தென்கிழக்குச் சென்னையின் இந்த பெரும்பாக்கம் மலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, உலகின் உயர்ந்த சிகரம் மவுண்ட் எவரஸ்ட் என்று மார்ச் 1856 ஆம் ஆண்டு கணிதமேதை மற்றும் நில அளவியலாளர் ராதாநாத் சிக்தர் ஆதாரபூர்வமாக நிறுவதற்கு இங்கு தான் பிள்ளையார் சுழி இடப்பட்டது.
The Great Trigonometrical Survey of India என்ற நில அளவீட்டுப் பணி 10 ஏப்ரல் 1802 ஆம் ஆண்டு துவங்கியது , மெட்ராஸ் முதல் மங்களூர் வரை (கிழக்கு கடற்கரை முதல் மேற்கு கடற்கரை வரை ) நில அளவையை சர்.வில்லியம் லாம்டன் அவர்கள் மேற்பார்வையில் துவங்கினார், மெட்ராஸ் ஒதுக்குப்புறத்தில் இருந்த உச்சி தட்டையான மூன்று மலைக்குன்றுகளை முதல் முக்கோணம் வரைய வேண்டி theodalite வைக்க அவர் தேர்வு செய்தார்,
அவை இந்த 1.பரங்கிமலை (st.thomas mount ) 2.பெரும்பாக்கம் மலை 3.சின்னமலை (சைதாப்பேட்டை) ஆகும்.
இருபது வருடங்களுக்கு முன்பு இந்த புதுப்பாக்கம் மலை மேய்ச்சல் புறம்போக்கு நிலமாக இருந்தது,புதுப்பாக்கம் மலை உச்சியில் இருத்த bench mark நூறாண்டுகளில் சிதிலமடைந்து காணாமலே போய்விட்டது,
சின்னமலை சைதாப்பேட்டை குன்று என்பது அங்கு வசிப்பவர்களுக்கே தெரியாது, அங்கிருந்த benck mark கூட ஆக்கிரமிப்பாளர்களால் அருமை தெரியாமல் அகற்றப்பட்டது.
கடந்த பதினைந்து வருடங்களாக பெரும்பாக்கம் மலை அடிவாரம் முழுக்க பஞ்சாயத்து தலைவர் அனுமதி பெற்று மனைகள் உருவாகின, மலை எதிரே பொலினினி ஹில்ஸைட் என்ற மிகப்பெரிய குடியிருப்பு வளாகம் வந்தது, இப்படி இந்த வரலாற்று சிறப்பு கொண்ட புதுப்பாக்கம் மலையை சுற்றுப்போட்டு சுரண்ட, நகராட்சி தன் பங்குக்கு மிகப்பெரிய குப்பை கிடங்கை உருவாக்க வேலை பார்த்தது, வழக்கம் போல தாமதமாக விழித்துக் கொண்ட ASI archeological survey of india சமீபத்தில் இங்கே பாதுகாக்கப்பட்ட நிலம் என்ற அறிவிப்பு பலகையை ஊன்றிச் சென்றுள்ளது,
சார்பதிவாளர் அலுவலகம் இனியேனும் இந்த பாதுகாக்கப்பட்ட சின்னத்தை சுற்றி 300 மீட்டர்(~1000 அடி) சுற்றளவுக்கு வீடுகள் கட்டிடங்கள் தெருக்கள் அமையாமல் தடுக்க வேண்டும்.
சர்.வில்லியம் லாம்டன் அவர்கள் அமைத்த bench mark பரங்கிமலை உச்சியில் மட்டுமே (st.thomas mount ) பாதுகாக்கப்பட்டு வருகிறது, வரலாறு என்றாலே வெறுக்கும் மக்கள், வரலாற்று சின்னங்களை தொடர்ந்து அழித்து பெயர்த்து ஆக்கிரமித்து தங்கள் பெயர் எழுதி ரசிக்கும் அவலம் தொடர்ந்து நடக்கிறது,