நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்த "இன் சைடு மேன் " inside man படம் தொடங்கும் போதே என்னை குதூகலம் தொற்றிக்கொண்டது.
பெயர் போடும் போது பின்னணியில் ஒலித்த "சைய்ய சைய்யா " (தில்சே ) பாடலினால் தான்.படம் 2006 ஆம் வருடம் வெளியாகியுள்ளது.இது வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்,தலைசிறந்த நடிகர் டென்செல் வாஷிங்டன் நடித்தது,,இதற்கும் இந்த பாடலுக்கும் சம்பந்தமே இல்லை.இருந்தும் படத்தின் இயக்குனருக்கு இந்த பாடல் மிகவும் கிறக்கத்தையும் ,உற்ச்சாகத்தையும் கொடுத்ததால் மொழியை பற்றி கவலை படாமல் இப்பாடலை படத்தில் வைத்தாராம்.
இது பற்றிய imdb வாசகர் உரையாடல் சுட்டி:-
அடுத்த படம்
the accidential husband
இந்த படம் உமா துர்மன் ரேடியோ கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தும் டாக்டராக நடித்தது,இளமை துள்ளும் இந்த படத்தில் இயக்குனர் "அலைபாயுதே" படத்திலிருந்து "யாரோ யாரோடி"பாடலையும்,
படம் முடியும் போது " தெனாலி" படத்திலிருந்து " என்ன சொல்லி என்னைச் சொல்ல"
என்ற பாடலும் இடம் பெரும்,
படத்தில் கதாநாயகன் ஒரு இந்திய குடும்பம் நடத்தும் உணவகத்தின் மாடியில் வசிப்பான்,அவனிடம் அந்த குடும்பமே நன்கு பழகும்.ஆகவே சரியான சமயங்களில் இப்பாடல்களை இயக்குனர் பயன்படுத்தியிருப்பார்.
அப்புறம் நான் நேற்று பார்த்த பிரெஞ்சு மொழி படமான" Paris, je t'aime (2006)"இதில் மொத்தம் பதினாறு காதல் ஜோடிகளைப் பற்றி காட்டப்படுகிறது, coen brothers இயக்கியது ,இதில் இரண்டாவதாக படத்தில் வரும் கல்லூரி மாணவர் ஜோடிக்கு "ஜென்டில்மேன் " படத்திலிருந்து "ஒட்டகத்தை கட்டிக்கோ "டியூன் அப்படியே ரீமிக்ஸ் செய்து ஒலிக்கிறது.
அப்படியே நம் இசைப்புயலின் பெயரும் தான்.வெல்டன் இசைப்புயலாரே..