Tvs iqube EV விலை 135000 ரூபாய்க்கு மேல் தான் விலை வருகிறது,rear wheel hub motor Alloy wheel எத்தனை நெகிழ்ந்து வளைந்து போகும் தரத்தில் உள்ளது பாருங்கள்.
இப்படி Hub motor bend ஆகி விட்டால் ,ட்யூப்லெஸ் டயரில் காற்று நிற்காது, மோட்டருடன் தான் RIM மாற்றும் படி TVS நிறுவனத்தின் மேலான நிபுணர்கள் தீர்வு சொல்கின்றனர்,
அந்த hub motor RIM set ன் நிகர விலை 30500₹, லேபர் சார்ஜ் + GST என எல்லாம் சேர்த்து 36000₹ வருகிறது, 36000₹ தந்தாலும் கூட இந்த யானை தந்தம் போன்ற உதிரி பாகம் உடனே கிடைத்து விடாதாம், 3 மாதங்கள் ஆகியும் 2 EV இங்கே சர்வீஸ் சென்டரில் காத்திருப்பில் உள்ளது என இன்று ஆதாரபூர்வமாக அறிந்தேன், EV வாங்கும் போதும் காத்திருப்பு, வாங்கிய பின் உதிரிபாகம் வாங்கவும் காத்திருப்பு என அறியுங்கள்.
எனவே இந்த EV வாங்கியவர்கள் பூ போல ஓட்டவும், டபுள்ஸ் போக வேண்டாம், வெண்ணெய் போன்ற சாலைகளில் மட்டும் ஓட்டவும்.
இந்த டயரின் படங்கள் என்னைப்போல ஒருவரின் வாகனத்தின் படங்கள், இப்போதைக்கு ஒரு ஆசுவாசம் என்னைப் போல பலர் இப்படி பிரச்சனையில் உள்ளனர் என அறிந்தது தான்.
புரிஞ்சவன் பிஸ்தா, மின்னுவதெல்லாம் பொன் அல்ல.