இந்த படம் நான் லீனியர் நேரேடிவ் வகையில் வந்த ஒரு நல்ல விறுவிறுப்பான க்ரைம் ட்ராமா த்ரில்லர் என்று சொல்லலாம்.ஜார்ஜ் க்ளூனி தன் சீரியஸ் சைட் முகத்தை காண்பித்த படம்.
மைக்கேல் க்ளேட்டன் வல்லவனுக்கு வல்லவன் , 17 வருடங்களாக நகரின் பெரிய சட்ட நிறுவனத்தில் ஃபிக்ஸர் வேலை , எந்த பிரச்சனையையும் சமாளிக்க அரசாங்கம் மற்றும் எல்லா இடங்களிலும் அவனுக்கு நல்ல செல்வாக்கு, சட்டத்தின் அத்தனை மூலை முடுக்குகளும் அவனுக்கு அத்துப்படி, பாசக்காரன்,

சீக்கிரம் உணர்ச்சி வசப்படுபவன், அதை வைத்தே அவன் கம்பனி அவனை நன்கு பயன்படுத்தி காரியம் சாதிக்கிறது, அது அவனுக்கும் தெரியாமல் இல்லை, பார்ட் டைமில் சூதாடி உள்ளதையும் இழக்கிறான், இதனால் அவன் மனைவி மகனுடன் அவனை விட்டு பிரிகிறாள், தன் வேலை இல்லா ஊதாரி சகோதரனுக்காக ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க ,அதிலும் நஷ்டம், விரைவில் ரெஸ்டாரன்ட் ஏலத்திற்கு வருகிறது, மேலும் கடனாளியாகிறான்,
சட்ட நிறுவனத்தை விட்டு வெளியேறும் கனவு பலிக்காமலே போக, அவன் முதலாளியிடம் மேலும் 80 ஆயிரம் டாலர் கடன் வாங்கி, ரெஸ்டாரன்ட் கடனை அடைக்கிறான், மேலும் மூன்று வருட ஒப்பந்தம் அவன் சட்ட நிறுவனத்திலேயே நீட்டிப்புக்கு கையெழுத்தாகிறது, தம்பி பாசம் ஆயிற்றே, தன் மகன் சித்தப்பாவை பார்த்து கேலி செய்ய அதையும் கண்டிக்கிறான் , தன் போலிஸ் உயரதிகாரி அண்ணனுக்கு மரியாதை தந்து பணிந்து செல்கிறான், பெரிய குடும்பத்தில் அவ்வப்பொழுது சந்தித்து கொள்கிறார்கள்,
அவன் சட்ட நிறுவனத்தில் நடந்து வரும் பெரிய வழக்கு, திடீரென முடிவுக்கு வருகிறது,
அது ஒரு நஷ்ட ஈடு வழக்கு, ஒரு பூச்சிகொல்லி நிறுவனம், அதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பனிரெண்டு வருடம் கழித்து, வழக்கு தீர்ப்பு வரும் வேளையில் பாதிக்கப்பட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்த , அந்த வழக்கை நடத்தி வரும் சீஃப் அட்டார்னி ஆர்தர் அந்த கட்சிக்கார நிறுவனத்தின் பூச்சி கொல்லி மருந்தில்,அரசால் தடை செய்யப்பட்ட நச்சுப்பொருள், அதீத விஷத்தன்மை, கலக்கப்படுவதையும், அது சுற்று சூழலை கெடுத்து,மனிதர்களுக்கு புற்று நோய் உண்டாக்கும் காரணி என கண்டுபிடித்து, முக்கிய ஆதாரத்தை திரட்டுகிறார்,
யாரும் எதிர்பாரா வகையில் பூச்சி கொல்லி நிறுவனத்திற்கு எதிராக திரும்புகிறார், பூச்சி மருந்தின் வீரியத்தால் புற்று நோய் கண்டு பெற்றோரை இழந்த ஒரு இளம் பெண்ணிடம் திடீரென வழக்கு நடக்கயிலேயே சட்டை பேண்டுகளை களைந்து கதறி மன்னிப்பும் கேட்க, அந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது,இந்த செயலுக்காக காவல்துறை அவரை கைது செய்ய,மைக்கேல் சென்று அவரை பெயிலில் எடுத்து மருத்துவமனையில் சேர்க்கிறான்.
ஆர்தர் மருத்துவமனையிலிருந்து யாருக்கும் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார்.
அவரை பலத்த சந்தேகத்துடன் பூச்சிகொல்லி நிறுவன பெண் உயர் அதிகாரி ஆள் அமர்த்தி பின்தொடர்ந்து உளவு பார்க்கிறார் , ஒரு கட்டத்தில் காரியம் எல்லை மீறிப் போக அவரை அழகாக திட்டம் தீட்டி அவர் ரத்தக் கொதிப்புக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் மூலப் பொருளை ஆராய்ந்து விஷம் செய்து அதை அவரின் அலமாரியில் வைத்து அவர் ஓவர் டோஸ் உட்கொண்டதாக செட்டப் செய்து கொலையும் செய்கிறார், சட்ட நிறுவனத்தில் நீண்ட நாள் நடந்த வழக்கு ஏறக்குறைய முடிந்து, பூச்சி கொல்லி நிறுவனம், பெரிய தொகையை சட்ட நிறுவனத்துக்கு ஃபீசாக கொடுக்கிறது,இதனால் இவன் மனதில் சந்தேகம் எழ , தன் இறந்து போன சகாவின் ப்ரதான சாட்சியை நீறைய தேடல்களுக்குப் பின் கண்டு பிடிக்கிறான், அவன் சகாவின் வீடு புகுந்து தடயம் சேகரித்து, வழக்கின் முக்கிய ஆதாரத்தை கண்டுபிடிக்கிறான்,
இப்போது இவன் தீவிரமாக உளவு பார்க்கப்படுகிறான்.பல வழிகளில் கொல்ல முயன்று முடியாமல் ,அவனை கொல்ல டைம் பாம் அவன் காரில் வைக்கபடுகிறது, அதை வைத்தவன் ,அதை வைத்து முடிப்பதற்குள், இவன் போக்கர் சூதாட்டம் முடிந்து காருக்கு அருகே வந்து விட , குண்டு வைப்பவன் அரைகுறையாக இவனின் ஜிபிஎஸ் கருவியை முடுக்காமல் விட, இவன் தனக்கு வந்த ஒரு அவசர கேஸ் சம்மந்தமாக சென்று அது முடிந்து ,பாதை மாறி காட்டு வழியில் பயணித்து, அங்கு அவன் இரு குதிரைகளை கண்டு, எதோ உந்துதலால் காரை,விட்டு இறங்கி குதிரை அருகே வியப்புடன் செல்ல, கார் வெடித்து சிதறுகிறது, இவனும் எதிராளியின் திட்டத்தை புரிந்து கொண்டு , தான் இறந்தது போல நாடகமாட , அவன் இளைய &மூத்த சகோதர்களின் உதவியுடன் ,
பூச்சி மருந்து நிறுவனத்தில் பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேர இடைவெளியில் நுழைந்து , பெண் உயர் அதிகாரிக்கு காத்திருந்து, அவள் உள்ளே வருகையில் அவளை ஆதாரத்தை காட்டி பேரம் பேச, அவள் உயிருடன் வந்தவனைப் பார்த்து அதிர்ந்து, பத்து மில்லியன் டாலர் தர சம்மதிக்க, அவளை திடீரென செல் போன் காமிராவால் போட்டோ எடுக்க , அவள் திகைக்க , அவன் அவளுக்கு தான் ரெகார்ட் செய்ததை போட்டு காட்ட , அவள் மயங்கி நிலை குலைந்து கீழே உட்கார, அவன் போலீஸ் உயர் அதிகாரி சகோதரன் உள்ளே வருகிறான், அவனிடம் அந்த ரெகார்டரையும் ,காமிராவையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறான்,
கொலைகார கார்பரட் பெண் தலைமை அதிகாரியை திட்டம் தீட்டி சட்டத்தின் துணையுடன் சந்தி சிரிக்க வைக்கிறான், படு கேஷுவலாக வெளியே வந்து டாக்ஸி ஏறி ஐம்பது டாலர் தந்து, இதற்குண்டான தூரம் போ , எனக்கூறி இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து, நிம்மதி பெருமூச்சு விடுகிறான், காமிரா முகத்தில் ஃப்ரீஸ் செய்து நிற்கிறது.படம் சர வெடி.கண்டிப்பாக பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------
இப்படத்தில் கோர்ட் சீன்களே அதிகம் கிடையாது, ஆனால் நல்ல விறு விறு நடை. படு வேகமாக நகரும் திரைக்கதை, ஜார்ஜ் க்ளூனி,டாம் வில்கின்சன்,மற்றும் டில்டா ஸ்விண்டனின் அற்புதமான நடிப்பு, உங்களை அப்படியே கட்டிப்போட்டு விடும் . (படம் முழுக்க உரையாடல் இருந்தாலும், காட்சி அமைப்பும் கதா பாத்திரங்களின் நடிப்பும்,உங்களை கவர்ந்திழுக்கும்) வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு கூர்மை.
ஜார்ஜ் க்ளூனி ஒரு சிறந்த மனித உரிமை ,மற்றும் அமைதி பேச்சுவார்த்தை தூதுவரும் ஆவார்.சமீபத்தில் கூட ஜார்ஜ் க்ளூனி தனது புதிய படத்திற்கான ஷுட்டிங்கை இத்தாலியில் சமீபத்தில் நிலநடுக்கம் நடந்த பகுதியில் நடத்தினாராம். அந்த இடத்தில் ஷுட்டிங் நடத்துவதால் அந்த பகுதி மக்களுக்கு சிறிது உற்சாகமும் ஆறுதலும் கிடைக்கும். மேலும் பொருளாதாரமும் உயர வாய்ப்பு ஏற்படும் என க்ளூனி இங்கு ஷுட்டிங் நடத்துவதற்கான காரணத்தை கூறினாராம். இவர் மேற்கொண்ட அமைதிப் பயணங்கள் எண்ணிலடங்கா.
டாம் வில்கின்சன் ஒரு பழுத்த நடிகர்,இவருக்கு இந்த படத்தில் நடித்ததற்கு ஆஸ்கார் கிடைக்க வேண்டியது கடைசியில் டில்டா ஸ்விண்டன் தட்டிச் சென்றாராம்.
டில்டா ஸ்விண்டன் என்ன?ஒரு கம்பீரமான அழகிய கார்பொரேட் பெண்மணி,ஒரு கார்பொரேட் உயரதிகாரியாகவும்,வில்லியாகவும் கன கச்சிதமாக பொருந்துகிறார்,இதே ஜார்ஜ் க்ளூனியுடன் பர்ன் ஆஃப்டர் ரீடிங் படத்தில் கள்ளக்காதலியாக வந்து விரச காமெடி செய்வார்.
இவருக்கு ஆஸ்கர் கிடைத்தது மிகப் பொருத்தம்.
எழுத்து இயக்கம் டோனி கில்ராய் ,இயக்குனர்,தயாரிப்பாளர், நடிகர்,கதாசிரியர் .மிகபெரிய அளவில் பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதைகள் எழுதியவர்,உதாரணமாக போர்ன் ஐடெண்டிடி சீரீஸ் படங்களை சொல்லலாம்.இந்த படத்தில் கடைசி காட்சியில் டாக்சி ட்ரைவராக வந்திருப்பார்.சமீபத்தில் வந்த டூப்ளிசிட்டி இவரின் படைப்பே.இந்த படத்தில் இவரும் ஆஸ்கரை கோட்டை விட்டவர்.
படத்தின் தயாரிப்பு சிட்னி பொல்லாக் இவர் சட்ட நிறுவனத்தின் முதலாளியாக மார்டி பாக் என்னும் பாத்திரம் செய்திருந்தார். நல்ல நடிகர்.
இசை ஜேம்ஸ் ந்யூடன் ஹாவர்ட்,மனிதர் கலக்கி விட்டார்,மொத்தம் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் 13 வகை போட்டிருக்கிறார்.இசை மூலம் கிட்டும் புதிரும்,ஸஸ்பென்ஸும் ப்ரமாதம்.
ஒளிப்பதிவு ராபர்ட் எல்ஸ்விட் விறுவிறுபாக நகரும் காட்சிகளை சுட்டுத்தள்ளிய விதமும்,காட்சிஅமைப்பும்,காமிரா கோணங்களும்,வண்ணத்த் தெரிவும் அபார ரசனையை பறை சாற்றும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

| |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.
நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்
தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.
காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.
இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி