உங்களை வட்டியை குறைக்க சொல்லி பிச்சை கேட்கவில்லை, உங்கள் தேய்ந்துபோன தட்டையான வங்கி விதிகளை மாற்றுங்கள். அப்போது தான் சில விடாக்கண்டர்களிடம் எதாவதாவது பெயரும். ஹி ஹி சின்ன குமுறல். சொந்தக்கதை யூ சீ.இன்னும் 12 மாதம் தவணை பாக்கி உள்ளது.அது தான் கீழே கவுண்ட்ட் டவுன் விட்ஜெட் எல்லாம்  வைத்து ஓயாமல் தேய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சென்னை கார்பொரேஷன் தண்ணீர் குழாய் போல 2மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் வருகிறது, அதுவும் போன மாதத்தின் போன மாத பாக்கி. எப்படியோ இழுத்து பிடித்து ஓட்டும் எனக்கு, ஊருக்கு போக வேண்டும் என்றாலே பதட்டம் தொற்றிக்கொள்கிறது, சில நண்பர்கள் என் நிலைமை புரியாமல், சோனி நோட்புக். சாம்சங் ஆண்ட்ராய்ட் செல்போன், ஹார்ட்டிஸ்க், ஐபாட், ஏன்? ஐபோன்.கூல்வாட்டர் பாடிஸ்பெரே,14 மெகா பிக்ஸல் டிஜிட்டல்  கேமரா, எல் சிடி டிவி என பெரிய லிஸ்டையே  மெயில் அனுப்பி வாங்கி வரச்சொல்லுவதால் [பணம் அங்கே வந்ததும் தருவார்களாம்] என் பயணத்தை அடுத்த வருடம் மே மாதத்துக்கு ஒத்தி வைத்து விட்டேன்.

தனாலேயே என் மகளுக்கோ மனைவிக்கோ கூட எதுவுமே வாங்கி செல்வதில்லை. அங்கேயே எல்லாம் கிடைப்பதால் கூட்டிப்போய் வாங்கி கொடுத்து விடுகிறேன். சில சென்னை நண்பர்கள், ரிசெஷனா? அப்படின்னா? ஈரோடு பக்கமோ?தூத்துக்குடி பக்கமோ என்று எகத்தாளம் செய்கின்றனர்.

ல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு  வலிய வந்து கடன் கொடுக்க தேடிவந்து கேன்வாஸ் செய்த பேங்க் சேட்டனை வெறியோடு தேடினேன்.அவருக்கும் வேலை போய்விட்டதாம். அவர் இப்போது இன்சூரன்ஸ் ஏஜெண்டாம். இன்சுயூரென்ஸ் எடுங்கள், உங்க வீட்டுக்கு நல்லது என்றார். நான் உங்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அதுவும் உங்கள் வீட்டுக்கு நல்லது தான், என பல்லை கடித்தேன். வெறியோடு போன் செய்தால் இன்சூரன்ஸா போடச் சொல்ற? இருடி மகனே என்று நினைத்துக்கொண்டேன். அவர், பேடிக்கண்டா,பேங்க் ஒண்ணும் ஆக்‌ஷன் எடுக்கப்பற்றாது என்றார். அடங்கொய்யால, நேர்மையா  கட்றவனையும் கெடுக்க நீ ஒருத்தன் போதும்!!!!  என்று போனை கட்செய்தேன்.

வார இறுதிநாட்களில் எங்காவது மாலுக்கு விண்டோ ஷாப்பிங் செய்யலாம் என்று பார்த்தால் கண்ணில்படுவதெல்லாம்,இரண்டாம், மூன்றாம் தரமான சீன கம்பெனிகளின் எலக்ட்ரானிக் பொருட்கள். பிரபல பிராண்டுகளின் புதிய வரவுகளை ஷோகேஸில் அடுக்கி வைக்க கடைக்காரர்களிடமே காசு இல்லை போலும் , எல்லா இடங்களிலும் ஷாப் க்ளோசிங் சேல் என்று போட்டு காலிபண்ற விலைக்கு ஷர்டு முதல் அந்துருண்டை வரை விற்கின்றனர் . ஏனைய பேர் வேடிக்கை மட்டும் பார்க்கின்றோம். நிறைய மால்கள் சென்ற வருடம் இந்தியர்களை நீக்கிவிட்டு சம்பளம் குறைவென்று பிலிப்பினோக்களை பணிக்கு அமர்த்தியது, இப்போது அதுவும் போய், நேபாளிகளை கவுண்டர் சேல்சுக்கு அமர்த்தியுள்ளது.

தே கதைதான் ஹாஸ்பிடல்களிலும், பள்ளிகளிலும், ரிசெஷனால் பாதிக்கப்படாத துறையினரே இல்லை எனலாம். அத்தை எப்போ செத்துப்போவா? திண்னை எப்போடா காலியாகும்னு சொல்வதுபோல எப்போடா லோனை முடிப்போம் என்றிருக்கு, இதே போல யாராவது லோன் வாங்கி தவணை கட்டிக்கொண்டிருந்தால், அதுவும் அமீரகத்தில் இருந்தால்,தொடர்பு கொள்ளவும், சேர்ந்து கும்மிஅடிக்கலாம்.

வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ரிசெஷன் ஒழிய  இறைவனை வேண்டிக்கொள்வோம், இனி வரும் காலத்தில் ஒருவனுக்கு எகனாமிக் பூமும் வேண்டாம், ரிசெஷனும் வேணாம்டா சாமி. யாரேனும் இப்போது கடன் வாங்குவதாக இருந்தால் நூறு முறை யோசித்து வாங்குங்கள். கடன் இருந்தால் கண்ணுக்கு தெரியாத பேய் உங்கள் தோள் மேல் உட்கார்ந்து தொல்லை கொடுப்பதை போன்றது.அனுபவஸ்தன் சொல்கிறேன்.

இனி யாராவது மாமனார், மச்சினர். பெரியப்பா, சித்தப்பா, என்னைப்பார்த்து காசை வேஸ்ட் பண்ணாதப்பா, நிலம் வாங்கு, நீச்சு வாங்குன்னு சொன்னா,கவுண்டமணி ஸ்டைலில் எவனாருந்தாலும் வெட்டுவேன்.எவனாருந்தாலும் வெட்டுவேன்.என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

====0000====

42 comments:

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நண்பா... என்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்களது துயரங்களைப் பகடியாக்கியிருக்கிறீர்கள். இது கட்டாயம் கடந்து போகும். கண்டிப்பாக !

ரிசெஷன் சீக்கிரம் ஒழிய, நீங்கள் வணங்கும் அந்தக் கடவுளை (எனக்கு நம்பிக்கையில்லாவிடினும்கூட) கேட்டுக்கொள்கிறேன்.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//கண்கள் செவசெவ என எரிந்தபடி இருக்கும். விட்டில் சென்று தூங்கும் போது ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிட முடியும்.குழந்தையை கொஞ்சக்கூட நேரமிருக்காது.விடிகாலையில் வண்டியை எடுக்கும் போது தான் முந்தைய நாள் அடித்த வெயிலுக்கு டயரே பஞ்சர் ஆயிருப்பது தெரியும். இதையெல்லாம் நிறைய அனுபவித்திருக்கிறேன். குறையே சொன்னதில்லை.//

இது மிகவும் உண்மை. நானும் இதேபோல் சில கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். மண்டை காயும் !

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//என் போன்ற எப்படியாவது தவணையை ஒழுங்காகக்கட்டும் ஆட்களுக்கு வங்கிகள் மேலும் அபராதமும், வட்டிக்கு, வட்டியும். போட்டுவருகின்றன, தவணை தொகையை குறைக்கமுடியாது, தவணைகாலத்தை நீட்டிக்கமுடியாது,நோ லோன் ரீஸ்ட்ரக்சர் ஃபார் யுவர் கைண்ட் ஆஃப் ஸ்கீம் என்னும் தேய்ந்து போன பதிலையும் திரும்ப திரும்ப சொல்லிவருகின்றனர்.//

நமது அவசரம் என்பதால்தான் இவர்களை அணுகினோம். ஆனால், இவர்கள், மனிதாபிமானமே இல்லாமல் இப்படி நடந்துகொள்கின்றனர்... கொடுமை !

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//ஊருக்கு போக வேண்டும் என்றாலே பதட்டம் தொற்றிக்கொள்கிறது, சில நண்பர்கள் என் நிலைமை புரியாமல், சோனி நோட்புக். சாம்சங் ஆண்ட்ராய்ட் செல்போன், ஹார்ட்டிஸ்க், ஐபாட், ஏன்? ஐபோன்.கூல்வாட்டர் பாடிஸ்பெரே,14 மெகா பிக்ஸல் டிஜிட்டல் கேமரா, எல் சிடி டிவி என பெரிய லிஸ்டையே மெயில் அனுப்புவதால் [பணம் அங்கே வந்ததும் தருவார்களாம்] என் பயணத்தை அடுத்த வருடம் மே மாதத்துக்கு ஒத்தி வைத்து விட்டேன்.//

ஒரு பைசா பேராது நண்பா !! இதுல ஒண்ணைக்கூட வாங்கிராதீங்க :-) .. இந்த அன்பளிப்புகளை நம்பியே காலம் தள்ளும் சில பேரு இருக்கானுங்க... Don't entertain them !

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்.
நண்பா,
எங்கே 15ஆம் தேதி பதிவு போடமுடியுமோ முடியாதோன்னு தான் இபோவே போட்டுட்டேன்.
===
தவிர ஊருக்கு போகும் போது கைவீசிக்கொண்டு போவதையே இப்போதெல்லாம் விரும்புகிறேன்,வாங்கிசெல்லும் ஆர்வங்கள் வடிந்து விட்டன.
===
என்னிடம் க்ரெடிகார்டு பில்களும் ரெசிப்டுகளும் ஒரு பெட்டி நிறைய உள்ளன.
பல உறவினர்கள்,நண்பர்கள் பணம் கொடுத்துவிடுவார்கள் என்றாலும். அவர்கள் பணம்முன்பே கொடுத்தால் நன்றாக இருக்கும்.பலர் கேட்கவே கூச்சப்படுவார்கள்.

ஒரு சிலர் உள்ளனர்.எத்வுமே கேட்கமாட்டார்கள்,நாம் வாங்கிச்சென்று கொடுத்தாலும் நம்மை திட்டுவர்?ஏன் இப்படி காசை கரியாக்குகிறாய் என்று.அதுபோலவும் நண்பர்கள் உள்ளனர்.

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

//கடன் இருந்தால் கண்ணுக்கு தெரியாத பேய் உங்கள் தோள் மேல் உட்கார்ந்து தொல்லை கொடுப்பதை போன்றது.//

உண்மை தாங்க தல கடன் இல்லாத வாழ்க்கையே சுகமான வாழ்க்கை, அமீரக கட்டடதுறையில இவ்வளவு ரிஸ்சன்னு இப்ப தான் எனக்கு தெரியுது, கவல படாதீங்க தல எல்லாம் சரியாயிடும். மனம் தளராதீங்க.....

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@டுபாக்கூர் கந்தசாமி
நண்பரே மிகுந்த ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி,கடனில்லாமல் வருமானத்துக்குள் மனைவி மக்களுடன் வாழ்வதே அருமையான வாழ்க்கை.

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

//
|கீதப்ப்ரியன்|Geethappriyan| கூறியது...
@கருந்தேள்.
நண்பா,
எங்கே 15ஆம் தேதி பதிவு போடமுடியுமோ முடியாதோன்னு தான் இபோவே போட்டுட்டேன்.//

என்ன தல சொல்றீங்க????????????? நிலம அந்த அளவுக்கா மோசம் ஆய்டிச்சி.....

பின்னோக்கி சொன்னது…

//பெரும்பானோர் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள், ஆனால் வேலையை விட்டு அனுப்பாதே

இது தாங்க.. இதே தாங்க.. இங்கயும் நிலைமை. வேலைய விட்டு அனுப்பினா என்ன நடக்குமோன்னு நினைச்சா தூக்கம் வரமாட்டேங்குது :(.

//எகனாமிக் பூமும் வேண்டாம், ரிசெஷனும் வேணாம்டா சாமி.

குடுத்துட்டு.. பறிச்சுக்குறத்துக்கு.. குடுக்கவே வேண்டாம்னு சொல்றது கரெக்ட்தான். இந்தப் பதிவைப் படித்த உடன் இன்னும் பீதிதான் அதிகம் ஆனது :(

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நண்பரே,
இல்லை,ஆஃபீஸில் முக்கியமான் ப்ரெசெண்டேஷன் போகிறது ஈத் விடுமுறைகளும் எங்கள் டீமுக்கு இல்லை,அதனால் தான்,பயப்படும்படி இல்லை.நான் தேதியை பலசமயம் மறந்தும் விடுவேன்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நண்பர் பின்னோக்கி,
மன்னிக்கவும் பீதியை கிளப்பகூடாதுன்னுதான் கொஞ்சம் ஹ்யூமராவே போட்டேன்,ஆனாலும் உங்களுக்கு கலக்கத்தை உண்டுபண்ணிவிட்டது,வருந்துகிறேன்.தைரியமாக இருப்போம்.

பின்னோக்கி சொன்னது…

என்னங்க இது 15ஆம் தேதி பதிவு போடமுடியுமான்னு எழுதியிருக்குறத பார்த்த கஷ்டமா இருக்கு...

எதோ.. இப்ப நிலைமை ரொம்ப மோசமில்லைன்னு சொல்றாங்க. ஆனா நீங்க சொல்றத பார்த்தா நிலைமை சரியாகலைன்னு நினைக்கிறேன்.. :(

பின்னோக்கி சொன்னது…

போன பின்னூட்டத்த பார்த்து நிம்மதி. லீவத்தான் அப்படி சொன்னீங்களா ? :)...

பின்னோக்கி சொன்னது…

கவுண்ட்டவுன் க்ளாக்ல இருக்குறது உங்க அடுத்த இந்தியபயணத்துக்கான தேதின்னு நினைச்சேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஆமாம் நண்பரே.
இதுக்கு நிச்ச்யம் போடனும்னு நினைச்சிருந்தேன்,2 மணிநேரம் ஃப்ரீ,உடனே போட்டுவிட்டேன்.நண்பரே நாம எல்லாம் ஒரே படகுல இருக்கோம்.பயப்படவேண்டாம்.நான் போனவாரம் நண்பர் சரவணகுமார் ஊருக்கு திரும்பியௌடனேயே ஆடிப்போய்விட்டேன்.இது வரை பார்த்ததில்லை என்றாலும் அப்படி ஓர் ஆளுமை.பாதிப்பு,ஆனால் ரிசெசன் எல்லோருக்குமே பொது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பின்னோக்கி,
எப்போடா லோன் முடிப்போம்,ஃபேமிலிய இங்க கூப்பிடுவோம்னே இருக்கு.ரிஷெஷனால பாதி சம்பளத்தில் குடும்பம் நடத்தும் அளவுக்கு பக்குவம் வந்தும் விட்டது.:)அதுதான் அந்த டைமர்.மேலே என் பெண்ணின் வயது.

ஹாலிவுட் பாலா சொன்னது…

மீ த கமிங் பேக், ஆஃப்டர் பல் விளக்கிங்க், பாத்ரூம் போயிங், குளிச்சிங், ஆஃபீஸ் போய்ங்.

பைங்.. பைங்..

ஹாலிவுட் பாலா சொன்னது…

//அதில் வடலூரான் கலையரனும் அடக்கம்//

தல.. நெஜமாவா தல? அவர் கல்யாணத்துக்கு போனதாதானே சொன்னாங்க?

:( :( :(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

ம்ம்..

நல்ல காலம் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போம்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

தல.. ஸாரி தல.

மேட்டரை படிக்காம, மீ த பல்விளக்கிங்க்ன்னு எல்லாம் பின்னூட்டம் போட்டுட்டு போய்ட்டேன்.

நம்ம செ.சரவணக்குமார் ஒரு முறை, ஊருக்கு போகவேண்டிய கதையை எழுதும்போது இருந்த அதே மன கஷ்டம் இந்த பதிவை படிக்கும் போதும் வருது.

--

நீங்க சொன்ன மாதிரி, எனக்கும் கடன் பிடிக்காது. க்ரெடிட் கார்ட் இல்லாம, அமெரிக்காவில் சுத்தும் ஒரே ஆள் நானாதான் இருப்பேன். எது வாங்கினாலும் டெபிட்தான்.

அல்லது, டெபிட்டில் எதை வாங்க முடியுமோ அதைத்தான் வாங்குவேன். ஆனா இங்க ‘க்ரெடிட் லைன்’ இருந்தாகனும். அதுக்காக 2-3 கார்ட் வச்சிகிட்டு, அப்பப்ப தேய்ச்சாகனும். அதையும் என் வைஃப்தான் செய்வாங்க. நான் டெபிட்டோடவே இருந்துக்கறது.

ஆனா... என்னோட லைஃப் ஸ்டைலில் இன்னொரு பிரச்சனையிருக்கு. என்னன்னா..

கடனும் இல்லை. சேவிங்ஸும் இல்லை. நாளைக்கு எனக்கும் வேலை போனா... ஓட்டாண்டிதான். நடுத்தெருவில்தான் நின்னாகனும்.

அதுக்கு, நீங்க இப்ப கஷ்டப்பட்டாலும், இன்னும் ஒரு வருடத்தில் மனசில் கொஞ்சம் நிம்மதியிருக்குமே தல?!

எனக்கு அது சுத்தமா கிடையாது. இங்கு நிறைய சாஃப்ட்வேர் நண்பர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதிதான் என்னுது. [பைத்தியக்காரன்... நோட் பண்ணிக்கங்க].

போற வரைக்கும் போகட்டும்னு விட்டுட்டேன்.

யு டோண்ட் வொர்ரி..........!!!

--

பச்சப்புள்ள மாறீ சிரிச்சிகிட்டு இருந்த கீதப்ப்ரியனுக்குள்ள இத்தனையா??

[டேய் பாலா நீ திருந்த மாட்டடா?]

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@செந்தில்வேலன்
நண்பரே
நன்றி
விரைவில் சரியாக பிரார்த்திப்போம்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிபாலி
தல
ஆமாம் தல கலையரசன் 2 மாசம் ஃபுல் ச்விங்கா தேடுனார்.ஒண்ணும் மாட்டலை,ஆகவே முன்பே நிச்சயம் செய்ததால் திருமணமும் செய்யபோயிட்டார்.இப்பவும் முய்ன்றுகொண்டே இருக்கார்,லெட்சீ.

===
தல,
இப்போ மட்டும் லோன் இல்லாட்டி எப்புடியும் 13 லட்சம் இருந்திருக்கும் தல.அது தான்.முக்கால் கிணறு தாண்டிய பின்,இப்படி ஒரு சோதனை.
===
தல உங்க பாலிசி க்ரேட்.
இனி அதே தான் என் பாலிசியும்.
தல நானும் க்ரெடிட் கார்டு வச்சி தான் யூஸ்பன்றேன்,ஆனால் தவறாது கட்டிடுவேன்.

===
தல சாரி தல ,
உங்க சம்பளம் எல்லாம் பேச வச்சிட்டேன்,ஆமா எதுக்கு பைத்தியகாரனுக்கு உங்க சம்பளம் தெரியனுமாம்?:))

===
சரவணகுமார் ஊருக்கு போனது எனக்கு இன்னும் டென்ஷன் அதிகமாய்டுச்சி.

எஸ்.கே சொன்னது…

கிரெடிட் கார்டுகள் பற்றி படிக்கும்போது எங்கள் வாழ்வில் நடந்தது நினைவிற்கு வருகிறது. நாங்களும் ஒரு முறை கிரெடிட் கார்டு வாங்கினோம் மாதாமாதம் எப்படியாவது தவணை கட்டுவோம் சில மாதம் தாமதமாகி விடும். அபராதம். இப்படி வாங்கி தொகைக்கு மேல் அதிகமாக கட்டி அப்பப்பா! இனிமேல் கிரெடிட் கார்ட் என்ற வார்த்தையே பயமுறுத்தும் அளவிற்கு போனது...

நண்பரே வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் ஏதோ மிகப்பெரிய பணக்காரர்கள் என்ற நினைப்பு இங்கே பலருக்கும் உண்டு. அவர்களும் சாதாரணமானவர்கள். அவர்களுக்கும் பிரச்சினைகள் உண்டு என்ற நினைப்பே இவர்களுக்கு கிடையாது. இப்படிப்பட்டவர்கள் எதையாவது கேட்டு நீங்கள் செய்யாவிட்டால், பந்தா, காசு வந்திடிச்சு ஆள் மாறிட்டான் இப்படியெல்லாம் கூட பேசுவார்கள்....

ரிசெசன் என்பதால் தற்போது பலரின் வாழ்க்கை மட்கிய பாலத்தை கடப்பவர்களை போல் ஆகியுள்ளது. அறுந்து விழும் முன் கடந்து விட வேண்டும்....

வடுவூர் குமார் சொன்னது…

வீடு வாங்கினேன். மறுமாதமே வேலை போனது, மறுவாரமே இறைவன் சித்தத்தில் வேறு வேலை கிடைத்தது
இது அப்படியே 1997யில் சிங்கையில் எனக்கு நடந்தது.

வடுவூர் குமார் சொன்னது…

சமீபத்தில் மலேசியாவில் இருந்து மஸ்கட்டுக்கு வந்த ஒருவர் என்னிடம் கேட்டார்....”துபாய் இன்னும் 5 வருடத்தில் எழுந்திடுமா?”
நான் மௌனமாக சிரித்தேன்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

//ஆமா எதுக்கு பைத்தியகாரனுக்கு உங்க சம்பளம் தெரியனுமாம்?:))//

ரெண்டு காரணம்.

01. நர்சிம் கிட்ட கடன் வாங்கினா மாறி, என்கிட்ட கேட்டாலும் கிடைக்காதுன்னு அவருக்கு இப்ப தெரிஞ்சிடும்.

02. நம்மளை என்னிக்காவது வினவில் வச்சி கும்மும் போது... “இந்த பண்ணாடை பாலாவுக்கு, மற்ற சாஃப்ட்வேர்காரன்களை விட பாதி சம்பளம்தானாம். அதற்கே இவன் இந்த ஆட்டம் போடுகிறான்”-ன்னு எழுதுனுமில்ல?!! :)

ஹாலிவுட் பாலா சொன்னது…

அவர் இதையும் சேர்த்து எழுதலாம்

“நானாவது பெயரில்தான் பிச்சைக்காரன். இவன் நிஜத்திலேயே அப்படித்தானாம்.”

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

//ஹாலிவுட் பாலா சொன்னது…

அவர் இதையும் சேர்த்து எழுதலாம்

“நானாவது பெயரில்தான் பிச்சைக்காரன். இவன் நிஜத்திலேயே அப்படித்தானாம்.”//
இது சூப்பரோ சூப்பர் !!!!!!! மணிரத்தனம் படத்ல வசனமா போட்டுக்கலாம்

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

எல்லாம் சரியா போகும் ... கவலையை விடுங்க.

கடன், கடன் அட்டை ...அதனால் பிரச்னை , எல்லாம் ரொம்ப நிதர்சனம்... அது இல்லாமல் இருப்பது தான் நல்லது, சில சமயம் தெரிந்தே மாட்டிக்கொள்கிறோம். எனக்கென்று பிரச்சனை இல்லை என்றாலும், எல்லாரும் இதை பற்றியே பேசுவது ( டாக்சி டிரைவர், நண்பர்கள், நியூஸ் பேப்பர் , ரேடியோ ) ...பீதியை கிளப்புகிறது ...அதுனால நான் வேற ரூட்ல போறேன் , சாப்பிடறது பழம் , காய்கறி , டெய்லி வாக்கிங் ..மனதை தேத்திக் கொள்கிறேன் , ஒன்னும் நடக்காது , அப்படியே நடந்தாலும், இந்த சாதாரண லைப் ஸ்டைல் உனக்கு நல்லது ..என்று எனக்கு நானே சொல்லிகொள்கிறேன் ..நிறைய சத்சங்கம் உண்டு ( அமீரகத்தில் வெகு ஜோராக நடக்கிறது ) ...

என்னவோ போங்க , நல்லது நடந்தால் சரி தான், சீக்கரம் எல்லாம் சரியாகிவிடும் என்று பிராத்திப்போம் .

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

தல இடுக்கண் வருங்கால் நகுகங்கறது இதுதானா...எல்லாம் சரியாகும் தல... நம்பிக்கையுடன் இருங்கள்...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@எஸ்கே,
நண்பா,அடடா கேட்கும் போதே வருத்தமாயிருக்கே,
நீங்க இனி கவனமா இருக்கனும்,நான் படு கேர்ஃபுல்லா யூஸ் பண்ணுவேன் க்ரெடிட்கார்டை.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@எஸ்கே
இது குறித்து போன வருடம் எழுதிய பதிவையும் முடிந்தால் படிங்க,
இந்த வருடம் தெளிந்திருக்கிறேன்,பக்குவம் வந்துள்ளது,ஓடி ஓடி வேலைசெய்கிறேன் இன்னும்.கௌரவம் பார்ப்பதே இல்லை.:))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வடுவூர் குமார்,
நண்பரே அப்போ நீங்க சீனியருக்கெல்லாம் சீனியர்.இப்போ நீங்க மஸ்கட் தானே?போன ஈத் லீவுக்கு அங்க வந்திருந்தேன்.
===
இன்னும் ஒரு வருடத்தில் அமீரகம் சரியாகிவிடும்.செம நம்பிக்கையுடன் இருக்கிறேன்.வேலை கிடைக்கிறது ,ஆனால் என்ன ஃபேன்ஸி சாலரி கிடைக்காது,பாதி கிடைக்கும்.;)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிபாலி
தல,இப்புடியெல்லாம் தகவல் திரட்டுறாங்கன்னு கேக்கும் போதே ஆச்சரியமா இருக்கு.
நீங்க செலிப்ரிட்டி தான் அப்போ.
தல இந்த பதிவு போட முக்கிய நோக்கமே ,ஷேரிங் தான்,ஆனா நண்பர்கள் பீதிய கிளப்பியதுன்னு சொல்றது தான் வருத்தமளிக்கிறது,தல எல்லாம் விரவில் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கு.நானே இவ்வளவு கவலைப்பட்டால் என் பாஸ் எவ்வளவு கவலைப்படனும்?
;)
தவிர என் பழைய முதலாளி சவுத் ஆஃப்ரிகன்,அவர் எனக்கு சுமார் 2லட்சம் ரூபாய் சம்பள பாக்கி ,செட்டில்மெண்ட் எல்லாம் தரணும்,அவர் என்கிட்ட கேஸ் கொடு என்கிறார்.ஆனால் எனக்கு மனமில்லை,இப்படிதான் சில இந்தியர்கள் விட்டுவிட்டோம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல
ஏங்க பிச்சகாரன் அது இதுன்னு,உங்களுக்கு தான் அழகான குடும்பம் என்னும் சொத்து இருக்கே,அப்படியெல்லாம் சொல்ல கூடாது,தவிர எவ்வலவு நல்லபேர் சம்பாதிச்சுருக்கீங்க.நான் மெயில் பண்னுறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@சுந்தர் சார்
வாங்கசார் நலமா?
சார் அன்பான வார்த்தைக்கு நன்றி.
இது போட்ட நோக்கமே சொரு ஷேரிங் மற்றும் புக்மார்க்குக்காக தான்,அடுத்த வருஷமே இது மாறுச்சுன்னா?பட்ட கஷ்டத்தை , மறக்காம நினைக்கதான் சார்.அப்போ உங்க பின்னூட்டமும் உங்க முகமும் நினைவில் வந்து போகும்.தவிர ஷார்ஷாவில் இருப்பதால் வீட்டிலேயே காலை மாலை ப்ரேயர் செய்கிறேன் சார். நீங்கள் சொன்னது போல மிகச்சிக்கனமாக இயற்கை உணவும் சாப்பிடுகிறேன்,பதிவு வருத்தம் தந்திருந்தால் மன்னிக்கனும் சார்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பிரதாப்
மக்கா,
உன் பதிவு படிச்சாலே சிரிப்பு வந்து,எல்லா கஷ்டமும் ஓடிப்போய்டுதே மக்கா,நல்லா இன்னும் நகைச்சுவையை ஏத்தி எழுது மக்கா.

சரவணக்குமார் சொன்னது…

கவலை படாதீர்கள் , இதுவும் கடந்து போகும்.
கடவுள் உங்களுக்கு இன்னும் அதிகமான மனவலிமையையும்,நல்ல சந்தர்ப்பத்தையும் அமைத்து தருவார் என்று நான் நம்புகிறேன்.

கூடிய சீக்கிரம் கால சுழ்ற்சியின் இடர்களிலிருந்து நிச்சயம் வெளியே வருவீர்கள்.

ஜாக்கி சேகர் சொன்னது…

ஓ ஒனக்கு ஒரு பதிவு அளவுக்கு மேட்டரா? எனக்கு ஒரு பத்து அளவுக்கு இருக்கு... இருந்தாலும் அந்த கடைசி புளு கலர் மேட்டர் படிச்சப்ப சிரிக்காம இருக்க முடியலை... இதுவும் கடந்து போகும் தம்பி... நம்பிக்கையோடு இரு...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@சரவணகுமார்
நண்பரே வருகைக்கும் நல்வார்த்தைகள் சொன்னதற்கும் மிக்க நன்றி.


@ஜாக்கி
அண்ணே நலமா?
அண்ணே மேலே பாருங்க ஒரு பதிவு போட்டதுக்கே,எவ்வளவு பேர் கலக்கமடைந்துள்ளனர் என்று.
அண்ணே அண்ணி உங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம்,உங்களுக்கு ஒண்ணுன்னா தவிர நாங்க எத்தனை பேர் இருக்கோம், ,ஒண்ணும் கவலைபடக்கூடாது.தைரியமா இருங்க.

====
நீலகலர் வாசகம் அப்படியே நடந்த உண்மைச்சம்பவம்

செ.சரவணக்குமார் சொன்னது…

வேதனையாக இருக்கிறது நண்பரே.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

விரைவில் பழைய நிலை திரும்பவேண்டும். நம்பிக்கையோடு இருப்போம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@செ.சரவணகுமார்
நண்பரே,வார்த்தைக்கு நன்றி,
ஆனால் இதுவும் கடந்துவிடும்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)