அமெரிக்காவின் MIT (Massachusetts Institute of Technology) (1861 துவக்கம்) பல்கலைக்கழகம் உலகப்புகழ் பெற்றது, அதில் படிக்கும் மாணவர்கள் பிரத்யேகமாக Brass Beaver ( வட அமெரிக்க நீர்நாய்) பொறித்த மோதிரத்தை கல்வி காலம் முழுவதும் பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னும் அணிவது வழக்கம்,
நீர்நாய்கள் இயற்கையான பொறியாளர்கள் என்பதால் பொறியியலாளர்களுக்கு உலக அரங்கில் பெயர்பெற்ற MIT பல்கலைக்கழகம் தனது இலச்சினையாக கொண்டுள்ளது.
நீர் நாய்கள் மரக்கிளைகள், தாவரங்கள், பாறைகள் ,கற்கள், சேற்றைப் பயன்படுத்தி அணைகள் தங்குமிடங்களைக் கட்டுகின்றன, சுரங்கம் தோண்டுகின்றன, பிற விலங்குகளுக்கு வசிக்க சுரங்க குடியிருப்புகள் கூட கட்டித்தருகின்றன, பிற விலங்கினங்களுடன் சண்டை இடுவதில்லை, இணக்கமாக வசிக்கின்றன.
MIT மாணவர்களின் மோதிரங்கள் தங்கம், வெள்ளி , எஃக்கு என அவர்களுக்குப் பிடித்த உலோக விருப்பத்திற்கு ஏற்ப அமைகின்றன, தங்கம் என்றால் இது போல 14 காரட் தங்கத்தில் தான் அமெரிக்கர்கள் ஆபரணம் செய்து அணிவர்,
அமெரிக்காவில் Balfour class jewely என்ற பழம்பெரும் நிறுவனத்தார் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி இறுதிக்கு பிரத்யேக மோதிரங்கள், cuff pins ,tie pins தயாரிப்பவர்கள், அவர்கள் 1960 ஆம் ஆண்டு பல்கலை இறுதிக்கு தயாரித்தது இந்த MIT மோதிரம்.
நம் நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் MIT Sloan School of Management ல் MBA படித்தவர், கட்டமைக்கப்பட்ட கடன் உறுதிப் பரிவர்த்தனைகளை வழங்குவதற்கான முறைகள் மற்றும் அமைப்புகள் பற்றி ஆய்வறிக்கை தந்து காப்புரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Iron man திரைப்படத்தில் Tony Stark அணிந்து வரும் பெருமைமிகு MIT 87 பட்டதாரி மோதிரம் இணைப்பு படத்தில் பாருங்கள்.