பிராட் பிட்டின் அடக்கம்


பிராட் பிட் ஹாலிவூட் இயக்குனர்களின் மனம்கவர்ந்த நடிகர்,இவர் நேரம் தவறாமை,மிகுந்த தன்னடக்கம், நடிப்பை தவம் போல செய்தல் , பிறருக்கு உதவும் தன்மை என சொல்லிக்கொண்டே போகலாம், அதில் மகுடம் வைத்தார்ப்போல சமீபத்தில் நான் பார்த்த இரு திரைப்படங்கள் .


1.தி க்யூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON )
(இதில் மனிதர் 90 வயது கிழவனின் தோற்றத்துடன் பிறந்து படிப்படியே இளமையடைந்து கடைசியில் 1 வயது குழந்தையாக இறக்கிறார்)கை தேர்ந்த நடிப்பு,அசல் ஒப்பனை,(முக மூடிகள் அறவே இல்லை)எல்லா வேடங்களையும் நான் தான் செய்து கெடுப்பேன் என்ற பிடிவாதம் இல்லை.குரலிலும் ,உயரத்திலும் ,உடம்பு கூனன் முதல் திடகாத்திரன் வரை..)கலக்கியிருக்கிறார்.உண்மைக்காதலுக்காக தன் சொத்து சுகங்களை தியாகம் செய்து தனிமையில் வாடும் அற்புத கதாபாத்திரம்.படம் அனைவருக்கும் பிடிக்கும்,படம் பார்த்தால் வியப்பும் சிரிப்பும் பரிதாபமும் நம்மை பீடித்துக் கொள்ளும்.(படத்தில் படுக்கையறைக் காட்சிகள் அதிகம் உள்ளதால் சிறுவர்களுக்கு உகந்தது அல்ல )
2.BURN AFTER THE READING(பர்ன் ஆப்டேர் த ரீடிங் )கோயன் பிரதர்ஸ் இயக்கியது.
இது ஒரு முழுநீள காமெடி கலந்த CIA வையும் RAA வையும் நக்கலடிக்கும் திரைப்படம், இதில் ஜிம் உதவியாளனாக வரும்
பிராட் பிட் தன்னை அதி புத்திசாலியாக கருதும் ஒரு அதி முட்டாள் , இப்படி ஒரு பாத்திரம் இந்திய கதா நாயகர்களுக்கு கொடுக்கப்பட்டால் யாரும் செய்வாரா ? என்பது சந்தேகமே(வளரும் ,இளம்,கதாநாயகர்கள் கூட செய்ய மாட்டார்கள்) இவர் அந்த காமெடி கதா பாத்திரத்தைக்கூட அவ்வளவு நயமாக செய்துள்ளார்.படத்தில் இவர் வருவது மொத்தமே 10-15 நிமிடங்கள் தான் இருக்கும்,ஆனால் மிக முக்கியமான கதா பாத்திரம், ஜார்ஜ் க்ளூனி யை வேவு பார்க்க அவரது வார்ட்ரோபுக்குள் சென்று ஒளிந்திருப்பார். ஜார்ஜ் க்ளூனி குளித்து முடித்து உடை அணிந்து,ஓவர் கோட் எடுக்க கதவை திறப்பார், இவர் அப்பாவியாக அவரை பார்த்து சிரிப்பார், அனால் ஜார்ஜ் க்ளூனி மிகவும் பயந்து துப்பாக்கியை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்து நெற்றிப் பொட்டில் சுட்டுவிடுவார்,மூளை சிதறி பிராட் பிட் இறந்து விடுவார்.சட்டென காமெடி விலகி ட்ராஜெடி வந்துவிடும்.
படம் பார்க்கும் எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து விடுவர்.
இவர் இந்த டெட் என்னும் கதா பாத்திரத்தை நன்கு விரும்பியே ஒப்புக் கொண்டாராம்.ஜார்ஜ் க்ளூனி கூட இதில் ஒரு முட்டாள்தனம் கலந்த காமெடித்தனமான வருவாய்த் துறை அதிகாரியாக நடித்திருப்பார்.எவ்வளவு சிறிய பாத்திரமானாலும் தலை வணங்கி ஏற்றுக்கொண்டு சிறப்பாய் நடிக்கும்
இவர்களை பார்த்தாவது இன்றைய இந்திய நடிகர்கள் திருந்துவார்களா?

இன்றைய இந்திய சினிமாவின் நிதர்சனம்

1.எனக்கு அறிமுகப்பாடல் வேண்டும்,
2.எனக்கு நான் சொல்லும் ஹீரோயின் வேண்டும்,
3.எனக்கு நனைய மினரல் வாட்டர் மழை தான் வேண்டும்,
4.நான் சண்டைகாட்சியில் அடிவாங்க மாட்டேன்,
5.எனக்கு 5 பாடல்கள் பாங்காக்,மலேசியா,பினாங்கு,ஆம்ஸ்டெர்டாம்,ஸ்பெயின்,மெக்சிகோ ,ச்விச்ஸ் சென்று எடுக்கவேண்டும்.(கதை கிராமத்தில் நடந்தால் கூட)
6.எனக்கு படத்தில் ரேஸ் கார் ஓட்டுவது போல காட்சி வைக்கணும்,(குப்பை பொறுக்கி கதா பாத்திரம்)
7.என்னது கல்யாணம் ஆன ஆளாய் நடிக்கணுமா?என்னாது குழந்தைக்கு அப்பாவாய் நடிக்கணுமா?முதல்ல வெளிய போ..(நிஜத்தில் 2 குழந்தைகள் ,2 குடும்பமாவது உண்டு)
8.என்ன அவன்கிட்ட நான் அடிவாங்கணுமா?(நீ அடி வாங்குவே இப்போ)-இது காமெடி சொன்னது
9.என்னது கண்ணாடி போட்டு நடிக்கணுமா?போடாங்
10.என்னது எனக்கு ரே பான் கிளாஸ், அடிடாஸ்,ரீபோக் ,ஷூ கிடையாதா? (பால்காரன் வேஷத்திற்கு)
11.இதோ பார்,உன்னும் 10 வருசத்தில நான் முதல்வர் அதுக்கு அச்சாரமா பஞ்ச் டியாலாக் வை இன்னா,அப்புடி இஷ்டமில்லாட்டி நான் டைரக்டர மாத்திருவேன்.
12.இந்த மதுரை,கோவை,சேலம்,ராம்நாட் ஏரியா என்னாம் என்னுது இன்னா .இந்தா புடி கால்ஷீட்டு.
13.இன்னாது இனக்கு ஒரே ஹீரோயினா?யோவ் இன்னா அடுத்த படம் செய்யனுமா வேணாமா?
14.இன்னாய்யா?வில்லனுக்கு இவ்ளோ வெய்ட் டா ரோல் ?,அதை முதல்ல கட பண்ணு 15.கதைய மாத்துயா..
16.இதோ பார் எனக்கு இன்னா செய்வியோ? நானும் தீபாளி படத்துல டபுள் ஆக்டிங் குடுக்கறேன்,டபுள் ஹீரோயின்,டபுள் அப்பாம்மா..டபுள் வில்லன்... முருகன் காவடி ,
பாட்டு. குடும்ப பாட்டு ,கண்டிப்பா படத்துக்கு சிவனோட பேரு எல்லாம் இருக்கணும்.
17.அந்த மலேசியா கார் சேசிங் மறுபடியும் எடுக்குறோம்,எனக்கு லைகிங்காவே இல்லை.இப்போ ஹெலிகாப்டரும் வோணும்,இப்போவே சொல்லிடு.
18.இதோபார்,எனுக்கு நடிப்பு பிறந்த குழந்திளயிருந்தே அத்துப்பிடி,எனுக்கு நிடிப்பை தவிர எடிட்டிங்,சவுண்ட் மிக்ஸ்யங்,குப்பத்து குத்து,கும்மாங்குத்து,டைரக்ஷன்,கதை சுடறது ,இசைன்னு ஏகப்பட்டது தெரியும்(நடிப்பை தவிர)
ஐயோ எனக்கு மூச்சு முட்டுது...
இங்க தொடரும் போட்டுக்கறேன்....


curious case of benjamin button திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.

நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்

Burn After Reading திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.

நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்

3 comments:

ஷண்முகப்ரியன் சொன்னது…

நீங்கள் குறிப்பிட்ட முதல் படத்தைப் பார்த்து வியந்தேன்.ஆனால் இரண்டாவது படம்-உங்கள் விவரிப்பிலேயே சூப்பர்,கார்த்திகேயன்.அவசியம் பார்க்கிறேன்.
இந்திய மக்களுக்கு ஏற்ற இந்திய சினிமா.அதிலும் தமிழர்கள்.இந்த வருடம்தான் ஆறுதலாக இருக்கிறது.வழக்கமான மாமூல் ஏமாற்றுப் படங்கள் எதையும் அவர்கள் ஓட்ட வில்லை.திருந்திக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

ஐயா
சரியாக சொன்னீர்கள்
ஏகன்
குருவி
சர்வம்
சத்யம்
சிலம்பாட்டம்
தோரணை
காளை
வில்லு
தெனாவெட்டு
படிக்காதவன்
என மக்கள் பார்த்து நொந்து , யாரையும் பார்க்க வேண்டாம் என சொல்லியே புறக்கணித்திருக்கிறார்கள்.
அருந்ததி போன்ற டப்பிங் படங்களில் உள்ள உயர் தரத்தை பாராட்டத் தயங்கவில்லை.
வெண்ணிலா கபடிகுழு,போன்ற வித்தியாச படங்களில் மக்கள் கவனம் திரும்பியுள்ளது.
பெரிய ஹீரோக்கள் கூட இனி வரப்போகும் தங்கள் படங்கள் பற்றி கவனத்துடன் உழைக்கிறார்கள்.அடுத்த வருடம் நம் சினிமாவின் தரம் இன்னும் உயரும் என எதிர்பார்கிறேன்

pukalini சொன்னது…

meelee wantha irandu peerumaa adikkadi munniikku wanthirukkaangka.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)