ஜப்பானில் கார் வாங்குவது அத்தனை எளிதல்ல , இஷ்டத்துக்கு கார் வாங்கிவிட முடியாது, கார் மாற்றி விட முடியாது, காரை ஐந்து வருடங்களுக்கு மேல் உபயோகிக்கவும் முடியாது, காரை தெருவிலும் நிறுத்தி விட முடியாது,தடை உள்ளது.
ஜப்பானில் ஒருவர் கார் வாங்கும் முன்னர் தன் வீட்டில் கார் நிறுத்தும் கேரேஜ் உள்ளது என்பதற்கான உரிமத்தை விண்ணப்பித்து பெற வேண்டும், அதிகாரிகள் நேரில் வந்து நீளம்,அகலம்,உயரம் அனைத்தும் அளந்து சரிபார்த்த பின் இந்த SHAKO SHOMEISHO என்ற கார் நிறுத்தும் உரிமத்தை தருகின்றனர்,அதன் பின்னர் தான் காரை ஒருவர் ஷோருமில் சென்று முன்பதிவு செய்யவே முடியும்,புதிய கார் வந்தவுடன் அதில் இந்த பார்க்கிங் லைசன்ஸை ஒட்டி காட்சிப்படுத்த வேண்டும்.
காரை தெருவில் கட்டண பார்க்கிங் அல்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது, அப்படி நிறுத்தினால் நகராட்சியில் இருந்து காரை கைப்பற்றி கொண்டு போய்விடுவர், பாடுபட்டு வாங்கிய இந்த பார்க்கிங் உரிமத்தைக் கூட ரத்து செய்து விடுவர்,1970 ஆம் ஆண்டு துவங்கி தீவிரமாக SHAKO SHOMEISHO உரிமம் அமலில் உள்ளது, உலகம் முழுதும் பலவிதமான கார்களை ஜப்பானிய கார் நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தினாலும் ஜப்பானில் ஒருவர் கார் வைத்துக் கொள்ள ஏகம் கெடுபிடி உண்டு, எத்தனை முன்னுதாரணமான நாடு, இங்கே பம்மல் தெருக்களில் வீட்டுக்கு உள்ளே ஒரு காரும், வீட்டுக்கு வெளியே தெருவை அடைத்து ஒரு SUV காரும் நிறுத்தப்பட்டு சீரான உபயோகமின்றி காற்று வாங்குவதை சாதாரணமாகப் பார்க்கலாம்,
இங்கே 30 அடி அகல தெருவில் இரு புறமும் கார்களால் 7அடி ஆக்கிரமிக்கப்பட்டு பொது வழியாக வெறும் 16 அடி அகல வழியில் மட்டுமே போக்குவரத்து நடக்கும்.பல இடங்களில் zig zag ஆக தான் ஓட்ட வேண்டி வரும்.
நம் நாட்டில் எல்லாம் கார் பார்க்கிங் லைசன்ஸ் விதிமுறை எல்லாம் வரவே வராது.