போன் பூத் [PHONE BOOTH][2003] [15+][அமெரிக்கா]போன் பூத்துக்குள் பேசிக்கொண்டிருக்கும்,நவீன ,விலை உயர்ந்த இத்தாலியன் சூட்டு,ஷூக்கள் அணிந்த ஸ்டூ (stu) திருமணமானவன்,செல் போன் இருந்தும்  மனைவி கெல்லி போன் பில்லை சோதனை இடக்கூடும் என்று, பெண்களுடன்  கடலை போட மட்டும் உபயோகிப்பதில்லை.(மனைவியை நேசிக்கிறான்.ஆனாலும் அழகிய சின்னப் பெண் கிடைத்தால்,ஒரு கை பார்ப்பது என்ற  மூடில் தன்னிடம் விளம்பர வாய்ப்பு கேட்டு வந்த,மாடல் அழகி பாமை  (pam) பிராட்வே 8 ஆவது அவென்யூவில் உள்ள,போன் பூத் சென்று,ஆசையாய்பேசி கடலை போட்டு தேற்றி,ஒரு ஓட்டல் அறைக்கு வந்து விடு

நாம் உன் எதிர்காலம் பற்றி பேசலாம்,என நடிப்பு ஆசை காட்டி அழைக்க..  (வெளியே ஒரு பிஸ்சா டெலிவரி ஆள் அவனுக்கு பிஸ்சா டெலிவரி வந்திருக்கிறது என சொல்லி கதவை தட்டுகிறான்)இவன் அவனிடம் எரிந்து விழுந்து, நான் ஆர்டர் தரவில்லை என சொல்லி விரட்ட, அவன் போகாமல் நிற்க ,இதை யார் ஆர்டர் செய்தாரோ அவருக்கே கொடு என்று சொல்ல , அவன் சிறிது தன்மையாக பேசுங்கள் என்று நிற்க..இவன் அவனுக்கு ஐந்து டாலர் தந்து நீயே தின்னு என்கிறான்.

மீண்டும் போனில் கடலை.அவளுக்கும் இவன் நம்மை கட்டிலுக்குத் தான் அழைக்கிறான்,என்று தெரிந்தும் சிறிது பிகுவுக்கு பின் சம்மதிக்க ..இவன் வெற்றிப்புன்னகையுடன் கழற்றி வைத்த திருமண மோதிரத்தை அணிந்துகொண்டு ரிசீவரை சாற்ற ,அங்கு போன் மணி ஒலிக்கிறது.இனிதான் கதை ஆரம்பம் ..

போனில் எதிர் முனையில் ஒரு இந்தியன் தாத்தா போன்ற ஒரு ஆள் ,இவனை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இவன் தன் தவறுகளை உணர்ந்து இப்போதே திருந்தவேண்டும் என்றும் சொல்ல,இவன் முதலில் யாரோ விளையாடுவதாக எண்ணி அசிங்கமாக திட்டுகிறான். அவர் மீண்டும் இவனிடம் நீ உன் காதலிக்கு போன் செய்து நீ திருமணமானவன் என்று ஒத்துக் கொள் ,என்று சொல்ல ,இவன் மறுக்க,இவன் பக்கத்தில் உலவிய ஒரு பிளாட்பார கீ கொடுக்கும் பொம்மையை அவன் சுட்டு வீழ்த்த,இவனுக்கு விபரீதம் புரிகிறது.

பொம்மை விற்ப்பவன் இவனருகே வந்து திட்ட ,எதிர்முனை ஆள் உனக்கு என் உதவி வேண்டுமா?என்று கேட்க.இவன் மறுத்து அவனுக்கு 10 டாலர் தந்து அனுப்புகிறான்.எதிர்முனை ஆள் நீ பொம்மை காரனின் உயிரை காப்பாற்றிவிட்டாய்.உனக்கு இறக்கம் கொஞ்சம் இருக்கிறது என்று சொல்ல..

ஸ்டூ பயந்து அவன் காதலிக்கு போன் செய்து,அவளிடம் தான் அவள் உடம்புக்கு ஆசைப்பட்டு தான் பழகியதாகவும்,அவனால் எந்த உதவியும் செய்ய இயலாது என்றும் சொல்லி போனை வைக்கிறான்.இப்போது இவனை அந்த ஆள் மனைவிக்கு போன் செய்து நீ இன்னொரு பெண்ணுடன் பழகியதை,படுக்க நினைத்ததை ஒத்துக்கொள்,என்று சொல்ல ,இவன் மறுக்க,அங்கு வெளியே ஒரு விலை மாது கதவை தட்டி போனை துண்டி ,நான் பேசணும் என சொல்ல, 

வன் மறுக்க,அந்த ஆள் மேலும் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்த,ஜெர்மன் தாதா ஒருவனின் படுகொலையையும்,அமெரிக்க பிரபல தொழிலதிபர் (தன் கம்பெனி பங்குகளில் ஊழல் செய்ததால்)டுகொலையையும், இருவரையும் திருந்த சந்தர்ப்பம் கொடுத்தும் அதை மதிக்காததால் சுட்டுக் கொன்றதாகவும் எதிர்முனை சொல்ல,இவன் வெலவெலக்க..எதிர் முனை ஆள் இவன் மனைவிக்கு கான்பிரன்ஸ் கால் போட்டு ,அவள் எடுக்க ,உன் கணவன் உன்னிடம் உண்மை சொல்ல வேண்டும் என்று சொல்ல ,இவன் நடுங்கிய படி எல்லா உண்மையையும் சொல்லி,கடைசியாக அவளை தான் முன் எப்போதையும் விட விரும்புவதாக சொல்லி கண்ணீருடன் போனை வைக்க.

வெளியே கதவை தட்டி சண்டை போட்ட விலைமாது கோபத்துடன் இவனை கண்ட மேனிக்கு வசை பாடி விட்டு போகிறாள்,அங்கு வந்த இன்னொரு விலை மாதுவிடம் சொல்லி புலம்ப ,அவளும் வந்து கதவை உதைக்க,இவன் போனை வைக்க முடியாது,என்று சொல்கிறான்.இருவரும் சென்று அங்கே பிளாட்பாரத்தில் பெஞ்சில் அமர்ந்திருந்த விபச்சார புரோக்கரிடம் புகார் செய்ய,

வன் பூத்திற்கு வெளியே நின்று போனை வைத்துவிட்டு வெளியேறுமாறு சொல்ல,இவன் மறுத்து மீண்டும் பேச(எதிர் முனை ஆள் இதை ரசிக்கிறான்) அந்த புரோக்கர் கோபமாகி கத்த,இவன் தன் பர்சில் இருந்து 120 டாலர் எடுத்து தந்து அவனை அனுப்ப,அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியேற,அந்த விலை மாது இருவரும் புரோக்கரை மிக அசிங்கமாக திட்ட ,அவன் மிகுந்த கோபத்தில்,இவனை வெளியேற சொல்கிறான்.அவன் முறைத்து மீண்டும் பேச தொடங்க ,புரோக்கர் போய் பேஸ் பால் மட்டையை கொண்டு வந்து,பூத் கண்ணாடியை நொறுக்கி இவனயும் வெளியே இழுத்துப்போட்டு,

னக்கா பணம் தருகிறாய்?நான் கட்டியிருப்பது ரோலக்ஸ் கடிகாரம்டா..என்று சொல்ல ,போனில் எதிர் முனை ஆள் இவனிடம் உனக்கு உதவி வேண்டுமா?என்று கேட்க ,இவன் ஆம் என்று சொல்ல ,நொடியில் தோட்டா ஒன்று புரோக்கரை குறிபார்த்து பின்னங்கழுத்துக்கு கீழே பாய,அவன் ரத்த வெள்ளத்தில் சாய..விலை மாதர்கள் அலறி என் ஆளை கொன்று விட்டாயே?

ன்று கதற.இவன் பயந்து போய் ஏன் அவனை சுட்டாய்?என்று கேட்க..நான் உனக்கு உதவினேன்.இல்லை என்றால் அவன் உன்னை கொன்றிருப்பான் ,நீ அவனிடம் தன்மையாக பேச தவறிவிட்டாய்.உதவிய என்னை பழி சொல்கிறாய் என்று சிரிக்க.இவன் நான் சுடவில்லை,நீ தான் சுட்டாய் என்று சாதிக்கிறான்.

மேலும் இவன் கீழே குனிந்து எதையோ தேடுவது போல 911க்கு கால் செய்ய, அவன் இவனை எழுந்து நிற்க சொல்ல,இவன் நிற்க எத்தனிக்கையில் இவன் காது நுனியை தோட்டா கிழித்து ரத்தம் பீறிடுகிறது.இவன் துடிக்க,முட்டாள் தனமாய் எதுவும் செய்யாதே.உன் பூத் தின் கூரை மேல் பார் பிஸ்டல் ஒன்று உள்ளது.அது போதும் ,போலீஸ் உன்னை கைது செய்யும் என்று சொல்ல,இவன் திகைக்க,போலீஸ் கார்கள் வந்து நின்று,பெரும் படையே இறங்கி சுற்று போட, 

போலீஸ் அதிகாரி (forest whitaker)இறங்கி,இவனை போனை வைத்துவிட்டு கைகளை தூக்கிக்கொண்டே வெளியே வந்து சரணடயுமாறு சொல்ல,இவன் தான் முக்கியமான விஷயம் பேசுவதால் துண்டிக்கமுடியாது. என சொல்ல ,எதிர்முனை ஆளால் மிரட்டப்படுகிறான் .எதிர் முனை ஆள் சொல்ல சொல்ல ,ஒவ்வொரு சொல்லையும் இவன் போலீசை பார்த்து சொல்லுகிறான்.

தில் அதிகாரியை பார்த்து நீ உன் மனைவியை படுக்கையில் திருப்தி படுத்துகிறாயா ? 
என்று தயங்கியபடி கேட்க..அவர் நொந்து நூலாக.மேலும் இவன் அவரை நோக்கி,மனைவி உன்னை விட்டு பிரிந்ததால் நீ இன்னும்.கை முஷ்டி மைதுனம் தான் செய்கிறாயா?என்று கேட்க .அதிகாரி போன் அழைப்பை எங்கிருந்து வருகின்றது?என கண்டுபிடிக்க ஆணையிட ,அவர்களால் அழைப்பு எங்கிருந்து வந்தது?என எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்கமுடிய வில்லை.(அது எங்கோ செயற்கை கொள் தொலைபேசி வழியே வருகின்றது)டிவி காமிராக்கள் நேர்முக வர்ணனை செய்ய.கும்பல் சூழ .மிகப்பெரிய ட்ராபிக் ஜாமாகிவிடுகிறது.அதற்குள் இவன் மனைவி அங்கு வர,போலீஸ் அவளிடம் நன்கு விசாரிக்கிறது.பின் அவளை அவனிடம் அனுப்பி சரணடைய பணிக்க,

வன் அவளை நோக்கி.அருகில் வராதே,என்றும் அவளை யாரென்றே தெரியாதென்றும்,அவள் ஒரு முழு நேர விலை மாதுவாய் இருக்கக்கூடும்,என்றும் போலீசாரிடம் சொல்ல வைக்கப்படுகிறான்.இதற்குள் இவனது காதலியும் அங்கு வந்து விட,இவன் பதட்டமாகி விட,எதிர்முனை ஆள் சொன்னது போல மனைவியை நோக்கி கெஞ்சும் தொனியில்,நான் உனக்கு துரோகம் செய்துவிட்டேன்.நீ எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை.

நான் ஒரு அப்பாவி இளம் பெண்ணின் வாழ்க்கையையும் கெடுக்க துணிந்தேன். இதோ, இவள் தான் என் காதலி பாம் (pam),என பரஸ்பரம் அறிமுகமும், மன்னிப்பும் கேட்டு.மேலும் ஒவ்வொரு முறையும் இவன் மனசாட்சி உறுத்தியதால் தான்.திருமண மோதிரத்தை கழற்றி வைத்து அவளிடம் கடலை போட்டதாக சொல்லி.மன்றாடி.தன் மனைவியை நோக்கி முன்னை விட அவளை மிகவும் நேசிப்பதாகவும்,நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்ய இயலாது,என்றும் சொல்லி.இந்த குற்றங்களை மன்னித்து தன்னை ஏற்றுக்கொள்ள கதறுகிறான்.

வன் மனைவி மிகவும் நெக்குருகி,இவனை மன்னிப்பதாய் சொல்லி இவனிடம் வர.எதிர் முனை ஆள் இவனிடம் கூரையில் உள்ள பிஸ்டலை எடு.இல்லை என்றால் உன் மனைவியை சுட்டுவிடுவேன்,என்று சொல்ல.இவன் மறுக்க,இவன் நீ இன்னும் முழுதாய் நீ செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்று சொல்ல.யோசி என்று அழுத்த இவன் எல்லோரையும் நோக்கி,நான் மிக சாதாரணமான ஒரு பத்திரிகை அலுவலக ஊழியன்.ஆனால் பிறரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் மயங்கி போலி இத்தாலியன் சூட்டுகளும்,போலி இத்தாலியன் ஷூக்களும் அணிவதாகவும், 

னக்கு பிரபலங்கள் நிறைய பேரை தெரியும் என்று நிறைய பேரை நம்ப வைத்து ஏமாற்றியதாகவும்,தன்னிடம் புதியதாய் உதவியாளனாக சேர்ந்துள்ள பள்ளி முடித்த மாணவனை சம்பளம் தருவதாய் கூறி ஏமாற்றியதாகவும்,மேலும் போலி ரோலேக்ஸ் வாட்சு அணிந்து பந்தா காட்டியதையும் ஒத்துக்கொள்ள.கூட்டம் சுவாரஸ்யமடைகிறது.உண்மையை சொன்ன இவன் இப்போது தைரியமடைந்து,போலீசாரை நோக்கி தான் புரோக்கர் கொலையை செய்யவில்லை.என்று சொல்ல ,போலீஸ் இவனை வெளியே வர பணிக்கிறது.எதிர்முனை இவனை போனை வைத்தால் மனைவியை சுட்டுவிடுவேன்.என்று சொல்ல.

போலீஸ் முன்னே வர ,எதிர்முனை இவனிடம் போலீசை போகச் சொல்,இல்லை என்றால் போலீசை சுட்டுவிடுவேன் என்று சொல்லி மிரட்ட.மேலே உள்ள பிஸ்டலை எடு,நான் உன் எதிரே உள்ள ஓட்டல் அறையின்,306 ஆம் எண் அறையில் தான் உள்ளேன்.என்று சொல்ல ,இவன் கூரையில் உள்ள பிஸ்டலை எடுக்கிறான்.கீழே குனிகிறான்.எதிர் முனை ஆளிடம் மோதிரம் தேடுவதாய் சொல்லி,தேடுவது போல நடித்து இந்த ஆளின் அறை எண்ணை தன் மனைவிக்கு எஸ் எம் எஸ் அனுப்புகிறான்.

திர் முனை ஆள் இப்போது அவனின் மனைவியை சுடப் போவதாய் சொல்ல ,இவன் வேண்டாமென கெஞ்ச,சரி உன் காதலியை சுடுகிறேன் என்று சொல்ல..இவன் கெஞ்ச ,அப்படிஎன்றால் பிஸ்டலை எடுத்து என் அறையை நோக்கி,என் சன்னல் வழியாய் என்னை நோக்கி சுடு என்று சொல்லி சிரிக்க ,இவன் வெறி கொண்டு வெளியே வந்து சத்தம் போட்டு அலறி அந்த ஜன்னலை நோக்கி சுட 

மேலே சுற்று போட்டு காத்திருந்த போலீஸார்,இவனை குறி பார்த்து சுட,இவன் பிளாட்பாரத்தில் சரிகிறான்.மனைவி ஓடி வந்து இவனை அணைத்துக் கொண்டு தேற்ற,முத்த மழை பரிமாறல்கள்.இன்னும் அதிக அன்புடன் பரிமாறிக்கொள்ள .போலீஸார் வந்து அது ரப்பர் தோட்டா தான் .இருந்தாலும் அதீத வலி எடுக்கும் என்று சொல்ல,அதற்குள் போலீஸ் குழு ஹோட்டல் அறை சென்று சோதனை செய்ய அங்கு இருந்த மிரட்டல் ஆசாமி எஸ்கேப்.

ங்கு பிஸ்சா டெலிவரி காரனது பிரேதம் கிடக்க,அதை ஸ்ட்ரச்சேரில் ஏற்றி கொண்டு வர ,இவர்களை கடக்கையில் முகத்தை மூடியிருந்த துணியை விலக்கி பார்க்க ,அது இவன் துரத்தி விட்ட பிஸ்சா ஆள்.என்று இவன் போலீசிடம் சொல்ல,போலீஸ் பிஸ்சா ஆள் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் ,கடைசியில் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்,அமெரிக்காவில் சைக்கோத்தனம் இன்றைய தேதியில் மிகவும் சாதாரணம் என்று சொல்கிறது.

வனை ஆம்புலன்சில் ஏற்றி மயக்க மருந்து தரப்படுகிறது,அவன் முதல் காரியமாக தன் போலி ரோலேக்ஸ் வாட்சை கழற்றி எறிகிறான்.அப்போது அந்த குரல் கேட்கிறது.நைஸ் ஷூஸ் ,இத்தாலியன் ?என்று..இவன் கண்கள் சொருகி திகைக்க ..அவன் கையில் ஒரு துப்பாக்கி பெட்டியுடன் போன் பூத்தை கடந்து செல்கிறான் ...படம் முடிகிறது ஒரு அருமையான பின்னணி இசையுடன்.இதில் ஹீரோ யார் சொல்லுங்கள் ?
அந்த எதிர் முனை ஆசாமியின் குரல் தான்..
திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.

நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்
====0000===

6 comments:

ஷண்முகப்ரியன் சொன்னது…

பல வருடங்களுக்கு முன்னர் பார்த்து ரசித்த படம்,அதன் புதுமைக்காக.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

ஐயா
பழைய படம் தான் என்றாலும் எப்போது பார்த்தாலும் நமக்கு கிடைக்கும் அந்த புத்துணர்ச்சி.
என்ன அற்புதமான காமிரா கோணங்கள்?
முக பாவனைகள்.எல்லாவற்றுக்கும் மேலாக அந்த குரல்,அதின் சிறுப்பு,கிண்டல்..
நம் இதய துடிப்பை பல மடங்கு எகிறச் செய்யும்.
ஐயா GHOSTDOG டவுன்லோடு மெதுவாக ஆகின்றது ,இன்று பார்ப்பேன் என நினைக்கிறேன்.
நன்றி

கலையரசன் சொன்னது…

விமர்சனம் அருமை!, இப்படத்தை
ஸ்டார் மூவிஸ் ல போட்டு ரீலே
அருந்துபோற அளவுக்கு ஓட்டிட்டானுங்க!
இருந்தாலும்... படம் அருமையாக இருக்கும்!

அப்புறம், நீங்க துபாயா? இத்தனை நாள்,
உங்களை பக்கங்களை பார்காமல் விட்டுவிட்டேனே?
வாங்க,அப்படியே வந்து, அமீரக பதிவர்கள் கூட்டத்தில்
ஐகியமாகுங்கள்!!

என் பக்கம்: www.kalakalkalai.blogspot.com

உங்கள் பக்கத்தை அறிமுகப்படுத்திய ஷண்முகப்ரியன் அவர்களுக்கு
சிறப்பு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்!

கலையரசன் சொன்னது…

settings -> comments--> word verification க்கு no குடுங்க...
ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

கலை,பின்னூட்ட வார்த்தை சரிபார்ப்பு சரிசெய்யப்பட்டது.
தகவலுக்கு நன்றிகள்

பின்னோக்கி சொன்னது…

நல்ல படம்

1. panic room
2. cellular
3. Duel

படங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)