சத்யா(1988) படத்தில் ஒளிப்பதிவாளர் பி.ஸி.ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி card முதல் பெயராக வருகிறது, அவர் வலையோசை பாடலுக்கு ஒளிப்பதிவு செய்ததாக முன்பு ஒரு trivia கேட்டுள்ளேன், அதை உறுதி செய்த Jaganath Natarajan சார்க்கு நன்றி
இந்த ஒளிப்பதிவில் வரும் இந்த பசுமை வளையம் அதனுள் தோன்றும் காதலர்களைப் பாருங்கள், இப்பாடலில் வரும் படகுக் காட்சிகள் எல்லாம் அப்படிப்பட்டவை, இவை போட் கிளப்பில் படமாக்கப்பட்டவை.
இந்த ரயில் நிலையத்தில் எடைபார்க்கும் Edmonton ticket எல்லாம் இன்று வழக்கொழிந்துவிட்ட நினைவுகள் மாத்திரம்.
படத்தின் பிரதான ஒளிப்பதிவாளர் s.m.அன்வர் பாலிவுட்டில் ஜாம்பவான் கமலின் சாகர் உள்ளிட்ட படங்கள் ஒளிப்பதிவு செய்தவர் ,அவர் பம்பாயில் இருந்து இயங்கியவர்.
இப்பாடல் அல்லாது பி.ஸி.ஸ்ரீராம் கமல் கேட்டதற்கிணங்க படத்திற்கு வேறு ஏதும் patchwork செய்து தந்தாரா? தெரியவில்லை, இரண்டாம் பெயரான திரு. ராஜ்ப்ரீத் கூட ஒளிப்பதிவாளர் தான் , எங்க சின்ன ராசா,பொண்டாட்டி தேவை படங்களின் ஒளிப்பதிவாளர் இவர்.
பல்லவன் ட்ரான்ஸ்போர்டிற்கு நன்றி சொன்னதற்கு பிரதான காரணம் உண்டு,படத்துக்காக பல்லவன் ஓட்டுனர் ,செட்டின் சிறிய சந்தில் எல்லாம் பேருந்தை திருப்பி வளைத்து கலக்கியிருப்பார், மேலும் கமலும் நண்பர்கள் நால்வரும் இடதுபுற ஜன்னலில் லாவகமாக தொங்கியபடியே வருவர்,அதற்கு எல்லாம் அப்படி ஒரு பயிற்சி வேண்டும் , அதற்கு பேருந்தில் காலுக்கு சிறிய மடிப்பு ,மாற்றம் ஏதேனும் செய்தார்களா? தெரியவில்லை, ஆனால் அக்காட்சி அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும்.
#சத்யா, #கமல்ஹாசன்,#PCஸ்ரீராம்