தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ?கிளி போல பொண்டாட்டி இருக்க குரங்கு போல வைப்பாட்டி யைத் தேடும் பட்டியலில் தற்போது நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்து அதை காற்றுக்குமிழி போல உடைத்து கெடுத்தும் கொண்ட பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா வும் இணைந்து கொண்டார்.தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் எய்ட்ஸ் பிரச்சார விழிப்புணர்வு படங்கள்,லைப் இன் மெட்ரோ ,
மகேஷ் பட்டின் கேங்ஸ்டர், அய்ஷ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷைனி அகுஜா. திருமணம் ஆனவர். மும்பை ஓஷிவாரா பகுதியில் இவரது வீட்டில் 18 வயது இளம் பெண் வேலை செய்து வந்தார்.

வீட்டில் தனியாக இருந்த வேலைக்கார பெண்ணை நடிகர் ஷைனி கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் பெண்ணை கற்பழித்தது நடிகர் ஷைனிதான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷைனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தால் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.ஒரு வார கால தொடர் போலீஸ் விசாரணைக்குப் பிறகு
தன் வீட்டில் வேலைசெய்த பெண்ணை கற்பழித்ததை நடிகர் அகுஜா ஒப்புக் கொண்டுள்ளார். முதலில் கற்பழிப்பு குற்றச்சாட்டை மறுத்த அவர், மருத்துவபரிசோதனையில் உண்மை தெரியவந்ததை அடுத்து ஒப்புக் கொண்டிருக்கிறார். "கேங்ஸ்டர்' உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்தவர் நடிகர் ஷைனி அகுஜா. வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண்ணை கற்பழித்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து, அகுஜாவின் வீட்டை போலீசார் "சீல்' வைத்தனர். மேலும், கற்பழிப்பு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க, சிறப்பு தடயவியல் குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இது குறித்து, துணை கமிஷனர் நிகேத் கவுசிக் கூறுகையில், "மருத்துவப் பரிசோதனையில் அகுஜா, இளம்பெண்ணை கற்பழித்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. அதற்கான டாக்டர் சர்டிபிகேட் அதை தெளிவாக்கி இருக்கிறது' என்றார். கற்பழிப்பு குற்றத்தை முதலில் மறுத்து வந்த நடிகர் அகுஜா, பின்னர் அதை ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகர்களுக்கு தன்னடக்கம் மட்டும் போதாது தனி மனித ஒழுக்கமும் நிச்சயம் வேண்டும்.அவர் மட்டும் ஆசையை அடக்கி மனைவியை மட்டுமோ அல்லது வேறு திரைத் தோழிகளையோ,அல்லது இதற்கென்றே இருக்கும் எஸ்கார்ட் மங்கைகளையோ புணர்ந்திருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்குமா?
ஏழை பெண் தானே ?இவளால் என்ன செய்து விட முடியும் ?என்ற பணத்திமிர் ,குடி வெறி.இப்படி ஆக்கி விட்டிருக்கிறது.
இதனால் தான் சொல்கிறேன்..மனிதனை மிருகமாய் மாற்றும் மதுவையும் இன்னபிற போதை வஸ்துக்களையும் ஒருவன் மறக்க வேண்டும். இவர் வாழும் சினிமா உலகிலேயே முன் மாதிரியாய் இருக்கும் நடிகர் சிவகுமாரை போல ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.இவரை தயவு செய்து பெயிலில் விட்டு அந்த பெண்ணுக்கு அநீதி கிடைக்கச் செய்யாதீர்கள் அரச எந்திரங்களே....
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)