தி ரீடர் -(the reader-)2008 (18+)

அங்கீகரித்தமைக்கு நன்றி : யூத்ஃபுல் விகடன்






ந்த படம் த ரீடர் , படம் பார்ப்பவரை கரைத்து, மனதை நகர்த்தும் தன்மை கொண்டது, நான் லீனியர்  உத்தியை கொண்ட  இந்த ”ட்ராமா ,ரொமான்ஸ்” வகைப் படம் 1995ல் வெளியான பெர்னார்ட் ஷ்லின்க் என்பவர் எழுதிய “த ரீடர் ”என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு உன்னத படைப்பு. 

ல்லோருக்கும் சிறுவயதில் காதல் வந்திருக்கும், சிலருக்கு தன்னைவிட சிறுவயதினர் மீது வரும், சிலருக்கு தன்னை விட பெரியவர்கள் மீது வரும். அதை காதல்  என்று சொல்லுவதை விட இனக்கவர்ச்சி என்று சொல்வதே மிகச்சரியாக இருக்கும். இளம் பிராயத்தில் தோன்றியிருந்தாலும் பசுமரத்தாணி போல மனதில் வேறூன்றியிருக்கும் அந்த நினைவுகள் காலத்துக்கும் அழியாது.

து போல திரைப்படங்கள் நம் நாட்டிலும் திறம்பட தயாரிக்க முடியும் தான் என்றாலும்? எந்த அளவுக்கு வணிக ரீதியாக வெற்றி பெறும் என்றே என்னால் கணிக்கமுடியவில்லை, சரி வணிக ரீதியை விட்டு விடுங்கள்,கலாச்சாரக்காதலர்களை நினைத்தாலே இயக்குனருக்கு இது போல படம் மனதில் உதிக்கவே உதிக்காது. தவிர அந்த வகைப் படங்களுக்கு குத்தப்படும் பிட்டு படம் என்னும் முத்திரை இருக்கிறதே!!! அதைச் சொல்லுங்கள்,

தையும் மீறி 1978 ஆம் ஆண்டு பத்மராஜனின் கதையில் பரதன் இயக்கத்தில் வந்த ரதிநிர்வேதம் என்னும் மலையாள மொழிப்படம். அப்படம் 32 வருடங்களுக்கு முன்பான இந்திய பேரலல் சினிமாவுக்கு மாபெரும் தொலைநோக்கு என எண்ணி வியக்கிறேன். அதிலும் இதே போன்றே வயதில் மூத்த பெண்மணியின் மீது காதல் வயப்படும் விடலைப்பையனின்  கதையை கவிதையாக செலுலாய்டில் வடித்திருப்பார் இயக்குனர் பரதன்.  அதன் பின்  தமிழில் வெளிவந்த பாலுமகேந்திராவின் அழியாக்கோலங்கள். என இரண்டு படமும் எனக்கு இந்த படம் பார்த்த பின்னர் நினைவுக்கு வரத்தவறவில்லை.

படத்தின் கதை:- வருடம்-1958, பெர்லினில் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டம். ஹென்னா ஒரு அழகிய  36 வயது முதிர்கன்னி,ட்ராம் (யு பார்ன்) வண்டி கண்டக்டர்   , மிகப் புதிரானவள்.  தனியாக ஒரு மாடி வீட்டில் வசிக்கிறாள். மைக்கேல் 15வயது பள்ளி மாணவன், துறுதுறுப்பானவன், வசதியான ஜெர்மானியக் குடும்பம், பள்ளி சென்றவன் ஸ்கார்லெட் காய்ச்சல் வந்து  நடக்கவே முடியாமல் அவள் வீட்டு வெளியே வாந்தி எடுத்துவிட்டு அமர்ந்திருக்க,  இவள் அவனின் வாந்தியை கழுவி விட்டு   அவனை வீடுவரை கொண்டு விடுகிறாள்,

ரு நன்றிக்காக தன் வீட்டினரின் அறிவுரையின் பேரில் பூங்கொத்துக்கள் வாங்கிக்கொண்டு அவன் 3மாதம் கழித்து அவளை பார்த்து, நன்றி கூற வருகிறான்,ஆரம்பத்தில் அவள் அவனிடம் அதிகம் கண்டிப்பு காட்டினாலும், அவன் தொடர்ந்து பூனைக்குட்டி போல அவள் வீடு வர ஆரம்பிக்க,அவன் உலக இலக்கியங்கள் படிப்பதை அறிகிறாள். தான் காலால் இட்ட வேலையை அவன் தலையால் செய்ய துடிப்பதையும் அறிந்தவள் கனிகிறாள்.
ருநாள்  அவள்  குளிர் காய உபயோகிக்கும் கரியை மைக்கேல் கீழே இருந்து இரும்பு வாளியில் நிரப்பிக்கொண்டு தூக்கமுடியாமல் படியேறி வர, அவனின் கரி படிந்த முகத்தையும் ஆடைகளையும் கண்டவள், அவனைப்பார்த்து அபூர்வமாக சிரிக்கிறாள். அவனை ஆடைகளை களைய பணித்தவள் ஒரு கைதேர்ந்த தாதியைப்போல தேய்த்தும் குளிப்பாட்டிவிடுகிறாள் , மேலும் முயல் பிடிக்கும் நாயை மூஞ்சியை பார்த்தே கண்டுபிடிக்கும் ஆள்  நானடா, என்று அவனுக்கு  உணர்சியை தூண்டி உடல்லுறவும் கொள்கிறாள்,  அவனுக்கு நாளடைவில் பாடம் மனதில் பதியவில்லை,

ணவும் பிடிக்கவில்லை, பள்ளி விட்டதும் அவள் வீடுதான், அவளுக்கு கதை அடுத்தவரை படிக்க சொல்லி கேட்பதில் ஆனந்தம், அனுதினமும் பால் உறவுக்கு முன் அவனை புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளான “த ஒடிசி,The Odyssey, த லேடி வித் த லிட்டில் டாக்,[The Lady with the Little Dog,] அட்வென்சர்ஸ் ஆப் ஹக்கிள் பரி ஃபின், [Adventures of Huckleberry Finn,] மற்றும் டின் டின்  [Tintin] போன்ற புத்தகத்தில் இருந்து படிக்க சொல்லி கேட்டு பின்னர் உடல் உறவு, என தினமும் ஜமாய்கின்றனர். அவன் பள்ளியில் புதிதாய் வந்த மாணவி அவனை பார்க்க தொடங்க, அவனுடன் பழகத் துடிக்க, இவன் வெட்டிக்கொண்டு ஹென்னாவிடமே செல்கிறான், ஒரு சமயம் ஹென்னாவுடன் இரண்டு நாள் மிதி வண்டி பயணமும் செய்கிறான். அங்கே ஒரு உணவு விடுதியில் இவர்களின் ஜோடிப்பொருத்தத்தை உணவகப்பெண்மணி பார்வையாலேயே எள்ளி நகையாட இவளுக்கு குறுகுறுக்கிறது. அவளுக்கு தான் செய்வது ஒரு மிகபெரும் குற்றம் என விளங்காமல் இல்லை.இவனை கழற்றிவிட தருணம் பார்க்கிறாள்.


ஹெண்ணாவிற்கு அவள் ட்ராம் கம்பெனியில் பதவி உயர்வு கிடைக்க, இவன் பிறந்த நாள் அதுவுமாக சண்டை போட்டுவிட்டு, அவனை இப்படி பிடிவாதம் பிடிக்க்கிறாய்!!!!  என கோபத்தில் அறைந்தவள், பின்னர், போருக்கு பின் அமைதி, என்னும் கணக்காய் அவனைத்தேற்றி சமாதானமாகி பின்னர் உறவு கொண்டதும், அவனை அவன் நண்பர்களுடன் செல்லுமாறு சொல்லி வழி அனுப்பிவிடுகிறாள்,  அப்படியே வீட்டை காலி செய்து விட்டு  பறக்கிறாள்.. மைக்கேல் மிகவும் ஏமாந்து போகிறான், சிறு உள்ளத்தில் பெருங்காயம்...காதல் தோல்வியில் உழல்கிறான்.

7 வருடம் கழித்து:-
1966ம் வருடம் அவன் சட்டம் படித்துக்கொண்டிருக்கிறான், அவள் இன்னும் அவன் மனதில் நீங்காமல் இருக்கிறாள், சட்டம் படிக்கும் சக மாணவி அவனுக்கு வலிய நூல் விட இவன் நழுவுகிறான், திடீரென அவன் நேர்முக செமினார் வகுப்பில் முக்கிய வழக்கு நடக்கையில், ஜெர்மனிய நாஜி படையில் போலந்து நாட்டின் ஆஷ்விட்ஸ் என்னும் உலகபுகழ்பெற்ற இனப்படுகொலை களத்தில் மட்டும் , யூத மக்களும், இன்னும் பிற கைதிகளுமாக சுமார் 11 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்,


தில் ஒரு கிளை வழக்காக டெத் மார்ச்  என்னும் சாகும் வரை நடக்கும் சித்திரவதை என்னும்  ஒரு வரலாற்று நிகழ்வின் போது, பெண்களும் சிறுமிகளும் அயராமல் சோறு தண்ணீர் உறக்கமின்றி கொட்டும் குளிரில் நடுங்கியபடி நடக்கும் போது, அமெரிக்க,ப்ரிட்டன் ஆகாய விமானங்கள் குண்டுகளை போட்டு தாக்கத் துவங்க. அப்போதும் கடமை தவறாத ஹென்னா தன் தலைமையில் இருந்த 300 பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டி,சர்ச் ஒன்றில் மந்தையாடுபோல அடைக்கிறாள்.
காய மார்க்க குண்டுவீச்சு தாக்குதலில் சர்சும் தீக்கிறையாகிவிட யூதப் பெண்களும் குழந்தைகளும் வெளியே கதவு பூட்டப்பட்ட கதவுக்கு உள்ளே இருந்து கண்ணீர் விட்டு கூக்குரலிட்டும் பலனில்லை.ஹென்னாவின் கல்மனம் புட்டை திறந்தால் பெண்கள் தப்பிவிடுவார்கள் என்று திறந்துவிட அனுமதிக்கவில்லை.அவர்கள் கருகி இறந்தாலும் பரவாயில்லை தப்பிக்கக்கூடாது என்றிருக்கிறாள் .  
ன்ன கொடுமை என்றால்? 300 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு, விசாரனைக்கு வருகிறது. சம்பவம் முடிந்து 22வருடம் ஆகி, 2000 பேர் அங்கு பணி புரிந்தும் 6பேர் மட்டுமே மாட்டி, வழக்கு நடக்க, அதில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் இவர்களை அடையாளம் காட்டி, குறிப்பாக ஹென்னா ஒரு வினோதமான காவலாளி என்றும், அவள் இளம் யூத சிறுமிகளை முடிந்த வரை காஸ் சேம்பருக்கு அனுப்பாமல், வயது முதிர்ந்தவரை மட்டும் எப்பொழுதும் தேர்வு செய்து காஸ் சேம்பருக்கு அனுப்புவாள் என்றும்,


சிறுமிகளை,கதை புத்தகங்களை கொடுத்து,சத்தம் போட்டு படிக்க சொல்லி கேட்கும் வழக்கம் கொண்டவள் என்றும் சொல்ல, நீதிபதி அப்படியா? என கேட்க இவள்  சிரத்தியாக,ஆமாம்,அப்போது தான் புதிதாய் வருபவருக்கு இடம் கிடைக்கும், முதியவரால் என்ன பயன் உண்டு? வாழ்ந்து முடித்தவரை தான் காஸ் சேம்பருக்கு அனுப்பியதில் எந்த தவறும் இல்லை என்றும் தீர்க்கமாக பதிலுறைக்க, கோர்டே அதிர்கிறது,அவளுக்கு மரணதண்டனை விதிக்க்க சொல்லிக்கேட்டு கூச்சலிடுகிறது.


வள் 22 வருடம் கழித்தும் தன் தவறுக்கு வருந்தாத இவளைக் கண்டு அனைவரும் கொதிக்க, மைக்கேல் மிகவும் வேதனையும் அருவருப்பும் ஒருங்கே கொண்டு.  நிறைய புகை பிடிக்கிறான்,  இது அவனின் ஆசிரியருக்கும் சக நண்பர்களுக்கும் சந்தேகமூட்டுகிறது, இன்னொரு நாள் விசாரனையில் மற்ற கைதிகள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு. இவளே அன்று  டெத்மார்ச்சின் போது நடந்த எல்லா குற்றத்திற்க்கும் காரணம், என்றும், இவள் கைப்பட தயாரித்த வேலை நேர அறிக்கையும், அதில் மற்ற விபரங்களும் உள்ளது, என்று சொல்லி தப்பிவிட,
நீதிபதியோ நீ தான் இந்த டெத்மார்ச்சுக்கு கூட்டிச்செல்ல  ஆட்களை தேர்வு செய்து அனுப்பிய பட்டியலை தயாரித்தாயா? என்று கேட்க, இவள், இல்லை, நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் என்று  வாதாடிச் சொல்ல,எதுவும் எடுபடவில்லை.

ம்பாத நீதிபதி கையெழுத்து பரிசோதனைக்கு, அவளை எழுதி காட்ட சொல்லி கேட்க, இவள் திகைத்து, சிறிது நேர அமைதிக்கு பின், கொடுக்கப்பட்ட  பேப்பரையும் பேனாவையும் முன் புறம் தள்ளியவள், தானே நடந்த தீ விபத்து சம்பவத்திற்க்கு முழுப் பொறுப்பு என்கிறாள், மைக்கேல் அழுகிறான், அப்போது அவனுக்கு ஒன்று  நன்றாய் விளங்குகின்றது,  அவள் படிக்காதவள், படித்தவள் போன்று தன்னை காண்பித்துக்கொள்பவள் என்னும் உண்மைதான் அது,  தீர்ப்பு  வருகின்றது,

ற்றவர்களுக்கு  6 வருட சிறை தண்டனை, இவளின் முக்கியத் தன்மையை கருதி, ஆயுள் தண்டனை என்று.  அவன் ஹென்னா பணிபுரிந்த ஆஷ்விட்ஸ் முகாமுக்குள் செல்கின்றான்,  அங்கு கண்ட காட்சி அவனை புரட்டி போடுகின்றது,  ஹென்னா இங்கு வேலை பார்த்த குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல், எப்படி தன்னிடம் இப்படி உடலால் பழகியிருக்கிறாள்?.  என கொதிக்கின்றான்,  இருந்தும் இவளைப் பார்க்க மனது துடிக்க,  முன் அனுமதி பெற்று சிறைசாலைக்கு செல்கிறான்,  வாசல் வரை சென்று, அருவருப்பும் கோபமும் எழ விருட்டென வெளியேறுகிறான், ஹென்னா தன்னை காண வந்தது யாராயிருக்கும் ?  எனக் குழம்பியவள் தன் அறைக்குள் செல்கிறாள்,

இனி என்ன ஆகும்?டிவிடியில் பாருங்கள்.முழுக்கதையும் படிக்க காணொளியைதாண்டி வந்து படியுங்கள்:-

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-




தன் பின்னர் நீண்ட நாளாய் அவனை ஒருதலைக்காதல் செய்து வந்த, சக மாணவியின் அறை சென்று இன்று உன் கூட தூங்கவா? என்று கேட்கிறான், அவள் உற்சாகமாக.. இருவரும் உடலுறவு கொள்கின்றனர். (அவளை அவன் மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டான் என்று குறிக்கிறது) காட்சி மாறி நடப்பு காலத்தில் பயணிக்கிறது.. மைகேல் பெரிய வழக்கறிங்கராகிறான் , மனைவியுடன் விவாகரத்தும் ஆகின்றது , (எல்லாம் அவள் நினைவினால் வாழ்ந்ததால் என்று நமக்கும் விளங்கிக்கொள்ள முடிகிறது )   தன் மகள் கல்லூரியில் சட்டம் படிக்க,  விடுமுறையில் பெர்லின் வருகிறாள்,  அவள் தாய் வேறு ஊரில் , இவன் மகளிடம் அவ்வளவாக பேசியதில்லை,  மகளும் நன்கு வளர்ந்து விட்டாள், இவனுக்கு எல்லாமே வியப்பளிக்கிறது, இவன் அவளை சிறு பெண்ணாகவே எண்ணி இருந்திருக்கிறான்.


வலுடன் தன ஊரான Neustadt. ற்கு பல வருடங்கள் கழித்து செல்கிறான், அவள் ஞாபகம் வரும் என்பதால் அவன் அவ்வூருக்கு செல்வதையே  நீண்ட காலம் தவிர்த்தும் வந்திருக்கிறான், அவன் தந்தை இறந்த போதும் கூட சவ அடக்கத்துக்கு செல்லவில்லை,  வீட்டில் தன் அறையை சென்று பார்க்க, பழைய டைரிகளில் அவளின் நினைவுகள், அவளுக்கு படித்துக்காட்டிய புகழ்பெற்ற கதை புத்தகங்கள்.  என அவன் சிறுவயது நினைவலைகள் பீறிட்டு கிளம்ப ,  ஒரு பெட் டேப் ரிக்கார்டர்  ,மைக், காசெட்டுகள் ,வாங்கி அந்த கதைகளை,  ஒலிச்சித்திரம் போல உயிரோட்டமாக பதிவு செய்கிறான், அவளின்  சிறை முகவரிக்கு அனுப்புகிறான்,  அவளுக்கு பேரானந்தம் பெட் டேப் காசெட்டுகளை வாங்கியவுடன் கடிதம் இருக்கிறதா? எனப் பார்க்கிறாள், அனால் இவன் அவளுக்கு கடிதம் எழுத விரும்பவில்லை,  எழுத்தறிவிக்கவே விரும்புகிறான்,


தை இவள் உணர்ந்து சிறை வளாகத்திலுள்ள நூலகம் சென்று இவன் அனுப்பிய "தி லேடி அண்ட் தி லிட்டில் டாக் "புத்தகம் எடுத்து வந்து , கேட்கிறாள். பாஸ் செய்கிறாள், அதற்க்கு பொருத்தமான வார்த்தையை யூகிக்கிறாள் ,  பொருத்திப் பார்க்கிறாள். அடிப்படை கற்காமல் கதை புத்தகங்கள் மூலமாகவும், காசெட்டுகள் மூலமாகவும் படிக்கவும் , பின் மிக அழகாக எழுதவும் கற்கிறாள். தொடர்ந்து இவன் காசெட்டுகள் அனுப்புகிறான், ஆனால் கடிதம் அனுப்பவில்லை.


1988 ஆம் வருடம் அவளின் தண்டனை முடியும் தருவாயில், இவனுக்கு தொலைபேசி அழைப்பு சிறையில் வார்டனிடமிருந்து வர,  அவர் ஹென்னாவின் தண்டனை காலம் முடிந்து அவள் வெளியே வந்தால்.  நிச்சயம் அனாதை ஆவாள், ஆகவே அவளுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து, தங்குமிடம் தந்து கூட வைத்துக்கொள்ளும் படி மன்றாடிக் கேட்க. இவன் நீண்ட தயக்கத்துடன் சிறைக்கு சென்று அவளை சந்திக்கிறான், ஆனால் இவனால் சகஜமாக பேசமுடியவில்லை, ஒட்டவில்லை, எதுவோ? ஒன்று தடுக்கிறது,


னால் அவளை விட்டுவிடவும் மனமில்லை. அடுத்த வாரம் அவள் தண்டனை முடிந்ததும் வந்து அழைத்துப்போய். அவன் ஊரிலேயே தங்கவைத்து அவளுக்கு ஒரு குழந்தைகளை  கவனிக்கும் நர்செரியில் வேலைக்கு சேர்த்துவிடுவதாக சொல்கிறான். அவள் ஆமோதித்து அறைக்கு செல்கிறாள்,  ஆனால் அவளுக்கு இவனின் மாற்றம் கண்கூடாக உறுத்துகிறது, தான் எவ்வளவு பெரிய? தவற்றை இழைத்துள்ளோம் ,என மிகவும் வருந்துகிறாள்,
ரு முடிவுக்கு வந்தவளாய், அவளின் வாழ்நாள் சேமிப்பான 4000 பிரான்க்குகளை, தான் ஆஸ்விட்ஸ் முகாமில் காவலாளியாக இருந்தபோது, ஒரு யூத பெண்ணிடம் திருடிய டீ டின்னில் போட்டு வைத்து பாதுகாத்ததை , நாஜிப்படையின் ஆஸ்விட்ஸ் முகாமில் உயிர் பிழைத்த ஒரு யூதரின் கல்விக்கு தரச் சொல்லி,  உயில் எழுதியவள் , தூக்கு மாட்டியும்  இறக்கிறாள்.  மைக்கேலுக்கு இந்த விஷயம் கேட்டவுடனே துக்கம் தொண்டையை அடைத்தாலும்,  அவளின் இறுதி ஆசையை நிறைவேற்ற துடித்தவன் ஆஸ்விட்ஸ் காம்பில் இருந்து உயிர் தப்பி தற்போது வசதியாக, நியூயார்க்கில் வாழ்ந்து வரும் இலியானாவை நீண்ட பயணம் செய்து சந்திக்கிறான்,

லியானா இந்த பாவப்பட்ட பணத்தை வாங்க மறுக்கிறாள், பின் மைக்கேல் மிகவும் மன்றாட, இவர்கள் இருவருக்கும் என்ன உறவு? என ஆவலுடன் கேட்கிறாள், மைக்கேல் நீண்ட அமைதிக்கு பின்னர்  இவர்களின் இளம் வயது உடல் தொடர்பை கூறுகிறான். அவள் நீண்ட மௌனத்துக்குப்பின்னர். அந்த பணத்தை இருவருமே சென்று யூதர்களால் நடத்தப்படும், ஏழைக் யூத முதியோர் கல்வி உதவி நிறுவனத்திற்கு கொடுக்கலாம். என்று முடிவு செய்கின்றனர்.  இலியானா அந்த டீ டின்னை மட்டும் தான் வைத்துக்கொள்கிறாள்.

மைக்கேலுக்கு  இப்போது தான் ஒரு பெரும் பாரம் மனதை விட்டு இறங்குகிறது. பின்னொரு சமயம் தன் மகளை ஹன்னாவின் சமாதிக்கு அழைத்துச் சென்று. தன் இளம் பிராயத்து காதல் கதையை, முதல் முறையாய் ஒருவருடன் கூறுவது என்ற முடிவுடன் சொல்லத் தொடங்குகிறான்.

====0000====

து நிஜமாகவே என்னை மிகவும் உலுக்கிய படம்,எவ்வளவு பெரிய அதி பயங்கரத்தை செய்து விட்டு குற்றுணர்வு கொஞ்சமும் இன்றி சாதுவான பூனை மாதிரி சிறுவனுடன் உறவு கொள்ளும் ஒரு பாத்திரம், யாரும் செய்ய தயங்கும் சவாலான பாத்திரம். தினமும் கதை கேட்டல் பின் புணர்தல், என்ன ஒரு வித்தியாசமான உறவு முறைகள் , அவளது கதை கேட்கும் ஆர்வம். எல்லாதிற்கும் மேல்அவளுக்கு கடைசியில் ஏற்ப்படும் குற்ற உணர்வு தற்கொலைக்கு தள்ளுகிறது.

தான் திருடிய டீ டின் டப்பாவிலே பணம் சேர்த்து வைப்பது, KID KID என அழைத்துக்கொண்டே சிறுவனுக்கு உடலுறவு சொல்லித் தருவது, அவனை தலை முதல் கால் வரை தேய்த்து குளிப்பாட்டுவது, என்று கேட் நடிப்பு அபாரம்.
கேட்டின் தற்போதைய வயதிர்க்கேற்ற பாத்திரம், வயதான கேட்டின் ஒப்பனையும் அற்புதம். கேட் தனது நடிப்பு திறமையை ஆணித்தரமாக இம்முறையும் நிரூபித்துள்ளார் என்றால் மிகையில்லை. எல்லா படங்களிலும் நிச்சயம் பிறந்த மேனியாக ஒரு காட்சியிலேனும் வருவார். பெரும்பாலான படங்களில் முதியவருடன் ஜோடி சேரும் இவர். இதில் சிறுவனுடன் ஜோடி போட்டுள்ளார்.

ல வித்தியாசமான கதாபாத்திரங்களை கேட் செய்துள்ளார். அதில் பல சர்ச்சைக்குரியதும் கூட. ஏற்கனவே கேட் உலக சினிமாக்களில் பெற்றுள்ள பெயர் ஈடு செய்ய முடியாதது. சில
உதாரணங்கள்:- டைடானிக் (titanic), ஹோலீ ஸ்மோக் (holy smoke),தி குவில் (the quill), ஐரீஸ் (iris), எனிக்மா (enigma), ரேவல்யுஷனரி ரோட்ஸ் (revolutionary roads)  த ரீடர் கேட் ரசிகர்களுக்கும் உண்மையான கலை ரசிகர்களுக்கும் ஒரு நல்ல தீனி என்பதில் ஐயமே இல்லை.

ரால்ப் பியென்ஸ் பற்றி சொல்லவில்லை என்றால் என் ஜென்மம் சாபல்யம் அடையாது.. ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் யூதர்களை கண்டமேனிக்கு சுட்டுத்தள்ளும்,அமான் கோத் என்னும் நாஜிபடையின் கொடுங்கோல் அதிகாரியாக வருவார். ஒரு பெண் யூத பொறியாளர் தனக்கு முன் சத்தமாக முகாமின் பார்ரக்ஸ் கட்டுமானம் பற்றிய உண்மையை சொல்லிவிட்டாள். என்று அவரை மண்டியிட வைத்து சுடுவார், பின்னர் அவள் சொன்ன படியே மாற்றியும் கட்டச் சொல்லுவார். 
தில் தன் அழகிய வேலைகார  யூதப்பெண்ணிடம் ஆசையும் இருக்கும், ஆனால் ஒரு யூத பெண்ணிடம் போய் தான் விழுவதா? என்ற அருவருப்பும் இருக்கும்.  கடைசியில் கூட அவளை மட்டும் ஷிண்ட்லேர் எவ்வளவு பணம் தந்தும் ஷிண்ட்லேரிடம் அனுப்ப மனமிருக்காது, (அவளை நான் செம்படையிடம் பிடிபடும் முன்னே காட்டுக்குள் அழைத்துப்போய் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவேன், அனால் உன்னிடம் அனுப்ப மாட்டேன்,என்பார்.அதையும் மீறி பெரும்பணம் கொடுத்து ஷிண்ட்லர் அவளை வாங்குவார்.)

ந்தப் படத்தில் ஷிண்ட்லேரின் மொத்த பணம், அரிய சேகரிப்புகள் என அனைத்தையும் விடாமல் கறந்த பிறகே 1100 யூதர்களை அவருக்கு கொடுப்பார். கடைசியில் இவரை தூக்கு கயிற்றில் ஏற்றிய பிறகு செம்படையினர் அந்த மர முக்காலியை உதைப்பார்கள் , ஆனால் அது கீழே விழாது, மண்ணில் புதைந்திருக்கும், அப்புறம் அதை உடைத்து தூக்கில்போடுவார்.  (கடவுளுக்கு கூட இவர் எளிதாக சாக கூடாது என்பது போல காட்சி வைக்கப்பட்டது போல இருக்கும்)  தன் காட்டுமிராண்டித்தனத்தை கண் முன்னே கொண்டுவந்திருப்பார். இப்படத்தில் அதற்க்கு எதிர் மாறான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.அற்புதம்!!!

====0000====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Stephen Daldry
Produced by Anthony Minghella
Sydney Pollack
Written by David Hare
Starring Kate Winslet
David Kross
Ralph Fiennes
Music by Nico Muhly
Cinematography Chris Menges
Roger Deakins
Editing by Claire Simpson
Distributed by The Weinstein Company
Release date(s) December 10, 2008
Running time 124 minutes
Country United States
Germany
United Kingdom
Language English
====0000====
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)