what just happened?மெய்யாக நடந்தது என்ன ? 2008






அங்கீகரித்தமைக்கு நன்றி : யூத்ஃபுல் விகடன்

























ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான பென் (ராபட் டிநீரோ), தன் படத்தை முடித்து வெளியிடுவதற்க்குள் படும் அல்லல் துயரங்களை, மிகுந்த நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள் . தயாரிப்பாளர் ஸ்டுடியோ ஹெட்டிற்கு பயந்து கதையை மாற்றுவது, நடிகர்களின் படத்தில் வரும் தோற்றத்தை திடீரென மாற்றுவது, மற்றும் அனுதினமும் சந்திக்கும் சர்ச்சைகள், பொல்லாப்புகள் என்று.


படம் பார்க்கும் நாமும் அவர் கூடவே போகுமிடமெல்லாம் பயணிக்கிறோம்.வயிறு குலுங்க சிரிக்கிறோம். அவரின் முதல் மணவாழ்க்கை கசந்து விவாகரத்தாகி, மிகப்பெரிய தொகையையும் வீட்டையும் அலிமனியாக(ALI MONEY) கொடுத்து மகளின் பாசமும் விடாமல் இவரை வாட்ட , இரண்டாம் மணவாழ்க்கையும் கசந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்து பின்னர் பேச்சுவார்த்தை என்னும் சமரச நிலைக்கு வந்து ஓயாத வேலை பளுவின் இடையிலும் கவுன்சிலிங் போய் வருகிறார்கள்.


அவ்வப் பொழுது வாய்ப்பு கேட்டு வலிய வந்து மாடல் நங்கைகள் படுக்கைக்கு விருந்தாகின்றனர். இவரது இரண்டாம் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருந்தும் இவரே ஒழுங்கில்லாததால் இவரால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் , அவளை தலை முழுகவும் முடியாமல் படும் அவஸ்தை. தன் பள்ளியிறுதி படிக்கும் மூத்த மகள் தூக்கு மாட்டி இறந்த இளம் ஸ்டூடியோ ஏஜென்டிடம் தன்னை பறிகொடுத்ததை சொல்கையில் ஏற்படும் பதட்டம்,பரிதவிப்பு என அப்படி ஒரு இயற்கையான நடிப்பு. தன் புதிய படத்தில் "sean penn" என்னும் பெரிய ஹீரோவை நடிக்க வைத்து ,படமும் முடிந்து ப்ரீவியூ காட்சி பிரமுகர்களுக்கு திரையிடப்பட,


வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் "sean penn" செத்திருக்க கூடாது, எனவும், மீதி பேர் அந்த நாயை துடிக்க துடிக்க சுட்டு கொள்வது தப்பு, ரொம்ப கொடுமை என்கின்றனர். இதை தங்களுக்கு வழங்கப்பட்ட கருத்து அட்டையிலும் திட்டி எழுதி ,திரும்ப கொடுக்க. ஸ்டூடியோ ஹெட் "லு" என்னும் பெண் உயர் அதிகாரி . இவரையும் படத்தின் இயக்குனரையும் அழைத்து , மனுஷன் சாகலாம், ஆனால் "நாய் சாகக் கூடாது." இது தான் இன்றைய ஹாலிவுட்டின் லாஜிக்,டிரென்ட் எல்லாம் .அதனால் நாயை பிழைக்க வை என்கிறார்.


இயக்குனர் முரண்டு பிடிக்க, "லு" வேறு இயக்குனரை வைத்து அந்த காட்சியை படம் எடுக்க வைப்பேன் என மிரட்ட , மேலும் வரும் மாதம் "CANNES" நடக்க போகிறது . அதில் இப்படம் சிகப்பு கம்பள வரவேற்ப்பை பெறாது எனவும் மிரட்ட, இயக்குனர் பெரும் ஆர்பாட்டத்திற்கு பின்னர் பணிகிறார். "sean penn"ஐ அழைக்காமலேயே அவர் சம்மந்தப்பட்ட அந்த காட்சியை
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கொண்டு எடுத்து நாயை பிழைக்க வைக்கிறார். "ben"ற்கோ சந்தோஷம், இயக்குனரை அப்படியே கட்டிக் கொள்கிறார். கிளைமாக்ஸ் மாற்றத்தை ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு போட்டு காட்ட, அவர் "CANNES" இற்கு இப்படத்தை பரிந்துரைக்கிறார்.

அடுத்த கட்ட சோதனையாக ப்ரூஸ் வில்லீசால் வந்த தலைவலி

ஆறு மாதம் முன்பு தன் புதிய படத்திற்கு ப்ரூஸ் வில்லீசிடம் அட்வான்சு கொடுக்கும் போதே கதைப்படி அவர் காரல் மார்க்ஸ் போல அடர்ந்த தாடி,மீசை வைக்க வேண்டும். என சொன்னதின் பேரில் அவர் ஆறு மாதம் தாடி,மீசை வளர்த்து கால்ஷீட் கொடுத்த தேதியில் ஆஜர் ஆகிறார். ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு யாரோ ஒரு பிரமுகர் "இதுவரை ப்ரூஸ் வில்லீஸ் தாடி,மீசை வைத்து நடித்ததில்லை" அப்படி நடித்தாலும் ஓடாது , அதனால் வழக்கம் போல வழு வழு முகத்துடனே நடிக்கட்டும், என ஐடியா கொடுக்க.


இயக்குனரும் கதையில் எளிதாக தாடி,மீசையை எடுத்துவிட்டு காட்சி வைக்க , ப்ரூஸ் வில்லீசிடம் போய் தாடியை எடுக்க சொல்கையில் ஆரம்பிக்கிறது விபரீதம். அவர் திட்டுகிறார் பார்க்கணும்.?நம்மூர் கமலகாசனேல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்கு ஏசுகிறார். கண்டதையும் போட்டு உடைத்து என் சம்பளத்தில் பிடிச்சுக்கோ என்கிறார், ஐயோ.எல்லாம் சகட்டு மேனிக்கு வாங்கி கட்டி கொள்கின்றனர்.


பக்கத்தில் நெருங்கவே எல்லோருக்கும் பயம். "ben"ற்கோ மத்தளம் போல இரண்டு பக்கமும் அடி. காலில் விழாத குறையாக கெஞ்சியும் மசியாத ப்ரூஸ் வில்லீஸ் பிடி வாதம் எல்லை மீற . ஸ்டூடியோ ஹெட் "லு "கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறார், நாளை கடைசி நாள், ப்ரூஸ் விலீஸ் தாடியை எடுத்தால் படம், இல்லை என்றால் ஊத்தி மூடலாம் என்று. மறுநாள் எவ்வளவு கெஞ்சியும் மசியாத ப்ரூஸ் வில்லீஸ் காரவானின் கதவை திறந்து வெளியே வர , எல்லா யூனிட் ஆட்களுக்கும் அதிர்ச்சி,


தாடியுடன் ப்ரூஸ் வில்லீஸ் , பென் திட்ட வாயெடுக்க, ப்ரூஸ் வில்லீஸ் அப்படியே திரும்பி இன்னொரு பக்க தாடையை காட்டுகிறார். பளபளவென்ற ஷேவ் செய்த கன்னம், மனிதர் சிரித்துக் கொண்டே "MOTHERFUCKERS"என் பிளட் ப்ரெஷரை ஏற்றி விட்டீர்கள் அல்லவா? உங்களுக்கு இப்போ திருப்தியா ?என்று சொல்ல படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.


அடுத்த கட்ட சோதனையாக "CANNES" திருவிழாவில் வந்த தலைவலி,

ஒருவழியாக எல்லா சோதனையையும் கடந்து சிகப்பு கம்பள வரவேற்ப்பை பெற்று, படத்தை இரண்டாயிரம் திரை நட்சத்திர பார்வையாளர் முன் திரையிட. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நெருங்குகிறது, "ben" இயக்குனர் முகத்தை சமாதானத்துக்காக பரிவுடன் பார்க்க, அவர் விருட்டென கூலிங் கிளாசை மாட்டிக் கொள்கிறார்.             



திரையில் "sean penn" பெரிய மணல் திட்டின் மேல் நிற்க அவரை துரத்தி வந்த வில்லன்கள் கூட்டம் அவரை ஆறு ரவுண்டுகள் சுடுகின்றது. அவர் பிதாவே இந்த பாவிகளை மன்னிப்பீராக, என்று அப்படி உருண்டு விழுந்து இறக்கிறார்.(படு இயற்கையான உருளல்)என்ன நடிப்பு?. அடுத்து அவரின் செல்ல நாய் குரைத்த படி ஓடி வந்து அவரை பரிவுடன் நக்க, வில்லன் கூட்டம் அந்த நாயையும் விட்டு வைக்காமல் நான்கு ரவுண்டு,
தலை வயிறு என சுட, அரங்கே ஊ.ஆ ,அவுச் ,என்று உச்சு கொட்டி மவுனிக்க ,


யாரோ ஒரு புண்ணியவான் கை தட்டலை லேசாக ஆரம்பித்து வைக்க , அரங்கே மந்தை ஆடு போல ஆரவாரம் செய்து கைதட்டி அங்கீகரிக்கிறது. அனைவரும் பாராட்ட, இயக்குனர் பிடிவாதம் ஜெயிக்கிறது, படம் நல்ல வரவேற்பை பெறுகிறது. ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு வந்த கோபத்தில், வேண்டுமென்றே "ben" னை விட்டு விட்டு தன் தனி விமானத்தை எடுத்துக் கொண்டு,மற்ற குழுவினருடன் பறக்கிறார். "ben" பழைய படி தன் அன்றாட வாழ்க்கைக்கு, திரும்புவது போல கதை முடிகிறது.


இந்த கட்டுரையில் நான் சொன்னது சொற்பமே. படம் பார்த்தீர்களென்றால் உங்களுக்கு சிரித்து சிரித்து வயிற்று வலி வந்துவிடும். சும்மாவா சொன்னார்கள் ?

ஒரு படத்தை ரிலீஸ் செய்வது தலைபிரசவம் போல என்று?நாமெல்லாம் எளிதாக சொல்லிவிடுகிறோம்,பட்டால் தான் தெரியும் போலிருக்கு.




------------------------------------------------------------------------------------------------


Directed by
Barry Levinson
Produced by
Art Linson
Mark Cuban
Robert De Niro
Jane Rosenthal

Written by
Art Linson
Starring
Robert De Niro
Sean Penn
Stanley Tucci
Bruce Willis
Catherine Keener
John Turturro
Kristen Stewart
Michael Wincott
Robin Wright Penn

Music by
Marcelo Zarvos
Cinematography
Stéphane Fontaine

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.
----------------------------------------------------------------------------

நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்

தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.


காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.


இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)