ஒரு வீட்டுக்கு மொட்டைமாடி கைப்பிடிச்சுவர் அல்லது பால்கனி கைப்பிடிச் சுவர் என்பது மிகவும் முக்கியமானது , அதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது கைப்பிடி சுவரின் உயரம்,
மொட்டை மாடி கைப்பிடி சுவரின் உயரம் கண்டிப்பாக 3'6" கண்டிப்பாக இருக்க வேண்டும், (1050 மிமீ, 105 செமீ, 1.05 மீ) சமீபத்தில் உறவினர் ஒருவர் தன் ஒப்பந்ததாரர் நண்பரிடம் நம்பி தன் வீட்டை கட்டத் தர , அவர் வெறும் 2'6" உயரம் கைப்பிடி சுவர் கட்டி 1950₹ / சதுர அடி ஒப்பந்தத்துக்கு இந்த உயரம் தான் செய்ய முடியும் என சொல்லியிருக்கிறார்,
நான் அவரிடம் இது மிகவும் ஆபத்தானது, உடனே குடி போகும் முன் கூடுதல் 1 அடி உயர சுவரை எழுப்பி குடி போகச் சொன்னேன்,ஏன் என விளக்கினேன், எத்தனையோ பேர் இப்படி உயரம் குறைவான மொட்டைமாடி கைப்பிடி சுவரில் அமர்ந்தவர்கள் அப்படியே முழங்கால் பிரட்டி விட்டு தலை இடுப்பு எலும்பு முறிந்ததை சொன்னேன்,
2'6" என்பது கால் மூட்டுகளின் சராசரி உயரம் , 3'6" என்பது இடுப்பின் சராசரி உயரம், எப்போதும் இந்த எளிய விஷயத்தை வீடு கட்டுபவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும், இந்த 3'6" என்பது தட்டு ஓடு என்ற வெதரிங் கோர்ஸ் அமைப்பார்களே அதன் மேலிருந்து தடுப்பு சுவர் மேல் மட்டம் வரை ஆன உயரம் ,எனவே வீடு கட்டுபவர்கள் ரூஃப் ஸ்லாப் மீது தடுப்பு சுவர் அமைக்கையில் 4'0 (1200மிமீ, 120 செமீ, 1.2 மீ) கட்டுவதை சரிபார்க்கவும்.
சரி பால்கனி தடுப்பு சுவர் உயரம் என்ன என்பதை பார்க்கலாம், பால்கனி க்ரில்கள் முழிக்க மூடுவது சிறந்ததும்,அதிக பாதுகாப்பானதும் ஆகும், முழுக்க மூடாத பால்கனி என்றால் தடுப்பு சுவர் finished floor என்ற டைல் வேய்ந்த தரையில் இருந்து மேல்மட்ட உயரம் 4'0(1200மிமீ, 120 செமீ, 1.2 மீ) கட்டுவதை சரிபார்க்கவும்.
கைப்பிடி சுவரின் மேல்மட்டத்தை எப்போதும் flat ஆக 0° பாகை மட்டத்தில் பூசுவது தவறு, காரணம் அதில் மழைநீர் தேங்கி உள்ளே இறங்கி அறைக்குள் இறங்க ஆரம்பிக்கும், இதை இருபது வருட பழைய வீடுகளில் நன்கு காணலாம், இணைப்பு படத்தில் உள்ளது போல கைப்பிடி சுவரின் மேல் வாட்டம் வெளியே நீர் வடியுமாறு அமைப்பதே சரியான முறை,உடன் drip course காடி அமைப்பது அவசியம், இது போல கட்டினால் ஐம்பது வருடங்கள் ஆனாலும் மொட்டை மாடி கைப்பிச் சுவரில் ஓதம் பாயாது, விரிசல் வராது,மொட்டை மாடி கைப்பிடிச் சுவர் 4.5" தடிமன் கொண்ட சுவர் என்றால் ஒவ்வொரு 10' c/c துறைக்கும் 9"x9" post அமைப்பதை உறுதி செய்யவும்.
கைப்பிடி சுவர் கட்டுவேலை செய்கையில் கவனமாக english bond அல்லது stretcher bond அமைக்கவும், கட்டுவேலை கலவை 1:6 விகிதத்தில் அமைய நீண்ட ஆயுள் தரும்.
கைப்பிடி சுவர் பூச்சு வேலை செய்கையில் , நல்ல தரமான முதல் தர சூளை செங்கற்கள் பயன்படுத்தவும், கலவை இடுவதற்கு நல்ல குடிக்கும் தரத்தில் உள்ள நீரை வாங்கி பயன்படுத்தவும், 1:5 கலவை அமைத்து பூசவும் , வெளிப்புற சுவர் என்பதால் மொத்த தடிமன் 18 மிமீ முதல் 20 மீமீ பூசவும், முதல் சுற்றில் 6 மிமீ பூசி கீறல் போட்டு அடுத்த சுற்றில் 12 மிமீ பூச சிறந்த பிடிமானம் இருக்கும், சென்னை போன்ற வெப்ப மண்டலம் பிற மழை மண்டல பகுதிகளுக்கும் ஏற்ற முறை இது,
லட்சங்கள் கோடிகள் செலவழித்து வீடு கட்டுபவர்கள் இந்த கைப்பிடி சுவர் விஷயத்தில் சிக்கனம் மெத்தனம் காட்டுவதை பார்க்கிறேன்,
மொட்டைமாடி கைப்பிடி சுவரும் வெதரிங் கோர்ஸ் ஓடுகள் வேய்ந்த பரப்பும் சந்திக்கும் இடத்தில் கண்டிப்பாக cant tiles என்ற வகை skirting இணைப்பு படத்தில் காட்டியவாறு அமைக்க வேண்டும், இது மழைநீர் ரூஃப் ஸ்லாப் உள்ளே இறங்கி கசியாமல் கைப்பிடி சுவர் சுற்றளவில் ஒரு தடுப்பரண் போலவே காக்கிறது.pressed tiles ஓரம் உடையாமல் காக்கிறது.
முகத்துக்கு நெற்றி போல உங்கள் வீட்டுக்கு இந்த கைப்பிடி சுவர் எனக் கொள்க, பல பழைய கட்டிடங்களில் முறையாக கட்டுமானம் செய்யாததால் கைப்பிடி சுவர்கள் விரிசல் விழுந்து ஸ்பாஞ்ச் போல நீர் தேக்கி ஸ்லாப் உள்ளே அனுப்பி அறைக்குள் ஓதம் பாய்ச்சுவது கண்கூடு என்பதால் இந்த பதிவு.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#sustainability ,#sustainable_living,#go_green,#refurbished,#table_side_unit,#DFD
#Collaborative_Design
#Bespoke_planning
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்