புதுக்கவிதை (1982) படத்தில் நாயகன் அதிகார வர்க்கத்துக்கு எதிராக பொங்கி எழும் காட்சி இது, நரம்புகளை முறுக்கேற்றும் படி இருக்கும்,ரஜினி மற்றும் தேங்காய் சீனிவாசன் அபாரமான combo என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.
ரஜினியை கருப்பன் என்றார் என்று பணக்கார வாரிசு ஜோதி வந்த காரை ஓட்டுனர் தேங்காய் சீனிவாசன் பாதி வழியில் விட்டுச் செல்வார், அவரை டைகர் எஸ்டேட் எஜமானி சுகுமாரி அல்லக்கையை ஏவி வுட்டு சாட்டையால் அடிப்பார், பாமரேனியன் நாயை கொஞ்சியபடி குருரதையுடன் வேடிக்கை பார்ப்பார்.
குடிசையில் படுத்திருக்கும் தேங்காய் சீனிவாசனை பைக்ரேஸில் கோப்பை ஜெயித்து வந்த ரஜினி பார்க்கையில் உடம்பில் சாட்டையால் அடித்த காயங்களை பார்த்து கொதித்து கையோடு சித்தப்பா தேங்காய் சீனிவாசனை பைக்கில் ஏற்றி கூடவே ஒரு நாட்டு நாய்குட்டியை மடியில் கிடத்தி அந்த ஏவிஎம் பங்களா செட்டிற்குள் பைக்கில் நுழைந்து சென்டர் ஸ்டாண்ட் இட்டு நிறுத்த, சித்தப்பா பைக்கில் அமர்ந்து நாட்டு நாயை கொஞ்சிய படி அந்த அல்லக்கை பீமராஜு ரஜினியிடம் சாட்டையில் அடிவாங்குவதை வேடிக்கை பார்ப்பார், இதில் பைக் ஸ்டார்ட் செய்கையில் worm eye view ல் ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் shot வைத்ததைப் பாருங்கள், hero worship shots ,editing ,slow motion கொண்ட திரைப்படங்கள் இன்று திகட்டிவிட்ட காலம்,அன்று இப்படி தான் துவங்கியிருக்கிறது, hero worship திரைப்படங்களுக்கு பாதை அமைத்துத் தந்த இயக்குனர் என்றால் S.P.,முத்துராமன் அவர்கள் தான், ஏற்றி விட்ட ஏணி, கரை கடத்திய தோணி, இன்று 100 கோடி நாயகர்கள் வாங்க காரணகர்த்தா.
இதே பாமரேனியன் நாய் இதே கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி பட்டுப்புடவை காஸ்ட்யூம்,கால் மேல் கால் கொண்ட எஜமானி கதாபாத்திரத்தை ஸ்ரீ வித்யாவும் மாப்பிள்ளை திரைப்படத்தில் செய்தார்.