இன்று கட்டிடக்கலையில் AI என்ற Architectural Intelligence புகுத்தி நினைத்துப் பார்க்கவே தயங்கும் வடிவமைப்புகளை செய்கிறோம், அத்தகைய பிரம்மாண்டங்களை 60 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திர இந்தியாவில் செய்தனர்.
சண்டிகர் முழுக்க பரீட்சார்த்தம் , அதுவும் துணிவு மிக்க பரீட்சார்த்த பாணி கட்டிடக்கலையை ஃப்ரெஞ்சு கட்டிடக்கலைஞரும் நகரவடிவமைப்பாளருமான
Le corbusier மற்றும் Pierre Jeanneret இணைந்து இழைத்து இழைத்து வடிவமைத்தனர், இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களின் பஞ்ச சீலக் கொள்கையை உள்வாங்கி அதன் அம்சங்களை பிரதிபலித்தனர்.
இந்த சட்டசபை கட்டிடம் 2016 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இதை அருமை தெரியாமல் இடித்து தள்ளுவது என்பது கனவிலும் நடக்காது.
இந்த சட்டசபை நவீன இந்திய கட்டிடக்கலையின் பெருமை எனலாம், சட்டசபை நீளம் அகலம் உயரம் என அனைத்தும் அதி பிரம்மாண்டத்தை பறைசாற்றுகிறது, சட்டசபை கூடாத நாட்கள் முழுக்க கட்டிடக்கலை பயிலும் மாணவர்கள் கல்வி சுற்றுலா வந்து ஆராயும் இடமாக உள்ளது.
சட்டசபை unfinished creative work அல்லது brutalism பாணியில் RCC கொண்டு cast in situ பாணியில் ஆர அமர ரசித்து உருவாக்கப்பட்டன, புருவமுயர்த்தும் விகிதாசாரம் கொண்டவை, காங்க்ரீட் மேலே ஆங்காங்கே உபயோகித்த வண்ணங்கள் அதிரவைப்பவை.
இந்த சட்டசபையின் கதவு pivot door, நடுநிலையான மேலும் கீழுமான கீல்களில் பலநூறு கிலோ எடையை தாங்கி நிற்கிறது என்றால் நம்ப முடியாது.
சட்டசபை கோட்டை வாயிலின் பிரதான பிரம்மாண்ட நுழைவாயிலின் கைப்பிடி துவங்கி ஒவ்வொன்றையும் தனித்துவமாக மிகச்சிறப்பாக Le Corbusier வடிவமைத்தார், இந்தியாவில் அவர் தங்கி இருக்கையில் கவனித்த விஷயங்களை தொகுத்து கதவில் இரு புறங்களிலும் வரைந்தார், நுழைவு வாயிலின் மேல் பாதி சூரியனின் திசையையும் இயக்கத்தையும் சித்தரிக்கிறது.
இந்த பிரம்மாண்டமான கதவு 8 மீட்டர் (26 அடி ) நீளம் , 8 மீட்டர் உயரம் , 0.3 மீட்டர் (1அடி )அகலம் கொண்டது, பரப்பளவில் 64 சதுர மீட்டர் (688 சதுர அடி ) கொண்டது, ஒரு 2BHK அடுக்ககத்தின் பரப்பளவு),இந்த 55 பலகங்கள் ஒவ்வொன்றும் பிரத்யேகமாக ஃப்ரான்ஸில் உள்ள Le corbusier ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான ஓவியமாக தீட்டப்பட்டு இங்கு விமானத்தில் கொண்டு வந்து ஒருசேரப்பிணைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது,
ஒரு இந்தியாவின் புதிய மாநிலத்துக்கு ஐரோப்பிய வடிவமைப்பாளரை அமர்த்தி அவருக்கு முழு கலை சுதந்திரம் நம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் தரப்பட்டது, பிரம்மாண்ட கோட்டை கோட்டை வாசல் கதவை சட்டசபை வடிவமைப்புக்கு கட்டியம் கூறும் வண்ணம் அதிநவீனமாக வடிவைத்து நிர்மாணித்தார்
Le corbusier அவர்கள்.
இக்கதவு துடிப்பான வண்ணங்களால் காண்போர் வியப்பூட்டும் படி உருவாகியுள்ளது, கதவு மேல் மற்றும் கீழ் பகுதிகளாக அழகாக பிரிக்கப்பட்டுள்ளது.
மேல் பாதியானது இந்த பிரபஞ்சத்துடனான மனிதனின் உறவை சித்தரிக்கிறது ,
சூரிய பயணத்தின் வருட சங்கராந்தி, சந்திர கிரகணங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் ஓவியங்கள் மேலடுக்கில் காணலாம். கீழ் அடுக்கில் விலங்குகள் , இயற்கை வடிவங்கள் உள்ளன. ஒரு பாலைவனத்தின் சூழல், பசுமைசோலையின் சூழல், நதி, மரங்கள், காளைகள் மற்றும் ஆமையை சித்தரிக்கிறது, மேலும் கதவின் மையத்தில் உள்ள போதி மரம் ஞானக்கனிகளைத் தருகிறதாக கதவை வடிவமைத்திருந்தார் Le corbusier அவர்கள்,
60 வருடங்களை நெருங்கும் பிரம்மாண்டம், இன்னும் காண்போருக்கு , வியக்கவும் கற்கவும், விஷயம் பொதித்து வைத்து இருக்கும் பிரம்மாண்டம் சண்டிகரின் நகர அமைப்பு, அதன் சட்டசபை, அதன் அரசு கட்டிடங்கள் என ஒவ்வொன்றும்.