என் தாய் மாமா ஒருவர் (திண்டுக்கல் வாசி) முதல் முறையாக மதுரை சென்னை விமானத்தில் அடுத்த மாதம் வருகிறேன் என்னை வரவேற்க வருவாய் தானேப்பா என்று விடிகாலை 4-00 மணிக்கு போன் செய்தார், இதே போலவே போன வருடம் விடிகாலை 4 மணிக்கு போன் செய்து திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு ப்ளசரில் (காரில்)
மகன் (30 வயது ) அழைத்துப் போனான்பா என்றார்.
இவரின் தாயாரை (என் பாட்டி) நான் ஒரு முறை சென்னை - ஹைதராபாதிற்கு விமானத்தில் அனுப்பி வைத்தவன், ஐம்பது முறைக்கு மேல் துபாய் - சென்னைக்கு விமானத்தில் வந்து போனவன் என்று தெரிந்தும் இந்த முதல் விமானப் பயண தாக்கலை விடிகாலை பீத்தலாக சொன்னார். 4 மணிக்கு போன் வந்தால் என்ன துயர செய்தியோ என்று தானே போனை எடுப்போம்.
நான் சற்றும் யோசிக்காமல் மாமா லோக்கல் ஏர்போர்டை பரந்தூருக்கு மாற்றிவிட்டனர், உங்க (டிக்கட் புக் செய்த ) மகனிடம் எந்த ஏர்போர்ட் வரனும் என தெளிவாக கேளுங்கள், பரந்தூரில் இருந்து சென்னைக்கு cab பிடித்தால் எப்படியும் 5000 ₹ வரும் பாத்துக்கங்க என்று சொன்னதை வெள்ளந்தியாக நம்பியும் விட்டார்.
இப்போது எல்லா உறவினர்களுக்கும் விடிகாலை போன் செய்து பரந்தூர் ஏர்போர்டுக்கு என்னை வரவேற்க வருவீங்க தானே என்கிறார்.
PS: நான் யாரிடமும் குசும்பு காட்டுவதில்லை, இந்த மாமா என் அம்மா மறைவு, காரியம் என எதற்கும் வந்ததில்லை, பிற சகோதரி, சகோதரி கணவர் மறைவுக்கும் கூட வந்தவரில்லை, இப்படிப்பட்டவரை மன்னித்து அவர் மனைவி இறந்த போது கொரோனா காலம் என்றும் பாராமல் நேரில் சென்று என் பங்குக்கு பத்தாயிரம் தந்து காரியங்கள் செய்ய உடன் நின்று உதவி விட்டு வந்தேன்,என் அம்மா வளர்ப்பு.
என்னிடம் இந்த பீத்தல் அவசியமற்றது,அதனால் தான் இந்த குசும்பு காட்ட வேண்டி வந்தது, ஆனால் இன்னும் கூட spontaneous ஆக தூக்கத்தில் வாயில் வந்த பரந்தூரை நினைத்தால் சிரிப்பு நிற்கவில்லை.